Posted in இலங்கை செய்திகள்

இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video

இசை அமைப்பில் சாதனைகள் படைக்கும் இசைலயம் பகீரதன்- video

இலங்கையில் மிகவும் சிறந்த முன்னணி கிட்டார் வாந்திய கலைஞர் இசைலயம் பகீரதன் தொடர்ச்சியாக பல பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

இவர் இலங்கையில் பல இசைக்கு ழுக்களில் தன்னுடைய இசை ஆளுமையை தொடர்ச்சியாக வெளிப்படுத்து பலருடைய பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இசைத்துறையில் இருக்கும் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் இவருடைய ஒவ்வொரு பாடல்களின் இசையமைப்பும் கூர்ந்து கவனிக்கப் படுகின்றன.

இவர் பல இசையமைப்பாளர்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருவதால் இளம் கலைஞர்களால் மதிக்கப் படும் ஒருவராக இருந்து வருகின்றார்.

முதல் தரப் பாடல்களை அதிகமாக வெளியிட்டு வரும் சுபர்த்தனா படைப்பக்கத்தில் மூத்த இசையமைப்பாளராக இருந்து பல

பாடல்களுக்கு இசையமைத்து வரும் இவருடைய பாடல் ஒன்றை அண்மையில் திரைப் பாடகர்கள் முகேஷ் – குரலிசைவாணி பிரதா ஆகியோர் பாடியிருந்தனர்

அந்தப் பாடல் ஒரு திரைப் பாடல் போன்று செவிகளில் விழுந்ததோடு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.

இங்கே இசைலயம் பகீரதன் அவர்களின் இசையில் ஒரு இளம் பாடகி சாரங்கா பாடிய பாடல் மனதிற்கு இதமாக அமைந்துள்ளது

. இவர் மேலும் பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதாக அறிய முடிகிறது.

இசைலயம் பகீரதன் அவர்களின் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!