துருக்கி f -16 ரக விமானங்களை வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா முகாம்கள் மீது தாக்குதல் அதிர்ச்சியில் இராணுவம்

அமெரிக்கா முகாம்கள் மீது தாக்குதல் அதிர்ச்சியில் இராணுவம்

சிரியாவின் கொனிகோ எரிவாயு வயலில் அமைந்துள்ள அமெரிக்க தளம்
தாக்கப்பட்டதாக லெபனானின் அரபு மொழி அல்-மயாதீன் தொலைக்காட்சி
செய்தி வலையமைப்பு தெரிவித்துள்ளது.

.கோனிகோ எரிவாயு வயலில் உள்ள அமெரிக்க தளத்தின் உள்ளே இருந்து சில
உரத்த வெடிப்புகள் கேட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகளில், சிரியாவின் வடகிழக்கு மாகாணமான ஹசாகா


மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இரண்டு பெரிய
அமெரிக்க இராணுவ தளங்கள் மீண்டும் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,வெடித்த கடும் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,வெடித்த கடும் போர்


இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா ,
வெடித்த கடும் போர்

இஸ்ரேல் ஆட்டிலொறிகளை தாக்கி அழித்த ஹிஸ்புல்லா
ஆயுததாரிகள் அட்டகாசம் 20 மக்கள் உயிரிழப்பு
திடீரென வெடித்த குண்டு ஏழு பேர் மரணம்.


அமெரிக்கா முகாம்கள் மீது தாக்குதல் அதிர்ச்சியில் இராணுவம்
தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்


இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

வீடியோ

பையில் மிதந்த சடலம் நண்பர்கள் செய்த கொடூர செயல்
Posted in இலங்கை செய்திகள்

கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்

கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கணவர் வெளிநாட்டில் மனைவி மர்மமான முறையில் மரணம்

உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

மோசமான வானிலை காரணமாக கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது குறித்த மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொழும்பில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது

அக்டோபர் 30ஆம் திகதி அதே சாலையில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்

நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக . குறிப்பிட்டுள்ளார்.

ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கத்திக்குத்துக்குள்ளாகி கடற்படை வீரர் உயிரிழப்பு

கத்திக்குத்துக்குள்ளாகி கடற்படை வீரர் உயிரிழப்பு

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவமொன்று புதன்கிழமை (08) பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாவிக நெவி பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெள்ளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நில்வளா கங்கையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரத்துக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே அந்தந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில், இந்த விஷ மீன் இனம் Gonmaha-Stone Fish’ என்று அடையளாப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

விஷப்பாறை மீன்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அவர் மேலும் கூறுகையில், இந்தப் பாறைமீன்கள் மணல் அல்லது இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள சிறிய குளங்களில் காணப்படும்.

இவை மெதுவாக இயங்கும் மீன்கள் என்பதால் பெரும்பாலும் மறைக்கப்பட்டு மற்றும் சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு வருகின்றன. இவற்றின் முதுகில் அதிகளவான எலும்புகள் இருப்பதுடன் அவை மிகவும் விஷத்தன்மை பொருந்தியவை என அவர் தெரிவித்தார்.

எனவேடிகடலில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறும், கடற்கரைப் பகுதிக்கு செல்லும்போது செருப்பு அணிந்து செல்லுமாறும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

3 நாள் போர் நிறுத்தம் அமெரிக்கா அழைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

3 நாள் போர் நிறுத்தம் அமெரிக்கா அழைப்பு


3 நாள் போர் நிறுத்தம் அமெரிக்கா அழைப்பு

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் மூன்று நாள் போர்
நிறுத்தம் அமெரிக்கா அதிரடி நடவடிக்கை ,

வீடியோ

வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம்

வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

NMRA இன் குழு உறுப்பினர்கள் எடுத்த ஒருமித்த முடிவின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தலைமை நிர்வாக அதிகாரி சுகாதார அமைச்சகத்திற்கு உள்வாங்கப்பட உள்ளார்.

