இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36

Spread the love

இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36

இலங்கையில் கொவிட் 19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ,கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான

பெண் ஒருவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து மாற்றப்பட்டு

IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் உயிரிழப்பதற்கு காரணமாக கொவிட் 19 நிமோனியா நிலைமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் இலங்கையில் பதிவான 36 ஆவது கொவிட் 19 தொற்று

நோயாளரின் மரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *