Tag: துப்பாக்கி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவில் 4500 துப்பாக்கி ரவைகள் மீட்பு
வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த காணி உரிமையாளர் காணியில் மண்ணை அகழ்ந்தெடுக்கும் போது துப்பாக்கி ரவை பெட்டிகள் இருந்ததனை அவதானித்துள்ளார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு வருகைதந்து குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.
T-56 வகை துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4,500 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.
பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்
பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்
பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் பிரதானி ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் தூங்கும் போது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 12 தோட்டாக்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இலங்கையில் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத பொருட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்வதற்காக முயற்சித்த பிரித்தானிய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைத்துப்பாக்கி மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்கள், “ரம்போ” வகையைச் சேர்ந்த கத்தி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு துப்பாக்கியுடன் வந்த பிரித்தானிய நாட்டவர் கைது
இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வதாக இருந்தால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டரீதியான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த வெளிநாட்டு பிரஜை எவ்விதமான அனுமதியையும் பெறாமல் கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று (22) பிற்பகல் 12.55 மணிக்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-503 இல் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கேன் செய்த போது, இந்த கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பயணப் பொதியை எடுத்து வந்த பிரித்தானிய பிரஜை விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பயணியிடம் பொலிஸார் விசாரணை செய்தனர். குறித்த கைத்துப்பாக்கியை தனது பாட்டி தனக்கு ஒரு கலைப்பொருளாக பரிசளித்ததாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு பிரிவினருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை
இஸ்ரேலுக்குள் துப்பாக்கி சண்டை , ஆயுத தாரிகள்
திடீர் தாக்குதல்
யேமனில் இருந்து இஸ்ரேலுக்குப் பயணித்த கப்பல்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து செங்கடல் வழியாக அனைத்து டேங்கர் போக்குவரத்தையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான BP அறிவித்துள்ளது.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
துப்பாக்கிப் பிரயோகம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் காயம்
துப்பாக்கிப் பிரயோகம் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் காயம்
றாகமை வல்பொல பிரதேசத்தில் நேற்று (14) இரவு துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயதுடைய சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் றாகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
கட்டு நாயக்காவில் துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடக மாலைதீவு நோக்கி பயணிக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
இவரது கைப்பையில் கைதுப்பாக்கி காணப்பட்டத்தை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .
.விசாரணிகளின் பின்னர் தற்போது அவர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளார் .
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
துப்பாக்கியை வைக்கச்சென்ற அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கி
வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு
வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு
வெலிக்கடை, பரண கோட்டே வீதி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுவனத்தின் குளியலறையின் ஜன்னலை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நிறுவனத்தின் முகாமையாளர் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு
அருகில் 9 மிமீ தோட்டா துண்டும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களை பயமுறுத்துவதற்காக யாரோ துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

துப்பாக்கி சூடு நபர் மரணம்
துப்பாக்கி சூடு நபர் மரணம்
தெல்வத்த, மீட்டியகொட பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூடு நபர் மரணம்
அப்போது, வீட்டில் பதுங்கியிருந்த சந்தேக நபர் துப்பாக்கியால் சிறப்பு அதிரடிப்படையினரை நோக்கி சுட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போது சந்தேக நபர் சுடப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

துப்பாக்கியுடன் ஒமுல்லைதீவில் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒமுல்லைதீவில் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார் .
துப்பாக்கி ஒன்று வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,விரைந்து சென்ற போலீசார் நடத்திய தேடுதலில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
இலங்கையில் பதிவு இன்றி துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு முரணானது என தெரிவித்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது .
போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலில் இரவுவேளை வீடு சுற்றிவளைக்க பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்
- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது
- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மாளிகாவத்தை முதல் நாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த முதலாம் திகதி மாளிகாவத்தை எச்.ஆர் ஜோதிபால மாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கொழும்பு 08, பேஸ்லைன் வீதி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த 20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்by நிருபர் காவலன்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்by நிருபர் காவலன்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19) இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் முப்பது வயது மதிக்கத்தக்கவர்
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
பணி முடிந்து வீட்டுக்கு வந்து வீட்டின் முன் வீதியில் நின்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் வேறு யாரையாவது குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
துப்பாக்கி சூடு ஒருவர் பலி
துப்பாக்கி சூடு ஒருவர் பலி
திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்வெல்ல, போதரகந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர் மோட்டார் சைக்களில் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்by நிருபர் காவலன்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்by நிருபர் காவலன்
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களான இளம் கணவன்,மனைவியான
எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்by நிருபர் காவலன்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்by நிருபர் காவலன்
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
தலவத்துகொடையில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர், தலவத்துகொட வெலி பாறை பகுதியில் அமைந்துள்ள, பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என நம்பப்படும் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதுby நிருபர் காவலன்
- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்by நிருபர் காவலன்
- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்by நிருபர் காவலன்
இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு
இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த காரின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்