Tag: கணவர்
கணவர் மனைவியைக் கொன்று வீட்டிற்கு தீ
கணவர் மனைவியைக் கொன்று வீட்டிற்குதீ
கணவர் மனைவியைக் கொன்று வீட்டிற்கு தீ .தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட கணவர் மனைவியைக் கொன்று வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது
நேற்று காலை ஒரு கணவர்
நேற்று காலை ஒரு கணவர் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்று, அவர்களது வீட்டிற்கு தீ வைத்தார்.
இறந்தவர், 40 வயதான ரத்நாயக்க முதியன்செலாகே தமயந்தி ஏகநாயக்க, பரசங்கஸ்வெவவில் உள்ள மெதகம பகுதியைச் சேர்ந்தவர்.
குடும்ப தகராறு தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் 14 நாட்கள்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். நேற்று அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலை
அவர் திரும்பி வந்த சிறிது நேரத்திலேயே தம்பதியினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலைக்கும் தீ வைப்புக்கும் வழிவகுத்தது.
பரசங்கஸ்வெவ OIC SI ரோஹண விஜேசூரிய தலைமையிலான போலீஸ் குழு, தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது
மனைவியை கொலை செய்த கணவர் கைது தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர் ,கணவன், மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (07) இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
குஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதேபோன்று கடந்த 06 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தகராறின் பின்னரே கணவன், மனைவியை கொலை செய்து பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளமை பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர்
மனைவிக்கு தீ மூட்டிய கணவர் ,குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு தீ வைத்து எரித்ததில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது .
இந்தச் சம்பவம் அச்சுவேலியில் பிரதேசத்தில் , ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில், இரு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) என்பவரே படுகாயமடைந்துள்ளார் .
குறித்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையே முரண்பாடு இருந்து வந்துள்ள நிலையில், மது போதையில் வந்த கணவன் அவருடன் முரண்
பட்டுள்ளார். இந் நிலையில் பெண்ணின் அபயக்குரல் சத்தம் கேட்டதும் அவர்களின் வீட்டின் அருகே வசித்து வந்த பெண்ணின் சகோதரன் உதவிக்கு ஓடி பார்த்த போதுஅவரது சகோதரி தீயில் எரிந்துகொண்டிருந்துள்ளார் .
உடனடியாக அயலவர்களின் உதவியுடன் பெண் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
இதனிடையே, அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்ட பெண்ணின் கணவரும் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை
சிந்துஜாவின் கணவர் மரணம் அர்ச்சுனா கவலை ,சிந்துஜாவின் கணவர் அன்புள்ள தம்பி மரியராஜ் அவர்கள் காலமானதாக அறிய வருகின்றேன்.
இச்செய்து உண்மையோ பொய்யோ எனக்கு சரியாக தெரியவில்லை.
நெஞ்சம் கன கனக்கறது..
அரசியல் ஆட்டங்களால் ஒரு குழந்தையின் தாயையும் தந்தையையும் பலி கொடுத்துக் கொண்டே மன்னரர் சமூக அமைப்புகளும் இதர பல அரசியல்வாதிகளும் தங்களுடைய அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்..
வைத்தியசாலை தொடர்பாக சார்பாக இருந்து வழக்குகளை திசை திருப்பிக் கொண்டிருந்த சிவகரன் அவர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஊடக சந்திப்பிற்கு மரியராஜ் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது..
எது எப்படியோ..
ஒரு குழந்தையின் தாயையும் தந்தையும் கொலை செய்து சந்தோஷமடைந்திருக்கிறோம்..
மன்னார் வைத்தியசாலை விவகாரம் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறே இழுத்தடிக்கப் படுகிறது.
வவுனியா வைத்தியசாலை விவாரத்திலும் இவ்வாறான ஒன்றை நடக்க விடாமல் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்பட நிர்பந்திக்க வேண்டும்..
அன்புள்ள மரியராஜ் தம்பி மற்றும் தங்கை சிந்துஜா உங்கள் ஆன்மா இப்போது உங்கள் குழந்தையை நோக்கி பார்த்த வண்ணம் இருக்கும்..
நெஞ்சம் கனத்த படி எழுதுகிறேன்..
பிள்ளையை நான் எடுத்து வளர்க்கவும் தயாராக இருக்கிறேன்..
கர்த்தரே அந்தக் குழந்தையை ஆசீர்வதியும்..
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

சிந்துஜாவின் கணவர் தற்கொலை
சிந்துஜாவின் கணவர் தற்கொலை
சிந்துஜாவின் கணவர் தற்கொலை ,மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்தியாவின் கணவரான எஸ்தன் என்கின்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியை பறிகொடுத்து மன அழுத்தத்தில் சிக்கித் தவித்து வந்த இவருக்கு அரசியல் ரீதியாக பல்வேறுபட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ,அதனுடைய உச்சகட்ட மான உளைச்சல் காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மனைவி இறந்த நிலையில் தற்பொழுது ஏதும் செய்ய முடியாத நிலையில் பல இன்னல்களுக்கும் சிக்கி தவித்து வந்த கணவர் தற்பொழுது அரலி விதையினை உண்டு தற்கொலை செய்துள்ளார் என்ற சம்பவம் வெளியாகி இருக்கின்றது.
தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாகவே தற்பொழுது மனைவி இறந்ததாக வழக்கு தொடரப்பட்டு வருகின்ற நிலையிலும், 5 பேருக்கு பணிகளை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வந்திருந்தது அதனை அடுத்து தற்பொழுது கணவர் தற்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரை தற்கொலை செய்து அரசியல்வாதிகள் தோன்றினர் அல்லது இவர் தற்கொலை செய்தாரை என்கின்ற விடயமே கேள்வியாக எழுந்துள்ளது.
கடுமையான மன அழுத்தம் கொடுத்து அரசியல்வாதிகளின் கொலை மிரட்டல் காரணமாக அது உச்ச மன உளைச்சலுக்கு சென்றிருந்த இவர் தற்பொழுது தற்கொலை செய்திருக்க கூடும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.
மருத்துவமனைகள் தம்மை தான் காத்துக் கொள்வதற்காக தற்பொழுது அப்பாவிகள் விளையாடி வருகின்ற செயல்பாடாகவே தற்பொழுது சிந்தியாவின் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் காணப்படுவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை
கணவர் மனைவியால் வெட்டி கொலை ,யாழ்ப்பாணம் ஓடுதல் பகுதியில் பகுதியில் ஒருவர் தனது கணவனை கூலி குழுக்களை அமர்த்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவரை அவரது நண்பருடன் இணைந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன் அன்று அவருக்கு கோழி விநியோகம் செய்ய பட்டுள்ளது .
அதன் பின்னர் அவர் மீது சரமரியாக வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்ற பொழுது கணவரின்அலறிய சித்தம் கேட்டு ஓடிவந்த மனைவியின் தங்க நகைகளை கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.
காயமடைந்த நிலையில் வைத்தியம் உயிரிழந்தார் இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர் .
விசாரணையின் பொழுது மனைவி மற்றும் வாலிபன் இணைந்து இந்த குழுவின் பின்புலத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது மனைவி மற்றும் வாலிபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் கணவனை மனைவி கூலி குழுக்களை வைத்து வெட்டிக்கொண்ட செயல் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
தாலி கட்டி வாழ்ந்த கணவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற விடயம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
எங்கே செல்கிறது எங்களது யாழ்ப்பாணம் அந்த கேள்வி எல்லோருடைய மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

மனைவி கள்ளத்தொடர்வு மகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட கணவர்
மனைவி கள்ளத்தொடர்வு மகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட கணவர்
நபரொருவர் தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தனது மகளுடன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி கள்ளத்தொடர்வு மகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட கணவர்
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைதுby நிருபர் காவலன்
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனைby நிருபர் காவலன்
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிby நிருபர் காவலன்
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்புby நிருபர் காவலன்
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்புby நிருபர் காவலன்
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதி
கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர்.
ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி
ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது.
மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன.
இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும்.
இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை,
ஆகியவற்றை கடந்து ஓடினர். இதில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்த தம்பதிக்கு பரிசு பொருட்களும், எடைக்கு எடை பீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அவர் சூப்பர் பண்ணுறார் – சமந்தா
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் என்று இயக்குனரிடம் நடிகை பற்றி சமந்தா கூறியுள்ளார்.
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிறார் – சமந்தா
நடிகை சமந்தா
2015-ல் வெளியான மலையாளப் படமான ‘பிரேமம்’ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தெலுங்கில் அறிமுகமான
பின்தான் தமிழுக்கு வந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி தமிழில் நடித்த ‘கரு, மாரி 2, என்ஜிகே’ ஆகிய படங்கள் வெற்றிபெறவில்லை.
அதனால், தமிழில் தற்போது கைவசம் எந்தப் படமும் இல்லாமல் இருக்கிறார். தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அவருக்கு நல்ல
பெயரையே பெற்றுத் தந்துள்ளன. ‘பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களுக்குப் பிறகு தற்போது சேகர்
கம்முலா இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவி, சமந்தா
இன்னும் சில நாள் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டி உள்ளது. அதற்குள்
படத்தைப் பார்க்கும் தன் ஆவலை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் நாக சைதன்யாவின் மனைவி சமந்தா.
இயக்குனரும் எடுத்தவரையில் எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்த நடிகை சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய்
பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார்

கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை சிம்ரன் கன்னா, கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
கணவரை விவாகரத்து செய்தார் பிரபல டி.வி. நடிகை
நடிகை சிம்ரன் கன்னா
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் சிம்ரன் கன்னா.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யா ரிஷ்தா கியா கேஹ்லத ஹை’ என்ற தொடர் சிம்ரன் கன்னாவுக்கு புகழை பெற்றுக்கொடுத்தது.
இவருக்கும், பரத் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு வினித் என்ற ஆண் குழந்தை
உள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப
தகராறு ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். கோர்ட்டிலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
தற்போது இருவருக்கும் கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. குழந்தை, தந்தையுடன் வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.






















