கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் இரு வருடங்கள்
செல்லுமென எதிர்பார்ப்தாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
1918 காலப்பகுதியில் ஸ்பானிய வைரஸ் என்ற பேரில் உலக முழுவதுமாக
பரவிய வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுமார் 2 வருட காலம் தேவைப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது உலக நாடுகளிலிடமிருக்கும் மருத்து
வசதிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை 2
வருடங்களுக்கு முன்பாகவே கட்டுப்படுத்தும் இயலுமை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில
வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்
தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
இலங்கை Alawwa-குருநாகல் வீதியில் கார் மற்றும் டிப்பர் ராக் என்பன
திடீரென மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஐவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் வீதி விபத்துக்களை தடுத்திட புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ள போதிலும்
இவ்வாறான விபத்துக்களை ளி தடுக்க முடியவில்லை

திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
ஹம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, இவ்வாறு பாதசாரி ஒருவர்
மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டுக்காக
விண்ணப்பிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை இலக்கம் : 244 / 2020
வெளியிடப்பட்ட நேரம் : 09.15
ஊடக அறிக்கை
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் – 2020
மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள, இருப்பினும்
அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் இருந்தமை (EPF) மற்றும் தொழிலில் (Jop)
ஈடுபட்டிருந்தமை என்ற ரீதியில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்;ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தகுதிகளைப் பெறுவார்களாயின்
பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின்
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும், 2020.09.15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டை பிரதேச
செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி
கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை
எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 23,098,181 பேருக்கு வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 6,601,622 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 15,701,892 அதிகமானோர் சிகிச்சைக்கு பின்
குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 802,365 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 179,200
பிரேசில் – 113,454
மெக்சிகோ – 59,610
இந்தியா – 55,928
இங்கிலாந்து – 41,405
இத்தாலி – 35,427
பிரான்ஸ் – 30,503
ஸ்பெயின் – 28,838
பெரு – 27,034
ஈரான் – 20,376
கொலம்பியா – 16,568
ரஷ்யா – 16,189
தென்னாபிரிக்கா – 12,843
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர
தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21.08.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இலங்கை
காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அலுத் மாவத்தை பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டு ஆரம்பமாகும் இந்த சுரங்கப்பாதை புதிய முகத்துவாரம் பகுதி
ஊடாக நிலத்தடி வழியாக சென்று முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடலுக்கு திறக்கப்படுகிறது.
இன்று நிறைவுசெய்யப்பட்ட சுரங்கப்பாதையின் நீளம் 778 மீட்டராகும். 3 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே
ஒரு திடமான கொன்கிரீட் புறணி அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிறைவில், ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில் வினாடிக்கு 15,000 லீட்டர் நீர் கடலுக்குள் விடப்படும்.
புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை கட்டுமானம் சைனா பெட்ரோலியம் பைப்லைன் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்
மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வை யூஷிங் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த,
இலங்கைக்கான சீனத் தூதர் ஹூ-வே மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்.
பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள நகுல், தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்
மனைவியுடன் நகுல்
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இதையடுத்து காதலில் விழுந்தேன்,
மாசிலாமணி, கந்த கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஸ்ருதியை திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகர் நகுல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி. நாங்கள் எங்கள் மகளுக்கு Nak(khul) & Sru(Bee) – Khulbee) குல்பி என்று பெயரிட்டுள்ளோம் என்று உங்களில்
பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புனைப்பெயர். அடுத்த சில மணிநேரங்களில் குழந்தையின் பெயரை வெளியிடுவோம் என்று பதிவிட்டிருந்தார்.
நகுல் மகளின் பெயர்
இதையடுத்து மற்றொரு பதிவில் குழந்தையின் பெயரை வெளியிடுள்ளார். குழந்தைக்கு அகீரா என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடிகையை வீட்டிலேயே மிகவும் எளிமையாக இயக்குனர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல திருமணங்கள் எளிமையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும்
திரைப்பிரபலங்களின் திருமணம் கூட மிகவும் எளிமையாகவும் நடைபெற்று வருகிறது.
அப்படி தற்போது தமிழில் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதாவிற்கும் நடிகை ஷாலினி வட்னிகட்டிக்கும் இன்று வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான பாதுகாப்பு
நடைமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
விஷம் கலந்த டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்ல புதின் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோமா நிலையில் உள்ள ரஷிய எதிர்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
அலெக்ஸி நவல்னி
மாஸ்கோ:
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.
நவல்னி நேற்று முன்தினம் ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்திலேயே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்கு
சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என கிரா தெரிவித்தார்.
நவல்னி குடித்த டீ-யில் விஷம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், நவல்னியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றதையடுத்து நவல்னிக்கு மேல் சிகிச்சை அளிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. இதற்காக கோமா சிகிச்சை அளிக்கும் அடங்கிய மருத்துவக்குழு ஒன்று தனி விமானம் மூலம் ரஷியா அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நவல்னியை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க மருத்துவமனையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நவல்னியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி வெளிநாட்டிற்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதி தரும்படி அதிபர் விளாமிர் புதின் அரசு நிர்வாகத்திடம் நவல்னி குடும்பம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு புதின் நிர்வாகம்
அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தற்போது நவல்னியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியையடுத்து விஷம் கலக்கப்பட்ட டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ள ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னி கூடிய விரைவில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜெர்மனிக்கு கொண்டு செல்வதாக நவல்னியின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீப்பற்றி எரிந்து வருகிறது.
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
இந்த காட்டுத்தீயால் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளன.
காட்டுத்தீ காரணமாக 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம் flight accdent
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மையமாக வைத்து சினிமா உருவாகிறது.
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படம்
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம்
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த
விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
கேலிகட் எக்ஸ்பிரஸ் பட போஸ்டர்
இந்நிலையில், இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இதனை மாயா என்பவர் இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது
பல நூறு மக்கள் திரண்டு வந்து இந்த ஆலயத்தில் வழி பாடுகளை செய்வார் ,ஆனால் இம்முறை மக்கள் அதிக வரவின்றி ஆலயம் வெறிச்சு போயுள்ளது
கொரனோ நோயின் பாதிப்பும் ,குருக்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எதிரொலி காரணமாகவும் இந்த மக்கள் வரவு வீழ்ச்சியுற்றுள்ளது
லூசியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளமை தெரிந்ததே
தொடர்ந்து மக்களை சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி அறிவுறுத்த பட்டு வருகின்றனர் ,
முக கவசம் அணியாமல் சென்றால் பிரிட்டனில் தண்டம் அறவிட படுகிறது ,
மக்கள் அதிகமாக ஒன்று கூடினால் அந்த நிறுவனம் சீல் வைக்க பட்டு இழுத்து மூடப்பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video
சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video
அமெரிக்காஇஸ்ரேல் கூட்டு உளவுத்துறை சதியால் படு கொலை செய்ய ப்பட்ட ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராக விளங்கிய சொலைமானியின்
மரணத்தை அடுத்து தற்போது ஈரான் புதிய வகை ஏவுகணை ஒன்றை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
குறித்த ஏவுகணைக்கு martyr Hajj Qassem Soleimani என்ற பெயரை வைத்துள்ளது ,
இது தமிழீழ,விடுதலை புலிகள் பசீலன் , குமரப்பா என்ற பெயர்களை வைத்து பாரிய அதிர்ச்சி தரும் பீரங்கியை தயாரித்து ,ஏவிய செயலுக்கு ஒப்பானதாக உள்ளது
ஈரான் அறிமுக படுத்தியுள்ள இந்த ஏவுகணையின் தூர வீச்சு 1,400 கிலோ
மீட்டர்கள் என தெரிவிக்க பட்டு அந்த சோதனை காட்சியின் காணொளியும் வெளியிட பட்டுள்ளது
தொடர்ந்து தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி புதிய
பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளது
முன்னைய ஏவுகணைகளை விட இது மேப்பட்ட திரவ வடிவில் சென்று
தாக்கும் ஏவுகணை வடிவமைப்பை தாங்கி அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது
பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
சல்மான் கான்
இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி
நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும்.
கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகியே விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாளவிகா
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை
பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா
எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம்
தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன்
இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.
மாளவிகா
என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர்
அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான்
முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை
செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று
இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.
தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து
கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக
இருக்கிறது. இதேபோல் வசந்தகுமார் எம்.பி.க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர் 5 நாட்கள் சென்னை
ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள
எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டார்
எஸ்.பி. பாலசுப்பிரமணியம். ஆனால் கடந்த 12ம் தேதி இரவில் இருந்து அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் நலம்பெற வேண்டி திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
மொராக்கோ நாட்டு விமான படை பயன்பாட்டிற்கு அமெரிக்கா இராணுவத்திடம் இருந்து F-16 fighter jets
போர் விமானங்கள் இருபத்தி நான்கு வாங்கி குவிக்க பட்டுள்ளது
கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமான
கொள்வனவு திடீரென வாங்கியுள்ளது ஏன் என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது
போரில்லாத பொழுதும் தமது இராணுவத்தை நவீன மயமாக்களுக்கு
உள்ளாக்கி வருகிறது மொராக்கோ
,குறித்த
நாட்டின் இந்த ஆயுத தளபாட கொள்வனவு பிராந்திய நாடுகளில்
சீரற்ற நிலையை உருவாக்கும் என அஞ்ச படுகிறது
சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்
சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்
வடகிழக்கு சிரியாவின் எல்லையில் உள்ள நீர் வழங்கும் குழாய்களை துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படையினர் நிறுத்தியுள்ளனர்
இதனால் வடகிழக்கு சிரியா பகுதியில் வசித்து வந்த சுமார் பத்து
லட்சம் மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்ற்னர்
போரில் நீரை ஆயுதமாக பாவித்து வரும் இந்த் கிளர்ச்சி படைகள் செயல்களுக்கு
கடும் கண்டம் தெரிவிக்க பட்டுள்ளது
எனினும்
அவற்றை எல்லாம் செவிமடுக்காது குறித்த கிளர்ச்சை படைகள்
மக்களை சொல்லென்ன துயருக்கு உட்படுத்தி வருகின்றனர்
இந்த பகுதியில் ஐந்தாவது முறையாக இவ்விதம் நீர் நிறுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா
கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டு இரண்டாம் நிலை இராணுவ தளபதி சொலைமானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ஈரான் தற்போது அமெரிக்கா பல் நாட்டு படைகள் ஆக்கிரமித்துள்ள நிலைகளை நோக்கி தனது நகர்வை வேகாமாக செலுத்தி வருகிறது
அவ்விதம் தற்பொழுது கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கு
ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
ஈரானின் இந்த நேர்மறை திடீர் முடிவுகள் ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன்
தமது கொள்கை நோக்கின் பிரகாரம் மத்திய கிழக்கு முதல் வல்வளைப்பு
செய்துள்ள அமெரிக்கா நேச படைகளை அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்
முகமாக இவ்விதம் கிளர்ச்சை படைகளை தூண்டி விட்டு
வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்க படுகிறது
கொலம்பியா அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக உள்ளதும்,
இங்கே போதைவஸ்து ,மனித படு கொலைகள் அதிகரித்து செல்கின்ற நாடக விளங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது








