Tag: படகு
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்
படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்
நையீரியாவில் 35 பேரை காவிய படி பயணித்த படகு ஒன்று
திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர்
ஆறு பேர் காப்பாற்ற பட்டனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை சேவை முடக்கம்
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
படகு பாதையின் வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையாலேயே சேவை நிறுத்தப்பட்டுள்ளது என காரணம் கூறப்பட்டுள்ளது.
மேற்படி படகு இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்றது. எனினும், பின்னர் புதிய கேபிள் இணைக்கப்பட்டு அண்மைக்காலமாக தடையின்றி சேவை இடம்பெற்றது.
இரு வெளியிணைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, ஒன்று பழுதடைந்தால் மற்றையதை பயன்படுத்தும் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது
பொருத்தப்பட்டிருந்த ஒரு வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது எனக் கூறி மூன்று தினங்களாக பாதை சேவையில் ஈடுபடாமல் உள்ளது.
அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர்.
படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபை ஒரு வெளியிணைப்பு இயந்திரத்தை மூன்று நாள்களுக்கு திருத்தம் செய்கின்றதா என படகு பாதைப் பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, படகு பாதையின் சீரான சேவைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு
தமிழக காவல்துறையை அலறவிட்ட இலங்கை படகு
தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக திங்கட்கிழமை இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற மெரைன் பொலிசார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மீட்கப்பட்ட பைபர் படகு புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்துள்ளது.
படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட படகை சுங்க துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட படகு டிராக்டர் மூலம் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மர்ம படகு குறித்து இலங்கை பாதுகாப்பு படையினரிடம் விசாரித்த போது,
படகின் பதிவு எண் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் ஆனால் படகு காணாமல் போனதாக மீன் துறை மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு இது வரை எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மர்மமான முறையில் இலங்கை படகு கரை ஒதுங்கியது தனுஸ்கோடி பகுதி மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு
இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதான
இந்திய மீனவர்கள் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்தது
மேற்படி படகுகளை வரும் திங்களில் ஏலம்விட உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்
பிரிட்டனுக்குள் படகுமூலம் நுழைந்த 60 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கால்வாயை கடந்து படகுமூலம் அறுபது சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கென் பகுதியில் நுழைந்துள்ளனர்
ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் பிரிந்த நிலையில் அகதிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது
மேற்படி அகதிகள் நுழைவை தடுக்கபிரிட்டன் பல்வேறு பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்த பொழுதும் அவை பயனளிக்கவில்லை என தெரிவிக்க படுகிறது
படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
ஆப்பிரிக்காவின் காங்கோவில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 160க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
காங்கோவில் சோகம் – படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில், காங்கோ ஆற்றில் சென்று கொண்டிருந்தன. படகுகளில் 200-க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக படகுகள் கவிழ்ந்தன. இதில் படகுகளில் பயணம் செய்த 200-க்கும் அதிகமானோர் நீரில் முழ்கினர்.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 39 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 61 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
பெண்ணை இறக்கிவிட்டு தப்பிய படகு சிக்கியது
இலங்கை பெண்ணை அரிச்சல்முனையிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை தமிழக கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.
அரிச்சல்முனை மணல் திட்டில் நிர்க்கதியாகியிருந்த போது அந்தப் பெண் கடந்த 5 ஆம்
திகதியன்று கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த அப்பெண் முல்லைத்தீவை சேர்ந்தவர் ஆவார்
இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
இதற்கமைய, இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்குள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தார்.
இலங்கை படகிற்காக சுமார் 8 மணி நேரம் காத்திருந்த போதும் படகு வராத நிலையில், நிர்க்கதியாகியிருந்த பெண்ணை தமிழக கரையோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரது வாக்குமூலத்திற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த தமிழக பொலிஸார்
அரிச்சல்முனைக்கு படகை செலுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு
இலங்கை கடலுக்குள் நுழைந்த 40 இந்திய படகுகள் விரட்டியடிப்பு
இலங்கை வட பகுதிக்குள் உள்நுழைந்த இந்தியாவின் நாற்பது மீன்பிடி படகுகளை இலங்கை அரச
கடற்படையினர் விரட்டி அடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது
கொரனோ பரவலை அடுத்து இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் நுழைந்து வருகின்றனர் என்ற குற்ற சாட்டை இலங்கை அரசு முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு
பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்
இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,
சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது
கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்
எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது
இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது
ஆற்றில் கவிழ்ந்த படகு -60 பேர் மரணம் -பலநூறு பேரை காணவில்லை
பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியது – பலநூறு பேரை காணவில்லை – கதறும் உறவுகள் -மிதக்கும் மனித உடல்கள்
கவிழந்த படகு
கொங்கோவில் மக்களை ஏற்றிவாறு ஆறு ஒன்றினை கடந்து சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில்
அதில் பயணித்த சுமார் அறுபது பேர் பலியாகினர் ,மேலும் பலநூறு பேரை காணவில்லை எனஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ,
விபத்திற்கான காரணம்
எழுநூறு பேரை ஏற்றி சென்ற படகே இந்த விபத்தில் சிக்கியது ,அதிக தொகையில் மக்கள் ஏற்றி செல்ல பட்டதே இந்த விபத்திற்கு உரிய காரணம் என கண்டறிய பட்டுள்ளது ,
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர் .
இதுபோல முன்னரும் விபத்துக்கள் ஏற்பட்டது என்பது இங்கே குறிப்பிட தக்கது
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து ,சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எழுபது பேர் சனிக்கிழகை காலை 4.30 மணியளவில் லண்டனுக்குள் உள் நுளைந்துள்ளனர்
ஐந்து படகுகளில் டோவர் பகுதிக்குள் நுழைந்த எழுபது அகதிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட் படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு உள் நுழைந்தவர்களில் ஆண் ,பெண்கள் உள்ளடங்கும் ,கொரனோ
வேளையில் இவ்விதம் அகதிகள் நுழைந்துள்ளதால் அவர்கள் 14 முதல் 21
நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என தெரிவிக்க பட்டுள்ளதுடன்
,அனைவருக்கும் கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வெள்ளிகிழமையும் இவ்வாறு நுழைந்துள்ளார் .கடந்த 24 மணித்தியாலத்தில் 140 அகதிகள் நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன







