கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு

கொழும்பு முகத்திடலில் சடலம் மீட்பு

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்த பொதுமக்கள் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது

வீடியோ

யானையுடன் கொழும்பில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்

சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்

எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை

பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|

இஸ்ரேலில் ஜோ பைடன் தரை இறங்கிய பின்னர் வெடித்து பறந்த
ரொக்கட் ,எல்லையில் பல்லாயிரம் இராணுவம் குவிப்பு .


பாலஸ்தீனம் காசா மருத்துவமனை மீது நடத்த பட்ட தாக்குதலில்
பலநூறு மக்கள் பலியாகினர் .

இதில் அந்த மருத்துவமனையில் சடலங்கள் எங்கும் சிதறி காணப்படுகின்றன .

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|


பாதுகாப்பு தேடி மருத்துவமனையின் அருகில் தங்கி வசித்த மக்கள்
மீது இஸ்ரேல் விமான படை தாக்குதலை நடத்தி கொன்று குவித்துள்ளது .


இந்த தாக்குதலை ஜகாத் போராளிகள் அமைப்பே நடகியாத
வெட்கம் கெட்டு இஸ்ரேல் பரப்புரை புரிந்து வருகிறது குறிப்பிட தக்கது .

video

வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
வெடித்து பறந்த ரொக்கட்|rocket fired |isreal gaza war|
அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ


அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ

அமெரிக்கா இராணுவ தளமீது திடீர் தாக்குதல்
நடத்த பட்டுள்ளது ,மக்களை உடனே வெளியேறுக இஸ்ரேல் மீளவும்
எச்சரிக்கை .

காசா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு அறிவிப்பை வெளியிட்டு, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் மேற்கில் உள்ள அல்-மவாசி பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளது.

அமெரிக்கா இராணுவ தளமீது தாக்குதல்|isreal gaza war| வீடியோ

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) மாலை கடவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகம வீதிக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட

ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டு பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கொலைச் செய்ய சென்ற இருவர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 29 வயதுடைய மீகஹவத்த மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுதொழில் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரை சுட்டுக்கொலை செய்ய வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பேலியகொட பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்
Posted in இலங்கை செய்திகள்

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெண் கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதுடையவர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தூதரகத்திடம் இருந்து தகவல்

கிடைத்தவுடன், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும், இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

”அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த அழைப்பை விடுக்கிறோம். இன்றைய சந்திப்பின் முடிவுகளை நான் அமைச்சரவைக்கு அறிவிப்பேன்.

தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

”பல கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன” என தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

”முதலில் தேர்தலை நடாத்துங்கள். பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி யோசிப்போம்.

தேர்தல் மறுசீரமைப்பு எனும் போர்வையில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்
Posted in இலங்கை செய்திகள்

ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த

ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் தீர்வு என்ன?காலங்காலமாக போடப்பட்ட ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் அடைந்த இலாபம் என்ன?

தெற்கை முடக்கினால் வரவேற்கத்தக்கது ஆனால் வடக்கு கிழக்கை முடக்கி மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவது வரவேற்கத்தக்கதன்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவர் என்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத்

தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,

“எமது நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தற்போது படிப்படியாக எழுச்சி பெற்று வருகின்றது. இது இன்னும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையிலேயே இருக்கின்றது.

மக்களின் வாழ்க்கைச் சுமை முற்றுமுழுதாக குறைந்துவிட்டது என்று கூற முடியாது. எவ்வாறு இருந்தாலும் கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தற்பொழுது ஓரளவு குறைந்து கொண்டு வருகின்றன.

தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

தொடர்ந்தும் இவ்வாறு மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் உட்பட அரசாங்கம் மேற்கொள்கின்றது. இது தொடர்ச்சியாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும்.

ஏனென்றால், நான் ஒரு வர்த்தக இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட

வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இந்நாட்டில் வாழும் சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கின்றது.

எனவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய இன்னும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும். அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேநேரம், சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட இன்னும் ஒரு சில வர்த்தகர்கள் அதன் விலைகளை குறைத்ததாகத் தெரியவில்லை.

எப்போது அவற்றை அதிகரித்தார்களோ, அதே விலையிலேயே தற்போதும் அப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அதனால், இவ்வாறு விலை குறைக்கப்பட்ட பொருட்களை யார் அதிக விலையில் விற்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளுக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம்.

தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

ஆகவே இந்நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளைக் காண்பதன் மூலம் அத்தியவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே இப்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. இதற்கான பணிகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், தற்போது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஜனாதிபதி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு நடத்தி வருகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது சீர்திருத்தம் மற்றும் அது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இதுபோன்ற கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நாமும் இவ்விடயம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளோம். அவையும் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு அமைய நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறியுள்ளோம்.

நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் நாம் எதிர்நோக்கிய ஒரு பாரிய சவாலாக அமைந்தது கொவிட் தொற்றாகும்.

கொவிட் தொற்றிலிருந்து ஓரளவு நாங்கள் மீண்டு வருகின்றபோது, இரண்டாவதாக நாம் எதிர்நோக்கிய மிகப் பெரிய சவால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாகும்.

இதில் கிட்டத்தட்ட பதினாறு , பதினேழு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இதிலிருந்து மீள்வதற்கு எமக்குக் கிடைத்த குறுகிய காலத்தில் இயன்றளவான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தற்போதும் முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக வீதி அபிவிருத்தி, பாலங்களை அமைத்தல், விவசாயத்துறை சார்ந்த விடயங்கள், மீன்பிடித் துறை சார்ந்த விடயங்கள், அதேபோன்று மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் போன்ற பல்துறை சார்ந்த அபிவிருத்தி

வேலைத்திட்டங்களை இயன்றளவு நாம் செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் அவை முழுமையானவை என்று கூற முடியாது.

இருந்தாலும் இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் நாங்கள் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டப் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று முதன் முதலாக கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்காக நாம் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் தற்போதைய ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். அதில் அவர் கூடுதல் ஆர்வத்தையும் காட்டுகின்றார்.

தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடியவர்.

எனவே நாம் அவருடன் கலந்துரையாடி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எமது தமிழ்த் தலைவர்கள் முன்வரவேண்டும். அதேபோன்று தென்னிலங்கையில் இருக்கின்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் தமிழ்த் தலைவர்கள் கலந்துரையாட வேண்டும்.

எங்களுடைய பிரச்சினைகளையும் எங்களுடைய நீதியான, நியாயமான மற்றும் தரப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் நாம் அவர்களுடன் கதைக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் எமக்காக குரல் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் அந்த இடத்திற்கு எமது விடயங்கள் போய்ச்சேரவில்லை.

நாம் ஒட்டு மொத்தமாக அனைவரையும் தவறாக நினைக்க முடியாது. இந்த விடயத்தில் நாம் சரியான முறையில் நமது நகர்த்தல்களை மேற்கொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன். அந்த நகர்த்தல்களை அதிவேகமாக நாம் முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.” என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|missile fired |Gaza isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|missile fired |Gaza isreal war|


ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|missile fired |Gaza isreal war|

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்,பல டாங்கிகள் அழிப்பு ,
காசா மருத்துவமனை மீது தாக்குதல் ,
அபாயவலயமாக லெபனான் அறிவிப்பு ,|missile fired |Gaza isreal war|

வீடியோ

ஹிஸ்புல்லா #ஏவுகணை #டாங்கி #isreal #isrealnews

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ATM இல் கொள்ளை மூவர் கைது

ATM இல் கொள்ளை மூவர் கைது

மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ATM இல் கொள்ளை மூவர் கைது

கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

பாலஸ்தீனம் காசா பகுதியில் அமைந்திருந்த al-Ahli al-Arab hospital in Gaza City.
மருத்துவ மணை மீது இஸ்ரயூலிய அரச பயங்கரவாத கொடிய இராணுவம் தாக்குதலை நடாத்தியுள்ளது .


ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களை மதிக்காது நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கணடனத்தை தெரிவித்துள்ளன .


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை இஸ்ரேல் வெறியர்கள் நடத்தியுள்ளனர் .
மனித நாகரீகத்திற்கு கீழான செயல் யூத வெறியின் உச்ச செயலக இது பார்க்க படுகிறது .

காசா மருத்துவமனை மீது தாக்குதல் 500 பேர் பலி

தனது மக்கள் மட்டும் மக்கள் ,பலஸ்தீனவர்கள் கற்கள் போன்றுஎன்னும் யூத இன வெறியும் உச்சத்திற்கு ஈரான் தகுந்த அடியை கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .


வரும் மணித்தியாலங்கள் கமாஸ் சிறை கைதிகளை கொலை செய்ய கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேலும் ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தும், .இதே குண்டுகளை இஸ்ரேல் மருத்துவ மனைகள் மீது வீசுங்கள் என பாதிக்க பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவித்து வருகின்றனர் .


இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|


இஸ்ரேலுடன் போருக்கு தயாராகும் பல நாடுகள்|Gaza iran war|

இஸ்ரேலுடன் போருக்கு தயராகும் பல நாடுகள் ,
விமான தாங்கி கப்பல் ,விமானங்கள் தயார் நிலையில் ,ஈரான் கடும் எச்சரிக்கை .


லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், முன்னெச்சரிக்கையாக 24 விமானங்களை துருக்கியில் வைத்திருப்பதாக லெபனான் தெரிவித்துள்ளது .

|Gaza iran war||palestine news today tamil, |Ethiri News

வீடியோ

இஸ்ரேல் உலகிற்கு ஈரான் எச்சரிக்கை|isreal gaza war||palestine news today tamil
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் உலகிற்கு ஈரான் எச்சரிக்கை|isreal gaza war||palestine news today tamil


இஸ்ரேல் உலகிற்கு ஈரான் எச்சரிக்கை|isreal gaza war||palestine news today tamil

இஸ்ரேல் உலகிற்கு ஈரான் எச்சரிக்கை
நேரம் முடிந்து விட்டதக அறிவிப்பு ,இஸ்ரேல் தாக்குதல் அதி தீவிரம் ,

இஸ்ரேலிய ஆட்சி விரைவில் ஒழிந்து, பாலஸ்தீன விடுதலைக்கான இறுதிப் போரில் பாலஸ்தீன தேசம் வெற்றி பெறும் என்று இஸ்லாமியப் புரட்சித் தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனியின் மூத்த ஆலோசகர் தெரிவித்தார் .

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் இஸ்ரேலிய ஆட்சியின் போருக்கு மத்தியில் ஈரானில் ஹமாஸ் பிரதிநிதி கலீத் அல்-கத்தூமியுடன் திங்கட்கிழமை நடந்த சந்திப்பில் அலி அக்பர் வெலாயாதி, “இது ஒரு திட்டவட்டமான கொள்கை”என்று கூறினார்.

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் பறக்கும் ஏவுகணைகள்|Lebanon anti tank missile fired|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவம் பரஸ்பர மோதல் ,
பறந்து வெடிக்கும் ஹிஸ்புல்லா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,பதிலடி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ,|Lebanon anti tank missile fired|

வீடியோ

isrealnews

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்
Posted in இலங்கை செய்திகள்

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்

பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர் ஆறு சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பெற்ற பெண்

ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு

குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்
Posted in இலங்கை செய்திகள்

காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே திங்கட்கிழமை (16) தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

அந்நிலையில் ” என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் ” என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

வெலிக்கடை, பரண கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னலை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நிறுவனத்தின் முகாமையாளர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

அருகில் 9 மிமீ தோட்டா துண்டும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை பயமுறுத்துவதற்காக யாரோ துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வைரஸ் பரவும் அபாயம் வைத்தியர்கள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் பரவும் அபாயம் வைத்தியர்கள் எச்சரிக்கை

வைரஸ் பரவும் அபாயம் வைத்தியர்கள் எச்சரிக்கை

சமீபத்திய வானிலை ஏற்ற இறக்கங்களினால், வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் குறித்து மருத்துவ அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

வெப்பநிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம கூறினார்.

பருவகால காய்ச்சல் இல்லையென்றாலும், வைரஸ் தொற்றுகள் பொதுவானவை, ஆனால் மருத்துவ கவனிப்பை புறக்கணிப்பது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று டாக்டர் விஜேவிக்ரம எச்சரித்தார்.

வைரஸ் பரவும் அபாயம் வைத்தியர்கள் எச்சரிக்கை

எனவே, “தொண்டை புண், இருமல், மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் மற்றும் வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற தொடர்ச்சியான அறிகுறிகளை தனிநபர்கள் அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்ள வேண்டாம் என்றும் டாக்டர் விஜேவிக்ரம மக்களை வலியுறுத்தினார்.

இதற்கிடையில், லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் (LRH) ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் கூறுகையில், தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று “மேல் சுவாச வைரஸ் தொற்று” என்று குறிப்பிடப்படுகிறது.

தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள போதிலும், வைரஸ் தொற்று அபாயகரமான அளவில் பரவவில்லை என டாக்டர் பெரேரா வலியுறுத்தினார்.

ஆயினும்கூட, நிலைமையை திறம்பட நிர்வகிப்பதற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03ம் திகதியன்று பிறந்து ஒரு நாள் வயதுடைய குழந்தை ஒன்றினை கொலை செய்த குற்றச்சாட்டில் அச்சிசுவின் தாய், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஒருநாள் சிசுவை கொன்ற தாய்க்கு கடூழிய சிறை

அந்த தாய்க்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின்னர் சட்டமா அதிபரினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக கடந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிசுவைக் கொலைசெய்த குற்றத்திற்காக ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம்

செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்கவும் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.