Tag: வன்னிமைந்தன்கவிதை
உன்னை தா எனக்கு
உன்னை தா எனக்கு
உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு
நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு
நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு
உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி
- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது
- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு
- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன
- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி
- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது
- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை























