Tag: சினிமா
இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து நீண்ட நாள் சிகிச்சைக்கு பின் திரும்பியுள்ள நிலையில் யாஷிகா ஆனந்த் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
வாய்ப்புக்காக இயக்குநர்கள் தவறாக நடக்க முயன்றனர் – யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்
துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்திருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமாகி விட்டார்.
சமீபத்தில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, நீண்ட சிகிச்சை எடுத்து திரும்பினார். இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் யாஷிகா சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
தனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குநர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்கள். இன்னும் சில இயக்குநர்கள் தவறான
காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கேட்டார்கள். ஆனால், நான் அதையெல்லாம்
ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலுக்கு அபராதம்… நீதிபதி எச்சரிக்கை
விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் ரூ.1 கோடி வரையில் சேவை வரி செலுத்தவில்லை என அவர்மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திரைப்பட
தயாரிப்பாளராகவும் இருந்து வரும் விஷாலின் நிறுவனம் மீதான சேவை வரி விவகாரத்திலேயே
இந்த புகார் கூறப்பட்டு இருந்தது. நடிகர் விஷாலுக்கு எதிராக பலமுறை சம்மன் அனுப்பி உள்ளனர் சேவை வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரிகள்.
கடந்த 2016ம் ஆண்டில் இருந்து 2018 வரையில் சுமார் 10 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் விஷால் நேரில் ஆஜராகி தன்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம்
அளிக்கவில்லை. வழக்கு இதையடுத்து விஷால் மீதான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரக்கு மற்றும் சேவை வரித்துறை
அதிகாரிகள் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
எனவே குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர அவசியம் இல்லை என வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கூறியதாவது ரூ.500 அபராதம் சேவை வரி அதிகாரிகள் 10
முறை சம்மன் அனுப்பியும் விஷால் வேண்டும் என்றே ஆஜராகாமல் விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
வழக்கு தொடர்ந்த பிறகே சேவை வரி தொடர்பான விவரங்களை விஷால் அதிகாரிகளிடம்
தாக்கல் செய்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டின் மீதான தன்மை குறைவாகவே உள்ளதால்
வெறும் ரூ.500 அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை
காஜல் அகர்வால் கர்ப்பம்- கணவர் செய்த வேலை
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்
கணவருடன் காஜல் அகர்வால்
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால்,
அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர்
கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
என் நாட்டில் மட்டும் தான் இப்படி விழுகின்றன” – சீமான் ஆவேசம்
புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது
. இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது.
இந்நிலையில் , சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை
பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன்
சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா
ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.
ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின்
வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா
மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புவுடன் இணையும் நடிகை
சிம்புவுடன் இணையும் நடிகை
சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய புதிய அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
இறுதி கட்டத்தில் சிம்புவுடன் இணையும் நடிகை
சிம்பு – சிட்தி இட்னானி
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல
வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான்
இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் மற்றொரு கதாநாயகியாக சிட்தி இட்னானி இணைந்திருக்கிறார்.
பாவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிட்தி இட்னானியை படக்குழுவினர் இன்று வரவேற்பு போஸ்டர்
ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, சிட்தி இட்னானி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்
விஜய்
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை
கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்
. செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை
கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகை
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
கணவருடன் லிப்-கிஸ்… வைரலாகும் நடிகையின் புகைப்படம்
கணவருடன் ஸ்ரேயா
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி,
விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி,
தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய
தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா.
அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி
இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி
மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி
சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.
மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி – அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து
அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
சாய் பல்லவி
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில்
உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் படத்தை கண்டு ரசித்துள்ளார்.
யாரும் அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த
வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்
இந்த நடிகை – இந்த அவதாரம் எடுத்தார்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர்
இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.
போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி
வரும் ‘கலியுகம்’ திரைப்படம் இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதால் இத்திரைபடத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
பட வாய்ப்பு இல்லாததால் நடிகையின் திடீர் முடிவு
தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.
நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம்
நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை
குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்.
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை பாலிவுட்டில் தடம் பதிக்க தயாராகவுள்ளார்.
பாலிவுட்டில் களமிறங்கிய பிரபல தமிழ் நடிகை
அமலா பால்
மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில்
ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார்.
தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
அமலா பால்
இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட்
நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.
மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில்
உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்குள் பாடலை நீக்கவில்லை என்றால்…சன்னி லியோனுக்கு மபி மந்திரி எச்சரிக்கை
சன்னி லியோன்
கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை
சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம்
இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
நரோட்டம் மிஸ்ரா
இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம்
பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம்
தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட
பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்
காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்
பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்த நடிகை சுஷ்மிதா சென், காதலரை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
காதலரை பிரிந்தார் சுஷ்மிதா சென்
தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தில்
ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஆர்யா-2’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தன்னைவிட 16 வயது குறைந்த
ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.
காதலருடன் சுஷ்மிதா சென்
இந்த நிலையில் காதல் முறிந்து விட்டதாக சுஷ்மிதா சென் அறிவித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ரோஹ்மனுடனான எனது
காதல் உறவு முறிந்துவிட்டது. ஆனாலும் நண்பர்களாக இருப்போம், அன்பு தொடரும். நீண்டகால உறவு முடிவுக்கு வந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.
ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்
ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்
சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர்.
இந்துக்களை புண்படுத்தும் வகையில் ஆபாச நடனம் – பிரபல கவர்ச்சி நடிகைக்கு சிக்கல்
சன்னி லியோன்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி
லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை தடை செய்யக்கோரி பலரும் கண்டனம்
தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-
கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின்
மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
இவ்வாறு சந்த் நாவல் கிரி மக்ராஜ் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு
பிரிட்டனில் எகிறிய கொரனோ – 122 ஆயிரம் பேர் ஒரே நாளில் பாதிப்பு
பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 122 ஆயிரம்
பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற நிலையில் நாடு இடைக்கால
முடக்க நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா
உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலுக்கு கொரோனா
நடிகர் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் – யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு… காரணம் தெரியுமா?
விஜய் – யுவன் சங்கர் ராஜா
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா
ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.

















