ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

Spread the love

ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.

ஜோடியாக புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின்

வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா

மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *