Tag: srilanka
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி
புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று (8) இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
கிழக்கில் புதிய அமைச்சர்கள் நியமனம்
பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு அமைவாக (07) மாகாண
அமைச்சுக்களின் செயலாளர்கள் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், அமைச்சின் கீழுள்ள
திணைக்களங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய
கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக், சிறுவர் நன்நடத்தை திணைக்கள மாகாணப் ஆணையாளர்
(திருமதி) ஆர்.றிஸ்வானி, சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.மதிவண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சின் செயலாளராக (திருமதி) கலாமதி பத்மராஜா தனது அலுவலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள்,தி ணைக்களங்களின் பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண (ஆளணி மற்றும் பயிற்சி) பிரதி பிரதம செயலாளராக (திருமதி) ஆர்.யூ.ஜலீல் தமது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான ஏ.மன்சூர் தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்கா சர்வ மத சமய அனுஷ்டானங்களுடன் தமது அமைச்சில் கடமைகளை சுபநேரத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார் மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.கோபாலரத்தினம் ஆகியோர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாண ஆணையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
5000 ரூபா விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும், ஓய்வூதியம்
பெறுவோருக்குமான ஐந்து ஆயிரம் ரூபா (5000) விசேட கொடுப்பனவு ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்மாத ஓய்வூதியத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான விசேட கொடுப்பனவு நிலுவை பெப்ரவரி மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஓய்வூதிய
திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தில் ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரினதும்
ஓய்வூதிய பற்றுச்சீட்டில் தற்போது இதனை பார்வையிட முடியும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் அறிவித்துள்ளார்.
புலம்பெயர் ஓய்வூதியம் பெறுவோர் தவிர அனைத்து அரச ஓய்வூதியம் பெறுவோரும் இக் கொடுப்பனவை பெற உரித்துடையவர்களாவர்.
இந்த கொடுப்பனவின் மூலம் சுமார் ஆறு இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் நன்மை அடைவர் என்றும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் மேலும் தெரிவித்தார்.
16 தமிழக மீனவர்கள் கைது.
16 தமிழக மீனவர்கள் கைது.
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் நீரியல்வள திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 தடுப்பூசிகளையும் பெற்றால் மட்டுமே அனுமதி
3 தடுப்பூசிகளையும் பெற்றால் மட்டுமே அனுமதி
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை
கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார
அமைச்சு எடுக்க வேண்டும். அதற்கமைய 3 தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையை பொது மக்கள் பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பில் எங்களுக்கு கடிதம் மூலம் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
எனினும் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சுற்றரிக்கை வெளியிட்டு எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்கள்.
அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் பொதுப் போக்குவரத்தில் தடுப்பூசி அட்டையை
சேகரிக்க ஆலோசனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
வெட்டு காயங்களுடன் நபர் மீட்பு – அதிர்ச்சியில் மக்கள்
வெட்டு காயங்களுடன் நபர் மீட்பு – அதிர்ச்சியில் மக்கள்
செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்
குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07.02) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (06.02) மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற இளம் குடும்பஸ்தர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுப்பிரமணியம் கண்ணன் (வயது 33) என்ற இளம் குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சகோதரனை கோடரியால் வெட்டி கொன்ற கோரம்
சகோதரனை கோடரியால் வெட்டி கொன்ற கோரம்
இலங்கை Panamura. பகுதியில் உடன் பிறந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் சண்டை கொலையில் முடிவடைந்துள்ளது
ஒருவர் வளர்த்த நாயானது மறுவரது சிசுவின் காலை கடித்துள்ளது ,அதனால் எழுந்த வாய் சண்டை
முற்றி கை கோடாரியால் சகோதரனை வெட்டி கொன்றுள்ள செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கொலை குற்ற செயலில் 27 வயது சகோதரன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
- காசாவில் பாலஸ்தீனிய குடிமைப் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன
- போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தை
- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்தியா பறந்த பீரிஸ் முக்கிய பேச்சு- பேச போவது என்ன ..?
இந்தியா பறந்த பீரிஸ் முக்கிய பேச்சு- பேச போவது என்ன ..?
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் இந்தியாவுக்கு அரசமுறை
பயணத்தை மேற்கொண்டு சென்றுள்ளார் ,அங்கு தங்கி இருக்கும் கால
பகுதியில் வெளி நாட்டு மந்திரி மற்றும் முக்கிய நபர்களை சந்தித்த பேச உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆனால் எது விடயம் தொடர்பாக பேச படப் போகிறது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை
இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு
இலங்கைவரும் வெளிநாட்டவருக்கு 7,500 கொரனோ காப்புறுதி – கொள்ளையடிக்கும் கோட்டா அரசு
இலங்கை வரும் உல்லாச பயணிகள் நாட்டில் தங்கி இருக்கும் கால பகுதியில் கொரனோ
காப்புறுதியை பெற்று கொள்வது அவசியாமாக்க பட்டுள்ளது
இதன் பிரகாரம் ஒவ்வொரு வெளிநாட்டவரும் 7500 அமெரிக்கா டொலர் செலுத்தி இந்த காப்புறுதியை
பெற்று கொள்வது சட்டமாக பட்டுள்ளது
வீழ்ந்து போன பொருளாதாரத்தை இதன் ஊடக கட்டி எழுப்ப சிங்கள அரசு கவனம் செலுத்தி வருகின்றமை தெரிந்ததே
எரிபொருள் விலை ஏறினாலும் – பஸ் கட்டணம் எகிறதாம்
எரிபொருள் விலை ஏறினாலும் – பஸ் கட்டணம் எகிறதாம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் நாள் தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாக
அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளன
இவ்வாறான கால பகுதியில் பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகள் கட்டணம் அதிகரிக்க படமாட்டாது என போக்குவரத்து அமைச்சு குத்துக்கரணம் அடித்துள்ளது
தொடரும் மர்ம கொலைகள் – பீதியில் மக்கள்
தொடரும் மர்ம கொலைகள் – பீதியில் மக்கள்
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில்
கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் நேற்று (06) மாலை பொதுமக்களினால் இனங்காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து
குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை உக்வத்தை விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கொலையா அல்லது இயற்கை மரணமா என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கை கடல் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது ,இவ்விதம்
இலங்கை சுதந்திர தின நாளில் வெள்ளைவத்தை பகுதி கடலில் காணாமல் போன் இருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் மாலைதீவை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவை திட்டமிட்ட கொலைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்
இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்
மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.
தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.
சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.
2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது
வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்
வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்
கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறைவாகவும்,
கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு
புஸ்ஸல்லாவ நிவ்மெல்போட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு பிரதம குருக்கள் ஞானவரத
ஐயப்பன் தேவஸ்தான பீடாதிபதி சிவஸ்ரீ க.மஹேஸ்வர குருக்கள் அவர்களின் தலைமையில் (05.01.2021) நடைபெற்றது
இந் தெய்வீக நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் கலந்துக் கொண்டு ஸ்ரீ ஞானசக்தி விநாயகருக்கு எண்ணெய் சாய்வித்தனர்.



கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்
கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்
காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் ஒருவனை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டவனை முன்று
தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது
இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாhஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச்
சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் இதில் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை
கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதுடன்
இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.
றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- தொடரும் மர்ம கொலைகள்
நிகவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தம்மிக்க பத்திரன (வயது – 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்து சேகரிக்கும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் தமிழரசு கட்சியில் வாலிபர்
முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தனராஜ் தலைமையில் கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை
தவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான டிவனியாவின் மகளும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஒப்பமிட்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர்
வேழமாலிகிதன் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் தாக்கம் தொடர்பில் உரையாற்றியிருந்தனர்.
கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி
கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்கவும்- தமிழக அரசு அதிரடி
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள்
பங்கேற்க வழிவகை செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர்,
மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர்
சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.















