ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்
ஆபத்தான நிலையில் வடகொரியா அதிபர்
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா சர்ச்சைகளுக்கு பெயர்போன நாடாகும். அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்
அதற்கும் ஒருபடி மேலே. சர்வதேச ஊடகங்களில் அவர் குறித்த எதிர்மறையான செய்திகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஒரு சர்வாதிகாரியை போல் தடாலடியான முடிவுகளை எடுப்பவர் கிம் ஜாங் அன் என்பதையே அவரை பற்றிய செய்திகள் உணர்த்தும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக கிம் ஜாங் அன்னின் உடல்நிலை குறித்த செய்திகள்தான் வலம் வருகின்றன. ‘கிம்முக்கு இதய
அறுவை சிகிச்சை நடந்து அது தோல்வியடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார்’; ‘கிம் உயிரோடு இருக்கிறாரா
என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் செய்திகள் உலவிவந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நடைபெற்ற, ‘வடகொரியாவின் தந்தை’ என போற்றப்படும் தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில் கிம் கலந்துகொள்ளவில்லை.
2011-ம் ஆண்டு வடகொரியாவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து இந்த நிகழ்வில் தவறாமல்
பங்குகொள்ளும் கிம், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை என்ற செய்தி, அவர் உடல்நிலை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியது.
எனினும் ஏப்ரல் மாத இறுதியில் கிம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக அந்த நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டது. இதன் மூலம் கிம் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ‘சமீபத்தில் கிம் தொடர்பாக வடகொரிய அரசு வெளியிட்ட அனைத்து புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை’ என்று தென்கொரிய புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இதனிடையே கிம் தன்னுடைய பொறுப்புகளில் சிலவற்றை தனது தங்கை கிம் யோ ஜாங்கிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகும் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது தென்கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்கின் உதவியாளர் சாங் சங் மின் “வடகொரிய தலைவர்
கோமாவில் இருக்கிறார்” என்று கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாங் சங் மின் இது குறித்து அவர் கூறுகையில் “வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கோமாவில் இருப்பதாக தகவல்
கிடைத்திருக்கிறது. ஆனால், அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி, வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் அவரின் சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என கூறினார்.
அதேசமயம் வடகொரியா விவகாரங்களை உன்னிப்பாக கவனித்து வரும் நிபுணர்கள் பலர் கிம் இறந்து விட்டதாகவே கூறுகின்றனர்.
அண்மையில் வட கொரியா சென்று வந்த சர்வதேச பத்திரிகையாளர் ராய் காலே, கிம் இறந்துவிட்டார் என்று தான் நம்புவதாக கூறினார்.
கிம் உடல்நிலை குறித்து வடகொரிய அரசால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட தகவல்கள் அங்கு ஏதோ பெரிய விஷயம் நடப்பதை உணர்த்துவதாக ராய் காலே தெரிவித்தார். மேலும் கிம் ஜாங்
அன்னின் தந்தை கிம் ஜாங் இல் இறந்து சில மாதங்களுக்குப் பின்னரே அவரது இறப்பு முறையாக அறிவிக்கப்பட்டதை
சுட்டிக்காட்டிய ராய் காலே கிம்மின் சகோதரி தலைவர் பொறுப்பை ஏற்கும்போது இந்த விஷயம் தெளிவுபடுத்தப்படும் என கூறினார்.
கிளிநொச்சியில் -38 காடைகளுக்கு சீல்
கிளிநொச்சியில் -38 காடைகளுக்கு சீல்
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சேவைச் சந்தியில், நேற்று (24) இரவு, 38 38 மரக்கறி கடைகளுக்கு சீல்
வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அச்சந்தை மரக்கறி வியாபாரிகளால், இன்று (25) காலை, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச சபை தவிசாளரால், நேற்று (24) பிற்பகல் 3 மணிக்கு, கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி வியாபாரிகள் 48
பேருக்கும் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென, நேற்று முற்பகல் 11 மணிக்கு வாய்மொழி மூலம் சந்தை காப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவித்தல் திடீரென அறிவிக்கப்பட்டதால், அக்கூட்டத்துக்கு, 38 வியாபாரிகளால் செல்லமுடியவில்லை. இதனால், சேவை சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் முன்னிலையில்
சபையின் செயலாளருக்கு தவிசாளரால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, கூட்டத்துக்கு வருகை தராத 38 வியாபாரிகளினதும் வியாபார நிலையங்களுக்கும் இரவு 8
மணியளவில் சீல் வைத்து பூட்டப்பட்டதுடன், “இந்த வியாபார நிலையங்கள் 25-08-2020 முதல் மூடப்படுகின்றன” என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.
சந்தை வியாபாரிகள் அனைவரும் வீட்டுக்குச் சென்றதன் பின்னரே, இவ்வாறு 38 வியாபார நிலையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்றைய தினம் (25) அதிகாலை சந்தைக்குச் சென்ற வியாபாரிகள், அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அத்தடன், இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாபாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
“சாதாரண ஒரு கூட்டத்துக்கு ஏழு நாள்களுக்கு முன் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த நடைமுறையையும் பின்பற்றாது, 11 மணிக்கு வாய்மொழி மூலம், பிற்பகல் 3 மணி
கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு, கூட்டத்துக்குச் சமூகமளிக்காதவர்களின் வியாபார நிலையங்களைப் பூட்டுவது என்பது அநியாயமான செயல்” என, பாதிக்கப்பட்ட மரக்கறி வியாபாரிகள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.
இதன்போது அங்கு சமூகமளித்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், வியாபார நிலையங்களைப் பூட்டும் தீர்மானத்தை
தவிசாளரின் பணிப்புக்கமைய, வர்த்தக சங்கத்தின் தலைவரின் முன்னிலையில் மேற்கொண்டதாகவும் அதனடிப்படையில் நேற்றிரவு (திங்கட்கிழமை) அறிவித்தல் ஒட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இது தமது தவறான நடவடிக்கையென்று தெரிவித்த அவர், வியாபாரிகள் மீண்டும் தங்களின் வியாபார நிலையத்தைத் திறந்து நடவடிக்கைளை மேற்கொள்ள முடியுமெனவும் கூறினார்.
குறித்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்த பிரதேச சபை செயலாளர், இதனால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் எழுத்து மூலமாக அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.பிரபாகரன், வியாபார
நிலையங்களை திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபை செயலாளர் மற்றும் கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் வாக்குறுதிக்கமைவாக, போராட்டத்தைக் கைவிட்டு, காலை 9.30 மணிக்கு வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.
இலங்கையில் பணக்கார பிச்சைக் காரர் கண்டு பிடிப்பு
இலங்கையில் பணக்கார பிச்சைக் காரர் கண்டு பிடிப்பு
பழ வண்டியொன்றை திருடியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, கொச்சிகடை தேவாலயத்துக்கு முன்பாக,யாசகர், மஹரகம-
பமுனுவ பிரதேசத்தில் கோடீவரொருவர் என்று கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய இவருக்கு இரண்டுமாடி வீடொன்று சொந்தமாக உள்ளதுடன், அதில் கீழ்
பகுதியை மாதாந்தம் 30,000 ரூபாய்க்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன், வெகன் ஆர் காரொன்றும், மற்றுமொரு சொகுசு காரொன்றும் இவருக்கு சொந்தமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொச்சிகடை- ஜெம்பட்டா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாய் பெறுமதியான பழ வண்டியொன்றை திருடியமைத்
தொடர்பில், வண்டியின் உரிமையாளர் கரையோர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய கரையோர பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர் நேற்று முன்தினம்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கமையவே, யாசகம் செய்யும் குறித்த சந்தேகநபர், கோடீஸ்வரர் என தெரியவந்துள்ளது.
காணாமற் போனோரை தேட முடியாது- இலங்கை அரசு
காணாமற் போனோரை தேட முடியாது- இலங்கை அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயிருந்தால், அவர்கள் வெளிநாடுகளுக்குச்
சென்றிருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, புலிகளின் குடும்ப
உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமையுமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்மிருக்கு கருத்துத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும்
காணாமல் போயிருந்தால், அவர்களைக் தேடவேண்டிய அவசியம் இல்லை எனத் தான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை எனவும் தெரிவித்தார்.
முதலில், காணாமல் போதல் என்பதன் வரைவிலக்கணத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்றும் கூறிய அமைச்சர், காணாமல் போனவர்கள் என்று கூறுவார்களாக இருந்தால், அவர்களைத் தேட
முடியாதென்றே அர்த்தமெனவும் சில வேளைகளில், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் கூறினார்.
ணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்களில் அரைவாசிப் பேர், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது
என்றும் கூறிய அமைச்சரவையின் பேச்சாளர், நாட்டில் யுத்தம் ஒன்று நடைபெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் இராணுவம், புலிகள் என, இரு தரப்பிலிருந்தும் காணாமல்
போனவர்கள் இருக்கிறார்கள் என்றும் எனவே, இவர்களைத் தேடுவது பெறுமதியான விடயம்தான். ஆனால், காணாமல் போனவர்களைத் தேடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறதெனவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின்
குடும்பத்தினருக்கு நட்டஈடு அல்லது நிவாரணங்களை வழங்குவதென்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகும் என்றார்.
“நீங்களை எங்களைக் கொன்றொழியுங்கள்; உங்களது குடும்பத்துக்கு நாங்கள் நட்டஈடு வழங்குகிறோம்” என்று
அரசாங்கம் கூறுவதாகவே இது அமையுமென்றும் கூறிய அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின்
குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குவது சரியா? எனவும், அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
ரசியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கும் இலங்கை
ரசியாவிடம் கொரோனா தடுப்பூசி வாங்கும் இலங்கை
கொவிட் வைரசை ஒழிப்பதற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பினால் தேவையான சிபாரிசு
மற்றும் அங்கீகாரம் கிடைத்த பின்னர் இலங்கைக்கு கொண்டு வருவதங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி ரஷ்ய தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தடுப்பூசி குறித்து
கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தடுப்பூசி தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளது. Covid 19 Sputnik V என்ற பெயரிலான இந்த தடுப்பூசி பரிசோதனைப் பணிகள் 3 ஆம் கட்டத்தில் இருப்பதுடன் தெரிவு
செய்யப்பட்ட 45 இடங்களில் 40,000 பேருக்கு இதனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்
கிளிநொச்சியில் கூட்டம் கூடிய டக்கிளஸ்
கிளிநொச்சி மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் கௌரவ. டக்ளஸ்
தேவானந்தா அமைச்சர் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும்
வினைத்திறனுடையதாக நடாத்துவதற்கான முன்னாயத்த குழு கூட்டம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தினை ஆரம்பித்து வைத்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை மிகவும் வினைத்திறனுடையதாக
நடாத்துவதற்காக இக்கூட்டத்தினை கௌரவ அமைச்சர் ஒழுங்குபடுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும்
மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறிப்பிடுகையில் இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
கூட்டத்திற்குரிய முன்னாயத்த குழு கூட்டமாக அமைவதாகவும் முன்னதாக தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இக்கூட்டம் நடாத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். மக்களுடைய கோரிக்கைகள் தன்னிடம் வரும் போது அதற்காக
அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், பங்களிப்பினை அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பல விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
• கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவினை கரைச்சி மற்றும் அக்கராயன் என இரு செயலக பிரிவுகளாக அமைப்பது தொடர்பான விடயங்கள்.
• கிளிநொச்சி மாவட்டத்தினை இரு வலயக்கல்வி அலுவலகங்களாக உருவாக்குவதற்கான விடயங்கள்.
• கரைச்சிப் பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக உருவாக்குதலும் கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேசங்களை தனித்தனி பிரதேச சபைகளாக உருவாக்குவதற்கான விடயங்கள்.
• அரச காணிகளில் குடியிருப்பவர்களிற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பான விடயங்கள். மற்றும் காணி சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
• கண்டாவளை பிரதேசத்தில் மத்திய வகுப்புத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆரம்ப உரிமையாளர்கள் அடையாளம் காணப்படாமையினால் குடியிருக்கும் மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பிலான விடயங்கள்.
• வனவளத்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் மற்றும் வயல் நிலங்களை உரியவர்களிற்கு வழங்குதல் தொடர்பான விடயங்கள்.
நீண்டகாலமாக வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சொந்த மாவட்டத்தில் கடமையாற்றக் கூடியவாறான இடமாற்றம் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. மேலும் இலங்கை விவசாய சேவைக்குரியவர்களுக்கான பரீட்சை நடாத்தப்பட வேண்டும் என பிரதி விவசாயப்பணிப்பாளர் கேட்டுக்கொண்டமைக்கு எழுத்து மூலமான அறிக்கை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
• பாதுகாப்பான புகையிரத கடவையில் பணியாற்ற தேவையான உத்தியோகத்தர்களை ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை வழங்கும் திட்டத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
• உமையாள்புரத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக்கு அருகில் பாடசாலை அமைந்துள்ளது இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைக்கப்பட வேண்டும் எனும் விடயத்தினை மீளவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு கௌரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
• வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளிற்கு அரச வேலைகள் தவிர்த்து சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள்.
• நுண்கடன் நிதியளிப்பு முறையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களிற்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பிலான விடயங்களோடு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வினை தடுப்பது தொடர்பாக இராணுவத்தினுடைய உதவியினைப் பெற்று தடுக்குமாறு கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் காடழித்தல் என்பதற்கு மேலாக காடு வளர்த்தல் நடவடிக்கையையும் முன்னெடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள நிர்வாகம் கள் இறக்குமதி செய்வதனை தடுத்து உள்ளுர் உற்பத்தியினை மேம்படுத்துமாறும்
கேட்டுக்கொண்டார். தொடர்ந்து யானைத்தொல்லை மற்றும் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையினை வழங்குமாறு வனவள திணைக்களத்தினையும் விவசாயத் திணைக்களத்தினையும் கேட்டுக்கொண்டார்.
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் தொடர்பாக விரிவான அறிக்கையினை
சமர்ப்பிக்குமாறும் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய அபிவிருத்திப்பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
• முன்மொழியப்பட்ட கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டட நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.
• சகல வசதிகளையும் கொண்ட பொது நூலக கட்டட தொகுதியொன்றை உருவாக்குவதற்கு நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உள்ளுராட்சி உதவி ஆணையாளரை கௌரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்தும் இடம்பெற்ற கூட்டத்தில் கிராமிய வீதிகளை புனரமைத்தல் தொடர்பான பிரச்சினையை முன்னுரிமைப்படுத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது பொருத்தமானது எனவும் அதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான கௌரவ.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தினுடைய பிரச்சினைகள், தேவைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன
விவசாயத்தை ஊக்குவிக்க கோட்டா அதிரடி நடவடிக்கை
விவசாயத்தை ஊக்குவிக்க கோட்டா அதிரடி நடவடிக்கை
அரச மற்றும் தனியார் மட்டத்தில் விதைகள் மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை…
விவசாய புத்தாக்கத்திற்கு ஆராய்ச்சிகள்…
உரப் பாவனையில் புதியதோர் புரட்சி…
பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விவசாய விளைச்சளை அதிகரிப்பதற்கான காலம் உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ அதற்காக பல யோசனைகளை முன்வைத்தார்.
கொவிட் நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள ஏனைய நாடுகளின் பொருளாதாரத்தை கண்காணித்து தேசிய விவசாய பொருளாதாரத்தை வளப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விதை மற்றும் கன்றுகள் உற்பத்தி உரப் பாவனைஇ விவசாய புத்தாக்க ஆராய்ச்சிகள்இ களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து ஆகிய அனைத்து துறைகள் குறித்தும் கவனம் செலுத்திஇ எதிர்வரும் இரண்டு வருடங்களில் சவாலான இலக்கை வெற்றிகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நெல் மற்றும் தானியங்கள்இ சேதன உணவுகள்இ மரக்கறிகள்இ பழவகைகள்இ மிளகாய்இ வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடுஇ விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் விவசாய இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு அறுவடை 80இ000 டொன்களாகும். நுகர்வோர் தேவை 250இ000 டொன்களாகும். உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யாது உள்நாட்டிலேயே தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு விவசாயிகளை வலுவூட்ட வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.
உயர் தொழிநுட்பத்தின் கீழ் விதைகள் மற்றும் கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு மற்றும் ஏனைய கிழங்கு வகைகளை நுகர்வதற்கு வலுவூட்டுவதன் மூலம் உருளைக்கிழங்கு இறக்குமதியை மட்டுப்படுத்த முடியுமென்றும் பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு சோள உற்பத்தியில் தன்னிறைவை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விதைகள் மற்றும் கன்றுகள் உற்பத்திக்கு நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதுடன்இ அதற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்தின்போது ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எட்டு வருடங்களாக விவசாய திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. வெற்றிடங்களை விரைவாக நிரப்பி இத்துறையின் முன்னேற்றத்திற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
உயர்தரம் வாய்ந்த பசளைகளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கும் சுகாதாரமான வினைத்திறன் வாய்ந்த தலைமுறை ஒன்றை உருவாக்குவதற்கும் சேதனப் பசளை பயன்பாட்டிற்கு மாறுவது குறித்தும் கொள்கை சார்ந்த தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேஇ இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷஇ ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்
அறிகுறி இல்லாமலேயே தோன்றும் நோய்கள்
சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.
அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்… ஏற்படுத்தும் பாதிப்புகளும்…
அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்
சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை
கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள்
இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின்
வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை
அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ
பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும்
நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.
நீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது
கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான
அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற
அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.
கணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான்
மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை
வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி
படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.
மாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும்.
மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.
சிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள்.
ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.
எச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால்
பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.
பெண்களுக்கு மலட்டு தன்மையை உருவாக்கும் இந்த நோய்
பெண்களுக்கு மலட்டு தன்மையை உருவாக்கும் இந்த நோய்
சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து சேர்ந்திருக்கிறது என்பதை காட்டுகிறது. உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான
உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு
உள்ளவர்களின் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை. ஆனால், நீர் அதிகமாகச் சேர்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானது போல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையை தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும்.
சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடையில் 10 கிலோ அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில்
கொழுப்புச் சத்து காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்.
அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும் என்று மருத்துவர்கள்
எச்சரிக்கின்றனர். அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும்
தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.
தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர் அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை
சரிசெய்து விடலாம். அவர்கள் தாய்மை அடையவும் முடியும். இதற்கு மாறாக சில பெண்களுக்கு உடல்நல குறைப்பாட்டால்
மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என அவரது மகன் சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சரண்
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை
பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.
ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால்
ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் டுவீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன். ஆனால்
, இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம்.
அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும். ஆகவே, தவறான செய்திகளை
வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, புதிய தொழில் தொடங்கி உள்ளாராம்.
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில்
சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.
ஹன்சிகா
இந்நிலையில், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம்.
அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த கொரானோ
லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள்
குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்
போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்
பிரிட்டன் ஏ ஒன்பது வேக சாலையில் டிராக்கை ஒரு வழி சாலையின் ஊடு செலுத்தி வந்த இரு டிராக் சாரதிகள் காவல்துறையினரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,மக்கள் மற்றும் வீதிகளில் பொருத்த பட்டிருந்த கமரா
ஊடாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரட்டி சென்ற காவல்துறை டிரக்கை மடக்கி நிறுத்தின
சம்பவ வேளை இரு சாரதிகளும் அதிக போதையில் இருந்துள்ளனர் ,அப்புறம்
என்ன அவர்களை தூக்கி சென்றது காவல்துறை ,இடம்பெற்று வந்த வழக்கில்
இருவருக்கும் ஒருவருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன்
நாட்டுக்குள் வாகன செலுத்த தடையும் விதிக்க பட்டுள்ளது,இபப்டியும் சாரதிகள்
பிரிட்டனில் உடைந்து வீழ்ந்த வீடு ஒருவர் பலி – பலர் காயம்
பிரிட்டனில் உடைந்து வீழ்ந்த வீடு ஒருவர் பலி – பலர் காயம்
நேற்று பிரிட்டன் Bradford பகுதியில் வீடொன்றின் கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அதற்குள், வசித்து வைத்த குடும்பஸ்தர் பலியானார் .
மேலும் பெண் உள்ளிட்ட சிறார்கள் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த இடிபாடு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு
பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு
பிரிட்டனில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள இடைக்கால புதிய சட்ட அமுலாக்கத்தின் பிரகாரம் முப்பது பேருக்கு மேல் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
அவ்விதம் கலந்து கொண்டால் அதனை தலைமை ஏற்று நடத்தும் நபருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட படுவதுடன்
அங்கு கலந்து கொள்ளும் நபர்கள் ஒருவருக்கும் ஆயிரம் பவுண்டுகள் தாண்டம் அறவிட படும்
மேலும் முகக்கவசம் அணிய மறுத்தால் நூறு பவுண்டுகள் தண்டம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
கடத்த தினம் முன்னூறுக்கு மேற்பட்டவர் ஒன்று கூடிய கூட்டம் ஒன்றை
கலைத்த போலீசார் அங்கு கூடியவர்களுக்கு இது போன்று தண்ட பணம் அறவிட்டுள்ளனர்
எனவே மக்களே எச்சரிக்கை
கோரனோ வைரஸ் பரவல் மீள பிரிட்டனில் அதிகரித்ஸ் எள்ளும் நிலையில் இந்த உத்தரவுகள் பிறப்பைக்க பட்டுள்ளன
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என அரசு மீள மக்களிடம் வேண்டியுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை
பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை
கடந்த சனிக்கிழமை பிரிட்டன் Southampton பகுதியில் வேகப்படகைள பயணித்த ஒரே குடும்பத்தய் சேர்ந்தவர் விபத்தில் சிக்கினார்
இதில் 12 காயது சிறுமி சம்பவ இடத்தில பலியானார் ,மேலும் அதே
குடும்பத்தை சேர்ந்த இருவர் கைகளை இழந்துள்ளனர்
மோசமான விபத்தாக பதிய பெற்றுள்ள இந்த வேக படகு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
படுகாயமடைந்த 12 பேரும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
,இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
நாட்டில் உள்ள 03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் இன்று (24) முதல் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை
மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றுக்கு இவ்வாறு பொலிஸ் விசேட
அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு
மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் போலீஸ் வேட்டை – ஐவர் கைது
யாழில் போலீஸ் வேட்டை – ஐவர் கைது
ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் இளவாழை பகுதிகளில் வைத்து 5 பேர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 67 கிராம் 519 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
21 முதல் 38 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பேலியகொட பகுதியில் வைத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் நீரியல் விவசாய துறையை வளப்படுத்துவேன் – டக்கிளஸ் சூளுரை
வடக்கில் நீரியல் விவசாய துறையை வளப்படுத்துவேன் – டக்கிளஸ் சூளுரை
வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பொருத்தமான பாரியளவு வயற் காணிகள் மற்றும் தோட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இத்தகைய குளங்களையும் வாவிகளையும் மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற
வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இத்தகைய காணிகள் அனைத்தையும் விவசாய செய்கைக்காக
விடுவித்து மானிய மற்றும் இலகு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய
செய்கையை மேம்படுத்தி பரவலாக்குவதும் அதிகூடிய விளைச்சலை ஏற்படுத்துவதும் எமது நோக்கமாக இருக்கின்றது.
இதன் மூலமாக நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி உணவு உற்பத்தியில் எமது நாட்டை
தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும். அதன் அடுத்த இலக்கு ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அத்துடன் குளங்கள் வாவிகள் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பிலும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களது கருத்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய குளங்களை வாவிகளை மீள பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் ஊடாக விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறுகின்ற
வகையில் மேற்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
புதிதாக கொண்டுவரப்படவுள்ள உத்தேச இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள சுயாதீன
ஆணைக்குழு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சுயாதீனம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆணைக்குழு எந்த வகையிலும் சுயாதீனம் அற்றது என்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவில் 10 – 7 பேர் அங்கத்துவம் வகிக்கின்றனர். ஜனாதிபதி, பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சார்பில்
இவர்கள் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். இதிலும் பிரச்சினை உண்டு. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவிலும் பிரச்சினை உண்டு. ஆணைக்குழுவில் இருந்து பொலிஸ்மா அதிபர் வெளியேறிய
பின்னர் சட்டத்தை எவ்வாறு வளைப்பது என்று எமக்கு தெரியம் என்று கூறியுள்ளார்.
அப்படியானால் இதன் சுயாதீன தன்மையிலும் பிரச்சினை உண்டு. தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதில் 3 #
அங்கத்தவர்கள் உள்ளனர். இதுபோன்ற விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.
19 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள முக்கிய விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய அரசியல் யாப்பில் திருத்தங்கள் உள்ளடக்கப்படும் என்றும் அமைச்சர்
கூறினார். அமைச்சரவை யாப்பு திருத்தம் தொடர்பில் அமைச்சரவை ஆவணம், குறிப்புக்கள் முதலானவற்றை பரிசோதனை செய்வதற்கும், சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்குமாக
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலீஸ் சப்ரி உள்ளிட்ட அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியல் யாப்பு அல்லது தற்பொழுது உள்ள அரசியல் யாப்பில் திருத்தத்தை மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தோம். இது தொடர்பில்
மக்களுக்கு நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். 19 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அமைந்துள்ளது. பொது மக்கள் இதனைப் புரிந்து கொண்டு 3 இல் 2
பெரும்பான்மை ஆணையை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளனர். இந்த விடயங்களை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் அகும்.
புதிய திருத்தத்தில் அல்லது யாப்பில் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வோம். தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவி தொடர்பிலான கால எல்லையை 5 வருடமாகவே முன்னெடுப்போம்.
ஜனாதிபதி ஒருவர் 2 முறைக்கு மேற்படாத வகையில் பதவி வகிப்பதற்கான காலத்தை அவ்வாறே செயற்படுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகள்
அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகள்
அடுத்த மாதம் முதல் வழமைபோன்று பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, தரம் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புக்களுக்கான பாடசாலைக் காலம் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் காலை 7.30
தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாகும். இது தொடர்பில் கல்வி அமைச்சு அனைத்து மாகாண பிரதான செயலாளர்களுக்கும்,
மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள்
இம்மாதம் வரை மாத்திரம் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.







