விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து
சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய்
மல்லையாவை நாடு கடத்த முடியாது என இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது – இங்கிலாந்து சொல்கிறது
வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு அவர் கைது
செய்யப்பட்டார். உடனே ஜாமீனில் வெளிவந்தார். அவரை நாடு கடத்த
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு எதிரான விஜய் மல்லையாவின்
மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அவர் இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.
இதுகுறித்து கேட்டபோது, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் (பொறுப்பு) ஜன் தாம்சன் கூறியதாவது:-
சில சட்டப்பிரச்சினைகள் இருப்பதால், அவற்றுக்கு தீர்வு காணப்படாமல்,
விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. அது, ரகசியமான விவகாரம். அதைப்பற்றி நான் விரிவாக கூற முடியாது.
இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் நான் கணிக்க முடியாது. இருப்பினும், கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
ஐபில் தொடரில் 5-வது முறை வென்ற கோப்பையுடன் மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்
கோப்பை வென்ற மும்பை அணி
துபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி
கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐ.பி.எல். தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும்.
இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று
12 வயது பாடசாலை மாணவிக்கு தொற்று
மஸ்கெலியா பிரதேசத்தில், 12 வயது பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில், 163 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலே, மேற்படி மாணவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மாணவியின் குடும்பத்தில், வேறு எவரும் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
பேலியாகொட மீன்சந்தையில் பணிப்புரிந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த நபரொருவின் வீட்டில், அண்மையில் நடந்த நிகழ்வுக்கு,
மேற்படி சிறுமி உட்பட அவரது குடும்பத்தினர் சென்றுவந்துள்ளனர் என்றும் இதனூடாகவே, சிறுமி தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி அவரது தாயாருடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்
கொரோனா மரணங்களை மறைக்கிறது அரசாங்கம்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை, அரசாங்கம் மறைப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள் எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள்
முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.
நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தது என்றும் எனினும் இது
தொடர்பாக அறிவிக்கபடவோ, மொத்த இறந்தோரின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ், ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு என்றும் அதில், இறப்புக்கு, கொரோனா வைரஸே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம், நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது
தென்படுவதாகவும் இது, நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது, கொரோனாவைக் கட்டுப்படுத்திய வெற்றியாளர் கிண்ணத்தை, ஜனாதிபதி சுவீகரித்தார் என்றும்
எனினும், இந்த வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில்,
இரண்டாவது அலை அபாயத்தின் போது, இலங்கை அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36
இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான
பெண் ஒருவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டு
IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழப்பதற்கு காரணமாக கொவிட் 19 நிமோனியா நிலைமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் இலங்கையில் பதிவான 36 ஆவது கொவிட் 19 தொற்று
நோயாளரின் மரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிப்பு
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 2 பிரதேசங்கள் ,தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கந்தானை மற்றும் மாபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகள் இத்தருணத்திலிருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்றுப் பரவலை தடுக்கம் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள்
இதேவேளையில் ,மொரட்டுவ பொலிஸ் வலயத்திற்குள் அங்குலான வடக்கு மற்றும் அங்குலான தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர்
பிரிவுகள் இரண்டும் இத்தருணத்தில் இருந்து மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில்
பெயரிடப்படுவதாக கொவிட் 19 வைரசு தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள்
குருநாகல் மாநகர எல்லை பிரதேசத்திற்குள் இலிப்பு கெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கடவீதிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய கிராம உத்தியோத்தர் பிரிவுகள் இரண்டை தவிர குருநாகல் மாநகர எல்லை பிரதேத்திற்குள் ஏனைய பகுதிகளும்:
குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள்
குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்திற்குள் கலகெதர, ஹம்மலவ மற்றும் இகல கலுகோமுவ, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
மூன்றைத்தவிர தவிர குளியாப்பிட்டடி பொலிஸ் வலையத்தில் ஏனைய பிரதேசங்களும்
இத்தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா
சிறைக் காவலர்கள் இருவருக்கு கொரோனா
போகம்பரை பழைய சிறைச்சாலையின் சிறைக் காவலர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை மூலமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட இவர்கள் தெல்தெனிய சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனித வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் பலி – 40 பேர் காயம்
மனித வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் பலி – 40 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தெற்கு கந்தகார் பகுதியில் மனித வெடிகுண்டு தாரி
நடத்திய திடீர் குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் சம்பவ இடத்தில
பலியாகினர் மேலும் நாற்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
தொடர்நது அந்த பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு
பலப்படுத்த பட்டுள்ளது
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்
இன்று அவுஸ்ரேலியா Upper Swan பகுதியில் நபர் ஒருவரை ஆயுததாரி
திடீரென தாக்கி விட்டு சுட்டு விட்டு தப்பி ஓடினார்
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாலைகளை
மூடி தேடுதலை நடத்தினர்
இதில் அவர் கைது செய்யப் பட்டார் ,ஆனால் அவரிடம் இருந்து ஆயுதங்களை காணவில்லை
தொடர்ந்து தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
2024 இல் தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் போட்ட குண்டு
நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் சண்டியரும் ,சர்ச்சை
நாயகருமாக விளங்கி வந்த டிரம்ப் படுதோல்வியை சந்தித்தார்
இதனை அடுத்து தற்பொழுது ஜோ பைடன் மகத்தான வெற்றியுய் தட்டி
சென்ற நிலையில் எதிர்வரும் 2024 இல் மீளவும் ஜனாதிபதியாக
போட்டியிட்டு ஆட்சியில் அமர்வேன் என டிரம்ப் சூளுரைத்துள்ளார்
அமெரிக்காவின் மகிந்த ராஜபக்ஸா இவர் தாங்க
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் காவல்துறை ஊழியர்கள் மீது பதின் ஐந்து வயது இளம்
பெண் ஒருவர் சுடுதண்ணி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குற்ற செயல் ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுதே மேற்படி
அசாம்பாவிதம் இடம் பெற்றுள்ளது ,
தற்போது குற்ற செயல் புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இப்படியும் சில
பெண்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்
பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே
பாடசாலையை காப்பாற்றுங்கள்- கள்ள அமைச்சான -கல்வி அமைச்சு – படம் உள்ளே
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை”
செயற்திட்;டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று கட்டடப்பட்டு அதன் கட்டுமான பனிகள் தற்போது தற்காலிகமாக இடை நிருத்தப்பட்டுள்ளன.
ஹட்டன் கொழும்பு பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த பாடசாலையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டடத்தின் அருகில்
பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவிற்கு பாதிப்படைந்தால் இந்த நிர்மாண பனிகள் இடை நிருத்தப்பட்டுள்ளதாக தெரிய
வருகின்றது. இதற்கு பொருப்பான வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை உடனடியாக திருத்தி அமைக்குமானால். பாடசாலையின்
கட்டட நிர்மாண பனிகளை முன்னெடுக்க முடியும். மலையக மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கவும் முடியும் இதனை
உணர்ந்து செயற்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். தொடர்ந்து காலநிலை மாற்றங்களால் மேலும் இந்த பிரதேசம்
உடையுமானால் கட்டடம் பாதைக்கே வந்து விடும். இந்த விடயம் தொடர்பில் பல்வேறுபட்டவர்களுக்கு முறைபாடுகள் செய்த போதும்
இதுவரைக்கும் எந்த வித முடிவும் இல்லை. எனவே சம்பந்தபட்டவர்கள் இதற்கான உடனடி தீர்வை எடுப்பார்கள் என தெரிய வருகின்றது

பாடசாலையை காப்பாற்றுங்கள் 
பாடசாலையை காப்பாற்றுங்கள் 
இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video
இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video
இலங்கையில் மிகவும் சிறந்த முன்னணி கிட்டார் வாந்திய கலைஞர் இசைலயம் பகீரதன் தொடர்ச்சியாக பல பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
இவர் இலங்கையில் பல இசைக்கு ழுக்களில் தன்னுடைய இசை ஆளுமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்து பலருடைய பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இசைத்துறையில் இருக்கும் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் இவருடைய ஒவ்வொரு பாடல்களின் இசையமைப்பும் கூர்ந்து கவனிக்கப் படுகின்றன.
இவர் பல இசையமைப்பாளர்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருவதால் இளம் கலைஞர்களால் மதிக்கப் படும் ஒருவராக இருந்து வருகின்றார்.
முதல் தரப் பாடல்களை அதிகமாக வெளியிட்டு வரும் சுபர்த்தனா படைப்பக்கத்தில் மூத்த இசையமைப்பாளராக இருந்து பல
பாடல்களுக்கு இசையமைத்து வரும் இவருடைய பாடல் ஒன்றை அண்மையில் திரைப் பாடகர்கள் முகேஷ் – குரலிசைவாணி பிரதா ஆகியோர் பாடியிருந்தனர்
அந்தப் பாடல் ஒரு திரைப் பாடல் போன்று செவிகளில் விழுந்ததோடு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.
இங்கே இசைலயம் பகீரதன் அவர்களின் இசையில் ஒரு இளம் பாடகி சாரங்கா பாடிய பாடல் மனதிற்கு இதமாக அமைந்துள்ளது
. இவர் மேலும் பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதாக அறிய முடிகிறது.
இசைலயம் பகீரதன் அவர்களின் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!
கோட்டா ஆட்சியின் அலங்கோலம் – இதோ பாருங்கள்- படம் உள்ளே
கோட்டா ஆட்சியின் அலங்கோலம் – இதோ பாருங்கள்- படம் உள்ளே
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டம் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் மாநகர சபையினால் நிர்வகிக்கபட்டு வரும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையம் அன்மையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் நாட்டை சுத்தமாக வைத்திருப்போம்
என்ற உன்னத செயற்திட்டத்திற்கு கீழ் இளைஞர் யுவதிகளினால் பல சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும் அறிவுரைகளையும் கூறும் சித்திரங்கள் வரைந்து அழகுப்படுத்தபட்டுள்ளன.
இருந்தும் இந்த பஸ் நிலையத்தை முறையாக பராமரிப்பதில் நுவரெலியா மாநகர சபை விழகிருப்பதால். இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வரும் பயணிகள் பல
இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் காணப்படும் அனைத்து இருக்கைகளும் உடைந்து பாவனைக்கு உகந்ததாக இல்லை.; துர்ர இடங்களுக்கான பஸ்கள்
வரும் வரையில் பயணிகள் நின்றுக் கொண்N;ட காத்திருக்க வேண்டும். குறிப்பாக இரவு வேலைகளில் குளிருடன் பயணிகள்
பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நுவரெலியா என்றதும் அதன் பசுமையும் அதன் அழகுமே அனைவரினது மனங்களிலும் வரும் எண்ணமாகும்.
இந்த அழகிற்கு குத்தகமான பாராமரிப்பை இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இதனை திருத்தி அமைக்க வேண்டியது மாநகர சபையின் கடமையாகும்.
இந்த பஸ் நிலையத்தில் கொழும்பு கண்டி குருனாகல் யாழ்ப்பானம் வெலிமடை பண்டாரவலை பதுளை கதிர்காமம் காலி ஹட்டன் புஸ்ஸல்லாவ பூண்டுலோயா
ராகல உடபுஸ்ஸல்லாவ மீபிலிமான கந்தபளை வலப்பனை போன்ற இடங்களுக்கும் நுவரெலியாவ சூழவுள்ள தோட்ட மற்றும்
கிராமங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பஸ்களும் சொகுசு பஸ்களும் நிருத்தபட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.


கோட்டா ஆட்சியின் அலங்கோலம்
வத்தளை தமிழ் குடும்பம் மீதான தாக்குதல் செய்தி தொடர்பில் மனோ எம்பி நடவடிக்கை
வத்தளை தமிழ் குடும்பம் மீதான தாக்குதல் செய்தி தொடர்பில் மனோ எம்பி நடவடிக்கை
வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை
துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த குடும்பத்து தமிழ் பெண்ணை தாக்கியுள்ள நபர்களை கைது செய்யுங்கள்.
வத்தளை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இந்த தமிழ் குடும்பத்தவர்கள், கடந்த மாதம் 4ம், 13ம் மற்றும் இம்மாதம் 7ம் திகதிகளில், யோஹான் விக்ரமசிங்க என்ற பொதுஜன பெரமுன
(SLPP) என்ற ஆளும் கட்சி வத்தளை பிரதேச சபை உறுப்பினருக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் எதிராக தந்த
புகார்கள் தொடர்பில், வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செலோகம ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கண்டறியுங்கள்,
இதுபற்றிய செய்தி நேற்றைய சக்தி தொலைக்காட்சி செய்தியறிகையில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி எமது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் தன்னிடம் நேரடியாக புகார் செய்துள்ளதாக, தமுகூ தலைவர் மனோ கணேசன்
எம்பி, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தை அடுத்து, சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம், நேரடியாக எடுத்து கூறி கேட்டார்.
ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சமல் ராஜபக்ச, எம்பி மனோ கணேசனிடம் உறுதியளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதையடுத்து, மனோ கணேசன் எம்பி, வத்தளைக்கு பொறுப்பான மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ தொடர்பு கொண்டு, இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்து, வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் அசமந்த போக்கு மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடு பற்றி கவனிக்கும்படியும், வத்தளை கெரவலபிடிய பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி, அவர்களது காணி, வீடுகளை அபகரிக்கும் திட்டமா இது என விசாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.
இதுபற்றி உடன் நடவடிக்கை எடுப்பதாக, பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ, மனோ கணேசன் எம்பியிடம் உறுதியளித்தார்.
சற்று முன், வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி செலொகமவை தொடர்பு கொண்ட மனோ எம்பி, இத்தகைய புகார்கள் உம்மீது வத்தளை வாழ் தமிழ் மக்கள் கூறாத வண்ணம் நடந்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.
256 பொலிஸாருக்கு கொரோனா
256 பொலிஸாருக்கு கொரோனா
மேல் மாகாணத்தில் 256 பொலிஸாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் பூரண சுகமடைந்துள்ளனரெனவும் மேலும் 250 பேர்
தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸார் சுயதனிமையில்
இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்
இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 78 வயதுடைய ஆண் ஒருவர்,
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத்
தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இன்று சேவையில்
ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.
முறையான வேலைத்திடட்டத்தின் கீழ், தனியார் பஸ் சேவைகளும் நடத்தப்படும்
என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்..
நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து
நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து
நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை
உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களுள் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும் இவர்களின் அறியாமை
மற்றுமொருவருக்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு மாநாகர சபை
எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பயணங்களை வரையறுத்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
வீடுகளில் தனிமைப்படுத்தலுக்காக ஈடுப்படுத்தப்படும் நபர்களின் தனிமைப்படுத்தல் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் விசேட வைத்தியர் தெளிவுப்படுத்தினார்.
வயதானோர் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் தமது
தேவைகளுக்காக வெளியே செல்வது பொருத்தமானது என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.
யாராவது நபர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் அந்த வீட்டில் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது முக்கியமான விடயமாகும் என்றும் கூறினார்.
இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் குடும்பங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான சுகாதார நடைமுறை பற்றியும் அவர் தெளிவுப்படுத்தினார்.
அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது
அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது
புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை
நடவடிக்கையின்போது, நிர்ணய விலைக்கு அதிக விலையில், அரிசி
விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








