தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை
தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை
இந்தியா தமிழகத்தில் கோயில் யானை ஒன்று தண்ணீர் தாக்கத்தில் தவித்தது ,
அவ்வேளை அவ்வழியே வந்த நீர் தாங்கியை வழிமறித்த யானை
அதில் இருந்த நீரை அள்ளிக்குடித்து தனது தாக்கத்தை தனித்து கொண்டது
அங்கு வந்த மக்களுக்கும் ,வண்டிக்கு எவ்விதம் சேதமும்
விளைவிக்காது யானையின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
தமிழகம் ஊரணியில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால்
அந்த ட் வீடு முற்றாக வெடித்து இடிந்து வீழ்ந்தது ,அவ்வேளை
அதற்குள் இருந்த தாய் மற்றும் ஒன்பது வயது மகன் உள்ளிட்ட மூவர் உடல் சிதறி பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களுக்கு தாலா இரண்டு லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது ஆளும் தமிழக அரசு
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
பைடன் கற்பழித்து விட்டார் பர பரப்பை கிளப்பிய பெண்
அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்
தன்னை கற்பழித்து விட்டதாக பெண் ஒருவர் பர பரப்பை கிளப்பியுள்ளார்
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் நடந்த மேற்படி விடயத்தை தற்போது
அவர் கிளறியுள்ளார் .
இவரது இந்த பேசிகள் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது
தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து டிரம்ப் அடம் பிடித்து வரும்
நிலையில் இந்த பெண் கிளப்பியுள்ள இந்த திடீர் பூகம்பம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
அவர் கூப்பிடும் பொழுது தூக்கி கொண்டு போவது பின்னர் அங்க பிடித்தார்
,இங்க கிள்ளினார் என கூறுவது இதுவே இந்த பெண்கள் கேவலமான நிலையாச்சு ,
அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா
யாழில் சடலத்துடன் வந்தோருக்கு நடந்த பரிதாபம்
கொழும்பில் உயிரிழந்தவரின் சடலத்தை, யாழ்ப்பாணம் காரைநகருக்கு
எடுத்து வந்த ஐவர், தத்தமது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காரைநகரை சேர்ந்த நபர், கொழும்பு – 13 வசித்துவந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் சடலத்தை, அவரது குடும்பத்தினர் ஐவர் , காரைநகரில் இறுதி
சடங்குச் செய்து பூதவுடலை தகனம் செய்யும் நோக்குடன், கொழும்பிலிருந்து காரை நகருக்கு எடுத்துவந்தனர்.
அவர்கள், தனிமைப்படுத்த விதிமுறைகளை மீறினார்கள் என சடலத்தை
எடுத்து வந்தவர்களை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் தனிமைப்படுத்தியுள்ளார்.
இறந்தவரின் சடலம் கோம்பயன் மயானத்தில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழில் இருவர் படுகொலை: 12 பேர் கைது
யாழ்ப்பாணத்தில், இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியிலிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த சின்னவன்
செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு, கடந்த வௌ்ளிக்கிழமையும் ஏற்பட்டுள்ளது. மாலை
இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,
பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அதில் சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31)
சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸார்,
சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா
வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய 19 ஊழியர்களுக்கு கொரோனா
குருநாகல் நகரிலுள்ள வியாபாரம் நிலையம் ஒன்றுடன் தொடர்புடைய,
19 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 17 ஊழியர்களும் அவர்களுடன்
தொடர்புடைய இருவரும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேற்படி தொற்றாளர்களில் 14 பேர் அக்குரணை நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்
ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ்
துறைமுகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று
உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தோர்
பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் , 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொம்பே பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்த 10 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் 721பேருக்குக் கொரோனா
வத்தளையில் இன்று (14) இனங்காணப்பட்ட 18 தொற்றாளர்களுடன் மொத்தமாக
வத்தளையில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 721ஆக அதிகரித்துள்ளது.
ஹெந்தலை, கெரவலபிடிய, திக்கோவிட்ட, பமுனுகம, மாபொல
ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை நீக்கம் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டள்ளன.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
- மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு நபருக்கும் வெளியில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை (15) நள்ளிரவு
- தொடக்கம் நீக்கப்படுவதாக ஊழுஏஐனு 19 தொற்றுப் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
- கொழும்பு மாவட்டம்
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் என்ற ரீதியில் பெயரிடப்பட்டிருந்த 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் பொலிஸ் பகுதிகளும்- தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் திங்கட்கிழமை அதாவது 16ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் பெயரிடப்படுகின்றன.
மருதானை பொலிஸ் பிரிவு
கோட்டை பொலிஸ் பிரிவு
புறக்கோட்டை
கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு
டேம் வீதி (Dam Street) பொலிஸ் பிரிவு
- கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் என்ற ரீதியில் பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் கீழே குறிப்பிடப்படடுள்ள பொலிஸ் பிரவுகள் தவிர எஞ்சிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையிலிருந்து நாளைய தினம் காலை 5 மணிக்கு விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு,
ஜாஎல பொலிஸ் பிரிவு,
ராகம பொலிஸ் பிரிவு,
கடவத்தை பொலிஸ் பிரிவு , தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்
வத்தளை பொலிஸ் பிரிவு,
பேலியகொட பொலிஸ் பிரிவு,
களனி பொலிஸ் பிரிவு – திங்கட்கிழமை (16) காலை 5 மணிதொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.
- இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்வரும் பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நிலை நாளை காலை 5 மணி தொடக்கம் நீக்கப்படுவதாக கொவிட் 19 தொற்றப் பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாநகர சபை எல்லைப் பகுதி
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
ஹொரணை பொலிஸ் பிரிவு
இங்கிரிய பொலிஸ் பிரிவு
வேகட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கேகாலை மாவட்டம்
ரூவன்வெல்லை பொலிஸ் பிரிவு
மாவனெல்லை பொலிஸ் பிரிவு
வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த கார் – இடிந்த வீடு – நடந்த பயங்கரம்
இந்திய தமிழகத்தில் சாரதியின் கட்டு பட்டை இழந்து கார் ஒன்று
வீட்டுக்குள் புகுந்தது ,இதனால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது
இந்த சம்பவத்தில் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் கார் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 472 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 26,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்க பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது ,
மிரளும் டிசம்பர் மாதம் உயிர்பலிகள் எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் 2030 இல் பெட்ரோல் டீசல் கார்கள் விற்க முற்றாக தடை
பிரிட்டனில் எதிர்வரும் இடண்டாயிரத்து முப்பதாம் ஆண்டு
தொடக்கம் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க படுகிறது
அதற்கு பதிலாக மின்சார கார்கள் அறிமுக படுத்த பட்டு வருகின்றன
சுற்று சூழல் பாதுகாப்பு கருதி என ஐரோபியா தேசம் கூறி வருகின்ற
பொழுதும் நிலை அதுவல்ல என்பதும், அரேபிய நாடுகள் மீது பெரும் படை எடுப்பை மேற்கொள்ளவும் ,அங்கு எரிபொருள் இறக்குமதி
செய்வதை தவிர்த்து அந்த நாடுகளின் பொருளாதரத்தை வீழ்த்துவதன்
நோக்கமாக இந்த நகர்வை ஐரோப்பா தழுவிய நிலையில் மேற்கொள்ள பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ
2500 வருடம் பழமை வாய்ந்த 100 சவப்பெட்டிகள் சடலங்களுடன் மீட்பு – வீடியோ
எகிப்தின் வரலாற்று சாதனையாக பார்க்க படும் இரண்டாயிரத்து ஐநூறு
ஆண்டுகள் பழமை வாய்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சவப் பெட்டிகள் சடலங்களுடன் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு மீட்க பட்டவர்களது சடலங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்த பட்டு
வருவதுடன் அந்த சடலங்கள் ஸ்கனிங் முறைக்கு உள்ளாக்க பட்டு உடல்கூறியல் ஆய்வு செய்ய படுகிறது
இவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பன தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது
அரச குடும்பத்தை சேர்ந்த சிலரும் இதில் உள்ளதாக நம்ப படுகிறது
மேலும் குறித்த பகுதியில் அகழ்வாரச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள படுகின்றன
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்சில் டிசம்பர் வரை ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.
பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு
பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை வரை 19.15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை முன்னிட்டு அந்நாட்டு அரசு கடந்த அக்டோபர் 30ந்தேதி பொது முடக்கம் அறிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்பு கவுன்சில்
கூட்டத்தில் தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.
இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் செய்தியில், கடந்த
வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புக்கு பலியானோர் நோயாளிகளின்
எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2வது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இராணுவத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய மோடி
இந்தியாவின் பிரதமர் நேர்ந்திரா மோடி இராணுவத்துடன்
இணைந்து தீபாவளியை குதகலமாக கொண்டாடினர்
ஆண்டு தோறும் இராணுவத்துடன் இணைந்தே இந்த நிகழ்வை கொண்டாடி வருகிறார்
அவ்விதமே இன்றும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்
மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை அமைத்த தேரர்
இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. எங்கள் மதம் பெரிதா உங்கள் மதம்
பெரிதா என்றும் மதம் பிடித்து திரிபவர்களின் மத்தியில் தமிழ்; பெயரில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதை கேள்விபட்டு இருக்கின்றீர்களா?
கண்டி மாவட்டத்தின் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய” என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.
மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான
நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார் அந்த அந்நேரத்தில்
தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.
அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒருப் பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம்
என்பதனால் “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர்
அவர்களினால் இந்த பெயர சூட்டப்பட்டது தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.
இதன் பயனாக இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள்
ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும்¸ சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய” இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும்¸ இந்து மக்களுக்கும்
தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து
வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தப் போதும் தேரர் அதனை
செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.
எனவே இது போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட்டில் சாந்தி¸ சமாதானம்¸ சமத்துவம்
நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே வேலை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும் இது அனைவரையும் சிந்திக்கவும் பெருமைப்படவும் வைக்கின்றது.
2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்
2020 மெல்பேர்ன் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய முக்கிய அறவித்தல்
தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்
நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில்,
ஓஸ்ரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை தேசிய
நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட ஏற்பாடகியுள்ளது.
இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர்
பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அத்துடன் தற்போதய அரசாங்க விதிமுறைகளிற்கு அமைய அவுஸ்திரேலியா தமிழர்
ஒருங்கிணைப்புக் குழுவின் விக்டோரிய பணிமனையின் உத்தியோகபூர்வமான அறிவித்தலும் இத்துடன் உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை உங்கள் ஊடகங்களினுடாக தொடர்ச்சியாக வெளியீட்டு, அவுஸ்திரேலியா மெல்பேர்ண் வாழ் மக்களிற்கு உரிய முறையில் தெரியப்படுத்தவும். இதற்கு
உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அத்துடன் இம்மின்னஞ்சலைப் பெறும் தனிப்பட்ட அன்பர்கள், உங்களிற்கு தெரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும்
இத்தகவல்களைத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
இன்று முதல் கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய்
கொரோனா வைரஸ் நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாய் இன்று (14) முதல் நீர்கொழும்பு மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதன்படி 38 ஆயிரத்து 458 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – பிரதமர் மகிந்த
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சகல இந்து அடியார்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி :
இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய
ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள். தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை
பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மிக நீண்டகாலமாக எமது
மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக்
கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது
. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும்
பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும்
எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.
இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு
ஆளில்லா ட்ரோன் கமராக்கள் மூலம் முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்கள் பொலிசாரினால் கண்கானிப்பு
கடற்படையின் துணையுடன், ஹெலிக்கொப்டர்கள், ஆளில்லா
ட்ரோன் கமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்துவாரம், கல்கிஸ்ஸ பிரதேசங்களை பொலிசார் இன்று கண்காணித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கையில் இந்தக் கண்காணிப்பில்,
கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுத் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தத்தமது வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும்
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.







