432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா
Posted in உலக செய்திகள்

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா

432 கோடி ரூபாவுக்கு பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா ,தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் ஜொலித்து வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பொலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

கங்குவா திரைப்படம் வருகிற ஒக்டோபர் மாதம் 10- ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமின்றி அவர் தயாரிப்பில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மெய்யழகன். இப்படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். மெய்யழகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இதுதவிர சூர்யா தயாரிப்பில் மற்றொரு படமும் தயாராகி வருகிறது. அப்படத்தில் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். Dassault Falcon என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடிரூபாய் (இலங்கை மதிப்பில் 432 கோடி ரூபாய்) இருக்குமாம்.

இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம்.

தமிழ் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது சூர்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

Posted in சினிமா

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
சூர்யா – ஜோதிகா


நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்

வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள்

எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

சூர்யா – ஜோதிகா
சூர்யா – ஜோதிகா

இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்

நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,

படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல்,
கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    Posted in சினிமா

    சாதனை படைத்த ஜெய் பீம்ர்

    சாதனை படைத்த ஜெய் பீம்ர்

    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

    முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்
    சூர்யா


    ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை

    கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது.

    இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும்,

    சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன.

    ஜெய் பீம்

    ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது. இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் சூர்யா

    வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in சினிமா

      சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

      சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு

      சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், சூர்யாவின் வீட்டுக்கு தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு
      சூர்யா


      நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த

      வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

      இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர்

      சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

      சூர்யா
      சூர்யாவின் வீடு

      சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில்

      இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

        Posted in சினிமா

        சூர்யாவிற்கு ஆதரவாக ரசிகர்கள்

        சூர்யாவிற்கு ஆதரவாக ரசிகர்கள்

        ஜெய் பீம் படத்தின் சர்ச்சையை தொடர்ந்து சூர்யாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

        சூர்யாவிற்கு ஆதரவாக துணை நிற்கும் ரசிகர்கள்
        சூர்யா


        ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின்

        வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

        இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு

        கிளம்பியது. இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்

        தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

        இந்நிலையில், ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் ரூ.5 கோடி இழப்பீடு

        தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

        சூர்யா

        இந்நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமில்லாமல், சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா.ரஞ்சித், ஜடா பட

        இயக்குனர் குமரன் உள்ளிட்ட பலரும் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் சூர்யாவின் காமன்

        டிபியை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கிறது.

          Posted in சினிமா

          இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா

          இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா

          ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் படங்களைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

          மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா
          சூர்யா


          தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான ஜெய்

          பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

          அடுத்ததாக சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக

          கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

          சூர்யா
          சூர்யா – சிவா

          ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

            Posted in Uncategorized

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
            முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா


            சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை

            மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி

            மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

            இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1

            கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

              Posted in சினிமா

              சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்

              சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்

              சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, பல்வேறு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டார்.

              சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்
              பா.இரஞ்சித், சூர்யா


              நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில்

              பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

              இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

              இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

              ஜெய் பீம் படத்தின் போஸ்டர்

              அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் பீம்’

              எல்லோருக்கும் சொந்தமானது, தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். அவருக்கு நன்றி” என சூர்யா தெரிவித்துள்ளார்.

                Posted in சினிமா

                எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

                எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா

                தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் நடிப்பில் தற்போது ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

                எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் – சூர்யா
                ஜெய் பீம் படத்தில் சூர்யா


                நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

                இப்படத்தில் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வெளியாக இருக்கிறது.

                ஜெய் பீம்

                இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் சூர்யா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

                  Posted in சினிமா

                  உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா

                  உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா

                  நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

                  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,

                  கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

                  மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு

                  அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க… நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க… பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும்.

                  சூர்யா

                  தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறேன். கேவலான மார்க் எடுத்து

                  இருக்கிறேன். மதிப்பெண், தேர்வை விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் பெருசா ஜெயிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

                    Posted in சினிமா

                    4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

                    4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்.

                    நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

                    4 மொழிகளில் வெளியாகும் சூர்யா படம்
                    சூர்யா


                    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ

                    வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

                    நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன்படி ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் சூர்யா,

                    பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார் என்பது பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்தது.

                    இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு,

                    கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியிடப்படும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர்.

                      Posted in சினிமா

                      கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                      கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா

                      முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

                      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா, இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது கடின உழைப்பால் தரமான படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இது அவருக்கு சாதாரணமாகக்

                      கிடைத்ததல்ல. கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் தொடர் போராட்டம் என்றே சொல்லலாம். மேலும் சமூகத்தின் மீதான அக்கறை, கல்விக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்று அவருக்கு ரசிகர்களைத் தாண்டி பொது மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

                      நட்சத்திர அந்தஸ்து

                      புகழ்பெற்ற நடிகரான சிவகுமாரின் மகனாகப் பிறந்தாலும் தனக்கென்று ஒரு இடத்தைப் போராடி உழைத்துப் பெற்றிருக்கிறார் சூர்யா. தொடக்க ஆண்டுகள் போராட்டம் மிக்கவையாக இருந்தன.

                      படிப்படியாக உழைத்து குறைகளைக் கடந்து நிறைகளை அதிகரித்துப் பல வகையான படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்.

                      தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்த உடல்ரீதியாகவும் உள்ளத்தாலும் உருமாற சூர்யா அளிக்கும் மெனக்கெடல் வியக்கவைக்கும். 30 வயதுகளில் 60 வயது முதியவராக ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்தபோது அனைவரும் அவரை அப்படியே

                      ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருந்தார். அதே படத்தில் ராணுவ வீரராக நடிப்பதற்காக இரவு பகலாக உழைத்து சிக்ஸ் பேக் வைத்தார். மேலும், அயன், 7 ஆம் அறிவு படங்களிலும் சிக்ஸ் பேக்

                      வைத்திருந்தார். இவரது வியக்க வைக்கும் மெனக்கெடல் மற்றும் கட்டுக்கோப்பான உடலமைப்பு இளைஞர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறது.

                      24 ஆண்டு திரைவாழ்வில் பல இயக்குனர்களுடன் பணியாற்றியிருக்கிறார் சூர்யா. மணிரத்னம், வசந்த், விக்ரமன், பாலா, அமீர், கெளதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், செல்வராகவன்,

                      கே.எஸ்.ரவிகுமார், ஹரி, கே.வி.ஆனந்த், லிங்குசாமி, வெங்கட் பிரபு, பாண்டிராஜ் என முக்கியமான இயக்குனர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவர்களில் சூர்யாவுடன் அதிகபட்சமாக ஐந்து

                      படங்களில் ஹரி பணியாற்றியுள்ளார். கே.வி.ஆனந்துடன் மூன்று படங்களிலும், வசந்த், பாலா, கெளதம் மேனனுடன் தலா இரண்டு படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரம் குமார், விக்னேஷ்

                      சிவன் போன்ற இளம் இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். சுதா கொங்கராவுடன் ‘சூரரைப்

                      போற்று’ படத்தில் பணியாற்றியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நட்சத்திர நடிகர் ஒருவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.

                        Posted in சினிமா

                        இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

                        இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

                        சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

                        இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?
                        சூர்யா


                        தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

                        சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூன் 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

                        டிரெண்டிங்

                        இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி – யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

                        மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

                          Posted in சினிமா

                          அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி

                          அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி

                          2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார்

                          மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அம்மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை

                          மூலம், சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.

                          பொறியியல் படிப்பை நிறைவு செய்த அந்த பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் கடந்த சில

                          தினங்களுக்கு முன் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார்.

                          அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த அந்தப் பெண்ணை நடிகர் கார்த்தி நெகிழ்ந்து பாராட்டினார்.

                            Posted in சினிமா

                            அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை

                            அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை

                            விழாவில் கோயிலைப் பற்றி ஜோதிகா பேசிய கருத்துக்கு ஆதரவாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

                            அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம் – ஜோதிகாவுக்கு ஆதரவாக சூர்யா அறிக்கை


                            சென்னையில் நடந்த விழாவில் நடிகை ஜோதிகா பேசும்போது தஞ்சை பெரிய கோவில் குறித்து விமர்சித்தார். இதற்கு பல கண்டனங்களும் ஆதரவும் எழுந்தது.

                            இதுகுறித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் வணக்கம். ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று

                            விடுவதாக இல்லை’ என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ

                            ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,

                            நடிகர் சூர்யா அறிக்கை

                            ‘கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

                            இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச்

                            செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

                            பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்.

                            கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,

                            அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

                            மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும்

                            போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில்

                            இச்சர்ச்சையைக் கையாண்டன. நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள்.

                            எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

                            அந்தக் கருத்தில் நாங்கள்
                            அந்தக் கருத்தில் நாங்கள்