Posted in இலங்கை செய்திகள்

பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்

குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

    30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

    அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்

    அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை

    ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

    மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

    குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

      Posted in இலங்கை செய்திகள்

      வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

      வயலுக்குள் இராணுவத்தை இறக்கும் கோட்டா

      சேதன பசளை பயன்பாடு தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இராணுவத்தை

      பெரும் போக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடுத்த போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

      சியம்பலாண்வையில் விவசாயிகளை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

        வெட்டி விட்டு
        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

        லண்டனில் வீடுபுகுந்து மனிதர்கள்; மற்றும் நாயை வெட்டி விட்டு தப்பி சென்ற கும்பல்

        லண்டன் Beecholme Drive, Kennington பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுளைந்த கும்பல் அங்கிருந்த

        இருவர் மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் ,அத்துடன் அங்கிருந்த நாய் மீதும் சரமாரியாக வெட்டியுள்ள்ளனர்

        மேற்படி சம்பவம் தொட்ரபில் போலீசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

          உலங்குவானூர்தி
          Posted in Uncategorized

          வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – பலர் மரணம்

          வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – பலர் மரணம்

          ரஷியாவில் உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் மூவர் பலியாகியுள்ளனர்


          மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

          தனியாருக்கு சொந்தமான உலங்குவானூர்தியே இவ்விதம் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்க படுகிறது

          குறித்த விபத்து தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in சினிமா

            பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்.

            பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்.

            3 படத்தில் பள்ளி மாணவராக நடித்த தனுஷ், தற்போது மீண்டும் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

            மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ்… வைரலாகும் புகைப்படம்
            தனுஷ்
            கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ்,

            வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர்

            வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம்,

            நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

            தனுஷ்

            இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ்

            வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

              Posted in சினிமா

              நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

              நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று

              பிரபல நடிகர் மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன் ஆகியோரை தொடர்ந்து நடிகை

              திரிஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று
              திரிஷா

              தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

              இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

              இதுதொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. எனக்கு அறிகுறிகள் இருந்தன.

              தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நான் குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அதற்காக தடுப்பூசிக்கு நன்றி கூறுகிறேன்.

              தயவுசெய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

              விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் நலம்பெற வேண்டும் என

              பிரார்த்தனை செய்யும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி என பதிவிட்டுள்ளார்

                மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
                Posted in இலங்கை செய்திகள்

                வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது.

                அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டதுடன்,

                வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்தார்.

                இந்நிலையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

                  கொரோனாத் தொற்று ஏற்பட்டாலும் பணிக்குச் செல்ல வேண்டும்

                  கொரோனாத் தொற்று ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

                  இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” பிரான்ஸில் ஒவ்வொரு நாளும் கொரோனோ பாதிப்பு

                  அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மருத்துவமனைகளில் அதிக நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

                  எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால்

                  அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க

                  தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                  மேலும் இந்த நடவடிக்கையால் பிறருக்கு தொற்று பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும்

                  அத்தியாவசிய மருந்து தேவைகள் தொடர்ந்து நடைபெற இந்த நடவடிக்கை

                  மேற்கொள்ளப்படவுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                    கோழிகள்
                    Posted in இலங்கை செய்திகள்

                    142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

                    மட்டக்களப்பு, காத்தான்குடியில் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட 142 கோழிகள், வெள்ள அனர்தத்தினால் இறந்துள்ளன.

                    கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடைமழையை அடுத்து ஏற்பட்ட

                    வௌ்ளத்தில், காத்தான்குடி முதலாம் குறிச்சி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட

                    142 கோழிகள் வியாழக்கிழமை (06) இறந்துள்ளன.

                      Posted in இலங்கை செய்திகள்

                      மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

                      மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

                      முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்

                      பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

                      2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள

                      குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறே மைத்திரி கோரிநின்றார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

                        இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

                        கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

                        திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் திட்டம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்தியாவும் வரவேற்றது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த கடினமான காலங்களில்” இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றார்.

                        “இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸூக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஜெய்சங்கர், நம்பகமான நண்பரான இந்தியா இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

                        இதேவேளை, கருத்துரைத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,

                        இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது, ​​அந்த நாட்டு மக்களுக்கு அது எப்போதும் துணை நிற்கும் என்றார். மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் கடந்த மாதம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாக்சி கூறினார்.

                        மொத்தம் 68 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை இலங்கை தடுத்து வைத்துள்ளது, இவர்களில் 12 மீனவர்கள் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்களை விடுவிக்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் செயல்பட்டு வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

                        கடற்றொழில் தொடர்பான கூட்டு செயற்குழு கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்து இரு தரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என்று பாக்சி கூறினார்.

                        “திருகோணமலை எண்ணெய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக செய்திகளை பார்த்தோம். இலங்கையுடனான எமது இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதி எரிசக்திப் பாதுகாப்பு” என்று அவர் கூறினார்.

                        “திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணைகளை நவீனமயமாக்குவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது எரிபொருளைச் சேமிப்பதை அனுமதிக்கும் மற்றும் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும்,” என்று பாக்சி மேலும் கூறினார்.

                        திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை (6) கைச்சாத்திடப்பட்டது.

                        லங்கா ஐ.ஓ.சி.யின் கீழ் இருந்த திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள பெரும்பாலான தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் அபிவிருத்தித் திட்டமாக வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அலுவலகம் வியாழன் (6) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

                        இந்தியாவின் கடன் வரியை நீட்டிப்பது குறித்த கேள்விக்கு, கடந்த மாதம் இலங்கை நிதியமைச்சர் பெசில் ராஜபக்சே புதுடெல்லிக்கு சென்றதை பாக்சி குறிப்பிட்டார்.

                        “இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவால்களை எதிர்கொள்வதில் தனது அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அவர் இந்திய தரப்புக்கு விளக்கினார். இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது மற்றும் இலங்கை நமது அண்டை நாடுகளுக்கு முதன்மையான கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்,” என்று அவர் கூறினார்.

                        ராஜபக்ஷவின் பயணத்தின் போது, ​​உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, செலுத்தும் நிலுவை பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து விவாதித்ததாக அவர் கூறினார். “மேலும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று பாக்சி கூறினார்.

                        காக்கை தீவு மீன் சந்தை
                        Posted in இலங்கை செய்திகள்

                        காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

                        காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை

                        காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி

                        மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு

                        அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

                        காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

                        இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

                        இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.

                        குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in உலக செய்திகள்

                          அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                          அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்

                          தென்கொரியாவின் எப் 35 ரக போர் விமானம் ஒன்று திடீரென தரை இறக்க பட்டது ,இயந்திரத்தில்

                          ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் இடம் பெற்றுள்ளது

                          விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு தற்போது சீர் செய்ய பட்டு வருகிறது

                          ,எனினும் எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது தப்பித்து கொண்டனர்

                            காரால்
                            Posted in Uncategorized

                            காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி

                            காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி

                            அவுஸ்ரேலியாவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த நபரை அவ்வழியால பயணித்து கொண்டிருந்த
                            கார் ஒன்று அந்த நபரை இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது

                            பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட நபர் சிகிச்சை பலனின்றி பலியானார்

                            தற்போது தப்பி சென்ற கார் கண்டு பிடிக்க பட்டு சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

                              மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
                              Posted in Uncategorized

                              மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்

                              மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்

                              பிரிட்டனில் இருபத்தி ஏழு வயதுடைய தாய் ஒருவர் தனது 18 மத சிசு மற்றும் மூன்று சிசுக்களை கொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான

                              விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

                                Posted in Uncategorized

                                ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை

                                ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை

                                ரசிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று பிரிட்டன் ஸ்கொட்லாந்து கடலில் இருந்து இருநூறு மைல்


                                தொலைவில் பயணித்து கொண்டிருந்த பொழுது பிரிட்டன் போர் கப்பல் கண்காணிக்க பட்டு துரத்த பட்டுள்ளது

                                ஆங்கில கடல் பகுதியிக்குள் நுழைய ரிஷ்ய கப்பல் பிரிட்டனின் கடலடியால் எடுத்துவர படும்

                                இணைய தொடர்ப்பு வசதிகள் மாற்று எரிபொருள் குழாய்களை தாக்கி அழித்து வருகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது

                                தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் பனிப் போர் பெரும் மோதலை ஏற்படுத்தும்

                                நிலைக்கு சென்று கொண்டுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்

                                மூட்டுவலி
                                Posted in மருத்துவம்

                                பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி

                                பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி

                                பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.


                                மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

                                இது எல்லா வயது பெண்களை தாக்குகிறது. பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

                                மூட்டு வலி பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்களின் அன்றாட வாழ்க்கை சிரமம் நிறைந்ததாகிவிடுகிறது.

                                பயணிக்க முடியாமலும், வேலைகளை செய்ய முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதனால் சரியான வாழ்வியல் முறைகளை பின்பற்றி மூட்டுவலியின்றி வாழ அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

                                மூட்டுவலி ஏற்பட்டாலும், தொடக்கத்திலே விழிப்படைந்து அதற்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டும். மூட்டுவலி தொடர்புடைய பொதுவான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!

