Posted in சினிமா

வெப் தொடரில் நயன்தாரா

வெப் தொடரில் நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, விரைவில் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலி வெப் தொடரில் நயன்தாரா?
நயன்தாரா


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் பாகுபலி 3-ம் பாகம் வெப் தொடராக தயாராக உள்ளது. பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த

தொடர் தயாராக உள்ளது என்றும், பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா

இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. அந்த வகையில், இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்

நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கதை பிடித்துள்ளதால் நயன்தாரா நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது

. காஜல் அகர்வால், சமந்தா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் ஏற்கனவே வெப் தொடர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Posted in சினிமா

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

    தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

    ஓட்டல் கட்டிய சர்ச்சை… சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்
    சோனு சூட்


    தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில் உள்ள தனது 6

    மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

    சோனு

    இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி

    குடியிருப்பாக மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    Posted in சினிமா

    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

    இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?
    சூர்யா


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூன் 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

    டிரெண்டிங்

    இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி – யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

      Posted in Uncategorized

      முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

      முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

      இலங்கையில் முகக் கவசம் அணியாது பயணித்தால் அவர்களுக்கு அரசு ஆறு மாதம் சிறை

      தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      நாள் தோறும் பலநூறு பேர் கைது செய்ய பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு

        சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு

        உடைந்து இரண்டாக ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணியுடன் பேசிட ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

        ஒன்றாக இணைந்து பயணித்து ஆட்சி அமைக்கும் நோக்குடன் இவரது செயல்பாடுகள் அமைய

        பெறுகின்றன ,இந்த சந்திப்பு இடம்பெறுமா என்பதும் ,அதில் இணைக்க பாடு ஏற்பட்டு ஒன்றாவார்களா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

        Posted in இலங்கை செய்திகள்

        வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

        வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

        கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

        வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,

        நேற்றைய தினம் மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

        இந்நிலையில் குறித்த பகுதி நேற்று (16) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

        தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும்,

        வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

          Posted in Uncategorized

          230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

          230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

          இலங்கையில் 230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது


          சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக மாற்றம் பெற்றதன் பின்னர் இலங்கையின்

          முப்படைகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

            கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

            வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

            50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

            காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

            சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

              வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

              வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட

              நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

              வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ

              அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

              அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்

              எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

                இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

                சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

                திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                  மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                  மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்

                  முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

                  இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,


                  இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.

                  இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்

                  ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்

                    Posted in Uncategorized

                    தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

                    தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

                    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

                    தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது
                    பள்ளி

                    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும்.

                    • பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
                    • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை
                    • மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
                    • நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது.

                    பேருந்துகள்

                    • புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்துக்கு தடை.
                    • சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
                    • பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை தொடர்கிறது.
                    • தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி.
                    • திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி.
                    • பொழுது போக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு
                    • பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்
                    • பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம்
                    • கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால், அபராதம் விதிக்கும் நடைமுறை தொடரும்.
                    Posted in Uncategorized

                    குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி

                    குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – 11 பேர் பலி

                    கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

                    ம.பி.யில் குழந்தையை காப்பாற்ற கிணற்றில் விழுந்த மக்கள் – பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
                    விபத்து நடந்த கிணறு

                    மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர்.

                    அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்தது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது

                    . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

                    மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

                    மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள்

                    இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
                    இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

                    மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

                      Posted in மருத்துவம்

                      கோபம் வந்தால் இதை பண்ணுங்க

                      கோபம் வந்தால் இதை பண்ணுங்க

                      கோபத்திற்கு இடம் கொடுத்தால் ‘பாசிடிவ் பீலிங்’ அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

                      மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.

                      சிலருக்கு கோபம் வந்தால் உடனே ஆக்ரோஷமாகிவிடுவார்கள். நிதானத்தையும், பொறுமையையும் இழந்து கத்தத் தொடங்கிவிடுவார்கள்.

                      வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை

                      கொட்டிவிடுவார்கள். அவை மற்றவர் மனதை காயப்படுத்தக்கூடியதாகவும், காது கொடுத்து

                      கேட்க முடியாததாகவும் இருக்கும். தனக்கு நெருக்கமானவர்கள் தவறு செய்திருந்தாலும் கோபத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்திவிடுவார்கள்.

                      சம்பந்தப்பட்டவர் தான் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டாலும் அதை காது கொடுத்து கேட்கவே மாட்டார்கள்.

                      அப்படிப்பட்ட கட்டுப்பாடில்லாத கோபம், அவர்களுக்குத்தான் பாதகத்தை

                      உண்டாக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டால், சிலருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிவிடும்.

                      அதுவே தொடரும்போது பல்வேறு நோய்

                      பாதிப்புகளால் அவதிப்பட நேரிடும். உடல் நலத்தை கெடுக்கும் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு எளிமையான வழிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் அனைவரும் பின்பற்றத்தக்க எளிய வழிமுறைகள் இதோ:

                      கோபம் வந்துவிட்டால் மனதில் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நிம்மதி குலைந்துவிடும். கோபம் வரும்போது நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். அப்போது 1 முதல் 10, 20 வரை

                      எண்களை மனதுக்குள் பொறுமையாக எண்ணிக்கொண்டே வரலாம். அப்படி செய்யும்போது மனம் இலகுவாகிவிடும். கோபமும் படிப்படியாக குறையத்தொடங்கிவிடும்.

                      கோபம் வந்தால் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த சமயத்தில்தான் வார்த்தைகள் கடுமையாக வெளிப்படும். அவை கேட்பவர்கள் மனதை கடுமையாக பாதிக்கும்.

                      கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு சிந்திப்பதுதான் சரியான வழிமுறையாக அமையும். என்ன பேச வேண்டும்? எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கலாம்? பிறர் மனம் புண்படாதபடி சிரித்த

                      முகத்துடன் எப்படி பேசுவது? என நிதானமாக யோசித்துவிட்டு பேச வேண்டும். அப்படி பேசும்போது கோபம் வெளிப்பட்டாலும் அதனை நிதானமாக கையாண்டுவிடலாம்.

                      கோபமாக இருக்கும் சமயத்தில் மற்றவர்கள் சமாதானம் செய்தாலும் அதுவும் சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்ட சூழலில் தனிமையில் சில நிமிடங்களை

                      கோபம் வந்தால் இதை பண்ணுங்க

                      கழிப்பதுதான் நல்லது. தனிமையில் அமர்ந்திருந்து எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை அமைதிப்படுத்தலாம்.

                      நடைப்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்த உதவும். சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து வரலாம்.

                      அப்படி செய்தால் மூளை செல்கள் ரிலாக்ஸ் அடைந்து மனம் இலகுவாகும்.

                      மனதுக்கு நெருக்கமானவர்கள் கோபம் கொள்ளும்படி நடந்து கொண்டால் அமைதி காப்பதுதான் நல்லது.

                      இல்லாவிட்டால் கடுமையான வார்த்தைகள் வெளிப்பட்டு இருவரின் மனமும்

                      வேதனைப்படக்கூடும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்தி அவர்களை மன்னித்துவிடுவதுதான் நல்லது.

                      அனைத்தும் `நெகடிவ்’ ஆக மாறி மனதிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன்னிக்க பழகிவிட்டால் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் உயரும்.

                      எந்த சூழ்நிலையிலும் கோபம் நீண்ட நேரம் நீடிக்க அனுமதித்துவிடக்கூடாது. அது மனதை பலவீனப்படுத்திவிடும்.

                      கோபத்தை தணிப்பதற்கு மனதை திசை திருப்பும் நடவடிக்கைகளில்

                      ஈடுபட வேண்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது, இசையை கேட்பது மனதை சாந்தப்படுத்தும்.

                        Posted in மருத்துவம்

                        சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

                        சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

                        மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன

                        . ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

                        உலக அளவில் இந்தியா தான் மிகச்சிறந்த மாம்பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

                        அதிக சுவை, தரம் கொண்ட மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகின்றன.

                        மாம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

                        நீர்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற

                        பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் பருகலாம்.

                        தயிர்: சிலர் மாம்பழ துண்டுகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவார்கள். அது ருசியாகவும் இருக்கும்.

                        இருப்பினும் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது. அதனால் உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும்போது சரும பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

                        பாகற்காய்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பு தன்மை கொண்ட எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது.

                        சாப்பிட்ட பிறகு தவிர்க்க வேண்டிய உணவுகள்

                        குறிப்பாக பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

                        காரமான உணவு: மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். அவை வயிற்றுப்பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

                        சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும். முகப்பரு தோன்றுவதற்கும் வழிவகுக்கும்.

                        குளிர் பானம்: குளிர் பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

                        மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம்

                        கலந்திருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அப்படி மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.

                        அதனால் மக்களே தினம் தோறும் மறக்காது சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக மேலே குறிப்பிட பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

                          Posted in சினிமா

                          நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                          நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                          வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

                          நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்
                          நட்டி நட்ராஜ்


                          ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

                          இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

                          நட்டி நட்ராஜ்
                          படக்குழுவினருடன் நட்டி நட்ராஜ்

                          கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

                            Posted in சினிமா

                            நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                            நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                            முன்னணி நடிகைகளான ஐந்து பேர், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

                            முன்னணி நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்
                            கருங்காப்பியம் படத்தில் நடிக்கும் நடிகைகள்


                            ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இந்த படத்தில் நடிகைகள்

                            காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான்

                            விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

                            இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ்,

                            பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

                            இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                              Posted in சினிமா

                              ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                              ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                              தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

                              ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு
                              விஜய்


                              நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை

                              எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

                              இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய

                              கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு

                              செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

                              விஜய்

                              இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                                புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                                முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது

                                இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                                Posted in இலங்கை செய்திகள்

                                பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                                பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                                மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

                                தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

                                தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.