பிக்குகளே எம்மை வழிநடத்துகின்றனர் – மகிந்தா
பிக்குகளே எம்மை வழிநடத்துகின்றனர் – மகிந்தா
மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (2020.08.22)தெரிவித்தார்.
வடமேல் மாகாண மஹாசங்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள கௌரவ
மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
அதேபோன்று நாட்டின் எதிர்கால திட்டங்களை கௌரவ மஹாசங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக்#
கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வடமேல் மாகாணத்தில் காணப்படும் நீர் பிரச்சினை, காட்டு யானைகளின் பிரச்சினை மற்றும் பிற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, மக்களின் பிரச்சினைகளை அடையாளம்
கண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு,
உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாகாணங்களை அபிவிருத்தி
செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தெமட்ட மளுவ திக்வெஹெர தலைமை விகாராதிபதி, வடமேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் கௌரவ ரூகவ ஜீனரதன தேரர், வாரியபொல சுமங்கள சிறிவெனே
பிரிவேனாதிபதி வடமேல் மாகாண தலைமை சங்கநாயக்கர் கௌரவ பேராசிரியர் தும்புல்லே ஸ்ரீலக்கந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.
மேலும், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில், நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கால்நடை பண்ணை மேம்பாடு மற்றும் பால் கைத்தொழில் துறை அமைச்சர்
டீ.பீ.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை
இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா -ஈரான் ஏவுகணை சாதனை
இஸ்ரேல் இராணுவத்தின் ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று ஹிஸ்புல்லாக்கள் புளு லைன் நிலைகளை கடந்து தாக்குதல் நடத்த
சென்ற வேளை ஹிஸ்புல்லா விடுதலை போராளிகளின் ஏவுகணை தாக்குதலினால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுளளது
கடந்த எட்டு வாரத்தில் இரண்டாவது உளவு விமானத்தை குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது
தமது இராணுவ நகர்வு ஒன்றின் பொழுது பாவனைக்கு உட்படுத்த பட்ட
விமானம் ஹிஸ்புல்லா பகுதியில் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்துள்ளது
இந்த விமான சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து தற்போது இரு நாட்டு இராணுவத்திற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது
லெபனான் துறைமுகத்தில் தரித்து நின்ற ஆயுத கப்பல் மற்றும் ஏவுகணைகளை
தாக்கி அழித்ததன் பின்னர் இடம்பெற்ற பெரும் சம்பவமாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தல் அமைய பெற்றுளளமை குறிப்பிட தக்கது
ஈரான் வாழங்கிய ஏவுகனைகளே இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா
ஈரான் ஏவுகணை தாக்குதல் -ஈராக்கில் இருந்து இராணுவத்தை அகற்றும் அமெரிக்கா
ஈராக் தலைநகர் பக்தாத்தில் தளம் அமைத்து நிலை கொண்டிருந்த அமெரிக்கா படைகள் இராணுவ மையங்கள் மீது ஈரான் தொடராக
நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து அங்கிருந்து தமது இராணுவத்தை விலக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்
இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் ஈரானின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல்
தொடர்ந்து நிலவி வருவதால் அங்குல ஐந்தாயிரம் அமெரிக்கா படையினரில்
இரண்டாயிரத்து ஐநூறு பேரை தாம் விலக்கி கொள்ள உள்ளதாக டிரம்பம் அதிரடியாக அறிவித்துள்ளார்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஈரான் தமது இராணுவத்தை இலக்கு
வைத்து தாக்குதல் நடத்தி டிரம்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி
தோற்கடிக்கும் என்பதால் இந்த அவசர நகர்வில் டிரம்ப், ஈடுபட்டுள்ளார் என அடித்து கூறலாம்
தமது படைகளை விலக்கி கொள்ள மறுத்த டிரம்ப் திடீரென தலைகீழ்
முடிவை மேற்கொண்டு இராணுவ விலக்குதலுக்கு வந்துள்ளமைக்கு இதுவே காரணம் எனலாம்
பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்
பிள்ளைகள் முன்பாக தந்தையை குத்திய ரவுடி கும்பல் – தெற்கு லண்டனில் பயங்கரம்
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டன் Walworth, south east London பார்க்கில் நுழைந்த அறுவர் அடங்கிய ரவுடி கும்பல் ஒன்று
இருபத்தி நான்கு வயது தந்தை ஒருவரை அவர்களது பிள்ளைகள் பார்க்க கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்
இரத்த வெள்ளத்தில் துடி துடித்து வீழ்ந்த இவரை விரைந்து வந்த அம்புலன்ஸ் மீட்டு சென்றது
தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்ற
வண்ணம் உள்ள இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆறு ஆண்கள் அடங்கிய குழுவினர் கைது செய்ய பட்டுளள்னர்
இந்த கத்தி குத்து சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவிலை ,
லண்டனில் தற்போது இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் நேற்றைய தினம் பன்னிரெண்டு வயது பிரிட்டன் பூர்வீக குடியை கொண்ட சிறுமி ஒருத்தி காணாமல் போயுளள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு அறிய தரும்படி போலீசார் மக்கள் உதவியை கோரியுள்ளனர் ,
இவர்கள் இறுதியாக சென்ற இடம் முதல் எங்கு எல்லாம் இவர்
சென்றிருக்க கூடும் என்ற நிலையில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கத்தி குத்து மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில்
இதே பகுதியில் தற்போது இந்த சிறுமி காணாமல் போயுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாரவது இந்த சிறுமியை கண்ணுற்றாலோ அல்லது ஏதாவது தகவல்
தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் படி வேண்ட படுகிறது

- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை

- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN

- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது

வேகமாக பரவும் வைரஸ் -கேப்பாப்புலவில் 18 பேருக்கு கொரோனா
வேகமாக பரவும் வைரஸ் -கேப்பாப்புலவில் 18 பேருக்கு கொரோனா
கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில் 18 பேருக்கு
கொரொனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகைந்த 257 பேர் கடந்த 09ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்
பரிசோதனையின் போது 21ஆம் திகதியன்று 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து
அவர்கள் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் ஒரு தொகுதி பேருக்கு தெற்கின் மில்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட
பிசிஆர்.பரிசோதனையின் போது, 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சகோதரியை கழுத்து நெரித்து கொன்று வீசிய சகோதரி – இலங்கையில் நடந்த பயங்கரம்
சகோதரியை கழுத்து நெரித்து கொன்று வீசிய சகோதரி – இலங்கையில் நடந்த பயங்கரம்
மன்னார் உப்பளம் பகுதியில், ஓகஸ்ட் 13ஆம் திகதியன்று, பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், உயிரிழந்தப் பெண்ணின் சகோதரி உள்ளிட்ட 2 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக
நபரனான இளம் பெண்ணின் மாமனார், தலைமறைவாகியுள்ள நிலையில், தேடப்பட்டு வருகிறார்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்
செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21 ) என்ற இளம் பெண்,
கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, மன்னார் உப்பளத்தில் வீசப்பட்டிருந்தார்.
சி.சி.டிவி பதிவில், கொலை செய்யப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று மன்னாரில் உள்ள
உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட காட்சியைப் வைத்து, மன்னார் தலைமையகப் பொலிஸார், மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை.
தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொலை செய்யப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி (வயது 30), அவரது
பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து, நேற்று (22) கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன், தலை மறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகின்றார்.
சகோதரியின் கணவருக்கும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக, அவரது சகோதரி
சந்தேகம் கொண்டுள்ளார். இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது.
இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார்.
அவரது தாயின் சகோதரன், செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர்.
அதனால் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணை, வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.
அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரிய
தாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார்.
அங்கு நகரில் நடமாடிவிட்டு, உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்து வைத்திருந்துள்ளனர்.
உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
19ஆவது அரசியல் அமைப்பில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்
19ஆவது அரசியல் அமைப்பில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்
19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் இன்று காலை இடம்பெறற்ற
பொது மக்கள் சந்திப்;பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை
நிறைவேற்றி, மகா சங்கத்தினரது கருத்துக்கள், யோசனைகளை
ஏற்று, 19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பை சீர்திருத்துவதற்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அளித்தனர். நாட்டுக்கு அச்சுறுத்தலாக
உள்ள விடயங்கள் இல்லாமல் செய்வதற்காகவே அதில் திருத்தம்
மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சதரவீர தெரிவித்தார்.
உயிரிழந்த இவர் 47 வயது பெண். இவர் கடந்த 20 ஆம் திகதி
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா
தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று
நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார்
என்றும் இவர் உயிரிழநதமைக்கான காரணம் இருதய பாதிப்பு என அரசாங்க
தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-08-23 06:48:34
2947
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
137
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
2798
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
12
இறப்பு எண்ணிக்கை
தமிழர் தீர்வை குழப்பும் விக்கி – பொங்கினார் டக்கிளஸ்
தமிழர் தீர்வை குழப்பும் விக்கி – பொங்கினார் டக்கிளஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும்
பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய நாடாளுமன்ற
முதலாவது உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ்
ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற
பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ
எந்தவிதமான தீர்வைப் பெற்றுத் தராது எனவும் பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில்,
குறித்த அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற
பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’- மின்சக்தி அமைச்சர்
மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’- மின்சக்தி அமைச்சர்
நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென , மின்தடை தொடர்பில்
ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில்
குறிப்பிடப்படுமாயின், தான் தனது அமைச்சுப் பதவியை துறக்க
தயாராகவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை- அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 17ஆம் நாடுபூராகவும் 8 மணித்தியால திடீர் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை குறித்து ஆராய்வதற்காக, அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின்
ஆலோசனைக்கமைய, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின்
அறிக்கை நாளைய தினம் தன்னிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியா இராணுவத்தினர் மீது துருக்கி படைகள் அகோர தாக்குதல்
சிரியாவின் வடக்கு அலப்போ பகுதியில் உள்ள சிரியா அரச இராணுவ நிலைகள் மீது இடைவிடாத பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதலை துருக்கிய படைகள் நடத்தியுள்ளன
இந்த தாக்குதலில் சிரியா அரச இராணுவத்திற்கு கணிசமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன
தமது பதிலடி தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள் பலியாகியுள்ளதாக சிரியா அரச இராணுவமும் பரப்புரை புரிந்து வருகிறது
இதன் உண்மையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை
அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை
அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டி துறைமுகத்தில் கப்பல் ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்
கடலோர அகழ்வாராய்ச்சில் ஈடுபடும் முக்கிய நபர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்
காணாமல் போனவர்களை தாம் தொடர்ந்து தேடி வருவதாகவும்
அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே கடல் படையினர் தெரிவிக்கின்றனர்
கப்பலில் இருந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதால் இந்த
இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா Louisiana பகுதியில் கடை ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
கடைக்குள் கத்தியுடன் நுழைந்து பண கொள்ளையில் ஈடுபட இவர்
முயன்றதாகவும் அவ்வேளை மக்களை சக்தி முனையில் தாக்கிட
இவர் முயன்ற பொழுதே காவல்துறையினர் சூடு நடத்தி அவரை படுகொலை செய்துள்ளனர்
இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
அமெரிக்கா காவல்துறையினர் இன வெறியில் இவ்விதம் பலரை கொன்று
குவித்து வருகின்றமை நாள் தோறும் வெளியாகும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது
பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்
பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு
வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று முற்பகல் மல்வத்து மஹா விஹாரையின் மஹாநாயக்கரை சந்தித்து நல்லாசி பெற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள்
மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய சமகால அரசாங்கம் பாரிய வெற்றியை பெற்றது. இது நாட்டிற்கு நன்மையான ஒரு விடயமாக
அமையும். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல்
அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மல்வத்து மஹாநாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது மனைவியுடன் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
அஜித்
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதுமாக முடிந்த பின்பு ‘வலிமை’ திரைப்பட ஷூட்டிங்கை தொடங்கலாம்
என்று அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா
தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன்
மருத்துவனை சென்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன்
காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித் தலையில் தொப்பி, முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார்.

உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார்
உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார்
அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார் – கங்கனா வருத்தம்
கங்கனா ரனாவத்
இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா
ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியையும் சாடினார்.
தற்போது சுஷாந்த் சிங்கின் இன்னொரு காதல் மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் தனக்கிருந்த காதல் போன்றவற்றை பற்றி பேசி இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள
பதிவுகளில், “சுஷாந்த் சிங். சாரா அலிகான் காதல் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வந்துள்ளது. எதற்காக இந்த நட்சத்திர குழந்தைகள்
வெளியில் இருந்து வரும் நடிகர்களை ஆசையில் விழ வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள்.
அதன்பிறகு சுஷாந்த் சிங் எதற்காக கழுகிடம் சிக்கி கொண்டார் என்பதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும்
சுஷாந்த் சிங்கை சாரா அலிகான் உண்மையாக காதலித்து இருப்பார் என்று நம்புகிறேன். சாராவுக்கு அழுத்தம் ஏற்பட்டதால் விலகி இருக்கலாம்.
கங்கனா ரனாவத் ரித்திக் ரோஷன்
நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று எதற்காக
ஒரு எதிரிபோல மாறினார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் கங்கனாவை கண்டித்துள்ளனர்.
இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி
இஸ்ரேலுக்குள் பறந்து விழும் பலூன் குண்டுகள் – மாறிய தாக்குதல் உத்தி
இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பாதிக்க ப்பட்ட மக்கள் விடுதலை குழுக்கள் போராடி வருகின்றன
அவ்விதம் அத்துமீறி மக்களை கண்மூடித்தனமாக கொன்று குவித்து வரும் இஸ்ரேல்
அரச பயங்கரவாத இராணுவத்தினரை இலக்கு வைத்து பாலஸ்தீனம்
காசா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் விடுதலை போராளிகள்
பலூன்கள் மூலம் இஸ்ரேல் நிலைகளை நோக்கி குண்டுகளை கட்டி பறக்க விடுகின்றன
இவ்வாறான பலூன்களை கண்ணுற்ற இஸ்ரேல் இராணுவம் அவற்றில் சிலதை சுட்டு வீழ்த்தியுள்ளன
சில பலூன்கள் இலக்கு நோக்கி நகர்ந்த பொழுதும் அவை வெடித்து சிதறவில்லை
இஸ்ரேல் அரசு இந்த குண்டுகள் வெடித்ததாக அறிவித்தால் மட்டுமே வெளியில்
இதன் சேத விபரங்கள் தெரிய வரும் ,அதனால் இந்த குண்டுகளின் முழுமையான
பாதிப்பு விபரங்களை மறைத்து வருகிறது என்பதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன

இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் என்றும் இலலாதவாறு கடந்த ஆண்டு சிறார் பாலியல் துஸ் பிரோயகம் அதிகரித்துள்ளது
குற்றங்களை தடுப்பதற்கு நாட்டில் பலவேறு பட்ட இறுக்கமான சட்டங்கள் ஏற்படுத்த பட்ட பொழுதிலும் இவ்வாறான குற்ற செயல்களை தடுத்திட முடியவில்லை
மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பெண்கள் அமைப்பினர் பெண்களுக்கு
எதிராக நடத்த படும் இந்த் வன் கொடுமை நிகழ்வை தடுத்து நிறுத்திட கோரி
வருகின்ற பொழுதும் இவை தொடர்ந்து ஆண்டு தோறும் அதிகரித்து செல்கின்றமை மனித குலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இந்த குற்றங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது அதற்குரிய காரணிகள் என்ன
என ஆராய்ந்த பொழுது வீட்டில் உள்ள தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள்
முறையால் அதிகம் இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக குறிப்பிட பட்டுள்ளது

ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
இலங்கை கம்பாக பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரனோ நோயானது
கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தனிமை படுத்த பட்டுளளார்
இவர் கற்கை நெறி புரிந்த மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் உள்ளிட்ட
நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
எதிர்வரும் இரண்டாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்க
படவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம்
நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 52 ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரனோ சோதனை நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது







