Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை கத்தியால் குத்திய கணவன்

மனைவியை கத்தியால் குத்திய கணவன்

குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,

தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது

    போலீசார் வேட்டை – 36 பேர் திடீர் கைது

    தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று (26) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 29 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    குறித்த குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 81,353 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    இதேவேளை மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 நுழையும் மற்றும்

    வெளியேறும் சோதனைச் சாவடிகளில் பயணித்த 2,244 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    அத்துடன், மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 272 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

      Posted in Uncategorized

      பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

      பெரும் போதைவஸ்து கடத்தல் மன்னன் கைது

      கொலம்பியாவில் தேடப்பட்டு வந்த முதல்தார போதைவஸ்து கடத்தல் மன்னன் போலீசாரின் திடீர் சுற்றிவளைப்பில் கைது செய்ய பட்டுள்ளார்
      59 வயதுடைய இவர் அமெரிக்கா உளவு த் துறையாலும் தேட பட்டு வந்தவர்

      பல மில்லியன் சொத்துக்களுக்கு இவர் அதிபதியாக உள்ளவர

      அவ்வாறான அரசியல் ,ஆள்,பண பலம் படைத்த நபரே போலீசாரினால் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        இலங்கை காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது


        காவல்துறை விசேட சோதனை – 948 பேர் கைது

        மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

          Posted in Uncategorized

          மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

          மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று

          மதுபானம் அருந்தும் இடங்களிலேயே, அதிகம் கொரோனா தொற்று பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

          எனவே, இவ்வாறான இடங்களில் ஒன்றுக் கூடுவதை, கூடியளவு தவிர்த்துக்கொள்ளுவது அவசியம் என்றார்.

          மேலும் புதிய தொற்று நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு, சுகாதார அமைச்சு பாரிய அவதானத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்த அவர், தடுப்பூசிக்கு அப்பாற்பட்ட தொற்று பிரழ்வு , நாட்டுக்குள் நுழைய வாய்ப்புள்ளதென்றார்.

            Posted in Uncategorized

            காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

            காரில் சென்று திருடி வந்த திருடன் கைது

            இரவு வேளைகளில் காரில் சென்று, வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், காருடன் மொரட்டுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

            மொரட்டுவ- கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

            இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் மொரட்டுவ பிரதேசத்தில் 5 வீடுகளும் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீடும் உடைக்கப்பட்டு தங்க நகைகள், வெளிநாட்டு நாணயங்கள், மதுபானம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

            இவ்வாறு திருடும் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்

              யாழில் -பிசுங்காண் போத்தல்களுடன் வீடு புகுந்து அட்டூழியம்

              கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பிசுங்காண் போத்தல்களுடன் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

              அத்துடன், வன்முறையில் ஈடுபட்டோர் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கரவண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

              இந்த வன்முறைச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

              முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது.

              இந்த சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

              வீட்டு ஜன்னல்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்தின் கண்ணாடி என்பன அடித்துடைத்து சேதம் விளைவிக்கப்பட்டன.

              பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஒன்று ஏற்பட்டிருந்தது. இதற்கு பழிவாங்குவேன் என சபதம் போட்ட அந்த இளைஞன் சிலரை அழைத்து இந்த அடாவடியில் ஈடுபட வைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

              சம்பவத்துடன் தொடர்புடைய நீர்வேலியைச் சேர்ந்த இருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் இன்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர்.

              அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாடகைக்கு அமர்த்திச் சென்ற முச்சக்கர வண்டி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

              சம்பவம் தொடர்பில் ஏனைய 9 பேர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

                Posted in Uncategorized

                குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                குண்டை காட்டி மனைவியை மிரட்டிய கணவன்

                கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.பி.அன்பர், நேற்று (20) உத்தரவிட்டார்.

                கிண்ணியா,பூவரசந்தீவு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவையாற்றிய இவர், முறையான அங்கிகாரத்துடன் இராணுவ சேவையில் இருந்து விலகிவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், கணவரான முன்னாள் இராணுவ வீரர், தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                சந்தேகநபர் தொடர்பாக கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபரை கைக்குண்டுடன் கைது செய்து, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

                  Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                  வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                  வீட்டில் நித்திரையில் இருந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்

                  தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.

                  வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக்

                  கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                  இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

                  இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

                    Posted in Uncategorized

                    லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

                    லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்

                    லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி

                    வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன

                    மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                      Posted in உலக செய்திகள்

                      விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

                      விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்

                      அமெரிக்கா Mobile, Alabama விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம்

                      இருந்தன .அவ்வேளை அங்கு நுழைந்த ஆயுததாரி திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் ,இதில் நால்வர் படுகாயமடைந்தனர்

                      போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,பாதிக்க பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                        கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

                        கிளிநொச்சியில் கவிழ்ந்த லொறி – போக்குவரத்து பாதிப்பு

                        கிளிநொச்சி டிப்போ சந்தியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் ஒன்று திடீரென கவிழ்ந்தது

                        இதனால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது

                        மேலும் வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது

                          Posted in Uncategorized

                          வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                          வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல தமிழர்கள் முனைப்பு – கனடாவுக்கு இடித்துரைத்து சிறி எம்பி video

                          தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால்
                          நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் கனேடியத் தூதுவருக்கு சிறீதரன் எம். பி எடுத்துரைப்பு

                          click here full video

                            Posted in Uncategorized

                            விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                            விபச்சார நிலையம் முற்றுகை – இளம் பெண்கள் கைது

                            நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடாபாடுவ பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

                            நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                            இதன்போது, அந்த விடுதியை முகாமைத்துவம் செய்த ஆண் மற்றும் விபசாரத்துக்கு உதவிய மற்றும் அதில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் குறிப்பிட்டுள்ளது.

                            46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று(14) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

                              கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

                              மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

                              மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

                              குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

                              சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது

                                பறக்கும் படை வேட்டை – 81 பேர் கைது

                                தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 81 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

                                அத்துடன், கடந்த வருடம் ஒக்டோபர் 30 முதல் இதுவரை  80,790  பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                  Posted in Uncategorized

                                  அம்பெய்தி மக்களை கொன்ற நபர் – நோர்வையில் நடந்த பயங்கரம்

                                  அம்பெய்தி மக்களை கொன்ற நபர் – நோர்வையில் நடந்த பயங்கரம்

                                  நோர்வே நாட்டின் Kongsberg. பகுதிதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென அம்பை எய்து அதன் மூலம் ஐந்து மக்களை சம்பவ இடத்தில படுகொலை புரிந்துள்ளார்

                                  மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்

                                  இந்த தாக்குதலை நடத்தியவர் கைது செய்ய பட்டுள்ளார்

                                  இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                    Posted in Uncategorized

                                    பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள்

                                    பாடசாலைக்கு வந்த யானைகள்

                                    மஹகோடயாய கிராமத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த மரங்களை அழித்துவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

                                    பாடசாலைக்கு வந்த காட்டு யானைகள் பாடசாலையை சுற்றி உள்ள வேலியை உடைத்து பாடசாலையில் உள்ள வாழைத்தோட்டத்தை அழித்துவிட்டன.

                                    இப்பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல் நாளாந்தம் தொடரும் நிலையில், அண்மைய நாட்களில் பாடசாலைக்கு அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சொந்தமான 350 பப்பாளி மரங்களை கொண்ட தோட்டம் யானைகளால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                      Posted in Uncategorized

                                      தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

                                      தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

                                      குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு பதிவாகியுள்ளது.

                                      இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                      அத்துடன் இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரனும் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

                                      உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                      இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                                        Posted in இலங்கை செய்திகள்

                                        பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!

                                        பிள்ளைகளுக்கு போன் கொடுக்க வேண்டாம் – கதறி அழும் தந்தை!

                                        ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்…” என தனது ஒரேயொரு பிள்ளையை இழந்த தந்தை தெரிவித்துள்ளார்.

                                        பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

                                        வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

                                        இந்நிலையில், கடந்த தினம் 11 வயதுடைய அஷேன் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

                                        சம்பவம் தொடர்பில் அவரது தந்தை தெரிவித்ததாவது…

                                        மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன். மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன்

                                        கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று

                                        அழைத்த போது மகன் கதைக்க வில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று

                                        பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற

                                        முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார். என்றார்.

                                        சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

                                        சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது