மரண மௌனம்
Posted in கவிதைகள்

மரண மௌனம்

மரண மௌனம்

என்னை மறந்துவிட்டு
நீ சந்தோசமாக இருப்பாயா
ஆமென்பது உனது பதில் எனில்
மரணத்தின் மெளனத்தில்
நான் மூழ்க விரும்புகிறேன்.

உன் நினைவுகள் தோளில் வீழ்ந்தால்
நானும் வாழ்வேன் என்ற நம்பிக்கை,
நீ சிரிக்கும்போது
என் மனம் காற்றில் சிறகுவிரிக்கும்.
உன் கோவமோ
என்னை இருள்குகையில் தள்ளாட வைக்கும்

நீ எனை மறந்து சென்ற பாதை
நான் காணாமல் போன திசை,
நீ மீளவும் இன்முகத்துடன் நடந்தால்
எனக்குள் ஒரு நிலவெழுச்சி பிறக்கும்.

என்னையும் என் காதலையும்
ஒர் கனவென எண்ணி விலகினால்,
அந்த கனவின் இறுதியில்
நான் இல்லை, என் மரண ஒலியில்
நீ சந்தோசித்திரு
அது போதும் எனக்கு

என்னை மறந்துவிடு
அது உனக்கு இன்பமெனில்
நான் மரித்துவிடுவேன்,
ஆனால் ஒருபோதும்
உன்னை மறக்காது என் காதல்.

ஏனோ இந்த பிரிவு
Posted in கவிதைகள்

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு

ஏனோ இந்த பிரிவு…
இன்னும் நீயின்றி உயிர் வாழ
நானோ பழகவில்லை,
உன் சுவாசமே எனது தேசம்
என்று நம்பிய என் நெஞ்சம்,
தொலைந்துவிட்டது நம்
பார்வையின் வழியில்…

கண்ணீரோ நம் காதலின்
கடைசி கடிதமா?
அதில் எழுத்துகள் இல்லை, ஆனால்
உணர்வுகள் அலைகடலாக.
நீ சென்ற பாதையில்
நான் இருளாய் நின்றேன்,
வந்துவிடுவாய் என்ற
திடமான நம்பிக்கையுடன்…

நீ சொன்ன சொற்கள் இன்னும் என் காதில்
“நாம் என்றும் இணைவோம்…” என்று
அந்த எண்ணம் என்னை நிமிர்த்துகிறது,
அதே நேரத்தில் நசுக்கியும் விடுகிறது.

காதல் வென்றதோ
தோற்றதோ தெரியாது,
ஆனால் நான் தோற்றேன்,
உன் நினைவுகளிடம்…
உன் இல்லாமையிடம்.

காதல் பிரிவு
Posted in கவிதைகள்

காதல் பிரிவு

காதல் பிரிவு

இருவரும் இருந்த இடத்தில்,
இப்போது நிழலும் நமக்குள் பேசாது.
சிரிப்பின் சத்தம் மறைந்தபின் – உனை
சீண்டாமல் வாழ்வது தான் என் பழக்கம்.

உன் கை தொட்டு போன காற்றே – இப்போதும்
என் கன்னத்தில் ஓர் நினைவாக வீசுகிறது.
“நீ இல்லை” என்பதைக் கேட்ட என் இதயம்,
மீண்டும் காதலிக்க தயங்குகிறது.

நாம் சேர்ந்து வாசித்த அந்த புத்தகம்,
இப்போது வெறும் காகிதங்களாகிறது.
ஒவ்வொரு பக்கமும் உன் நினைவுகள்,
படிக்க முடியாத உரையாய் மாறுகிறது.

என் கனவில் நீ வந்தாலும்,
வெறும் பார்வை கொடுத்து விலகுகிறாய்.
நிஜத்தில் நீ இல்லாத வேதனை,
கனவில் கூட தொடராய் தொடருகிறது.

காதல் வெறும் சேர்வல்ல,
பிரிவும் அதில் ஒரு பாகம் என்பதை
இப்போது தான் உணர்கிறேன்,
உன் நேசம் இன்னும் என் உள்ளம் சுமக்கிறது…

—-

இப்படிக்கு
உன் பிரிவில்
என் உயிரை தேடும்
நான்

Posted in சினிமா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுத – நயன்தாரா

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் – நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, முக்கியமான நபர் ஒருவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுததாக தெரிவித்துள்ளார்.

அவரை பிரிந்ததற்காக ஒருமணிநேரம் அழுதேன் –


சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அதனை அடுத்து ரஜினி, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்ற இவர்,

அதே நேரம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவர் கோவில் கோவிலாக, ஊர் ஊரக சுற்றி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா தனது வாழ்க்கையில் முக்கியமான நபர், அவரைபிரிந்ததற்காக ஒருமணிநேரம் கதறி கதறி அழுத சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான்

எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய்

சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் அழுததாகவும் தெரிவித்துள்ளார் நயன்தாரா.