விளையாடி அசத்திய யோகி பாபு
விளையாடி அசத்திய யோகி பாபு
காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு
யோகி பாபு
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட்
விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்
இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா.
தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில்
கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.
விசித்ரா
பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ராவின் புகைப்படம்
ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா
ஜோ பைடன் நாய் மரணம் – கவலையில் ஐயா
அமெரிக்காவின் தற்போது ஆளும் அதிபராக விளங்கும் ஜோ பைடன் அவர்களது வளர்ப்பு நாய் இறந்துள்ளது
13 வருடங்களாக தமது செல்ல நண்பனாக வசித்து வந்த மேற்படி நாய் இறந்த துயரத்தில் தம்பதிகள் தவித்து வருகின்றனர்
மேற்படி நாயின் மறைவுக்கு அனுதாபிகள் கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்
உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி
உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி
உலகில் சீன சக்தி வாய்ந்த பொருளாதார பலமிக்க நாடக மாற்றம் பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்
இவரது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகள் முடுக்கி விட பட்டன
இவ்வாறான நிலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது
அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்
அபாய பகுதியாக யாழ்ப்பாணம் – விடுக்க பட்டுள்ள வேண்டுதல்
யாழ். மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்கவில்லை .எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (18) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் முதற்கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ,சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர்,முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன.ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.
சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.
கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 1,754 குடும்பங்களைச் சேர்ந்த 5,613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,668 ஆக அதிகரித்துள்ளது.அதேநேரம் 63 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 321 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் வட்டுக்கோட்டை இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 159 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை நல்லூர் அரசடி பகுதி தனிமைபடுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு நீக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை காணப்படும் என்ற நிபந்தனையுடன் தான் பயணத்தடை தளர்த்தப்படவுள்ளது.
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
வீசியடிக்கும் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை
மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் ஐம்பது கிலோமீற்றர் வரை அதிகரித்துள்ளது
இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பொதுவில் முதல் மன்னார் வரையான பகுதிகள் பாதிக்க படும் வலையங்களாக அறிவிக்க பட்டுள்ளது
போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது
போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது
இலங்கை களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஐம்பது கிலோ போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளார்
இவர் நீண்ட காலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 1,281 பேர் கைது
இலங்கையில்; இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது கண்காணிப்பு பணி தீவிரமாக்க பட்டுள்ளது
இவ்வேளை நிகழ்கால கொரனோ விதிகளை மீறினார்கள் எந்த குற்ற சாட்டில் கடந்த தினம்
மட்டும் 1,281 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
சொகுசு வாகனங்களை மக்களுக்காக அர்ப்பணித்து பிரபல பெளத்த தேரர்கள் முன்மாதிரியாக நடக்க வேண்டும்
மனோ கணேசன்
வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு வண. தேரர்கள் இதை போதிக்க தேவையில்லை.
1999ம் ஆண்டில் மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டதில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளம், கொடுப்பனவுகள் எல்லாவற்றையும் நான் பொது காரியங்களுகாகவே தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளேன். அது மட்டுமல்ல, எனது கடும் சொந்த உழைப்பினால் நான் தேடிப்பெற்ற பெறுமதியான சொத்துக்களையும், பொது காரியங்களுகாகவே விற்று செலவழித்துக்கொண்டு இருக்கின்றேன்.
நான் ஒருபோதும் பொது சொத்தை திருடியது கிடையாது. ஏனெனில் எனக்கு திருட தெரியாது. இவைதான் என் தந்தை எனக்கு சொல்லித்தந்து விட்டு போன பாடங்கள். விட்டுத்தந்த மிகப்பெரிய சொத்துகள். என் தந்தையைவிட, எனக்கு வழிக்காட்ட பெரிய மதத்தலைவர் என்று எவருமில்லை.
ஆனால், இந்நாட்டின் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத தலைவர்களை விட, விசேட அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள மிகப்பல பெளத்த தேரர்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும், உங்களை போன்ற தேரர்களை தம்வசம் வைத்துக்கொள்ள, வழங்கிய பென்ஸ், ரேஞ் ரோவர், டொயோடா போன்ற சொகுசு வாகனங்கள், சொகுசு வசிப்பிடங்கள் உட்பட்ட வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் பொது மக்களுக்காக அர்ப்பணியுங்கள். ஆலயங்களுக்கு சொந்தமான சொத்துக்களையும், பொதுக்காரியங்களுக்காக வழங்கி இந்த பணியினை ஆரம்பித்து வையுங்கள்.
கெளதம புத்தன் போதித்ததை போன்று, “கொலை இல்லை, திருட்டு இல்லை, பணம் இல்லை, பாலியல் உறவு இல்லை, பொய் இல்லை, போதைப்பொருள் இல்லை, மதிய உணவுக்குப் பிறகு சாப்பாடு இல்லை, நடனம், இசை இல்லை, நகைகள் ஒப்பனைப்பொருட்கள் இல்லை, எழுந்த படுக்கையில் தூக்கம் இல்லை,” என்ற பெளத்த துறவியின் எளிய துறவு வாழ்க்கையை வாழ உங்களால் முடியாவிட்டாலும் “பரவா-இல்லை”.
தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும். இந்நாடு உருப்படும். நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை போற்றி வணங்குவார்கள்.
புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
புயலில் உடைந்த வீடுகள் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்
அவுஸ்ரேலியாவில் வீசிய கடும் புயல் காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன
இதுவரை பல்லாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த அனர்த்த சேதங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்
தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்
வடக்கு நையீரியாவின் அரச பாடசாலைக்குள் புகுந்த தீவிரவாதிகள் ,அந்த பாடசாலைக்கு காவல் நின்ற காவல் துறை சிப்பாயை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்த எழுபது மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்
இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடத்தல் இதுவாக பதிய பெற்றுள்ளது
பொக்கோ காராம் அமைப்பினர் மேற்கொண்டு வரும் இந்த கடத்தல் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்
பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்
பிரிட்டனில் உடைந்த பயணிகள் விமானம்
பிரிட்டன் கீத்திரோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போயிங் விமானம் ஒன்று
முன் பகுதி உடைந்துள்ளது
இதனால் ஏற்பட்ட சேத நிலையையே அடுத்து குறித்த விமானம் பழுது பார்த்தால் மற்றும் விபத்து விசாரணைகள் முடுக்கிவீட்டா பட்டுள்ளன
எனினும் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது
ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்
ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்
ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.
அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும்
காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து
மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.
மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள்
ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்
போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை.
உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது
உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்…
ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம் போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை
ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்
கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது
. கொரோனாவின் சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது.
அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.
வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.
அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும். தக்க
ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்
சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம்.
உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:
சுவாசிப்பதில் சிரமம்: கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற
அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும்.
உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார்.
அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மார்பு வலி: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். என மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும்.
நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு
நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும்.
சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். மூச்சுத்திணறலையும் உணரக்கூடும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்
மனக்குழப்பம்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.
சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம்.
நீல நிற உதடு: உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும்
அழைக்கப்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.
மூக்கு விரிவடைதல்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை
ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும். இத்தகைய அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் அளவு
குறைந்திருப்பதையும், சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தையும் வெளிப்படுத்தக்கூடியவை. அதனால் இதனை சாதாரணமாக கருதக்கூடாது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மூச்சு பயிற்சி: மூச்சு பயிற்சி மேற்கொள்வது நுரையீரலின் ஆரோக்கியத்தையும், ஆக்சிஜன்அளவையும் மேம்படுத்த உதவும். பல சுவாசப்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றுள் 4-7-8
என்ற சுவாசப்பயிற்சி எளிமையானது, சிறப்பானது. தரையில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். வாயை நன்றாக மூடிவிட்டு, மூக்கு வழியாக 4 விநாடிகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுக்க
ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்
வேண்டும். அப்போது மனதிற்குள் நான்கு வரை எண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு 7 வினாடிகள் வரை அப்படியே மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். பின்பு வாய் வழியாக 8 வினாடிகள் வரை
மூச்சை வெளியே விடவேண்டும். தொடர்ந்து மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 7 வினாடிகள் வரை மூச்சை நிறுத்தி வைத்திருப்பது கடினமாக இருக்கும். ஆனால்
நாளடைவில் எளிதாகிவிடும். நான்கு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 7 விநாடிகள் வைத்திருந்து 8 விநாடிகள் வெளியேற்றுவதால் இது 4-7-8 சுவாசப் பயிற்சி எனப்படுகிறது
மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி
மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி
நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி?
சாய் பல்லவி, தனுஷ்
நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.
தனுஷ், சாய் பல்லவி
இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்
தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில்
இடம்பெறும் ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
ரஞ்சித் – பிரியா ராமன்
நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்
விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.
பிரியா ராமன் – ரஞ்சித்
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை
கூறிக் கொண்டுள்ளனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை
பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை
விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அம்ரிதா ஐயர்
மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.
அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு
அசிட்டை அருந்தியவர் உயிரிழப்பு
சாராயமென நினைத்து, லொறியின் பெட்டரி அசிட்டை (அமிலம்) அருந்திய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக, காலி கராப்பிடிய போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காலி – படதுவ பூர்வாராம மாவத்தையைச் சேர்ந்த (53 வயது) கராஜில் வேலை செய்யும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லொறியின் பெட்டரி அசிட்டை மாற்றுவதற்காக லொறியின் உரிமையாளரும் இன்னும் இருவரையும் அழைத்துக்கொண்டு கராஜ்ஜுக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற இவர்கள், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட சாராய போத்தலையும், அசிட் போத்தளையும் எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.
லொறியின் பெட்டரியை சார்ஜ் செய்துவிட்டு, அவர்கள் வாங்கி வந்த மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாகத் தவறுதலாக அசிட்டை சாராயமென நினைத்து சோடாவுடன் கலந்துள்ளார்கள்.
இதனை, அருந்திய லொறியின் உரிமையாளர் காலி கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். அசிட்டை அருந்தியதாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி
பொலிஸ் அதிகாரி எனக்கூறி பணமோசடி
வீட்டிலுள்ள தொலைபேசி அழைப்பு விடுத்து பணமோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரி என தெரிவித்து இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரசித்தி பெற்ற பொலிஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சுரேஷ் சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவை (ஓய்வு) நேற்று சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது, சீன தனது புதிய வின்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளமைக்காக ஜெனரல் குணரத்ன தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.







