நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்
Posted in உலக செய்திகள்

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் ,பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி

வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி

வைத்தியசாலை கட்டிடத்தில்இருந்து விழுந்து ஒருவர்பலி கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹாரிஸ்பத்து பகுதியைச் சேர்ந்த 71 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டும் போது, அந்த நபர் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ,பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) காலை 09.00 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் சில

நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.

காலியிலிருந்து கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ

வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.

புத்தளம் முதல் கொழும்பு

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் கடல்

அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை

அடையும் வாய்ப்பும் இருப்பதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கை

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கை

புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண

மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட

தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று (12) வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக

வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், மாகாண சபை

அளவில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க

வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக இந்த சீர்திருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டாம், ஒட்டுமொத்த செயன்முறையிலும், அமைப்பிலும் இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

எப்போதும் இந்த நாடு வளர்ச்சியடைந்துவரும் நாடு என்று மட்டும் கூறினால் போதாது, அந்த முறையை மாற்ற வேண்டும். அதை நாம் தான் செய்ய வேண்டும்.

இதனை மாற்ற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்ல நிர்வாக துறையினர், பெற்றோர்கள் உட்பட

அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த சீர்திருத்தத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது.

நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் கட்டாயமாக கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும்.

மாகாண அளவில் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாகாண சபை மூலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட

திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள்.

தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம்.

அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த,

அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான்.

முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும்.

மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது .

நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும்

குறிப்பாக ,வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

உறுதிப்படுத்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை

உறுதிப்படுத்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை

உறுதிப்படுத்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை ,யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை

உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் படகுகளின் தரம் மற்றும் முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் தொடர் கண்காணிப்பில்

ஈடுபடுமாறு பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுலாப்பயணிகளை ஏற்றும் சிறிய ரக படகில் நெடுந்தீவுக்கு சென்று

திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் பயணிகள் 12 பேர் 02 பணியாளர்கள் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவதானித்த அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு

பணியாளர்கள் விரைந்து செயற்பட்டு சேசமடைந்த கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றியுள்ளனர். கடற்படையினரும் முழு வீச்சுடன் செயற்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கடல் பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆமியை கொலை செய்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆமியை கொலை செய்தவர் கைது

ஆமியை கொலை செய்தவர் கைது

ஆமியை கொலை செய்தவர் கைது தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை

கடந்த மூன்றாம் தேதி நடந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்கு இந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,என்னிடம் 50 கிராம் 60 பிள்ளைகள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சந்தேக நபர் ராகம படுவத்த பகுதியைச் சேர்ந்தவர் என தற்போது போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதை வஸ்து வியாபாரத்தில் ஏற்பட்ட முறுகல் காரணமாக இந்த படுகொலை இடம் பெற்றிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி உடன் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாரணை உடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர்

தப்பி ஓடிய முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் உள்ளவர்கள் தற்போது போதை வஸ்து வியாபாரத்தில் அதிகமாக ஈடுபட்டுள்ளது இதற்கு காரணம் என்ன தெரிய வருகிறது.

அதனை அடுத்து தற்பொழுது இவருடன் எப்படி தமது நடவடிக்கையை மேற்கொண்டு என்பது தொடர்பான விடயங்கள் யாவும் போலீசாருக்கு கிடைக்கப்பெறு நிலையில் ,

இவர்கள் விரைவில் கைது செய்யப்படுவாள் எனவும் இவரது கூட்டாளிகளும் இரவில் கை செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்
Posted in பாடல்கள்

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்


எழுந்து வருவார் எங்கள் தலைவர் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs

தலைவர் எழுந்து வருவார் என்கின்ற சிந்தனை கோட்பாட்டில் வல்வையை சேர்ந்த சிவதா அவர்கள் இந்த தலைவர் பாடலை எழுதியுள்ளார் .

அற்புதமான வரிகள் நிறைந்த சமகாலத்திற்கு பொருந்தும் பாடலாக உள்ளது .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த – சிவதா லண்டன்
-தயாரிப்பு – த – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை
Posted in உலக செய்திகள்

PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை

PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை

PKK ஆயுதக் குறைப்புக்கு எதிர்வினை ,குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தொடங்கியுள்ள ஆயுதக் குறைப்பு செயல்முறையை பயங்கரவாதம் இல்லாத துருக்கியை நோக்கிய ஒரு முக்கியமான படியாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் வரவேற்றுள்ளார்.

“பயங்கரவாதமற்ற துருக்கிக்கான பாதையில் இன்று எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை நேர்மறையான முடிவுகளைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தனது X பக்கத்தில் எழுதினார்.

“எங்கள் பாதுகாப்பு, நமது மக்கள் மற்றும் நமது பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்காக” நாடு பின்பற்றும் பாதையில் கடவுளின் உதவியை அவர் விரும்பினார்.

இந்த விவகாரம் குறித்து துருக்கி அதிபர் சனிக்கிழமை விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய தகவல்களின்படி, PKK போராளிகளின் முதல் குழு வெள்ளிக்கிழமை ஈராக் குர்திஸ்தானின் சுலைமானியா கவர்னரேட்டின் மலைகளில் ஆயுதங்களைக் கீழே வைத்தது. துருக்கிய ஊடகங்கள் வெளியிட்ட

காட்சிகளில் இருந்து பின்வருமாறு, குறைந்தது 30 சப்மஷைன் துப்பாக்கிகள் மற்றும் ஒரு ராக்கெட் லாஞ்சர் குறியீடாக தீப்பற்றி எரிந்தன. சுமார் 30 PKK உறுப்பினர்கள், அவர்களில் பாதி பெண்கள், விழாவில் பங்கேற்றனர்.

பிப்ரவரியில், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியில் சிறையில் இருக்கும் PKK தலைவர் அப்துல்லா ஒகாலன், PKK-ஐச் சார்ந்த அனைத்து

குழுக்களையும் ஆயுதங்களைக் கீழே போடவும், அங்காராவுடனான ஆயுத மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் அழைப்பு விடுத்தார். மே மாதம்

நடைபெற்ற கட்சியின் மாநாடு, துருக்கியின் அதிகாரிகளுடனான கிட்டத்தட்ட 50 ஆண்டுகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுயமாக கலைக்க முடிவெடுத்தது.

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு
Posted in உலக செய்திகள்

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு

காசா இறப்பு எண்ணிக்கை 57823உயர்வு 2023 அக்டோபரில் இருந்து காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57,823 ஆக உயர்ந்துள்ளது

2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 57,800 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57,823 ஐ எட்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 137,887 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக வெள்ளிக்கிழமை மட்டும் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் காஸாவில் உள்ள மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பலியானவர்களில், 11 பேர் கொல்லப்பட்டபோது மனிதாபிமான உதவிகளைப் பெற வரிசையில் காத்திருந்தனர்.

ஒரு தனி தாக்குதலில், காசாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதலில் ஏழு பாலஸ்தீனியர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்
Posted in உலக செய்திகள்

ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்

ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில்

ஈரானிய ஆயுதப்படை தயார் நிலையில் ,நாட்டின் இராணுவப் படைகள் சிறந்த நிலையில் இருப்பதாகவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நாட்டைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி கூறுகிறார்.

ஈரான் மண்ணில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் வீரமரணம் அடைந்த இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் (IRGC) குத்ஸ் படையின் முன்னாள் மூத்த தளபதி

முகமது-சயீத் இசாதியின் நினைவை போற்றும் வகையில் நடைபெற்ற நினைவேந்தல் விழாவில் மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்தார்.

தியாகி இசாதி தனது வாழ்நாள் முழுவதையும் கடவுளின் வழியில் ஜிஹாதின் காரணத்திற்காக அர்ப்பணித்தார், மேலும் அவரது பெயர் எப்போதும் அல்-

குத்ஸ், பாலஸ்தீனம் மற்றும் பிரபலமற்ற சியோனிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் தியாகிகளுடன் பிரகாசிக்கும் என்று மௌசவி கூறினார்.

நாட்டையும் ஈரானிய நாட்டையும் பாதுகாக்க நாட்டின் ஆயுதப்படைகளின் முழு தயார்நிலையை வலியுறுத்தி, உயர்மட்ட ஜெனரல், “ஆயுதப்படைகளின் திறன்கள் சிறந்த நிலையில் உள்ளன” என்றார்.

வெள்ளியன்று, ஈரானின் இராணுவத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி, நாட்டின் முழுப் பரப்பையும் பாதுகாப்பதில் படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சியோனிச ஆட்சி ஜூன் 13 அன்று ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரை நடத்தி ஈரானின் இராணுவம், அணுசக்தி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை 12

நாட்களுக்கு தாக்கியபோது, அமெரிக்கா நுழைந்து ஜூன் 22 அன்று ஈரானின் Natanz, Fordow மற்றும் Isfahan ஆகிய மூன்று அணுசக்தி தளங்களில் இராணுவத் தாக்குதல்களை நடத்தியது.

பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா
Posted in இலங்கை செய்திகள்

பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா

பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா

பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமில்லை அனுரா ,அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச மூலதனச் செலவினம், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை

நினைவுகூர்ந்து, இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிடுவதற்கும், அதன் மூலம் இந்த நிதி ஆண்டில் எதிர்பார்த்த

பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது, அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) காலை நடைபெற்ற மாத்தறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிறுவன மட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, இதுவரை தொடங்கப்பட்ட மற்றும் இந்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள

வேலைத்திட்டங்களின் தற்போதைய பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவை மீளாய்வு செய்யப்பட்டன. அங்கு, விவசாயம், சுகாதாரம், கல்வி,

கிராமிய அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நில்வலா ஆற்றின் உப்புத் தடுப்பு நிர்மாணிப்பு குறித்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிப்பதற்கும், அந்த குழுவின் அறிக்கையை ஒரு மாதத்திற்குள்

பெற்றுக்கொள்வதற்கும் இங்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததுடன், மாத்தறை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை முழுமையாகக்

கட்டுப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான திட்டத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

தற்போது பயன்படுத்தப்படாத மற்றும் முழுமைபெறாத அரச கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களை செயற்திறன் மற்றும் உரிய பயன்பாட்டுக்கு

கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதோடு, அதற்கான மாற்று முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், பொல்ஹேன உத்தேச கிரிக்கெட் பயிற்சிப் பாடசாலையை நிர்மாணிப்பது தொடர்பான பரிந்துரையை தயாரித்து முன்வைக்குமாறும்,

அதற்கு தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளால், இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் அதற்கு எந்த சம்பந்தமும்

இல்லாத பொதுமக்கள்தான் என்றும், இனிமேலும் இது நடக்க இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள்

லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் ,மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கிப் போயுள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ ஸ்ரீ தர்மானந்த மாவத்தையைச் சேர்ந்த 75 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி

வாகன விபத்தில் இருவர் பலி ,ஹசலக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிபொல வீதியின் உடவல பிரதேசத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஹசலகவில் இருந்து ஹெட்டிபொல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் துவிச்சக்கரவண்டியில் சென்றவரும் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

விபத்தில் மரணித்தவர்கள் 28 மற்றும் 73 வயதுடைய பரவர்தனஓய மற்றும் ஹசலக பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு

கொஸ்கொட துப்பாக்கிச் சூடு ,பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்று (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அஹுங்கல்லவிலிருந்து கொஸ்கொட நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த

இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொஸ்கொடவைச் சேர்ந்த கலதுர நிமுத்து அபிஷான் அபய டி தப்ரூவ் (ரன் மஹத்தயா) என அடையாளம் காணப்பட்டார்.

காயமடைந்த நபர் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வௌிநாட்டுல் உள்ள ‘ஷான் மல்லி’ என்ற நபரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், முச்சக்கர வண்டி உரிமையாளரான ‘பாலே’ என்ற நபரை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, முச்சக்கரவண்டியில் பாலே என்பவரின் உறவினரான காயமடைந்தவரான நிமுத்து அபிஷான் என்ற நபரே பயணித்துள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அஹுங்கல்லவில் பாலே என்பவரை இலக்கு வைத்து, அவர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு ,பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக்மேயர் ,கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான

அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான (Bureau of South and Central Asian Affairs) சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான்,

இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.

முன்னதாக நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார்

வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5பொலிஸார் ,வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம்

சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார்.

அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ய சென்றபோது

இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன.

பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது.

எயார் இந்திய விமான விபத்து
Posted in உலக செய்திகள்

எயார் இந்திய விமான விபத்து

எயார் இந்திய விமான விபத்து

எயார் இந்திய விமான விபத்து ,கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.

விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 இயந்திரங்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன. ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், RAT (Ram Air Turbine) என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது.

அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு இயந்திரம் மட்டுமே செயற்பட்டுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்

கடற்படைக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள் கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி

அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பாக அத தெரண வினவியபோது, கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தது.