Posted in இலங்கை செய்திகள்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

யாழில் வாலிபன் பரிதாப மரணம்

இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற ஊந்துருளி விபத்தில்

சிக்கி 22 வயதுடைய வாலிபர் பலியாகியுள்ளார்


மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

நாள் தோறும் இலங்கையில் இவ்வாறான விபத்துக்களில் நான்கிற்கு மேற்பட்டவர்கள்

பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

    இலங்கையில் அதிகரிக்க படவுள்ள எரிபொருள் விலை

    இலங்கையில் தொடர்நது நாள் தோறும் அத்தியாவசிய பொருட்கள் விலைகள்

    அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளன ,அவ்விதம் தற்போது எரிபொருளின் விலையும்

    அதிகரிக்க யோசனைகள் முன்வைக்க பட்டுள்ளன

    ஆளும் அரசின் கண்மூடித்தனமான செயல்பாடுகளினால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்

      கள்ள மின்சாரத்தில் தாக்குண்டு இருவர் மரணம் -சோகத்தில் கிராமம்

      இலங்கை இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் விவசாய நிலமொன்றில் பயன்படுத்த

      பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர்

      இவர்கள் மரணம் தொடர்பில் காவல்துறையினர் தொடர் விசாரணைகளை நடத்தி

      வருகின்றனர் ,அனுமதி இன்றி இவ்வாறு


      மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிப்பு

        யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிப்பு

        புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு

        பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில்

        ஒரு பாராளுமன்ற ஆசனம் ​அதிகரிக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்

          காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்

          காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.

          குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

          படகு பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.

          மேற்படி படகு இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.

          இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது

          பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.

          அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.

          படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

          வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என படகு பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

          எனவே, படகு பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்

            யாழில் 10 பேரை கடித்த விசர் நாய்

            யாழ். நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டித்துள்ளது.

            யாழ். நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று

            மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.

            அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.

            சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான

            நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

            குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

              சுவிசில் இருந்து இலங்கை வந்தவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

              கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத

              சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.

              சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

              அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றனர். இதன்போது, பெறுமதியான தங்க நகைகள், சேலைகளை

              அலுமாரிக்குள் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளனர். மாலையில் வீடு திரும்பினர்.

              அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடிய போது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

              இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

                இராணுவ பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

                இலங்கை மோதர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர்

                இணைந்து நடத்திய தேடுதலின் பொழுது பாதாள உலக குழுவை சேர்ந்த நபர் ஒருவர்

                சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

                இவர் பல கடத்தல் ,கொலை மற்றும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என

                தெரிவிக்க பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்

                  விபத்தில் சிக்கி ஆறுபேர் மரணம்

                  நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                  பன்னல – கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  நேற்று (09) கிரியுல்லயிலிருந்து பன்னல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த பஸ்ஸைக் கடக்கும்போது எதிர்திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியுள்ளது.

                  விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சந்தலங்காவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளனர்.

                  உயிரிழந்தவர் போபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  இதேவேளை, கிரியன்கல்லிய – அதியாகம வீதியில் அக்கரவெல்லிய கறுப்புப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  நேற்று (09) பிற்பகல் துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                  விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

                  உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பத்துலுஓயா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                  இதேவேளை நேற்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 78 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  நெடுங்கேணி நகரிலிருந்து புளியங்குளம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                  அத்துடன் நாரம்மலயிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது மோதியதில் மஹவிலச்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

                  இதேவேளை, பெரகல – ஹாலிஎல வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

                  இதேவேளை, கல்நேவ – தம்புத்தேகம வீதியில் புல்னேவ சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

                    Posted in Uncategorized

                    பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்

                    இலங்கையில் இருந்து வந்த பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம்

                    பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                    எனினும் இதில் எவ்விதமான மாற்றம் ஏற்படுத்த பட்டுள்ளது என்பது தொடபில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை

                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரியா பறந்த மைத்திரி

                      கொரியா பறந்த மைத்திரி

                      முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

                      தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.

                      முன்னாள் ஜனாதிபதியுடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்..

                        Posted in Uncategorized

                        மகன் மரணம் – தாய், தந்தை கைது

                        மகன் மரணம் – தாய், தந்தை கைது

                        10 வயதான சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், அச்சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                        அச்சிறுவனின் சடலம், நீர்​கொழும்பு, படல்கம ஆண்டிபொலவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

                        அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக, கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ்வீட்டின் அறையொன்றுக்குள் இருந்து சிறுவனின் சடலம் நேற்று முன்தினம் (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.

                        தொண்டையில் சளி சிக்கியமையால், அச்சிறுவன் கடந்த 7ஆம் திகதியன்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.

                        அந்த நோயை சுகப்படுத்துவதற்காக அவருடைய பெற்றோர், தாங்கள் நம்பும் சமயத்தின் அடிப்படையில் தியானம் செய்துள்ளனர்.

                        அந்த தியானத்தின் ​போதே சிறுவன் மரணமடைந்துள்ளார். எனினும், அவரை உயிர்பிப்பதற்காக, தொடர்ச்சியாக தியானம் செய்துள்ளனர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

                        அவரை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே தாய், தந்​தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                        இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .

                          விளையாட்டு துப்பாக்கி தூக்கியவர் பதவியை இராஜினாமா செய்தார் .

                          ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

                          இவர், ஐக்கிய தேசியக் கட்சியைச் ​சேர்ந்த குழுவொன்று, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச

                          விமான நிலையத்தை 2014 ஆம் ஆண்டு பார்வையிட சென்றிருந்த வேளையில்,

                          கைத்துப்பாக்கியை காண்பித்து அக்குழுவினர் அச்சுறுத்தியிருந்தார்.

                          அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் ஏந்திவந்தது கைத்துப்பாக்கி அல்ல, விளையாட்டுத் துப்பாகியென அவர் தெரிவித்திருந்தார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்

                            யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்

                            சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா

                            படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும்

                            சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

                            இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய

                            512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            குற்றவியல் சட்டத்தில் திருத்தம்

                            குற்றவியல் சட்டத்தில் திருத்தம்

                            குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a

                            pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் குறிப்பிட்டார்.

                            பாராளுமன்றத்தில் நேற்று (09) நீதித் துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

                            நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுப்படும் வகையிலும் நீதித்துறையில் சில திருத்தங்களை கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.

                            வழக்குகள் பல வருட கால தாமதமாவதால் அதனைத் தடுப்பதற்கு மாற்று வழிகள் அவசியமென்றும் தெரிவித்த அவர் மக்கள் சட்டத்தில் மூலம் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

                            சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வழக்கு 20 வருட காலம் நடைபெற்றது. அதன் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது.பாதிக்கப்பட்டவர் இளம் வயதை எட்டியபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தாமதங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

                            சில வழக்குகள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. சில வழக்குகள் 50 வருடங்களுக்கு மேல் தொடர்கின்றன இதற்கு மாற்று வழி அவசியம்.இந்தத் திருத்தங்களை முன்வைப்பதற்கு முன்பாக நான் சட்டத்தரணிகளுடன்

                            கலந்துரையாடினேன்.சபையிலும் அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்களென்ற நம்பிக்கை உண்டு. சில சட்டத்தரணிகள் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளார்கள் என்ற தவறான கருத்துக்களும் சமூகத்தில்

                            நிலவுகின்றன. அவ்வாறு விரைவுபடுத்தினால் அவர்களுக்கான தொழில் இருக்காதென்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறானது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்

                              Posted in Uncategorized

                              ஒருவர் குத்திக் கொலை

                              ஒருவர் குத்திக் கொலை

                              கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

                              நேற்று (08) காலை லக்ஷ்மிபர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அங்கிருந்தவர் மற்றும் இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

                              வாக்குவாதம் முற்றியதை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                              காயமடைந்த மூவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

                              ஏனைய இருவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                              உயிரிழந்தவர் கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                              கம்பஹா பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

                              சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                              கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்

                              யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்

                              வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

                              யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் இதை தெரிவித்துள்ளார்.

                              நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர்

                              பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார்.

                              Posted in Uncategorized

                              12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

                              12 வயது சிறுமி மாயம்- தேடும் பொலிஸ்

                              சகல பிள்ளைகளும் வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது, 12 வயதான சிறுமியொருவர் காணாமற் போய்விட்டார் என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ்

                              நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

                              கம்பளை நில்ஓய காரியாலய சந்திப் பிரதேசத்தில் வசிப்பிடமாகக் கொண்ட யோகராஜா கலைவாணி என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார். இவர், பாடசாலை மாணவியாவார்.

                              சின்ன அம்மாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போதே, இவ்வாறு காணாமற் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

                              சிறுமியின் தந்தையான கதிர்வேல் யோகராஜா, கண்டி பொதுச் சந்தையில் கடமையாற்றுகின்​றார், தாய், தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்குச் சென்றிருந்துள்ளார்.

                              அதனால், அவர்களின் பிள்ளைகள் மூவரும், சின்ன அம்மாவின் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

                              சின்ன அம்மாவின் பிள்ளைகள் இருவரும், இந்த சிறுவர்கள் மூவரும், இணைந்து ​விளையாடி கொண்டிருந்துள்ளனர். அவ்வாறு விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளிடம், பாடம் கற்கவேண்டுமென சின்ன அம்மா எச்சரித்துள்ளார்.

                              இவ்வாறான நிலையில், கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே, பிள்ளை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

                              கிராமத்தவர்கள் அனைவரும் இணைந்து அருகிலிருக்கும் வீடுகள் மற்றும் பிரதேசங்கள், பற்றைக்காடுகளில் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்காமையால், சின்ன அம்மாவான பீ. நா​கேஸ்வரி, சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                              விரைந்து செயற்பட்ட ​பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். நேற்று (08) வரையிலும் அச்சிறுமி தொடர்பில் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

                              பொலிஸ் நாய், கிராமத்திலிருந்து பிரதான வீதி வரையிலும் வந்து, நின்றுக்கொண்டது. இதனால், பொலிஸார் தமது விசாரணைகளை திசை திருப்பிவிட்டுள்ளனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை

                                கடற்பரப்புகளில் பலத்த காற்று-மக்களுக்கு எச்சரிக்கை

                                இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலைமற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

                                அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                2022 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

                                மழை நிலைமை:

                                காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                காற்று :

                                நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாககொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு அவ்வப்போது 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                கடல் நிலை:

                                காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்

                                நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

                                இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்

                                இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்

                                இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.

                                தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

                                முன்பதாக

                                இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

                                இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது.

                                மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                இதனிடையே

                                இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் முன்பாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

                                போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது