https://www.youtube.com/watch?v=a73-_6prs4
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு


எரிந்த விமான தளம் விமானங்கள் அழிப்பு

எரிந்த ரஷ்ய விமான தயாரிப்பு விமான தளம் ,
பல விமானங்கள் அழிப்பு , வெடித்த கடும் யுத்தம்

வீடியோ

லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்


லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்தாக்குதல்

தெற்கு லெபனான்னுக்குள் நுழைந்து இஸ்ரேல் விமானங்கள்
கடும் தாக்குதல் ,பதிலுக்கு திருப்பி அடிக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்று (11) மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப் பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

அதிரடியாக ரத்துச் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனை பொருள் விவசாயிகளை ஊக்கமிழக்க செய்வதாகவும் அதனால் உள்நாட்டு வாசனை பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்கள் வர்த்தகநாமங்களில் முதலிடம் வகிக்கும் இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உள்நாட்டு வாசனைப் பொருட்களின் தரத்தை மேலும் பேணுவதற்கும், தோட்டப் பயிர்களாக உள்நாட்டு வாசனைப் பொருட்களை மேலும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு

பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபால தற்போது பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றார்

உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்
Posted in உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்

உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்

கோடீஸ்வரர்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் என்றாலே, ​​எலான் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி போன்ற பெயர்கள் தான் நினைவுக்கு

வருகின்றன. ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் மேலே குறிப்பிடப்பட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விடவும் அதிகமான சொத்துக்களை கொண்ட உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ.

ஆம்.. வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி பேரரசி வூ, தான் வாழ்ந்த சகாப்தத்தின் பணக்காரப் பெண்ணாக கருதப்படுகிறார்., சில வரலாற்றாசிரியர்கள் இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண் என்றால் அது வூ தான் என்று குறிப்பிடுகின்றனர்..

பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் பேரரசி வூ வின் சொத்துக்கு நிகராகதாம்.

அதாவது எலான் மஸ்க்கின் 229 பில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜெஃப் பெசோஸ் 174 பில்லியன் டொலர்கள் மற்றும் சுமார் 106.2 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் ஆகியோரின் சொத்துமதிப்பை முறியடித்தது.

டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ ஒரு புத்திசாலி ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்., தானது ஆட்சி மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என்றும் கூறப்படுகிறது,

மேலும் தனது பதவியைப் பாதுகாக்க தனது சொந்த குழந்தைகளை நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை வூ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பேரரசி வூ ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த காலக்கட்டத்தில் சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் விரிவடைந்தது.. அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் செழித்த வளர்ந்ததுடன், தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரரசி வூவின் செழுமையான மற்றும் கம்பீரமான வாழ்க்கை முறை, ஆகியவை “Empress of China” என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சமகால மக்களுக்கும் தெரியவந்தது.

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி

சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி

சிலாபம் – திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அதேவீதியில் சென்ற டிப்பர் லொறியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் – திகன்வெவ, மாரக்கெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியின் அருகே நின்றுகொண்டு உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றிக்கொண்டிருந்த இளைஞன் மீதே இவ்வாறு டிப்பர் வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது தந்தைக்கு சொந்தமான சிறிய பெக்கோ இயந்திரத்தை தனது சொந்த உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது, உழவு இயந்திரத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்திற்கு நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி அந்த இளைஞன் மீதி மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளமொன்றில் விழுந்ததாகவும், விபத்தில் கவிழ்ந்த டிப்பரின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் இளைஞனின் மார்பில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே

அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்

தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று

ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று

வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்

படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024

மனைவியை கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொன்ற கணவன்

மனைவியை கொன்ற கணவன்

அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தை சேர்ந்த மனைவியை, கணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவம், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில், உயிரிழந்த பெண் பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்குச் நேற்று சென்ற போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மகைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 40 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

43 வயதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

பிக்கு மீது துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் கைது

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொணராகல, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்டோ சாரதிக்கு கத்திக் குத்து பணம் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ சாரதிக்கு கத்திக் குத்து பணம் கொள்ளை

ஆட்டோ சாரதிக்கு கத்திக் குத்து பணம் கொள்ளை

கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) பிற்பகல் எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வாடகை வண்டி சாரதியுடன் திவியகஹவெல பிரதேசத்திற்கு செல்வதற்காக குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணி அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் சாரதியை தாக்கி கத்தியால் காயப்படுத்தி அருகில் உள்ள காணிக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதியின் சட்டையையும் கிழித்த

சந்தேகநபர்கள் தப்பியோடிய பின், சாரதியின் வீதிக்கு வந்து அங்கு பயணித்த ஒருவரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர். இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார

வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். காயமடைந்த நபர் எல்பிட்டிய, கம்பட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

வரட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது.

வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அபிவிருத்தி திருமதி அனோஜா களுவாராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருப்பதாகவும், முடிந்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன இதில் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பங்கேற்பதாக அறிவித்துள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட தாம் கோரவில்லை எனவும், கடன் வழங்கியவர்களுடன் கலந்துரையாடுவதற்கே கோரியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி

யுக்திய நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துாவ தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொலிஸ் அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், அந்த சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், குறிப்பாக வீதி மறியல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்றால், கடுமையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் ஊடாக இராணுவத்தினரை தொடர்பு கொள்ள முடியும்” என அவர் தெரிவித்தார்

ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்


ஹமாஸுக்கு இரையாக காசா வரும் அமெரிக்கா ஆமி கப்பல்

ஹமாஸுக்கு இரையாக காசா வரும்
அமெரிக்கா படைக்காவி தாக்குதல் ஆமி கப்பல்

வீடியோ

கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் 2 டசின் எதிரிகள் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் 2 டசின் எதிரிகள் அவுட்


கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் 2 டசின் எதிரிகள் அவுட்

கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் 2 டசின் எதிரிகள் அவுட்

கொத்தாக எரிந்த இஸ்ரேல் டாங்கிகள் கோட்டைக்குள் இரண்டு வெடித்த ஏவுகணைகள் ,
2 டசின் எதிரிகள் அவுட் ,வெடித்து பறந்த கடும் போர்

வீடியோ

வடை சுட்ட அயாண்டோம் அழித்த ஹிஸ்புல்லா ஓடிய இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

வடை சுட்ட அயாண்டோம் அழித்த ஹிஸ்புல்லா ஓடிய இராணுவம்


வடை சுட்ட அயாண்டோம் அழித்த ஹிஸ்புல்லா ஓடிய இராணுவம்

வடை சுட்ட அயாண்டோம் முற்றாக அழித்த ஹிஸ்புல்லா புர்கான் ஏவுகணைகள் .


சற்றும் எதிர்பாராத அதிரடி தாக்குதல் ,பலத்த இழப்பு ,சொல்லி அடிக்கும் வீரம் ,

இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை


இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை

இஸ்லாமியருக்கும் தமிழருக்கும் இடையில் பெரும் போர் தயாராகும் களமுனை .


விழித்து கொண்டு தடுக்குமா எம் தமிழ் தேச தொப்புள் கொடி உறவுகள் ,

வீடியோ

ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேல் முகாம்கள் தரை மட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேல் முகாம்கள் தரை மட்டம்


ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேல் முகாம்கள் தரை மட்டம்

ஹிஸ்புல்லா இராணுவம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தரை மட்டம்.


என லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவிப்பு

வீடியோ