முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

Spread the love

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்

இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது

13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,

அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,

இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.

இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது

இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்

இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது

ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply