கத்திக்குத்துக்குள்ளாகி கடற்படை வீரர் உயிரிழப்பு
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவமொன்று புதன்கிழமை (08) பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாவிக நெவி பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது












