Tag: மகிந்தா
தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா
தொண்டமான் மரணம் – அரசுக்கு பேரிழப்பு – மகிந்தா
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர்
மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.
அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக
மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா
கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா
இலங்கையில் சிவத்த சால்வைகளின் இரத்த வெறிக்குள் சிக்கி தமிழர்கள் நாள்தோறும் சொல்லென்னா துயரங்களை தாங்கிய வண்ணம் நடை பயில்கின்றனர்
தமிழர்களை தொடர்ந்து அச்சறுத்தல் ,பீதி நிலைக்குள் வைத்து கொள்ளும் கபட நோக்கம் கொண்ட சூழ்ச்சியை ஆளும் மகிந்த
குடும்ப ஆட்சி தொடர்ந்து நடைமுறை படுத்தி அதனை கடைப்பிடித்து செல்கிறது
இவர்களின் இந்த இனவெறி ஆட்சிக்குள் சிக்கி தமிழினம் பரிதபித்து கிடக்கிறது து ,கிறிஸ் மனிதர்கள் ,பின்னர் ஆவாக் குழு ,தற்பொழுது
மர்ம கொலையாளிகள் ,என்ற மிக பெரும் அபாய அச்சத்தை உருவாக்காகி விட்டுள்ளார் ஆளும் தமிழின கொலையாளி கோத்தபாய
மக்களின் வாய்களுக்குள் துப்பாக்கி நீட்ட பட்டு ,இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் மக்கள் சிறைப்படுத்த பட்டுள்ளனர் .
தமிழர்கள் வாசல்கள் தோறும் நாய்களை போல சிங்கள புலனாய்வாளர்கள் சுற்றிய வண்ணம் உள்ளனர்
ஓசை படமால் நடத்த படும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து செல்கிறது
திடீரென குடும்பத்தில் உள்ளவர்கள் காணமல் போகின்றனர் ,காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் எவ்வித பயனும் இல்லை .
இவ்வாறு வெளியில் தெரியாத பெரும் அபாயம் ஒன்று உள்ளக வாயிலாக நடந்த வண்ணமே உள்ளது .
இந்த மிக பெரும் இனஅழிப்பு வேட்டையில் இருந்து தமிழர்களை எவ்வாறு காப்பாற்றுவது ..?
இந்த கேள்விகளுக்கு பதில் தருவது யார் ..? மீண்டும் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மக்கள் ஒன்று திரள வேண்டிய தேவையினை இவை ஏற்படுத்தியுள்ளது
கால சுழற்சியில் கால் பாதிக்க வேண்டிய நிலையில் நாம் தமிழர் செல்கிறது .- வன்னி மைந்தன் –
புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்
புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியை நாம் மே மாதம் 19 ஆந் திகதி கொண்டாடுகிறோம்.
அது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு யுத்தம் அல்ல. மாறாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. நிறுவனத்தினால் உலகின் கொடூரமான
தீவிரவாதிகள் எனப் பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு எதிரான யுத்தமாகும். புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ் சிறுவர்கள் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை. தமிழ் அரசியல் வாதிகள் புலிக் கொலையாளிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ்வதில்லை.
புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்துவதற்கான வாய்ப்புக்
கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமை மூலம் முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய அந்த முப்படையினரும்
பொலிசாரும் இன்று கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து
மேற்கொண்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை கோவிட் – 19 போராட்டத்திலும் வெற்றியடைந்து வருகிறது என்பதே அனைத்து
விடயங்கள் ஊடாகவும் அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் மத்தியில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு முப்படையினரும்
பொலிசாரும் ஒரு பட்டாளம் போன்று முன்நின்று ஆற்றும் பணி, கோவிட் – 19 நோயை இவ்வாறு கட்டுப்படுத்துவதில் சுகாதாரப்
பிரிவினருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
தீவிரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் போன்ற எந்தவொரு அனர்த்த சூழ்நிலையிலும் முப்படையினர் பொதுமக்களைப்
பாதுகாக்கும் வகையில் முன் நின்று செயற்படுகின்றனர் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது. அதனால் இன்று சமூக
மட்டத்தில் ‘சிவில்’ மற்றும் ‘இராணுவம்’ என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசியல் கட்சிகள்
மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை நான் கண்டிக்கிறேன். ஏதாவது பதவியொன்றுக்கு ஓய்வு பெற்ற முப்படை
அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை அவர்கள் ‘இராணுவ மயமாக்கல்’ என அழைக்கின்றனர். ஓய்வு பெற்ற
முப்படையினரும் சிவில் பிரஜைகளே. அவர்கள் இராணுவ உறுப்பினர்கள் அல்ல. அன்று இருந்த சங்க, மருத்துவர், ஆசிரியர்,
உழவர், தொழிலாளி சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம்
அதிகாரத்திலுள்ள போது பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அரசாங்கத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகிப்பார்கள்.
ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை
அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும் பொலிசாரும் ஆற்றியுள்ள
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டும். முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய
யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் எமது
முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வு பெற்ற
அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நாம் மீண்டும் உறுதியளிக்கிறோம்.
நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு
நாம் உயிருடன் இருப்போமோ தெரியாது – மகிந்தா உருக்கமான பேச்சு .
இலங்கையில் நிலவும் அதி பயங்கர கொரனோ நோயின் தாக்கம் பெருமளவு
பரவியுள்ளது ,இவ்வேளை ஊரடங்கு சட்டங்கள் பிறப்பிக்க பட்டுள்ளன .
இராணுவம் எங்கும் குவிக்க பட்டு கைதுகளும் ,கண்காணிப்பும் பலப்படுத்த பட்டுள்ளது
இவ்வாறான சூழலில் நாட்டு மக்களுக்கு, இது ஒரு முக்கிய கால கட்டம் ,
நாம் வாழ்வோ , சாவா ,என்ற நிலையில் போராடி வருகிறோம் ,எவர் இருப்பார் ,என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை நீடிக்கிறது
எனேவ சுகாதார அமைச்சு கூறுவது போன்று அதனை பின்பற்றி ,உங்கள்
உயிர்களை காப்பாற்றி கொள்ளுங்கள் என மிக உருக்கமாக பிரதமர் மகிந்தா பேசியுள்ளார்
இவரது இந்த பேச்சு சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ராகுல் காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்த ராகுல் காந்தி, மன்மோகன் சிங்
புதுடெல்லி:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை
மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு
உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.
பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா
பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா
இலங்கையில் ஆளும் பவுத்த வெறிபிடித்த மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் படித்த பட்டதாரி பிக்குகளை
நாட்டின் முக்கிய சிங்கள பாடசாலைகளில் ஆசிரியராக பணியில் அமர்த்த ஆளும் இலங்கை பிரதமர் கட்டளை பிறப்பித்துள்ளார் ,
இவர்கள் மூலம் பவுத்த மத வழிப்பாட்டை மேலும் விஸ்தரிக்கவும் ,அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில்
,பவுத்த ,இன வரலாற்றை இடித்து இனவெறியை தூண்டவும் இந்த நகர்வை மகிந்தா மேற் கொண்டுள்ளார் .
இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதும் ,சிங்களவர்களே அதில் முதன்மை குடிகள் என்பதையும் ஆளும் இந்த வெறி பிடித்த
அரசு அதிகாரங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
ந
பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா
பல்கலைகழகம் முடிந்தவுடன் – அனைவருக்கும் வேலைவாய்ப்பு – அடித்து விடும் மகிந்தா
இலங்கையில் பல்கலைக்கழகம் சென்று கல்வியை நிறை செய்தவர்கள் பெற்ற கல்வி தகுதிளுக்கு ஏற்ப அவர்தம் வேலை வாய்ப்பு வழங்க படும் என் தமிழ் இனப் படு கொலையாளி மகிந்த கூவியுள்ளார்
தாம் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி விட்டபடி மகிந்த கும்பல் நகர்கிறது ,இவர்களின் இந்த பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் இவர்களை வெல்ல வைப்பார்களா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும்






