Tag: பாடசாலை
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றனby நிருபர் காவலன்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதிby நிருபர் காவலன்
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைதுby நிருபர் காவலன்
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவுby நிருபர் காவலன்
பாடசாலை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை
பாடசாலை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை
காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான யோசனை, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
காலியில் வைத்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்by நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றனby நிருபர் காவலன்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்by நிருபர் காவலன்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்by நிருபர் காவலன்
கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி பாடசாலைகளுக்கு பூட்டு
கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் பாடசாலைகள் நடைபெறாது என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்தார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
by நிருபர் காவலன் - பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
by நிருபர் காவலன் - பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
by நிருபர் காவலன் - ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
by நிருபர் காவலன்
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.
10 வயதுடைய சிறுமி மகுலெல்ல வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறாள்.
சிறுமி வழமை போல் டர்பன்டைன் பாதுகாப்பு வனப்பகுதி வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டிக்கு ஏற்றிச் சென்றதாக சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் ஒரு வித பானத்தை குடிக்க கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது கசப்பாக இருந்ததால், அவற்றை வாயில் வைத்திருந்த வௌியில் துப்பிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்த பாய்ந்து சிறுமி தப்பியுள்ளார்.
பின்னர், முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சிறுமி, பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, வகுப்பு ஆசிரியர் இது குறித்து வினவியுள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பின்னர் அதிபர், ஆசிரியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
by நிருபர் காவலன் - ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
by நிருபர் காவலன் - பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
by நிருபர் காவலன்
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்
புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது இடம்பெற்றுவருவதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
300 வகையான பாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. எதிர்வரும் புதிய பாடசாலை தவணை காலப்பகுதியில் இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
அரச அச்சக தலைமை பொறுப்பதிகாரி திருமதி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை
பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க பட்டுள்ளது .
இந்த விடுமுறை யானது காலநிலை செயல்பாட்டை அடுத்து மாற்றம் பெறும் என காவல்துறை அறிவித்துள்ளது .
மக்களை மிக பாதுகாப்பக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது .
Featured
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்கவேண்டும் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்கவேண்டும் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து வழங்குகின்றபோதுதான் அவர்களின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்று கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் தெரிவித்தார்.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் அனுசரனை மற்றும் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை அம்பாள் பாடசாலையில் கல்விகற்கும் தரம் 5 – 11 வரையாயான மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.ருக்ஸாலி ரொனிக்கா தலைமையில் (06) குறித்த பாடசாலையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மைகள், நல்ல மனிதர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் உதவுகின்றது. மாணவர்கள் மனதில்
சிறப்பான விழுமியக் கல்வியைப் போதிக்கின்றபோது, அம்மாணவர்கள் அறிவுத்திறனான மனப்பாங்கை வளர்த்துக்கொண்டு சிறந்த ஆளுமையையும்
பெறுகின்றார்கள். அதுமாத்திரமன்றி நிறைந்த விழுமியக் கல்வியையும் பெற்று அதன் மூலம் இவ்வுலகை ஆளுகின்றவர்களாகவும் திகழ்வார்கள்.
ஒரு மாணவனுக்கு எந்தளவிற்கு அனுபவக் கல்வி அவசியமோ, அதேயளவிற்கு விழுமியக் கல்வி அவசியம் என்பதனை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மாணவர்களிடையே விழுமியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களிடையே சிறந்த விழுமியக் கல்வியை போதிக்க முடியும்.
பாடசாலையில் நல்ல மாணவர்களை உருவாக்காவிட்டால், நாட்டில் நல்ல பிரஜைகள் இல்லமால் போய்விடும். அதனால் கலாச்சார சீரழிவு, சமூக
ஒற்றுமை, சமூக நீதி என்பன இல்லாதுபோவதுடன், எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்ககூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது போய்விடும்.
இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சிறந்த விழுமியத்துடன் கூடிய நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொறு பெற்றோர், ஆசிரியர்
சமூகம் போன்ற அனைவரது கடைமையாகும். அதற்கான பல உதவிகளை காப்போம் தொண்டு நிறுவனம் செய்து வருகின்றது.
குறிப்பாக, வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகின்ற இந்நிறுவனம், இன்னுமின்னும் பல உதவிகளை
வழங்கவும் தயாராக இருக்கின்றது. அந்நிறுவனத்தின் உதவிகளையும், வளங்களையும் பயன்படுத்தி மாணவச் செல்வங்களின் கல்வியுடன் ஒழுக்கக் கல்வியையும் மேம்படுத்த ஆசிரியர் சமூகம் முன்வரவேண்டும் என்றார்.
மாதுமை அம்பாள் வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி எஸ்.ஆர். ரோஸ்மேரி இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப்
பணிப்பாளர் கு.பிரதீப்கரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், குறித்த பாடசாலையின் அதிபர் என்.இலங்கேஸ்வரன் உள்ளிட்ட
பாடசாலையின் ஆசிரியர்கள், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்,
செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
அபு அலா –
Featured
பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை
பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்க நடவடிக்கை
அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
திட்டமிட்டவாறு இந்த ஆண்டு இறுதிக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்யவே தீர்மானித்திருந்த போதிலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்தி வைக்க நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை
குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Featured
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலைகளை சுற்றி பொலிஸார்
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
Featured
பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்
பாடசாலை நேரத்தை நீடிக்க அரசு உத்தேசம்
இலங்கையில் பாடசாலைகளின் நேரத்தை நான்கு மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் வேண்டியுள்ளார் .
பாடசாலை விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் பொழுது ,விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்விதம் தெரிவித்துள்ளார் .
பாடசாலைகள் இரண்டு மணித்தியாலம் விளையாட்டுக்கு ஒதுக்க பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .
விளையாட்டு துறை அமைச்சரின் இந்த கருத்தியல் முன்வைப்பு மாணவர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மணி வரை பாடசாலைகள் மூட பட வேணுமெனின் மாணவர்கள் வகுப்பறையில் அதிக நேரத்தை செலவு செய்திட வேண்டும் .
இது மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை
கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் சாதனை
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
முதல் நிலையினை இராஜசேகர் விதுசன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நிலையினை செல்வன் G.சனோஜன் பெற்றுக்கொண்டார்.
மேலும் கலைப்பிரிவில் 3ம் நிலையினை ஜென்சிகா சிவகுமார் பெற்றுள்ளார் 7ம் நிலையை பிறேம்குமார் கயூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்
அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது
குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி
உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு
ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு
இலங்கையில் ,இந்த வாரம் ஐந்து நாட்களும் பாடசாலை இடம்பெறும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், பாடசாலை இடம்பெற்று வந்த நிலையில் ,தற்பொழுது ஐந்து நாட்கள் ,இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. .
இந்த அறிவிப்பு ,படிக்கும் பாடசாலை மாணவர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இவ்வாறு ,எதிர்வரும் வராமும் ,பாடசாலை தொடருமா, என்பதே கேள்வியாக உள்ளது .
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் உள்ள பாடசாலைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தற்போது ஆயுத முனை பாதுகாப்புடன் பாடசாலை மீள திறக்க பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் பத்தொன்பது மாணவர்கள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த ஆயுத முனை பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்
நிலையில் இந்த தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
இலங்கை ; நாளை ஆரம்பமாகவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைளை ,திங்கள் ,செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அடுத்த வாரம்
வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை என்பதினால் கல்வியமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று மாணவர்களுக்கு வீட்டை அடிப்படையாகக்கொண்ட கல்வி நடவடிக்கையை முனனெடுத்தல் அல்லது இணைய வழி மூலமான
கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
ஆசிரியர்கள் அனைவரும் ஆகக் குறைந்தது வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சேவை அசௌகரியங்கள் காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் 3 தினங்களுக்கு மாத்திரம் கல்வி
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
இருப்பினும் இவ்வாறான ,பாதிப்புகள் இல்லாத நாட்டின் சில மாவட்டங்களில் வாரத்தின் ஐந்து தினங்களிலும் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை வட மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் (8)
வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை
பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை
கொழும்பு ;போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த வார இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்து 193 பாடசாலைகளில் 9 ஆயிரத்து 567 பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வருடங்களில் பாடசாலை நாட்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதாகவும் ஒன்லைன் கல்வி நடவடிக்கை கிராமப்புறங்களில் வெற்றியளிக்கவில்லை என்றும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை பிற்போட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூலம் மாணவர்களுக்கான விசேட விரிவுரைகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்
கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்
பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு
பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு
பாடசாலை பைகள் விலை தற்போது அதிகரிக்க பட்டுள்ளது
நடடில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக
பாடசாலை பைகள் விளையும் தற்போது அதிகரிக்க பட்டுள்ளது
பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
பாடசாலை செல்லு மாணவர்கள் பைகள் மூலம் தமது பாடசாலை உபகரணங்களை எடுத்து செல்கின்றனர்
இந்த பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்
விகிதத்தை குறைவடைய செய்யலாம் என அஞ்ச படுகிறது
உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி
உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி
கிழக்கு உக்கிரேன் Bilohorivka. பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரசியா
இராணுவம் நடத்திய தாக்குதலில் அறுபது மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
பாடசாலை வளாகம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .
இலங்கை வன்னி பகுதியில் சென்சோலை மாணவர்கள் தங்கி இருந்த அதே கூடம் மீது
இதே உக்கிரன் விமானிகள் நடத்திய தாக்குதலில் இதற்கு மேலான மாணவர்கள் உடல்
சிதறி பலியாகினர் ,தாயகம் எங்கும் கண்ணீரால் நனைந்தது ,அந்த பிஞ்சுகளின் ஆத்மாக்கள் இப்பொழுது எழுந்து சிரிக்கிறது
அநீதிகளை விதிப்பவர்கள் அதே வழியில் அழிக்க படுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ஆகும் ,
அடக்குமுறை,வல்லாதிக்கம் அழிக்க படும் பொழுது இனம் ஒன்று விடுதலை பெறும் என்பது இதுதான் போலும்.





















