Tag: பயங்கரவாதம்
பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து
பயங்கரவாத தடைச் சட்டம் அம்பிகாவின் கருத்து
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்ததன்படி,
அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின்,
குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும்,
சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, அதனைப் பதிலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சினால் பொதுமக்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்ட உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியிருப்பது நேர்மறையானதொரு விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்கும் வரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை எனவும்,
புதிய சட்டத்தை உருவாக்குவது என்பது பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழவேண்டிய நீண்ட செயன்முறை என்பதனால், அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதை இடைநிறுத்தவேண்டும்.
அதேபோன்று புதிய சட்டம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் போதுமானதன்று.
மாறாக குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசத்தையேனும் வழங்கவேண்டும் எனவும் அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.
2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.
எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,
அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.
டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்
டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்
டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம் ,அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீதான தாக்குதல் உள்நாட்டு பயங்கரவாதம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான பகுதி ஒன்றில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அவரது வலது காதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் கீழே குனிந்து கொண்டு வீழ்ந்து படுத்ததை அடுத்து ,அந்த சூட்டு தாக்கில் இருந்து அவர் மயிரையில் தப்பித்துக் கொண்டார் .
சுதாரித்து கொண்ட அவர் நடவடிக்கை காரணமாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருந்தது.
தாக்குதல் சம்பவம்
ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கொதிப்பையும் தழுவிய நிலையிலே ஏற்படுத்தி இருந்தது.
அதை எடுத்து எதிர்வரும் தேர்தலில் நாம் அனுதாப அலையினூடாக மிகப்பெரும் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரோட நிலையிலேயே தற்பொழுது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆனது உள்நாட்டு பயங்கரவாதம் என ஆளும் ஜோபேர் நாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
குற்றவாளி தற்பொழுது சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சூட்டு தாக்குதல் சம்பந்தமான விடையங்கள் தொடர்பாக ,விசாரணைகள் இடம் பெற்று வருவதாக அவரை தெரிவித்துள்ளது.
வீட்டின் கூரை மீதியிலிருந்து சினைப்பொருடாக தாக்குதலை நடத்திய 20 வயதுடைய மத்திய செல்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயலாக அவருக்கு அறிவித்துள்ளதிலிருந்து பின்னணியில் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக அமெரிக்கன் நம்புகிறது .
அது எந்த நாடு என்பது தொடர்பாக இதுவரை அமெரிக்க வெளியிடாத நிலையிலேயே தற்பொழுது எந்த நாடு என்பதை கண்டறியும் நடவடிக்கையில் உலக நாட்டு மக்கள் ,மிகப் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு

- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்

- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை

- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானது .
தமிழர்களை அடக்கியாளும் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கைஆளும் அரசுகளினால் பயங்கரவாத தடைச் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள்
15 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் வேரோடும் வேரோடு மண்ணோடும் அந்த தாய் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
எனவே உடனடியாக இந்த சட்டத்தினை நீக்கி நீதிய நிலைநாட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நாட்டாக இலங்கையை கட்டியமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது .
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பாரிய மில்லியன் கடன் உதவியின் பொழுதும் இந்த விடயத்தினை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர் .
இலங்கை பொருளாதாரத்தில் மூன்றெழு வேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சமரசத்தை நிலைநாட்ட வேண்டும் .
ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள்
ஆனால் ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள் தமது பதவிகளை தக்க வைத்து சுகபோகம் அனுபவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதே தவிர இணக்கப்பாட்டு அரசியலில் ஏற்படுத்தி தீர்வுகளை வழங்கி இலங்கை ஒரு உரிமை ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட ஐக்கிய இளமையாக மாற்றம் பெற வைக்கவில்லை .
என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
அதனால் தான் இந்த சட்டங்களை கடுமையாக இருக்கிறது.
இந்த வரைபை ஏற்றுக்கொண்டு உடனடியாக இனணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இவ்வளவு மேலோங்கி ஒலித்து வருகின்றன .
தமிழர்களை அடக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் எனும் அந்த சட்டம் மூலம் தொடர்ந்து நீடித்து வருகின்றது .
இவ்வாறானிலேயே தமிழர்கள் எவ்வாறு இந்த அரசியல்வாதிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்க முடியும் என்ற கேள்விகளை இப்பொழுது எழுத ஆரம்பித்து இருக்கின்றனர் .
அரச இயந்திரம் தனது அடக்குமுறையை தொடர்ந்து விரித்து செல்கின்ற பொழுது இவ்வாறன நீதியான விடயங்கள் நிலை பெறும் என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது .
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.
இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






















