Tag: ஆசிரியர்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம்
ஆசிரியர் நீரில் மூழ்கி மரணம் முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) பிற்பகல் 3.30 மணியளவில்.
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார்
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் வரல்ல மொரவக்க, வரல்ல பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.கே.பி. சுரேஷ் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு வந்து முருதவெல நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
நீரில் மூழ்கிய நபர் பின்னர் சுவசெரிய ஆம்புலன்ஸில் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சடலம் வலஸ்முல்ல மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்
பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர்
பற்றாக்குறைக்கு தீர்வு ஆசிரியர் ,சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.
உயர் கல்வி
உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர், டிஜிட்டல் கல்வி நிலை மாற்றத்தை (வகுப்புகள் 6-13) மேற்பார்வையிட
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பணிக்குழுவுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்துகளை வெளியிட்டார்.
உரிய சவால்களை எதிர்கொண்டு தேவையான கொள்கைகளை செயற்படுத்து கல்வித்துறையில் டிஜிட்டல் நிலை மாற்றத்தை ஆரம்பித்தல் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ,
தேசிய மற்றும் மாகாண பாடசாலை
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போது உள்ள 42,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை அவசரமாக தீர்க்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, தற்போதுள்ள வளங்களை திறம்பட பயன்படுத்தி கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக அடுத்த ஆறு
மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைமைகளை அறிமுகப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த பணிக்குழுவின் முதன்மை நோக்கங்களில், மாற்றுத்திறனாளி சமுதாயம் உட்பட அனைத்துப் பாடசாலைகளுக்கும் வசதிகளின் சமமான
விநியோகத்தை உறுதி செய்வது அடங்கும். இந்த இலக்கை அடைவதற்கு வலுவான, பல்துறை பணிக்குழு அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது பணிக்குழு அதிகாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதோடு பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.
இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.
தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .
இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.
இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.
ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர்
ஆசிரியைக்கு தாக்குதல் நடத்திய ஆசிரியர் ,எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (7) ஆசிரியர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை
எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்
இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றை (8) நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்
யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா
யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா
யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா ,பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் .
உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது .
ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????
மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது
அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார்.
பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர்.
தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள்.
ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார்.
பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும்
சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அதிபர்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது ,க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவினர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் வகுப்பு ஆசிரியர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Featured
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை
மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில்,
அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.
ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையில், எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது
நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். 05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தான் தமது நேரத்தை செலவிடுகிறார்கள்.
அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது.
அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.
இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது.
எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது.
உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.
இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.
எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம்.
அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும்
. இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது. அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை
ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை
தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு
போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,
அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,
இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்
வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும்
டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 03 ஆம் வகுப்பு 1 ( அ ) தரத்திற்கும் , டிப்ளோமாதாரிகளை 03 ஆம் வகுப்பு 1 ( இ ) தரத்திற்கும் சேர்த்துக் கொள்வதற்காக கல்வி வலய
மட்டத்தில் ஆட்சேர்கும் பொருட்டு ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவிக்கு ஆசிரியர் புரிந்த செயல்
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று
(08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




























