Posted in Uncategorized

சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

சிறந்த பொருளாதாரநிபுணர் என்ற பெருமை விருதை தட்டி சென்ற இலங்கை பெண்

இலங்கையில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் Ermila Jayasuriya என்ற பெண்மணி

நிறுவனம் ஒன்றின் முதன்மை நிறைவேற்று அதிகாரியாக திகழ்ந்து வருகிறார் ,இவரினால் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது

இதற்காக அவருக்கு பிரிட்டனின் சிறந்த பொருளாதார மேதை என்கின்ற பட்டம் வழங்க பட்டு கவுரவிக்க பட்டுளளார்

சிங்களவராக இருந்தாலும் நமது இலங்கை பெண்மணி என்பதில் இலங்கையர்கள் மகிழ்ச்சி அடைவதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்

சிங்கள மக்களுடன் தமிழர்களுக்கு மோதல் இல்லை என்பதும் ஆளும்


ஆட்சியர்கள் இனவாத பரப்பாலே தமிழர்களுக்கு எதிரான ஒன்றாக விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in சினிமா

    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

    .ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா

    இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ
    பிரபு தேவா


    ஐஸ்வர்யா-தனுஷ் திருமணம் உறவு முறிந்த பிறகு, ஐஸ்வர்யா தனது இயக்குனர் வேலையில் ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அதன்படி ஐஸ்வர்யா தனது ‘பயணி’ மியூஸிக் ஆல்பம் வீடியோ வேலைகளை ஆரம்பித்துள்ளதாக

    அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கான பணிகள் ஹைதராபாத்தில் அவர் தொடங்கியிருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில்

    இப்பாடல் உருவாகியுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி என இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாராட்டி வருகின்றனர்.


    அந்த வகையில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வாழ்த்தி, நெகிழ்ந்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்
    . இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

      Posted in இலங்கை செய்திகள்

      வீடு புகுந்த திருடன் – மடக்கிய போலிஸ்

      கல்முனையில் வீடு புகுந்து திருட்டில் ஈடபட்ட நபர் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

      இந்த சம்பவத்திற்கு, கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

      கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

      இதன்போது, குறித்த திருடன், மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடியுள்ளார்.

      சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

      சிசிடிவி கெமராவின் உதவியுடன்,குறித்த நபர் நற்பிட்டிமுனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

      கல்முனை தமிழ்ப் பிரதேசத்தில் 24 மணிநேரத்துள் திருடனைக் கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவையாகும்.

      Posted in Uncategorized

      பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

      பாண்,சாப்பாட்டு பொதி ,எரிபொருள் விலை திடீர் அதிகரிப்பு

      .450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10


      ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

      எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும்,


      கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

        Posted in இலங்கை செய்திகள்

        விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

        .விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

        இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால்

        அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

        அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக

        சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

        அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

          மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

          ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான

          நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

          எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10)

          இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார்.

          அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக

          அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.

          1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால், பிராந்திய மற்றும் சர்வதேச விமானங்கள் செயல்படவில்லை

          நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            புலிகள் ஆவணங்கள் மீட்பு

            புலிகள் ஆவணங்கள் மீட்பு

            திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான

            ஆவணங்கள் சில, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

            இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

            இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம்

            செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

            காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.

            இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

              பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்

              அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்

              மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

              எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.

              ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை

              கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

              இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்

              பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.

              இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது

                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் இளம் பெண் கைது

                யாழில் இளம் பெண் கைது

                யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                குறித்த யுவதி யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட போலி அடையாள அட்டையை காண்பித்து திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்துள்ளார்.

                அவரது நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் கொண்டமையால் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

                இத்தகவலின் பிரகாரம் வீட்டுக்கு சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கியிருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                அதன்போது யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனையும் அது போலியான அடையாள அட்டை என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

                இதனையடுத்து யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

                  Posted in Uncategorized

                  மாட்டு வண்டியில் பயணிக்கும் அரசியல்வாதிகள்

                  நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட

                  பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச

                  சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்றுள்ளனர்.

                  நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

                  முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில்

                  கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளர்,
                  உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று நகர்ந்து செல்கின்றனர்

                    Posted in Uncategorized

                    பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

                    பயத்தில் பாராளுமன்றுக்கு வராது தப்பி ஓடிய பசில்

                    நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை. அவர்தான் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், அவருக்குப் பதிலாக வேறு

                    உறுப்பினர்கள் பதில் கூறி வருகின்றனர். நிதி அமைச்சரைச் சபைக்கு வரச் சொல்லுங்கள். இல்லையென்றால் சபாநாயகர் நிதி அமைச்சருக்குக் கட்டளை அனுப்புங்கள்.

                    -இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம், எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

                    நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணியளவில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி.,

                    நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. டிசம்பர் 10ஆம் திகதியே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச சபையில் உரையாற்றினார். அதன்பின்னர் நாட்டின் நிதி

                    நிலைவரம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தவில்லை.

                    எனவே, நாடாளுமன்றம் வந்து தெளிவுபடுத்துமாறு, நிதி அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிடவேண்டும் – என்றார்

                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு

                      இலங்கையில் 4 மணிநேரம் மின்சாரம் வெட்டு

                      இலங்கையில் இன்று நான்கு மணிநேரம் மின்சார வெட்டு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது

                      நாள் தோறும் பலமணி நேரம் மின்சார வெட்டு இடம்பெற்று வருவதால் மக்கள் ஆளும்

                      ஆட்சியர்கள் மீது கொதிப்பில் உறைந்துள்ளனர்

                        Posted in Uncategorized

                        யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                        யாழில் பஸ் சாரதியின் மூக்கை வெட்டிய நபர்

                        யாழில் தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                        யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நேற்று (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                        பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த தனியார் பேருந்தினை நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வீதியில் வழிமறித்த நபரொருவர், சாரதியின் மூக்கை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளார்.

                        அதனை அடுத்து அங்கு நின்றவர்கள் சாரதியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

                        சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                          துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் உணவுகள் – பணம் இன்றி தவிக்கும் இலங்கை

                          வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2500 கொண்டனர் அடங்கிய உணவு பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் கப்பல்களில் தேங்கி கிடக்கின்றன

                          குறித்த உணவு பொருட்களுக்குரிய பணத்தை இலங்கையால் செலுத்த முடியாத நிலையில் இவை தேங்கி கிடப்பதாக தெரிவிக்க படுகிறது

                          நாட்டை மகிந்த ,கோட்டா குடும்பம் கொள்ளையடித்து வரும் நிலையில் ,இவ்விதம் நாடு கீழ் நிலைக்கு சென்றுள்ளதாக நோக்கர்கள் தெரிவிக்கினற்னர்

                            Posted in Uncategorized

                            யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                            யாழில் -போதையில் தந்தை ரகளை – காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி

                            யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் தந்தை ஒருவர் தினமும் போதையில் வந்து தாயாரை கொடுமை படுத்தி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார் ,

                            இந்த சம்பவத்தை பார்வையிட்ட சிறுமி அதில் இருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ,

                            இவ்விதம் தஞ்சம் அடைந்த 12 வயது சிறுமி நன்னடைத்தை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
                            இப்படியும் சீரழியும் குடும்பங்கள்

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டா மாமியார் மரணம்

                              கோட்டா மாமியார் மரணம்

                              இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் மனைவியின் தயார் அமெரிக்காவில்

                              தனது 89 தாவது வயதில் மரணமாகியுள்ளார்

                              இவரது இறுதி நிகழ்விற்கு கோட்டபாய மனைவி செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது

                                Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                                இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                                இலங்கையில் 68 வயதுடைய யானை மரணம்

                                இலங்கையில் அதிக வயது கூடிய யானை என்ற பெயரை பெற்று விளங்கி வந்த

                                Nadugamuwa Raja என்ற யானை வெள்ளவெறியா பகுதியில் பலியாகியுள்ளது ,இந்த

                                யானையின் உடலை கண்டு தரிசித்து
                                செல்ல மக்கள் முண்டியடித்த வண்ணம் உள்ளனர் ,இது முறைப்படி அடக்கம் செய்ய படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                                  Posted in Uncategorized

                                  ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை

                                  ரசிய இராணுவ ஜெனரல் குண்டு தாக்குதலில் படுகொலை

                                  உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதலில் சிக்கி இரண்டு இராணுவ ஜெனரல்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                                  உக்கிரேன் கூட்டு நாடுகளின் ஆயுத வழங்குதல் தாக்குதலில் ரசிய படைகள் பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன

                                  அதனாலேயே இந்த முக்கிய இரண்டு இராணுவ தாக்குதல் தளபதிகளாக விளங்கிய ஜெனரல்களை இழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                                    செல்பி மோகம் – ஆற்றில் விழுந்த மரணம்

                                    இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி

                                    எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                    இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                    நேற்று (07) மாலை காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

                                    பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்

                                      இலங்கை வந்த 3 எண்ணெய் கப்பல்

                                      இலங்கை கடற்பரப்பிற்கு வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றிற்கான பணம்

                                      செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

                                      இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ மற்றும் தல்தியவத்தை கடற்பரப்பில் சுமார் ஏழு நாட்களாக நங்கூரமிட்டு

                                      நிறுத்தப்பட்டிருந்தன.

                                      இதன்படி, தல்தியவத்தை எரிவாயு நிலையத்திலிருந்து முத்துராஜவெல எரிவாயு

                                      முனையத்திற்கு 2,500 மெற்றிக் தொன் எரிவாயுவை வெளியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                                      எரிவாயுவை ஏற்றி வந்த மற்றுமொரு கப்பலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.