Tag: துப்பாக்கிச் சூடு
கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டகல பாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் கடந்த இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 34 வயதுடைய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
வாகனம் ஒன்றில் வந்த மர்ம ஆயுததாரிகள், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இலங்கையில் தொடரும் இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.
இலங்கையில் ஆயுதப் பாவனை தடைவிதிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆயுதங்கள் பாவித்தால் 20 வருட கடூழிய சிறை தண்டனை என சட்டம் இருக்கிறது.
அவ்வாறான காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ,அனுரா அரசின் திட்டமிடப்பட்ட நிழல் நடவடிக்கையா என்பது தொடர்பாகவே சந்தேகம் வெளியிடப்படுகிறது.
அனுரா ஆட்சி இடம்பெற்ற 30ஆவது சூட்டு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
மக்களை நல்வழிப்படுத்த வந்த அது அவருடைய ஆட்சி அதிகாரம், இன்று இப்படி இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவர் மீதான அதிர்த்தியம் அதிகமாக ஏற்படுத்தி வருவதாக ,நோக்கர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகரித்து காணப்பட்டால் ,அது மிகப் பெரும் அபாய நிலையில் ,இலங்கையை அழைத்துச் செல்லும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு
அனுராஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூடு ,அனுரா ஆட்சியில் எகிறிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் அகில தேச மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக. ஆளுகின்ற அணுகுற குமார திசையக்கா .பதவி ஏற்றதன் பின்னர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தி கொண்டனர்.
நீதிமன்றங்கள். பொது இடங்கள். வீதிகள். சந்தைகள் .சாலைகள். என பரந்து பிரிந்து செல்லும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துக் காணப்படுகிறது.
கோத்தபாயா , மஹிந்தாவை, போன்று அனுராவின் நிழல் பிரிவுகள் ,இந்த சூட்டு தாக்குதலை நடத்துகின்றனவா என்கின்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றது.
புதிய சட்டங்கள் ஊடாக மக்களை காப்பாற்றுவேன் என சொன்னவர் ,தற்பொழுது இந்த விடயத்தில் சிக்கலை சந்தித்து இருக்கின்றார்.
தேர்தலில் வருகின்ற பொழுது மக்களுக்கு அள்ளி வாக்குறுதிகளை வழங்கினார் .
ஆனால் இன்றுவரை அவர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதனையும் காப்பாற்றவில்லை.
அதனைக் காப்பாற்ற முடியாதவர்களால் .எப்படி நாட்டினுடைய சட்டம் சிவில் நிர்வாகத்தை காப்பாற்ற முடியும் என தமிழர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .வன்முறை சம்பவங்கள். வழிப்பறி கொள்ளைகள். கடத்தல்கள். கற்பழிப்புகள். காணாமல் போனதல் என்பனவற்றை எவ்வாறு இவரால் தடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.
இடைவிடாது தொடரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு .முடிவு கட்ட முடியாத அணுகுற குமார திசநாயக்கவினால் .நாட்டினை எவ்வாறு வழிநடத்தி செல்வார் .
.செழிப்புமிக்க நாடாக இலங்கையை மாற்ற முடியுமா என அகில இலங்கை மக்கள் கேள்விகளை எழுப்பி நிற்கின்றனர்.
இது பொதுமக்களின் இருப்பிற்கும் .பாதுகாப்பிற்கும். தனிநபர் சுதந்திர .நடமாட்டத்திற்கும் .விடுக்கப்படும் .பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மக்களால் வெளியிடப்படும் எதிர்க்கப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் .ஆழுகிற ஆட்சிக்கு எதிராக திசை திரும்பி ,மிகப்பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ,சமூக ஆர்வலர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு ,அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை ,கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,கொட்டாசேனை பிரிவின் வாசல தெரு பகுதியில் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் தாயாருடன் காரில் வந்த ஒருவர், காரை என்ஜின் இயங்கச் செய்து விட்டு, கோட்டஹேனா தெருவில் உள்ள ஒரு உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், ஓட்டுநரின் மனைவி மற்றும் தாயார் உள்ளே இருந்தபோது ஸ்டார்ட் செய்யப்பட்ட காரை ஒரு நபர் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், விசாரணைக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு ஒரு டாக்ஸியில் வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, இந்த கார்
திருடப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக செயல்பட்டு, தப்பிச் சென்ற காரைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவுகளை மீறி சந்தேக நபர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றபோது, பொலிஸார் தங்கள் கடமைத் துப்பாக்கிகளில் இருந்து இரண்டு
முறை சுட்டனர், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் காரை நிறுத்த முடிந்தது.
அதிகாரிகள் காரை நெருங்கியதும், சந்தேக நபர் காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்றார், ஆனால் காரில் இருந்த இரண்டு பெண்களுக்கு காயம் ஏற்படவில்லை.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்வதற்காக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
கிரிபத்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயம் அடைந்துள்ளார்
துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது
துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது
துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது ,மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில், மார்ச் 21ஆம் திகதி (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர், துப்பாக்கிதாரி என்றும் அவர், இராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தர பொலிஸ் நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன் திங்கட்கிழமை (07) ஆஜரான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தர, தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், ஏற்கெனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56
மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2
வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் அன்றையதினமே கண்டுபிடிக்கப்பட்டது.
அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு
அனுரா ஆட்சியில் எகிறும் துப்பாக்கிச் சூடு ,எல்பிட்டிய – ஊரகஹ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுரா ஆட்சியில் தற்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இது திட்டமிடப்பட்ட உள்ளக சாதியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிட படுகிறது .
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு
மிதிகமவில் துப்பாக்கிச் சூடு மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் முன் சுவரில் 3 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும், 1 தோட்டா ஜன்னல் பகுதியைத் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு: 3 குழுக்கள் விசாரணை ,வெலிவேரிய – அரலியகஸ்தேக சந்தியில் வியாழக்கிழமை (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கம்பஹா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல்களின்படி, காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதன்போது அவரது இடது கையில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டது, ஆனால் அவர் நிற்காமல் மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,கடுவலையில் திருடப்பட்ட லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
வத்தளை பகுதியில் இருந்து திருடப்பட்டு ஓட்டிச் செல்லப்பட்ட லொறி ஒன்று கடுவெலயில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்கத் தவறியதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
நொரோச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறி ஏற்றிய லொறி வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, சாரதி தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார்.
இதன் போது சந்தேக நபர் வாகனத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியொன்று லொறியை பின்தொடர்ந்து சென்றது, ஆனால் அதனை நிறுத்த முடியாமல் போனதால், வாகனத்தின் GPS கண்காணிப்பு அமைப்பு மூலம் அதிகாரிகள் தலையிட்டனர்.
பொலிசார் முதலில் வெல்லம்பிட்டிய பகுதியில் லொறியை நிறுத்த முற்பட்டனர், ஆனால் சந்தேக நபர் அவர்களின் உத்தரவை மதிக்கவில்லை.
பல பொலிஸ் குழுக்கள் பின்னர் வாகனத்தை பின்தொடர்ந்தன, இது தலாஹேன மற்றும் கடுவெல ஆகிய இரு பகுதிகளிலும் பல துப்பாக்கிச் சூட்டுகளுக்கு வழிவகுத்தது.
பொலிஸாரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சந்தேக நபர் பிடிபடுவதைத் தொடர்ந்து தப்பித்துக்கொண்டார், துரத்தலின் போது இரண்டு கார்கள், ஒரு பேருந்து மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தால் இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சின் பின்புற வாயில் ஒன்று சேதமடைந்துள்ளது.
தப்பிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில், அதிகாரிகள் லாரிகளைப் பயன்படுத்தி கடுவெல நகரில் சாலையை மறித்து சாலைத் தடுப்புகளை அமைத்தனர்.
எனினும் சந்தேகநபர் இந்த இடத்தில் திரும்ப முயன்றுள்ளார். அந்த நேரத்தில், காவல்துறை அதிகாரிகள் லொறி மீது கூடுதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது, இறுதியில் கடுவெல நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டது.
களனியைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு 10பேர் பலி ,சிரியாவில் அரசு அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதம் தாங்கிய ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக சிறிய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் உள்ளூர் வாசிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் அதிலேயே இந்த மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்து நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் தற்பொழுது தங்கமடைந்த வசித்து வருகின்றார் அவர்ன காலப்பகுதியில் இந்த சம்பவம் தற்போது இடம் பெற்று வருகின்றது.
இஷ்டையில் அமெரிக்கா என்பன இணைந்து தற்பொழுது சரியாக தமது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்திருப்பதாகவும் அதன் ஊடாக ஈராடி தாக்கிட இவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை நடத்தி வருகின்ற நிலையிலேயே தற்பொழுது எந்தச் சம்பவம் இங்கு இடம் பெற்று வருகிறது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட கால யுத்தத்தினை அடுத்து தற்போது சிரியாவில் ஆட்சி கவிக்கப்பட்டு புதிய ஆட்சி கூட அவர் இருக்கின்ற நிலையில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி
காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி
காலியில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி ,காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் இருவர் 29 மற்றும் 54 வயதுடையவர்கள் என்பதோடு, மற்றையவரின் வயது உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.
கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது
கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு 4 சந்தேகநபர்கள் கைது ,கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதிப் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று (15) மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற நபரும், அதை அகற்ற உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளிகளுக்குத் தேவையான பாதுகாப்பு தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை களுபோவில, போதிவத்வ பகுதிக்கு எடுத்துச் சென்ற நபர் மற்றும், டிசம்பர் 28 முதல் ஜனவரி 05 வரை அந்த பாதுகாப்பு
தலைக்கவசங்கள் மற்றும் ஜெக்கெட்டுகளை வைத்திருந்து, ஜனவரி 05 ஆம் திகதி இரவு கொட்டாவை-பிலியந்தலை 255 வீதியில் உள்ள பாழடைந்த
இடத்திற்கு கொண்டு சென்று குற்றத்திற்கு துணை போன நபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்
கைது செய்யப்பட்ட 28, 27, 21 மற்றும் 17 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் வெள்ளவத்தை, பொரளை மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு மற்றொரு சந்தேகநபர் கைது வெலிகமையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹநெவிய வீதியில் பயணித்த ஐந்து பேரை குறிவைத்து, கடந்த 4ஆம் திகதி T56 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தக் குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (09) மாலை மாத்தறை பிரிவு குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெலியத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரை இவர் ஓட்டிச்சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவியதற்காக ஆண் ஒருவரும், பெண்ணொருவரும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
நேற்று புதன்கிழமை யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை பொலிஸார் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து
நிறுத்துமாறு பொலிஸார் கோரியபோது அது தப்பியோட முற்பட்டது. இதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அதைக் கைப்பற்றினர்.
கடத்தக்காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம்
துப்பாக்கிச் சூடு பெண் காயம் மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையின் பிரகாரம், கரையோர பொலிஸாரினால் இரண்டு பெண்கள், சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்விருவரும் மாளிகாந்த நீதவான் முன்னிலையில், சனிக்கிழமை (14) ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு வந்த பெண்ணொருவரின் கணவன்,
அப்பெண்ணை பிணையில் எடுத்தார். அதன் பின்னர், அங்கிருந்து கணவனுடன் வெளியேறிய போதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் துப்பாகிப்பிரயோத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருதானை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை
கிளப் வசந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்களுக்கு பிணை ,ஜூலை 08 ஆம் திகதி அதுருகிரியவில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்றழைக்கப்படும்
கிளப் வசந்த மற்றும் மற்றுமொருவர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரியவில் உள்ள பச்சைக் கடை உரிமையாளர் உட்பட 8 சந்தேகநபர்களை விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஷார்தீனால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர்கள் 100,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் எட்டு பேரின் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அதுருகிரிய பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் குட்டி வசந்த மற்றும் விஜேசூரிய ஆராச்சிகே நயன வாசல விஜேரத்ன ஆகியோரின் கொலை மற்றும் அதற்கு
உதவியமை தொடர்பில் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் பலர் அரச சாட்சிகளாக மாறவுள்ளதாக அரச சட்டத்தரணி சக்தி ஜகோதராச்சி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணிகளான விஷ்வ விதானகமகே மற்றும் நுவான் ஜயவர்தன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.











































