Tag: கோர விபத்தில்
கோர விபத்தில் மூவர் பலி
கோர விபத்தில் மூவர் பலி
அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கிய இருந்த நிலையில் இரண்டு லொறிகளுக்கு இடையில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோர விபத்தில் மூவர் பலி
லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
by நிருபர் காவலன் - கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
by நிருபர் காவலன் - சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by நிருபர் காவலன் - வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
by நிருபர் காவலன் - வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன்
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
கொழும்பு – இரத்தினபுரி வீதியில் உக்வத்தை மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
அவிசாவளை திசையில் இருந்து ஹங்வெல்ல திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணித்த குறித்த யுவதி, பேருந்தில் இருந்து இறங்கி
முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த யுவதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அவிசாவளை, புவக்பிட்டிய, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தினக்ஷி தில்ஷிகா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.
கோர விபத்தில் இளம் யுவதி மரணம்
பேருந்தின் இடது பக்கம் யுவதியின் மீது மோதுண்ட நிலையில், அவர் தரையில் விழுந்துள்ளாா்.
இதனை அவதானிக்காது செலுத்தப்பட்ட பேருந்தின் முன் சக்கரம் மற்றும் பின் சக்கரமும் அவா் மீது ஏறி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சாரதி பேருந்தை நிறுத்தாது செலுத்திய நிலையில், அதனை பின்தொடா்ந்து சென்ற பொலிஸார் தடுத்து நிறுத்தி சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்துள்ளனா்
யாழில் சற்றுமுன் கோர விபத்தில் மீசாலை இளைஞர் உயிரிழப்பு
யாழில் சற்றுமுன் கோர விபத்தில் மீசாலை இளைஞர் உயிரிழப்பு
மீசாலை கிழக்கைச் சேர்ந்த இராசரத்தினம் அபிதாஸ் வயது 28
என்ற இளைஞர் யாழில் இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் சற்று முன் யாழ்ப்பாணம் முட்டாஸ் சந்தியில் இடம் பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம்
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Featured
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
