                                மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள்:

                                • தசைநார்களிலோ, மூட்டு எலும்பிலோ ஏற்படும் காயங்கள்.
                                • மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும் `ப்ளூயீடு’ நிறைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள்.
                                • காலில் தொடை எலும்பில் இருந்து கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்புவரை தசைநார் நீண்டிருக்கிறது. ‘ஆன்டிரியர் க்ருஷியேட்டட் லிகமென்ட்’ எனப்படும் அதனை சுருக்கமாக ‘ஏ.சி.எல்’ என்று அழைக்கிறோம்.
                                • இந்த தசைநாரில் ஏற்படும் காயங்கள் ‘ஏ.சி.எல் இஞ்சுரி’ எனப்படுகிறது. இந்த காயமும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
                                • கால்பந்து, கைப்பந்து விளையாடு பவர்கள் விளையாட்டின்போது இயல்புக்கு மாறாக கால்களை இயக்கும்போது திடீரென்று இந்த வகை காயங்கள் தோன்றும்.
                                • மூட்டில் இருக்கும் எலும்புகளிலோ, மூட்டுக் கிண்ணத்திலோ ஏற்படும் லேசான காயங்கள் கூட அதிக வலியை தோற்று விக்கும்.
                                • நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், இருசக்கர வாகன பயணத்தில் கீழே விழுந்தாலும் மூட்டில் காயம் ஏற்படலாம். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிட்டால்கூட மூட்டில் காயம் ஏற்பட்டுவிடும்.
                                • நாம் பணி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ‘ஷாக் அப்சர்பர்’ போன்று செயல் படுபவை, மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு போன்ற திசுக் களாகும்.
                                • கால்மூட்டுகளின் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் இவை செயல்படும். எலும்புகள் பாதுகாப்பாக இயங்க உதவும் இந்த மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் மூட்டு வலி தோன்றும். நமது முழு உடலையும் மூட்டு
                                • பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி
                                • தாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இயல்புக்கு மாறாக இயங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்த மெனிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
                                • மூட்டுகளின் சிறப்பான இயக்கத்திற்காக சில வகை திரவங்கள் உள்ளன.
                                • மூட்டுக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒருவகை திரவம் உள்ளது. அதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் தடைபடும். அப்போதும் மூட்டு வலி தோன்றும்.
                                • இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை தசை போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதனை இலியோட்டிபியல் பான்ட் (iliotibial band) என்போம்.
                                • இந்த தசை முறுக்கிக்கொண்டாலும் மூட்டு வலி தோன்றும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
                                • மூட்டுக் கிண்ணம் இடம்பெயர்ந்து போகுதல், இடுப்பு மற்றும் கால் பாதங்களில் வலி ஏற்படுதல் போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு.
                                • சிலவகை வாத நோய்களும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், ரூமட்டோய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்றவை இந்த வகை நோய்களாகும்.

                                இதுபோல் மூட்டு வலி ஏற்பட இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

                                பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலி யால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.

                                மூட்டு வலி கொண்டவர்களுக்கு சாதாரணமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டு தேய் மானத்தை கண்டறிய எக்ஸ்ரே சோதனை, எலும்பு முறிவை நுட்பமாக அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை, தசைநார்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன், மூட்டுகளின் உள்பகுதி பாதிப்பை தெரிந்துகொள்ள ஆர்த்ரோஸ்கோப் பரிசோதனை போன்றவை வழக்கத்தில் உள்ளன.

                                பரிசோதனை மூலம் காரணத்தை கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

                                மூட்டு வலியை நீக்கும் மருந்து களோடு, சிகிச்சைக்கான மருந்துகளும் தரப்படும். சில பாதிப்புகளுக்கு ஊசிகளும் போடப்படும்.

                                மூட்டுகளை பலப்படுத்துவதுதான் மூட்டு வலியை குறைப்பதற்கான சிறந்த தீர்வு. மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலப் படுத்தப்பட்டால்தான் மூட்டின் இயக்கம் சீராகும்.

                                குறிப்பாக தொடைப்பகுதியின் முன்னும், பின்னும் இருக்கும் தசைகள் வலுப் படுத்தப்பட வேண்டும். அதற்கான உடற்பயிற்சிகளும் அவசியமாகும்.

                                பெண்களுக்கு மூட்டுவலி மருந்து களோ, உடற்பயிற்சிகளோ முழுமையான பலன் தராதபோது அறுவை சிகிச்சை அவசியமாகும். பாதிப்புக்கு ஏற்ப பலவகையான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

                                ஆபரேஷனுக்கு முன்பு அது பற்றி முழுமையாக நோயாளிகள் அறிந்துகொள்வது மிக அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுவதில்லை.

                                நம்மை தூக்கி சுமக்கும் எலும்புகளையும், அதற்கு பக்க பலமாக இருக்கும் மூட்டு களையும் சரியாக பராமரித்தால் வலியின்றி நிம்மதியாக வாழலாம்!

                                  மகேஷ் பாபு
                                  Posted in சினிமா

                                  கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு

                                  கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு

                                  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

                                  கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
                                  மகேஷ் பாபு

                                  தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

                                  தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

                                  லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில்

                                  வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில்

                                  தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

                                  என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

                                  நடிகர் மகேஷ் பாபு குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

                                    நயன்தாரா
                                    Posted in சினிமா

                                    துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை

                                    துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை

                                    முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாயில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.

                                    துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
                                    நயன்தாரா


                                    நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில்

                                    கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

                                    நயன்தாரா துபாயில் இருந்த நாட்களில் நடிகை மெஹ்ரீன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

                                    நடிகை மெஹ்ரீன், தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.


                                    மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.