Posted in உலக செய்திகள்

பள்ளி வாசலில் வெடித்து சிதறிய குண்டு -12 பேர் காயம்

பள்ளி வாசலில் வெடித்து சிதறிய குண்டு -12 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டு பள்ளி வாசல் ஒன்றில் தீடிரென குண்டு வெடித்து சிதறியதில் 12 பேர்

படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்


தாலிபான்கள் ஆட்சியில் தற்பொழுது அவர்கள் புரிந்து குண்டு தாக்குதல்கள் போன்று இடம்பெற்

று வருகின்றமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    பிரிட்டனில் செயல் இழந்த ஜிமெயில்

    பிரிட்டனில் செயல் இழந்த ஜிமெயில்

    உலக புகழ் பெற்ற அதிக மக்கள் பாவனைக்கு உட்படுத்தி வரும் கூகிள் இணையத்தின் ஜிமெயில்
    கணக்குகள் பிரிட்டனில் தடை பட்டுள்ளது

    பலருடைய கணக்குகள் செயல் இழந்த நிலையில் காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Posted in சினிமா

    கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை

    கல்யாணம் முடிக்காம -ஒன்றா வாழ போறாங்க – அந்த நடிகை

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார்.

    லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே… ரைசா வில்சன்
    ரைசா வில்சன்


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான

    இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர்

    விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ

    உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா?“ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    ரைசா வில்சன்

    இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால்

    அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.

      Posted in சினிமா

      38 வயதில் திருமணம் செய்த நடிகை

      38 வயதில் திருமணம் செய்த நடிகை

      தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகை சந்திரா லட்சுமண், டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

      38 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை
      கணவருடன் நடிகை சந்திரா லட்சுமண்


      தமிழில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமண்.

      மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

      சந்திரா லட்சுமண் 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

      சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை

      காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமண் தெரிவித்தார்.

      சந்திரா

      இந்த நிலையில் சந்திரா லட்சுமண்-டோஷ் கிறிஸ்டி திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து

      கொண்டனர். இருவருக்கும் திரையுலகினரும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

        Posted in சினிமா

        பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.

        பிகினி உடையில் லுங்கி டான்ஸ்.

        பிரபல பாலிவுட் நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளுமான ஜான்வி கபூரின் புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

        பிகினி உடையில் லுங்கி டான்ஸ்… ஜான்வி கபூர் புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்
        ஜான்வி கபூர்


        மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார்.

        ஜான்வி கபூர் தற்போது தனது தங்கை குஷியுடன் விடுமுறையைக் கழித்து வருகிறார். அங்கு அவருடைய சுற்றுப் பயணத்தின் சில புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

        குஷி சில கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு, “99 பிரச்சினைகள், ஆனால், பீச் அதில் ஒன்றல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

        ஜான்வி கபூர்

        ஆனால், ஜான்வி ‘லுங்கி டான்ஸ்’ என்று மட்டும் குறிப்பிட்டு பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

          Posted in சினிமா

          ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு

          ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு

          மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

          பா.ரஞ்சித் வழக்கில் அதிரடி உத்தரவு
          பா.ரஞ்சித்


          கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில்

          நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி விமர்சித்தார்.

          இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்து அமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம்

          தெரிவித்தன. இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

          ரஞ்சித்

          இந்நிலையில், ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியதாக இயக்குநர்

          பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

          இதற்கு முன், வரலாற்று புத்தகங்களில் உள்ள தகவல்களையே குறிப்பிட்டதாக பா.ரஞ்சித் பதில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

            Posted in சினிமா

            முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை

            முதலிரவில் என்ன செய்வார்கள்- நடிகை

            லவ் யூ ரச்சூ என்கிற கன்னடப் படத்தில் நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம்.

            2013 முதல் கன்னடப் படங்களில் நடித்து வரும் ரச்சிதா, லவ் யூ ரச்சூ படத்தில் அஜய் ராவுடன்

            நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளார்.

            இந்நிலையில் இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் காதல் காட்சிகள் குறித்த கேள்விகள்

            கேட்கப்பட்டன. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:

            இங்குப் பலரும் திருமணம் செய்தவர்களாக உள்ளீர்கள். உங்களை யாரும் சங்கடப்படுத்த

            விரும்பவில்லை. பொதுவாக முதலிரவில் என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள்! அதுதான்
            படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகளில் நான் நடிப்பதாக இருந்தால் அதற்குக்

            காரணம் இருக்கும். படத்தைப் பார்க்கும்போது அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்றார்

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

              யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

              யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு

              வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


              பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்

              துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது

              மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்

                Posted in இலங்கை செய்திகள்

                எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

                எகிறிய டெங்கு நோயாளர்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

                இலங்கையில் மீண்டும் டெங்கு நோயின் இக வேகமாக பரவி வருகிறது


                ,கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 1300 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                சுற்று புற சூழல் அசுத்தம் காரணமாக இந்த நோயானது வேகமாக பரவி வருகின்றமை இங்கே

                குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ

                  இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ

                  இலங்கையில் மீண்டும் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது


                  இவ்வாறு கடந்த தினம் மாட்டு 750 க்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது பாவியுள்ளமை கண்டு

                  பிடிக்க பட்டுள்ளது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை

                    விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை

                    மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து

                    பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

                    அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                    மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.


                    மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

                    இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்

                    207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன

                      Posted in இலங்கை செய்திகள்

                      இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்


                      இன்று வரவு செலவு திட்டம் அறிவிப்பு – பொருட்கள் விலையில் மாற்றம்

                      இன்று சற்று நேரத்தில் பாராளுமன்றில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்க படவுள்ளது ,இந்த

                      அறிக்கையின் பின்னர்


                      இலங்கையில் பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                        விபத்தில் வண்டிகள் சிக்கினால் தண்டம் – புதிய சட்டம்

                        இலங்கையில் இன்று புதிதாக வெளியான வரவு செலவு திட்ட அறிக்கையில்


                        தற்பொழுது வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதற்கு மேலதிகமாக தண்ட பணம் அறவிட

                        உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        இதன் மூலம் நான்கு மில்லியன் ரூபாய்களை மேலதிகமாக சம்பாதிக்கலாம் என்பது அரசின்

                        முடிவாக உள்ளது

                        வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏற்ப இந்த விடயங்கள் அறிமுக படுத்த படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          மனதை மாற்று ….!

                          மனதை மாற்று ….!

                          சக்தி தரும் சாமிக்கொரு
                          சலங்கை ஆட்டம் போட்டுவிடு
                          புத்தி திறந்து மாறிவிட – உன்
                          புன்னகையை காட்டி விடு

                          ஆத்திரத்தில் வீசும் சொல்
                          ஆழ காயம் தந்து விடும்
                          மூத்திரத்தில் நோய்களை தான்
                          முழு மருத்துவம் கண்டு விடும்

                          வீற்றிருக்கும் ஆடம்பர
                          வீட்டுக்குள்ளே ஒளி இன்றின்
                          வீடிருந்து என் செய்வாய் ..?
                          விபரம் உண்டா கூறி விடு

                          மமதைக்குள் மனம் புதைத்து
                          மாளிகையில் வாழாதே
                          மனம் இருந்தால் வீதி உளார்
                          மனம் குளிர உணவு இடு …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் 12-11-2021

                            Posted in இலங்கை செய்திகள்

                            வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO

                            வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO

                            இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்

                            இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                              Posted in Uncategorized

                              டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை

                              டிலிவரி கீரோ பெரும் இலாபம் – கொடி கட்டி பறக்கும் சாதனை

                              யேர்மனியை தளமாக கொண்டு இயங்கி வரும் டிலிவரி கீரோ என்ற உணவு விநியோக டிலிவரி

                              நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் சுமார் 6.7 billion euros


                              வருமானத்தை பெற்று சாதனை படைத்துள்ளது

                              தனது வாடிக்கையாளர்களுக்கு 10 முதல் 15 நிமிடத்தில் உணவு வழங்கி சாதனை

                              நிலைநாட்டியுள்ளது


                              இவை ஊபர் நிறுவனத்தை முந்திய செயல் பாடாக உள்ளதாக இணையதள வாசிகள் தெரிவிக்கின்றன

                                Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                                HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்


                                HSBC வங்கியின் மனேஜர் புரிந்த ஒரு மில்லியன் மோசடி அம்பலம்

                                பிரிட்டனில் மிக பிரபலமாக பேச ப்படும் வாங்கி HSBC ஆகும் ,மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது

                                இந்த வங்கியின் கிளை ஒன்றில் மனேஜர் ஆக பணிபுரிந்த ஒருவர் மற்றும் அவரது கூட்டாளியுடன்

                                இணைந்து பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது


                                இவ்வாறு ஏழுமுறை இவர்கள் புரிந்த சதிகள் மூலம் சுமார் ஒரு மில்லியன் பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது


                                கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                குறித்த வங்கியின் உள் கட்டமைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேற்படி

                                விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                தற்போது இவர்கள் இருவருக்கும் 12 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

                                  லண்டனுக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் கடல்வழியாக நுழைதல் தடுப்பு

                                  பிரான்சுக்கு பிரிட்டனுக்கும் இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் மீனவர்கள்

                                  அத்துமீறல் மற்றும் அகதிகள் நுழைவு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                                  நேற்று மட்டும் பிரிட்டனுக்குள் கடல்வழியாக 700 அகதிகள் நுழைய முயன்றனர் எனவும் அவை

                                  தடுத்து நிறுத்த பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

                                  பிரான்ஸ் டோவர் கடல்வழியூடாக நுழைய முயன்ற பொழுதே இந்த தடுத்தல் இடம்பெற்றுள்ளது

                                  என தெரிவிக்க பட்டுள்ளது .

                                    Posted in சினிமா

                                    அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

                                    அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

                                    தமிழ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் அதிக சம்பளம் கேட்கிறாராம்.

                                    அதிக சம்பளம் கேட்கும் இளம் நடிகை

                                    தமிழ் சினிமாவில் ஒல்லி நடிகருடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்து விட்டாராம். இதனால் தான் பெரிய நடிகை என்று எனக்கு ஆரம்பித்துவிட்டாராம்.

                                    தற்போதைய தன்னை அணுகும் புதுமுக இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்கிறாராம். தான் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டதால் தனக்கு ரசிகர் கிடைத்துவிட்டதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறாராம்

                                    Posted in சினிமா

                                    விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு

                                    விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு

                                    சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் விஜய் -சூர்யா இருவரும் திடீரென சந்திந்துக் கொண்டனர்.

                                    விஜய் – சூர்யா திடீர் சந்திப்பு
                                    சூர்யா – விஜய்


                                    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

                                    சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள சன் ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று

                                    வருகிறது. அதே சன் ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது.

                                    சூர்யா – விஜய்

                                    இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால் இரண்டு படங்களில்

                                    படப்பிடிப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சன் ஸ்டூடியோவில் நடைபெற்று

                                    வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.