கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ்
வாஷிங்டன்:
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு
வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் தலைமை நர்ஸ் டிஃபானி பாண்டிஸ் டோவர் (30 வயது)
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’
என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.
உடனே, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’ கூக்குரல் எழுப்பிவிட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என எதிர்ப்பை
தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு
மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்தால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது
மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ்
பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது
தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது
சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர்
செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய
மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்
ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆரவ், அவரின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை காலமானார்.
பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வின் தந்தை திடீர் மரணம்
ஆரவ், நிலாமுதீன்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா
எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார். ஆரவ்வுக்கும், இளம் நடிகை ராஹிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்நிலையில், ஆரவ்வின் தந்தை நிலாமுதீன் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதிச்
சடங்கு இன்று மாலை, சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர். ஆரவ்வின் தந்தை கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய
சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில்
விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது
தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.
ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல
ஒளிப்பதிவாளர். தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.
பதம் குமார்
உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர்
நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.
என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன்
உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.
தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா, தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
தெருநாய்கள் மீது பாசம் காட்டும் ஹன்சிகா
ஹன்சிகா
நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை
செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால்
நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி
வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.
நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த
சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.

ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி
ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி
பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஓடிடியில் பொங்கல் ரிலீசுக்கு கடும்போட்டி
சக்ரா, மாறா பட போஸ்டர்கள்
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம்
லாக்டவுன் போடப்பட்டது. இதன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், புதிய படங்களை ஓடிடி-யில் நேரடியாக வெளியிட
ஆரம்பித்தனர். அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் முதலில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து நிறைய படங்களை ஓடிடி-யில் வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் பெரும்பாலான படங்கள் தோல்வி
படங்களாகவே அமைந்தன. இருப்பினும் தீபாவளிக்கு ஓடிடியில் வெளியிடப்பட்ட சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மற்றும்
நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
ஓடிடி
இதனால் பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று
வருகிறதாம். இதுவரை மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக
கூறப்படுகிறது. மேலும் சில படங்களும் இந்த போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த
தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த
கடைகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு புடைவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்..
இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே வேளை, குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியில் முறையாக
சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சிசிஎவி
கெமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!
கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!
அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள
நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு.
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,
அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19)
இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத்
தரவில்லை எனத் தெரிவித்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்,
பஷில் ராஜபக்ஸ, ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்த 12,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் சிக்கியுள்ளனரென, தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம் இந்த
மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் இந்நடவடிக்கை உத்தியோகப்பூர்வமாக நடைபெறாவிட்டாலும் உரிய
பரிசோதனைகளின் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து உரிய சுகாதார பரிந்துரைகளின் கீழ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைக்கப்படுவர் என்றார்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் என்று சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தை, பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர் என, பொலிஜ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்தது என்று நம்பப்படும் பாரிய அளவிலான பணத்தொகை பறிமுதல்
செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா
மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா
மேக்கப்பு போடாமல் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் அழகியாக ஜொலிக்கலாம்.
- பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
- தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
- ஆரஞ்சு பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு
- கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு
- சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும்.
- சிறியளவு வெண்வெண் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும்.
மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா
- கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
- நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து
- முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
- பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
- தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல்
- மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
- உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
- செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
- அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
என்னை கல்யாணாம் பண்ண யாரும் இல்ல – நடிகை சகிலா வருத்தம்
என்னை கல்யாணாம் பண்ண யாரும் இல்ல – நடிகை சகிலா வருத்தம்
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஷகிலா அளித்த பேட்டியில், கணக்கு வைத்துக் கொண்டதே இல்லை என்று கூறியிருக்கிறார்.
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி உள்ளது. இப்படத்தை
கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்க ரிச்சா சத்தா ஷகிலாவாக நடித்துள்ளார். இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில்
மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 25ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஷகிலா அளித்த பேட்டியில் கூறியதாவது:
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனுபவம்?
28 ஆண்டுகளாக சினிமா துறையில் எல்லா விதமான
கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டேன். ஆனால் டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சி என்னை இன்னும் பிரபலமாக்கிவிட்டது. டிவியின் வளர்ச்சி அபாரமானது.
நடித்த படங்களின் எண்ணிக்கை?
2 படங்கள் இயக்கி இருக்கிறேன். நடித்த படங்களின் எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை. கணக்கு வைத்துக்கொண்டதே இல்லை. நிறைய ஏமாற்றப்பட்டேன்.
இன்னும் வாடகை வீட்டில் வசிப்பது ஏன்?
நான் சம்பாதிப்பது அனைத்தையும் என் அக்காவிடம் தான் கொடுத்துவைத்தேன். அவர் ஏமாற்றிவிட்டார். என்னை போன்ற
நடிகைகளுக்கு இது ஒரு பெரிய பாடம். ஆனால் பொருளாதார ரீதியாக சிரமத்தை உணர்ந்தது இல்லை. நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து பழகியதால் எந்த எதிர்பார்ப்போ வருத்தமோ இல்லை.
ஷகிலா
நிஜத்தில் உங்கள் கேரக்டர் எப்படி?
கோழை. அதை மறைக்க தான் தைரியமாக இருப்பதை போல் நடிக்கிறேன்.
செக்ஸ் படங்களில் நடித்தபோது மிரட்டல்கள் வந்ததா?
ஒரு அமைச்சர் மூலமாக மறைமுக மிரட்டல் வந்தது. என் படங்களுக்கான சென்சாரை நிறுத்தி வைத்தனர்.
உங்கள் மீது விழுந்த கவர்ச்சி முத்திரையால் வருத்தமா?
இல்லவே இல்லை. ஒரு நடிகை என்றால் இப்படித்தான் என்ற பார்வை விழும். அதை மாற்றவே முடியாது. அம்மா வேடம், குணச்சித்திர வேடம் என்று எல்லா வித வேடங்களிலும் நடித்துள்ளேன்.
அரசியல் அழைப்பு வந்ததா?
இன்னும் எதுவும் வரவில்லை. ஆனால் அரசியலுக்கு வர ஆவலாக இருக்கிறேன். அழைப்பு வந்தால் செல்வேன்.
திருமணம் செய்யாமலேயே இருக்க திட்டமா?
திருமண வாழ்க்கை என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் எனக்கு அமையவில்லை. திருமண விஷயத்தில் சிலரால் ஏமாற்றப்பட்டேன்.
இவ்வாறு பேட்டியளித்தார்.
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 2,497 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 173,427 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
28,002 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 534 பேர் பலியாகியுள்ளனர் 27,02 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
இவை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் நத்தார் தினத்தை முன்னிட்டு அன்று மட்டும் மக்கள் அயலவர்களுடன் இணைந்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது
அது தவிர்ந்து பிற நாள்களில் கூடினால் அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தற்போதுலண்டன் பகுதி எங்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,நோயாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்வதனால்,
நத்தார் தினத்திற்கு பின்பு முழு லொக்கடவுன் நிகழ்வு ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை அரசு விதித்துள்ள புதிய நடைமுறைகளை மீறினால் இது தான் தண்டம்
அதனை கீழே பாருங்கள்
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தண்டம் அறவிட படும் என தெரிவிக்க பட்டுள்ளது
£200 for the first offence, lowered to £100 if paid within 14 days
• £400 for the second offence, then doubling for each further offence up to a maximum of £6,400
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் சமூக விரோத செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்த மிக பெரும் குழுவு ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்தனர்
கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களை தொடராக கண்காணித்து
வந்த போலீசார் ,போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர்களை மடக்கி பிடித்தனர்
அவ்வேளை இவர்களிடம் இருந்து சுமார் 31kg of cocaine, 308kg of amphetamine, 590kg of cannabis resin, 3kg of skunk, 30 cannabis plants and nearly £900,000 லட்சம் பணம் என்பன மீட்க பட்டன
லண்டன் வூல்வீச் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் இவர்கள் அனைவருக்குமாக இணைத்து 138 வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் போலீசார் மேற்படி கும்பலை இலக்கு வைத்து தமது வேட்டையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டன் பகுதியியல்நகை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த முக்கிய பன்னிரெண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இவர்கள் வீதிகளில் செல்லும் மக்களிடம் கத்திமுனையில் நகைகளை திருடி சென்றதுடன் ,பல கத்தி குத்து தாக்குதலையும் நடத்தியுள்ளனர்
இவர்கள் மிக ஆபத்தான கிரிமினல் நடவடிக்கியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,லண்டனில் தேடப்படும் பன்னிரெண்டு
முக்கிய குற்றவாளிகள் என கறுப்பு பட்டியலில் அறிவிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
இவர்களை தெரிந்தால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவோ அல்லது
அருகில் உள்ள காவல்துறையினருக்கோ தெரிவிக்கும் படி வேண்ட படுகின்றனர்
தமிழர்களிடமுடம் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,இவர்களை
கைது செய்தால் மட்டுமே இவர்கள் பின்புலத்தில் உள்ள குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்

காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
காதலிக்கிறேன் – வனிதாவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
பீட்டர் பால் உடன் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்த வனிதா, தற்போது மீண்டும் காதலிப்பதாக பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே 2
முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுவிட்டார். இதனிடையே கடந்த ஜூன் மாதம் இவர் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து
செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. வனிதா – பீட்டர் பால் திருமண உறவு சில
மாதங்களே நீடித்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டனர்.
வனிதாவின் இன்ஸ்டா பதிவு
இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக அவ்வாறு
பதிவு செய்தார், என்பது தெரியவில்லை. வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில்,
பொலிஸார் நேற்று (18) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்தக் காலத்தில் அந்த கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்
தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்படவில்லை.
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டதாகவும்,
மஹர சிறைக் கலவரம் தொடர்பில் இதுவரையில் 500 மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







