Posted in சினிமா

2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா

2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, அடுத்தடுத்து 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

அடுத்தடுத்து 2 தமிழ் படங்களில் ஒப்பந்தமான நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நயன்தாரா


நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.

அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல

ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள இரண்டு படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா, நடிக்க உள்ள அடுத்த

2 தமிழ் படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்க உள்ளார். இதில் ஒரு படத்தை புதுமுக இயக்குனர் விப்பின் இயக்க உள்ளார். சைக்கலாஜிக்கல் மிஸ்டிரி த்ரில்லர் படமாக இது உருவாக உள்ளது.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். இதேபோல் மற்றொரு படத்தை இயக்கப்போவது யார்?, அதில் நயன்தாராவுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் யார்? என்பது

குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Posted in சினிமா

    ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்

    ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்


    காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்துள்ள நடிகர் சந்தானம், ஆர்யா செய்த செயலால் கண்கலங்கினாராம்.

    நடிகர் ஆர்யாவின் செயலால் கண்கலங்கிய சந்தானம்
    சந்தானம், ஆர்யா


    ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். பல வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது,

    ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இரண்டு பேரும்

    நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இதையடுத்து ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சிக்கு புக்கு, சேட்டை போன்ற படங்களிலும் இணைந்து பணியாற்றினர்.

    நடிகர் சந்தானம் இப்போது, ‘சபாபதி’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் அவருக்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். படம் திரைக்கு வர தயாரானபோது,

    படத்தின் வியாபாரத்துக்கு ஆர்யா உதவி இருக்கிறார். நட்புக்கு உதாரணமாக நடந்து கொண்ட ஆர்யாவை சந்தானம் கட்டிப்பிடித்து, ‘‘நண்பேன்டா’’ என்று நெகிழ்ந்து போய் கண்கலங்கினாராம்.

      Posted in சினிமா

      திருமணத்துக்கு நடிகை டாப்சி

      திருமணத்துக்கு நடிகை டாப்சி

      தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் டாப்சி, திருமணத்துக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளாராம்.

      திருமணத்துக்கு நடிகை டாப்சி நிபந்தனை
      டாப்சி


      தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் மற்றும் திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: “எல்லா

      துறைகளையும் போல் சினிமாவும் போட்டி நிறைந்த துறையாக உள்ளது. இதனால் கேமராவுக்கு முன்னால் நிற்கும் நடிகர், நடிகைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு

      நாங்கள் கொடுக்கும் விலையாகவே போட்டி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்கிறோம்.

      போட்டி நிறைந்த எல்லா துறைகளிலுமே சங்கடங்கள் உள்ளன. போட்டியும், மன அழுத்தமும் இல்லாத துறை எதுவும் இல்லை. எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள

      கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். காதல் என்பது பொழுதுபோக்கு இல்லை.

      டாப்சி

      எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து

      கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.

        Posted in சினிமா

        கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா

        கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா

        நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் பிரபுதேவா, தற்போது அரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம்.

        கைவசம் அரைடஜன் படங்கள்…. கோலிவுட்டில் பிசியாகும் பிரபுதேவா
        பிரபுதேவா


        பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா போன்ற படங்கள்

        ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள 4 புதிய படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பிளாஷ்பேக்’, ‘மை டியர்

        பூதம்’, பெயரிடப்படாத 2 படங்களில் பிரபுதேவா நடிக்கிறார். இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.

        இவற்றுள் பிளாஷ்பேக் படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இவர் மகாபலிபுரம், கொரில்லா

        போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார்.

        அடுத்ததாக இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ராகவன், இயக்கும் ‘மை டியர் பூதம்’ படத்தில்

        பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர குலேபகாவலி இயக்குனர் கல்யாணுடன் ஒரு

        படத்திலும், அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார்.

          Posted in Uncategorized

          விண்வெளியில் இந்திய பெண்ணுடன் பறந்த பிரிட்டன் பணக்காரன்

          விண்வெளியில் இந்திய பெண்ணுடன் பறந்த பிரிட்டன் பணக்காரன்

          இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.

          விண்வெளிப் பயணம் வெற்றி… பாதுகாப்பாக திரும்பிய ரிச்சர்டு பிரான்சன் குழு
          ரிச்சர்ட் பிரான்சன்

          உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

          விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், விஎம்எஸ் ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது.

          இரட்டை விமானத்தில் அனுப்பப்பட்ட விண்கலம்

          இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர்.

          யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவிஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில்

          விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தனர். விண்வெளியில் இருந்தபடி விர்ஜின் கேலடிக் குழுவினருக்கு பிரான்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

          விண்கலம் சிறிதுநேரம் வெற்றிகரமாக மிதந்தபின் எஞ்சின்கள் எதிர் திசையில் இயக்கப்பட்டு, பூமியை நோக்கி திரும்பி விமானம் போன்று தரையிறங்கியது. விண்கலத்தில் இருந்து வெளியே

          வந்த குழுவினரை அனைவரும் வாழ்த்தினர். இது தனது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என பிரான்சன் தெரிவித்தார். விண்வெளியில் பயணம் செய்த அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

          ஸ்ரீஷா பாண்ட்லா

          இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு பறந்த மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஸ்ரீஷா பாண்ட்லா பெற்றுள்ளார்.

            Posted in Uncategorized

            யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி

            யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி

            யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.

            யூரோ கால்பந்து – இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இத்தாலி
            கோல் அடித்த மகிழ்ச்சியில் இத்தாலி வீரர்கள்

            16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

            இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.

            ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.

            கோல் அடித்த லூக் ஷா

            ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

            கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

            இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

              Posted in Uncategorized

              15 வயது சிறுமியை கற்பழித்த எம்பி – கைது செய்ய வலைவீச்சு

              15 வயது சிறுமியை கற்பழித்த எம்பி – கைது செய்ய வலைவீச்சு

              இணையத்தளத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக, 15 வயதான சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

              இவ்வாறு அச்சிறு​மியை கொள்வனவு செய்து, பாலியல் தேவைக்காக பயன்படுத்திக்கொண்டார் என்றக் குற்றச்சாட்டு

              தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு வலைகள் விரிக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

              இந்நிலையில், சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத்தளங்களின் ஊடாக, விளம்பரம்

              செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

                Posted in Uncategorized

                சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?

                சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மரணம் – நடந்தது என்ன ..?

                யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில்

                கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

                அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக

                தமிழ் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பட்டியலில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in Uncategorized

                  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

                  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ்

                  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் தெரிவித்தார்.

                  இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

                  “இதுதொடர்பா விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் கவனம் செலுத்தும் போது சில விடயங்களை

                  புரிந்துகொள்ளமுடியும். குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஒன்றினால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால்

                  இந்தியாவில் இருந்து பெறப்படவிருந்த தடுப்பூசி பெறுகையை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இடை நிறுத்தியது.

                  அமைச்சரவை விசேட பெறுகை குழுவிடம் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. இந்த குழு விரிவாக ஆராய்ந்த பின்னரே நாம் நடடிக்கை மேற்கொண்டோம்.

                  இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் இவ்வாறான எய்ட்ஸ் கூறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட விடயம் தொடர்பிலேயே இந்த தலைப்பு செய்தி எழுதப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

                  பொறுப்பற்ற விதத்தில் பொறுப்பான பத்திரிகை நிறுவனம் இவ்வாறு செய்தி வெளியிடுவதையிட்டு நாம் கவலையடைகின்றோம். தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் பொது

                  மக்களுக்குள்ள ஆர்வம் மற்றும் நம்பகத்தன்மையை இவ்வாறு சீர்குலைக்கப்படுவதையிட்டு வருந்துகின்றோம் என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன் கூறினார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

                  இதுவரையில் 49,042 பேர் கைது – தொடரும் அத்துமீறல்

                  மாகாண கட்டுப்பாட்டை மீறியவகையில்பயணிப்பதற்கு முயற்சித்த 205 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

                  இன்று காலை 6.00 மணியுடன்நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் சட்ட விதிகளை மீறிய 234 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                  இதுவரையில் 49,042 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

                    Posted in Uncategorized

                    ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

                    ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி

                    கொஸ்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    உயிரிழந்தவர்கள் கொஸ்கொட, துவே மோதர கங்கையில் நீச்சல் பழகிய போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

                    இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா மற்றும் அவரின் பேரன்களான 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                    கடற்படையின் சுழியோடிகளால் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

                      7 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

                      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி  ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

                      கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.

                      கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட

                      ,கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

                      இதேவேளை, சீரற்ற காலநிலையினால் சில பிரதேசங்களில் ஓரளவு வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது.

                      கொழும்பு, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.

                        Posted in Uncategorized

                        பிறந்த சிசுவை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

                        பிறந்த சிசுவை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்

                        அவுஸ்ரேலியாவில் பிறந்து ஐந்து வாரமான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் ஒன்று ,இரவு வேளை கடித்துள்ளது

                        நாயின் கோர கடியில் பாதிக்க பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து மேற்படி சம்பவம் உலக

                        மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                          Posted in Uncategorized

                          ஆற்றுக்குள் கவிழ்ந்த ரயில்


                          ஆற்றுக்குள் கவிழ்ந்த ரயில்

                          Salzburg. பகுதியில் ஆற்று அருகில் உள்ள ரயில் சாலை வழியாக பாடசாலை பிள்ளைகளை ஏற்றியவாறு பயணித்த தொடரூந்து தடம் புரண்டது ,இதில் சிலர் காயமடைந்துள்ளனர்

                          எனினும் ஏனையவர்கள் உயிராபத்து இன்றி தப்பித்துள்ளனர்

                          சீரற்ற கால் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            Posted in சினிமா

                            அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி

                            அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி

                            கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்ற அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                            பிக்பாஸ் அர்ச்சனா மருத்துவமனையில் அனுமதி
                            அர்ச்சனா


                            சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார்.

                            இந்த நிலையில் தற்போது இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். என்னுடைய இதயம்

                            சொல்வதை கேட்டு வேலை செய்ததால் மூளை இதயத்தை விட புத்திசாலி என காட்ட முயற்சி செய்து உள்ளது. இதனால் மூளை அருகே சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

                            அர்ச்சனா

                            இதனால் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் பலருடைய அழைப்புகளை என்னால் ஏற்க முடியாமல் போகலாம். என்னுடைய மகள் சாரா என் உடல் நலம்

                            குறித்த அப்டேட்டை வெளியிடுவார். இந்த சவாலான அறுவைச் சிகிச்சையில் இருந்து மீண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவு செய்துள்ளார்.

                              Posted in மருத்துவம்

                              ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

                              ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

                              இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.

                              ஐ.டி.கலாசாரம், பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்கள், மேலை நாட்டு

                              கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள்.

                              இப்படி ஐ.டி.கலாசாரம் நம்மிடம் மேலை நாட்டு பழக்கங்களை, புகுத்தி வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பது, ‘நள்ளிரவு பிரியாணி’.

                              இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன.

                              நள்ளிரவு ஓட்டல்கள் என்றவுடன், டீ-காபி, சாண்ட்விச் மற்றும் பன் ரொட்டிகளை தயாரிக்கும் ஓட்டல்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

                              இந்த ஓட்டல்களில், அதிகாலை 3 மணிக்கு கூட, சூடான

                              பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன. பிரியாணி மட்டுமல்ல, சிக்கன்

                              65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

                              அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.

                              இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே

                              ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

                              வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள்,

                              மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

                              நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில்,

                              பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள்.

                              அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

                              பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள்

                              . நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி

                              மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

                                Posted in Uncategorized

                                இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்

                                இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ்

                                டெல்டா வைரசின் பரவும் தன்மை அதிகரித்துள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

                                இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸ் – பொதுமக்கள் அச்சம்
                                கொரோனா வைரஸ்

                                உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது.

                                முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ச்சியாக ஒவ்வொரு நாடுகளிலும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

                                உலகம் முழுவதும் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அவர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர்.

                                கொரோனா வைரஸ்

                                கொரோனா வைரஸ் தன்னை தற்காத்துக் கொள்ள அவ்வப்போது உருமாறி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரசின் டெல்டா ரகம் தற்போது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் இங்கிலாந்திலும் பரவி வருகிறது. தற்போது உலகத்தையே இந்த டெல்டா ரகம் அச்சுறுத்தி வருகிறது.

                                இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக கடந்த வாரம் 54 ஆயிரத்து 268 புதிய நோயாளிகள் உருவாக்கியுள்ளனர் என இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

                                இதுதொடர்பாக, இங்கிலாந்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஜெனி ஹாரிஸ் கூறுகையில், வைரசின் பரவும் தன்மை அதிகமாகியுள்ளதே தவிர, மரணங்களின் எண்ணிக்கை

                                அதிகரிக்கவில்லை. தடுப்பு மருந்துகள் நூறு சதவீத பாதுகாப்பு தராது. எனவே மக்கள் சமூக விலகலைப் பின்பற்றி கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

                                இங்கிலாந்தில் டெல்டா பிளஸ் ரகம் குறைவாகவே காணப்படுகிறது. வெறும் 44 பேர் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா பிளஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in Uncategorized உலக செய்திகள்

                                  விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம்

                                  விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம்

                                  இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

                                  விமானப்படை விமானம் அவசரமாக தரையிறக்கம் – திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு
                                  விமானப்படை விமானம்

                                  இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று கேரள வான்பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

                                  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போர் விமானத்தை திருவனந்தபுரம் விமான

                                  நிலையத்தில் விமானி அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த விமானப்படை அதிகாரிகள் எந்தவித பிரச்சினையும் இன்றி தப்பினர்.

                                    Posted in Uncategorized

                                    சல்மான் கான் மீது மோசடி புகார்

                                    சல்மான் கான் மீது மோசடி புகார்

                                    சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

                                    சல்மான் கான் மீது மோசடி புகார்… சம்மன் அனுப்பிய போலீஸ்
                                    சல்மான் கான்


                                    இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் ஏற்கனவே அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார். தற்போது அவர் மீது புதிதாக மோசடி புகார் கூறப்பட்டு உள்ளது.

                                    சண்டிகார் நகரை சேர்ந்த தொழில் அதிபர் அருண் குப்தா என்பவர் சல்மான்கான் மற்றும் அவரது சகோதரி அல்விராகான் ஆகியோர் மீது போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், ‘’நான் சண்டிகாரில்

                                    2018-ல் சல்மான்கானின் பீயிங் ஹ்யூமன் நிறுவனம் பெயரில் அதிக பணம் செலவழித்து நகைக்கடை தொடங்கினேன். கடைக்கு தேவையான பொருட்களை அளிப்பதாக சல்மான்கான் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

                                    கடை திறப்பு விழாவில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்று கூறினர். ஆனால் அவர் வரவில்லை. கடைக்கு தேவையான பொருட்களை அனுப்பாததால் கடந்த வருடம் பிப்ரவரி மாதம்

                                    முதல் கடை பூட்டப்பட்டு எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

                                    சல்மான் கான்

                                    இந்த புகாரின் பேரில் சல்மான்கான், அவரது சகோதரி அல்விராகான் மற்றும் பீயிங் ஹ்யூமன்

                                    அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் வருகிற 13-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

                                      Posted in Uncategorized

                                      2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

                                      2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

                                      உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

                                      2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – உத்தரபிரதேச அரசு அதிரடி

                                      இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

                                      உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில்

                                      போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

                                      2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆகிய அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

                                      உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையம் (யுபிஎஸ்எல்சி) இணையத்தளத்தில் வரைவு மசோதா குறித்து கூறி இருப்பதாவது:-

                                      மாநில சட்ட ஆணையம், உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

                                      வரைவு மசோதாவை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகின்ற அதற்கான கடைசி தேதி ஜூலை 19 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

                                      இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் :-

                                      இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும், மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு

                                      சம்பளம் மற்றும் அலவனஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும்.

                                      ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                      அரசாங்கத்தின் சேவைகள்:-

                                      வரைவு மசோதா அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும் என்று கூறுகிறது. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை

                                      மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும். சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம்

                                      முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்.

                                      அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.