Tag: ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்
ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்,இலங்கைக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தார்.
இலங்கை மாத்தள விமான நிலையத்தி வந்தடைந்த ஈரான் கேனாதிபதி இப்ராஹிம் ரைசி.உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பர் என தெரிவிக்க பட்டுள்ளது .
அச்சுறுத்தல் நிலையில் இலங்கை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இக்கால பகுதியில் ,இலங்கை ,வந்தடைந்துள்ள ஈரான் ஜனாதிபதியின் வரவு துணிச்சல் நிறைந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
ஈரானுக்கும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதும் ,பதிலுக்கு ,இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த நிலையில் ,அமெரிக்கா ஐரோப்பா ,இஸ்ரேல் ,எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளார் .
மொசாட் குறியில் ஈரான் ஜனாதிபதி
மொஸாட் குறியில் என்றான் ஜனாதிபதி உள்ள பொழுதும் ,பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் பயணித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது .
இவர் இலங்கையில் மொசாட்டினால் கொலை செய்ய பட கூடிய ஆபத்துக்களு உள்ளதான அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது .
அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அமெரிக்கா ,இஸ்ரேலை தட்டி கேட்கவா முடியும் என்ற நிலையே காணப்படுகிறது .
ஈரான் இலங்கை உறவு
ஈரானுக்கும் சிலாகிக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகிறது .பொருளாதார ரீதியில் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த பொழுது ஈரான் மிக பெரும் ஆதரவை வழங்கி இருந்தது .
விசேட எண்ணெய் கப்பல்களை அனுப்பி வைத்திருந்தது .மேலும் இலங்கை தேயிலையை மாதம் ஒன்றுக்கு ஐந்து மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்கிறது .
இவ்வாறான பொருளாதார ஒப்பந்தங்களில் ஈரானுக்கும் இலக்கைக்கும் நல்லுறவு காணப்படுகிறது .
அவ்வாறான இவ்வேளையில் ,ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்துள்ளது ,மேலும் இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பில் பலத்தை சேர்க்கும் என கருத படுகிறது .
ஜனாதிபதியின் இலக்கை வருகையுடன் இலங்கை மீதான மேற்குலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் ,ஐக்கிய நடுகல் மனித உரிமை அவையில் ,இலங்கை தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயம் தீவிரம் பெறலாம் என படுகிறது .
தமது சொல்லை தட்டையா இலங்கைக்கு ,அவர்கள் புரிந்த தமிழ் இந கொலையை தூசி தட்டி எடுத்தாலும் வியப்பதற்கில்லை எனலாம் .
நான் மோசடி ஏதும் செய்யவில்லை மைத்திரிபால சிறிசேன
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து எவ்வித மோசடியில் ஈடுபடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
இலங்கை அரசியலில் தேர்தல் சூடுபிடிக்கவுள்ள நிலையில்,காட்சிகள் மாற்றமடைந்து வருகின்றன .
அவ்வாறன நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அங்கம் வகிக்கும் பொழுதே நாட்டில் தொடர் குண்டுகள் வெடித்தன .
கொழும்பு தேவாலயங்கள் முதல் குண்டுகள் வெடித்தன .
அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று மைத்திரிபால சிறிசேன பதவி விலகவில்லை .
மாறாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசும் பொழுதே மைத்திரிபால சிறிசேன நான் மோசடியில் ஈடுபடவில்லை என தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் .
தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
தமிழ் மக்களுக்கு என ஜனாதிபதி வேட்பாளர் தேவையில்லை
ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறக்கப்பட்ட மேம்பாலம்
கொழும்பு கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தையை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் இன்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் விரைவில் முழுமைபடுத்தப்படவுள்ளதுடன் அதற்கான மொத்தச் செலவு 5,278,081,272.43 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
“இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. கட்டாயமாக நாட்டு மக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு அப்பாவி மக்களின்உயிர்களே அழிக்கப்பட்டன என்றார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி
அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 400 கோடி ரூபா செலவில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளைச் சென்று பார்வையிட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்ஷ மீண்டும் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (21) நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்றும் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வேட்பாளர்
ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வேட்பாளர்
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (15) இடம்பெற்ற வைபவமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
மக்கள் போராட்டத்தின் எதிரொலி நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல் மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண.
கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ‘மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்’ (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ‘இடைவிடாத போராட்டத்தின் உண்மைக் கதை’, ‘சிங்கள மருத்துவத்தின் மறைவு’, ‘நைடிங்கேள் குணாதிசயம்’, ‘ஜெனிவா நெருக்கடியின் எதிரொலிகள்’, ‘ரன் ஹிய’ மற்றும் ‘இருளுக்கு வெளியே’ ஆகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
கெடமான்னே குணானந்த தேரர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நூல் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்
ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி
வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி
எதிர்காலத்தில் வெட் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெட் வரி விலக்களிப்பு தொடர்பில் வௌிப்படுத்திய ஜனாதிபதி
இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் என்றார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் பெஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டத்தைப் பாராட்டினார்.
போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
அத்துடன், பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசலை அண்டி நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார்.
இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளதோடு, ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாகப் பயன்படுத்தும் ஏனைய நாடுகளைப் பாதிக்கும் பொதுவான அபிலாஷைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்து சமுத்திர மாநாடு 2016 இல் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவுஸ்திரேலியா பறந்தார்
“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்த உள்ளார்.
இம்முறை மாநாட்டில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் வரைபடம் ஒன்றும் தயாரிக்கப்படும். மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தும் பல உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இணைந்து கொள்ளவுள்ளதோடு, “எங்கள் நீல எதிர்காலம் : இந்து சமுத்திர வளங்களின் இருப்பைப் பாதுகாப்பதற்கு பிராந்திய தீவு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதெப்படி?” என்ற தலைப்பில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.
7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூர் எஸ்.ராஜரத்தினம் சர்வதேச கல்வி நிலையம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பெர்த்-அமெரிக்கா ஆசியா மையம் ஆகியவை இதற்கு பங்களிக்கின்றன.
2ஆவது இந்து சமுத்திர மாநாடு 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரும், ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையில் நடைபெற்றது நினைவூட்டத்தக்கது.
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி
சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா.
பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று ஹெலிகொப்டரில் பயணம் மேற்கொண்டார்.
அந்த ஹெலிகொப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.
லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 74 வயதான சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார்.
ஹெலிகொப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. “,
அமெரிக்காவின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு
அமெரிக்காவின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலநிலை மாற்றம்
தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் இதன் போது உடனிருந்தார்
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
காலநிலை செழுமைத் திட்டங்கள் என்பது காலநிலைப் பாதுகாப்பற்ற உலகில் செழிப்பிற்கான ஒரு மூலோபாயம் மாத்திரமல்ல, பூஜ்ஜிய காபன் உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதிப்புக்குள்ளாக்கக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 16 ஆம் திகதி உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அண்மையில் டுபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில், காலநிலை பாதிப்புக்குள்ளாகும் வளர்ந்து வரும் 20 நாடுகள் தங்களின் காலநிலை மீள்திறன் திட்டங்களை வெளியிட்டன.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி நிலை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகப் பொருளாதார நிலை மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக நிதி வசதிகள் அதிகம் தேவைப்படும் நாடுகளுக்கு அதனை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, காலநிலை செழுமைத் திட்டத்தில் பங்குதாரர்களாகி, நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு முன்னேற்றகரமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளிடமும், தனியார் துறையினர், சர்வதேச நிதிச் சமூகம் ஆகியவற்றிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,
காலநிலை பாதிப்புக்குள்ளாகக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தற்போதைய பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் எனக்கு அழைப்பு விடுத்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
காலநிலை செயற்பாடுகள் மூலம் வளமான முன்னேற்றத்தை அடைவதற்கான எங்கள் கூட்டு வேண்டுகோள், புத்தாக்க தீர்வுகள், நிலையான உலகத்திற்கான நோக்காக உள்ளது.
காலநிலை மாற்றங்களில் ஏற்படும் சிக்கலான ஏற்றத்தாழ்வுகளை நாம் அனைவரும் அறிவோம். உலகளாவிய காபன் வெளியேற்றத்திற்கு சிறிதளவு கூட பங்களிக்காத உலகளாவிய தெற்கில் பாதிக்கப்படக்கூடிய வளர்ந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்கொள்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, சமநிலையை மீட்டெடுப்பதற்கான பலதரப்பு முயற்சிகளின் அர்ப்பணிப்பு அதிகமாக உள்ள போதும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளன.
டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில், காலநிலை நீதி தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் தான் இலங்கையினால் வறண்ட வலய முன்முயற்சி முன்வைக்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது வறண்ட வலயத்தில் முக்கியமான காலநிலை வளங்களை நிலைநிறுத்துவதில் தனியார் முதலீட்டிற்கு ஒரு உத்வேகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் நமது காடுகள், சதுப்புநிலங்கள், சமுத்திரங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் என்பன உள்ளடங்குகின்றன. அத்தகைய முதலீட்டுக்கான வழிகளை அடையாளம் காண, வளர்ந்து வரும் நாடுகள் வலுவான திட்டங்களையும் மூலதனத்தையும் வழங்குவதற்காக முதலீட்டாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும்.
காலநிலை செழுமைத் திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை சவாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஊடாக நமது காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை அடைய முடிவதோடு இலங்கையர்களுக்கு நிலையான செழிப்பை அடைய முடியும்.
இலங்கை காலநிலை திட்டத்தின் ஊடாக தொழில்துறை மற்றும் விநியோக வலயமைப்பை பாதுகாப்பதற்கான வளங்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகள் உள்ளிட்ட தீர்மானமிக்க துறைகளின் முதலீடுகளுக்கு அவசியமான திட்டங்களை உருவாக்கி வருகின்றது.
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இலக்குகளை நோக்கிய தலையீடுகள், தேசிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்குள் வலுசக்தி ஏற்றுமதியாளராக மாறுவதோடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் உள்நாட்டு வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும், காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர், இலங்கையின் வலுசக்தி உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, 2040 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு தேவை 100% ஐ விடவும் அதிகரிக்க கூடுமென கருதப்படுகிறது. அத்தோடு, திட்டங்களில் குறைந்த கார்பன்-செறிவும் அதிக உற்பத்தியும் எதிர்பார்க்கப்படுவதோடு விவசாய திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின் திட்டங்கள் ஆகியவை அடங்கும். இதனூடாக கிராமிய பொருளாதாரம் மற்றும் பெறுமதியான உள்நாட்டு உற்பத்தி வலையமைப்பொன்றை இணைக்கும் முதலீடுகள் உறுதி செய்யப்படும்.
மேற்படி காலநிலை செழுமைத் திட்டத்தின் முதலீட்டு வாய்ப்புக்களை அடைந்துகொள்ள நாம் அர்பணிப்புடன் செயற்படுவதோடு, நிதி வசதிகளை ஏற்படுத்தி முதலீடு செய்யக்கூடிய திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தல் உள்ளிட்ட தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எவ்வாறாயினும், எதிர்பார்ப்புடன் கூடிய இந்த திட்டத்தின் வாயிலாக தொழில் உருவாக்கத்திற்கான பயிற்சிகள், திறன், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான முதலீடுகளை கோருகிறோம். நிலையானதும் காலநிலை பாதுகாப்புக்கான மாற்றத்திற்குள் அதிகளவான பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு இதனூடாக கிடைக்கும்.
பாதிக்கப்படக்கூடிய 20 தரப்புக்களின் குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் (V20) காலநிலை செழுமைத் திட்டம், பாதுகாப்பற்ற உலகில் செழிப்புடன் வாழ்வதற்கான மூலோபாய வழிமுறையாக மாத்திரமின்றி, பூஜ்ஜிய காபன் உலகின் வெற்றியாளர்களாக எம்மை அடையாளப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலாகும்.
எமது செல்வந்த மற்றும் பிரதான பொருளாதார உரிமையாளர்கள் வசமாக காணப்படும் வளங்கள் எம்மிடத்தில் இல்லை. காலநிலை அனர்த்தங்களின் தாக்கம் காரணமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிதி வாய்ப்புக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. அதனால் உலக பொருளாதார பின்னணியில் உயர்வடைந்து செல்லும் கடன் சுமைக்கு மத்தியில் அதிகமான நிதி தேவை உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அதன்படி காலநிலை செழுமைத் திட்டங்களின் பங்குதாரர்களாக முன்வந்து, நிலையானதும், செழிப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்கிகொள்ள எமக்கு உதவுமாறு அபிவிருத்தி பங்குதாரர்கள், தனியார் துறையினர் மற்றும் சர்வதேச நிதிச் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார் மஹிந்த பதில்
மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார் மஹிந்த பதில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேட்பாளரை நிறுத்துவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மக்களின் விருப்பங்களுக்கு கவனம் செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி
சுவிட்சர்லாந்து பறந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை (13) நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்
ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.
அதன் பின்னர் இளவரசி ஆனி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆனியும் பதிவைச் செய்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது



