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே

சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ

துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன

உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்

நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்

சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ

என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்

அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல்|Israel Palestine War|palestine news today

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியாக விளங்கும் Ashkelon னை குறிவைத்து ரொக்கட் தாக்குதல்

10 டாங்கிகள் அழிப்பு கடும் போர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

10 டாங்கிகள் அழிப்பு கடும் போர்


10 டாங்கிகள் அழிப்பு கடும் போர்

இஸ்ரேல் இராணுவத்தின் 10 டாங்கிகள் அழிப்பு கடும் போர் ,
சுரங்கத்தை நெருங்கிய படைகளுக்கு நடந்த துயர் ,

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

“ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீட்பர் என அவர் சார்ந்த வட்டாரங்கள் புகழாராம் சூடினாலும் புள்ளிவிபர ரீதியாக மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக நாட்டின் கடன் அதிகரித்த வண்ணமே உள்ளது” என்றார்.

ஐனாதிபதியின் ஒவ்வொரு தீர்மானங்களும் தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை திசை திருப்புவதாகவும் அதற்கான தீர்வுகளை பலவீனப்படுத்துவதாகவும் அமைந்து வருகின்றது.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்


ரணிலின் எதேச்சதிகார போக்கை இராஐதந்திர ரீதியாக சமநிலைப்படுத்த தமிழர் தரப்பில் ஆளுமையான துணிச்சலான தலைமை தமிழ் கட்சிகளில் இல்லை என்பது வேதனையான விடயம் என்றார்.

அத்துடன் தமிழ் புத்திஜீவிகள் தரப்பில் பலமான குரல் இல்லை. புலம்பெயர் தரப்பிலும் வறிதாகவே உள்ளது. இதனால் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எல்லையின்றி தமிழர்களின் அபிலாசைகளை கபளீகரம் செய்ய துணிந்துள்ளார் என்றும் குகதாஸ் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் தன்னை சிங்கள பௌத்த மக்களின் தலைவனாக காட்டவே முயற்சிக்கின்றார். அண்மையில் ஐேர்மன் ஊடகத்திற்கு கொடுத்த நேர்காணல் இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்

தமிழர் தரப்பு பழைய பல்லவிப் போராட்டங்களை அறிவிப்பதும் அதன் மூலம் தமிழ் கட்சித் தலைமைகள் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவதும் பலவீனப்பட்டு விரக்தி நிலையில் உள்ள மக்களின் வெறுப்பை அதிகரிப்பவர்களாகவும் மாறி உள்ளனர் இது தமிழ்த் தேசிய இருப்புக்கு சாதகமில்லை மிக ஆபத்தானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு பதிலாக அதைவிட மேலும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர ஐனாதிபதி முயற்சிக்கின்றார்

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் வடக்கு மீனவர்களுக்கு தீர்வு காணப்படாமல் தென்னிந்திய

மீனவர்கள் வடக்கு கடலில் மீன் பிடியில் ஈடுபட ரணில் அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக கூறும் அறிவிப்பு மேலும் வடக்கு மீனவர்களை நெருக்கடிக்கு தள்ளும் ஏற்கெனவே இருந்த பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் இரட்டி மடங்காக்கும்.

தமிழர் தரப்பு மக்கள் ஆணையில் இருந்து ஒரு படி கீழிறங்கி சமஷ்டி தீர்வுக்கு முன்பாக அரசியல் அமைப்பில் உள்ள பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கோரினர்.

ரணிலின் தந்திரோபாயம் தமிழர்களை பலவீனப்படுத்தும்

இதனை எதிர்பாக்காத ரணில் அதற்கும் ஒரு ஆப்பு வைத்தார். பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என கூறினார். உண்மையில் அரசியல் அமைப்பில்

உள்ள அதிகாரத்தை பாராளுமன்ற முடிவு இல்லாமல் நினைத்தவுடன் ஐனாதிபதி தரமாட்டேன் என கூற முடியாது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரி போல செயற்பட்டுள்ளார் என்றார்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோத காணி அபகரிப்பு, விகாரைகள் அமைத்தல் , சிங்கள குடியேற்றங்கள் அமைத்தல் , மேய்ச்சல் தரைகள் அபகரித்தல் போன்றன கடந்த காலத்தை விட தற்போது வேகமாக நடைபெறுகின்றன.

நிகழ்நிலைக் காப்பு சட்டம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த கொண்டுவர உத்தேசித்துள்ள சட்டம் நாட்டு மக்களுக்கான அடக்குமுறை என பலரும் கூறினாலும் தமிழர்களுக்கு மிக ஆபத்தானது.

இதற்கு காரணம் சட்டம் நிறைவேறினால் நில அபகரிப்பு ,சட்டவிரோத விகாரை அமைப்பு போன்ற வற்றுக்கான மக்கள் போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு நிரந்தர ஆப்பாகும்.

மீறினால் சிறைதான். அத்துடன் அரச செயற்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் பொய்யான செய்தியை பதிவு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என்றார்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் சகல மக்களின் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் பார்க்க வேண்டிய ஐனாதிபதி பெரும்பாண்மை சிங்கள மக்களின் தலைவராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் சம நேரம்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் விரிவு படுத்தி திசை திருப்ப முயற்சிக்கின்றார். இச் செயற்பாடுகள் தொடருமாயின் தமிழ் மக்களின் அபிலாசைகள் மேலும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும் என்றார்.

மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் தாக்குதலால் மாணவன் சிகிச்சை

ஆசிரியர் தாக்குதலால் மாணவன் சிகிச்சை

பொகவந்தலாவையில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில், மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே, இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக இஸ்ரேலில் வேலைக்கு அமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தமொன்று இஸ்ரேலின் உள்நாட்டு அமைச்சர் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

10 ஆயிரம் இலங்கையருக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

இந்த நிலையில், முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு விவசாயத்துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் டீசல் மண்ணெண்ணெய் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது

தரம்குறைந்த டீசல் விநியோகிக்கப்படுகிறது

தரம் குறைந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் சந்தைக்கு வெளியிடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நவம்பர் 5 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் மாதிரிகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாகவும் , கொலன்னாவையில் குறிப்பிட்ட டீசல் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டீசல் கையிருப்பின் மாதிரிகளில் இரண்டு LIOC ஆய்வக சோதனை அறிக்கைகளில்
அவற்றின் தரம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

தான் காதலை தெரிவித்தபோது அதை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி காயப்படுத்திய இளைஞன் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் கொழும்பு நாராஹேன்பிட்டி நில அளவை திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் காலி பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி ஆவார்.

குறித்த யுவதி காலியிலிருந்து கொழும்பு நாரஹேன்பிட்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த போது சந்தேக நபரும் அதே பேருந்தில் பயணித்துள்ளார்.

காதலை மறுத்ததால் கத்திக்குத்து

குறித்த பஸ் யுவதியின் வேலையிடத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டவுடன், இறங்குவதற்கு தயாரான யுவதியை சந்தேக நபர் தன்னிடம் இருந்த கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.

காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் அர்ஜுன

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க,


நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்
அலுவலகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் மனைவியை 17 தடவை குத்தி கொன்ற கணவன்

இந்தியாவில் தாதியாக வேலை புரிந்து வந்த 26 வயதுடைய மனைவியை
கணவன் 17 தடவை கத்தியால் குற்றி இல்லாது அழித்துள்ளார்

இவரது தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனறி உயிரிழந்தார் .


இந்த சம்பவம் தொடர்ப்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் ,
குற்றவாளியாக அடையும் காணப்பட்ட கணவனுக்கு
ஆயூள் தண்டனை வழங்க பட்டுள்ளது .

மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில்
இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது