Tag: இலங்கை
பெண்கள் அறைக்குள் புகுந்தவர் மரணம்
பெண்கள் அறைக்குள் புகுந்தவர் மரணம்
மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி
குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் ஒமிக்ரான் நோயால் மூவர் பாதிப்பு
இலங்கையில் ஒமிக்ரான் நோயால் மூவர் பாதிப்பு
இலங்கையில் ஒமிக்ரான் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவ்வாறு அடையாளம் காண பட்டவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களை பரிசோதிப்பதற்காக பொலிசாரினால் நேற்று (21) விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2,910 ஆகும். முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை 2,640 ஆகும்.
இந்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் சுகாதார விதிமுறைகளை மீறிய 1,901 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழில் மீனவரை மட்டையால் தாக்கிய இராணுவம்
யாழில் மீனவரை மட்டையால் தாக்கிய இராணுவம்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் (20) மீன்பிடிக்க
சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவரான ராஜ்குமார் (வயது 34) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற நேரம் சிவில் உடையில் வந்த ஐவர் அடங்கிய கும்பல்
என்னை விசாரித்தனர். இதன்போது பயந்து நடுங்கிய எனது குடும்பஸ்தவர்கள் எனக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
தொலைபேசி அழைப்பினை தொடர்ந்து நானும் வீட்டிற்கு வந்தேன். அப்போது அங்கிருந்தவர்கள்
எனது கை மற்றும் கால்களை கட்டி விட்டு அவர்கள் வந்த ஜீப்பிற்குள் என்னை ஏற்றிவிட்டு விக்கெட் மற்றும் கொட்டனால் என்னை தாக்கினர்.
இதனால் நான் மிகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளேன். நான் கஞ்சா கடத்தவுமில்லை அவர்கள் என்னிடமிருந்து கஞ்சாவை அவர்கள் மீட்கவுமில்லை என அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்..
14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது
14 வயது சிறுமியை விபச்சாரத்திற்கு விற்ற பெண் கைது
14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, விபசாரத்துக்காக விற்பனைச் செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, அச்சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்துக்கு விற்றுள்ளார்.
கிராண்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண், மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று இவ்வாறு விபசாரத்துக்கு விற்றுள்ளார்.
இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் சந்தேகநபரான அப்பெண், பல்வேறான
வர்த்தகர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
12 வயதில் இருந்தே, அச்சிறுமியை இவ்வாறு இரண்டு வருடங்களாக, விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், பலரும் கைது
செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான அப்பெண்ணுக்கு 32 வயதாகும். இறுதியாக சிறுமியுடன் மீட்கப்பட்ட சந்தேநபருக்கு 38 வயதாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாலிபனை தூக்கி சென்ற பட்டம் – யாழில் நடந்த பயங்கரம்
வாலிபனை தூக்கி சென்ற பட்டம் – யாழில் நடந்த பயங்கரம்
பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.
பருத்தித்துறை – புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.
அப்போது, இரண்டாவது பட்டத்தின் ‘முச்சை’ கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.
சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.
சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.
இலங்கையில் பெட்ரோல் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பெட்ரோல் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் பெட்ரோல் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளது
கடந்த இரவில் இருந்து லீட்டருக்கு இருபது ரூபாவுக்கு மேலாக அதிகரிக்க பட்டுள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
இலங்கை பெற்று கொண்ட கடன் சுமையை மீள திருப்பி செலுத்த முடியாது திணறி வருகிறது
,இதனால் இந்த விலைகளில் மாறுதல்கள் ஏற்பட காரணம் என தெரிவிக்க படுகிறது
Accordingly,the price of a litre of Petrol (92 Octane) has been increased by Rs 20 (from Rs 157 to 177), Petrol (95 Octane) increased by Rs. 23 (from Rs 184 to 207),
Auto Diesel increased by Rs. 10 (from Rs 111 to 121), Super Diesel increased by Rs.15 (from Rs 144 to 159) while Kerosene increased by Rs. 10, (from Rs 77 to 87)
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கையில் பல நாடுகளாக மோட்டார் சைக்கிள் திருடி விற்று வந்த கும்பல் ஒன்றினை
காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் ஊந்துருளி
,மேலும் அதனை பாகங்களாக்கி பிரித்து வைக்க பட்டிருந்த நிலையிலும் பலது மீட்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
தூக்கில் தொங்கும் மனித உடல்கள் – அதிர்ச்சியில் மக்கள்
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீட்டு ஒன்றில் வசிக்கும் குடும்பஸ்தர் வீட்டு கதவு வாயிலில் தூக்கில் தொங்குவதை கண்ட அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 34 வயதுடைய பெரியசாமி நாகராஜன் என்பவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒருலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
ஒருலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு ஓட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடி
சென்றுள்ளனர் என வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
இவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறு வீடுகளில் வேலை புரிந்திட சென்ற பெண்களில் பலர் படுகொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது
தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
தெஹிவளை சூவில் 38 விலங்குகள் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தெஹிவளை மிருக காட்சி
சாலையில் பார்வைக்கு வைக்க பட்டிருந்த 38 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,இவற்றில் மூன்று முயல்கள்கள் 12 பறவைகள் உள்ளிட்டவை அடங்கும் என சுட்டி காட்ட பட்டுள்ளது
பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது
பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.
மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஜீப், யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து பயங்கரவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது. அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியுள்ளார்.
இந்த வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.
கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.
தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதை குறிப்பிட்டார்.
பாடசாலைகள் 2021 டிசம்பர் 23 அன்று மூடப்பட்டு, புதிய கல்வியாண்டிற்காக 2022 ஜனவரி 03 அன்று மீண்டும் திறக்கப்படும்.
கொரோனா காலக்கட்டத்தில் விடுபட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியிருப்பதால் முதல் தவணை ஏப்ரல் மாதத்துடன் முடிவடையும்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 3ஆம் வாரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரியிலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் முதல் ஜூன் மாதம் வரையும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை சற்று தாமதித்து ஏப்ரலில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
இது தொடர்பான சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டு தற்போது வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் அதனை பயன்படுத்தி அனுமதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
விடுபட்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஏனைய தரங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தரம் ஒன்றின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நாடுகளை பகைத்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில்
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வின் பின்னர் சீன உரக் கப்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய
கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இங்கு பேச வேண்டியது பண விவகாரம் , குறித்து அல்ல இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே கவனிக்க வேண்டியுள்ளது எனவே அதை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதில் எனக்கு
எந்தத் தவறும் தெரியவில்லை யாராவது தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு , நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.
6.5 மில்லியன் டொலர் களுக்காக நாட்டுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் தீர்ப்பது என்பதுதான் முதலில் பார்க்க வேண்டிய விஷயம்.
மக்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும்.சில தவறுகள் உள்ளன. வரலாற்றில் இது முதல் சம்பவம் இதுவல்ல . தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்து பரீட்சார்த்தமாக புதிய முயற்சி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்.இதனால் அரசு திடீரென சேதனப் பசளை கொண்டு வந்து மாதிரிகளை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது நமக்கு ஒத்து வரவில்லை. இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது
நாடுகளை பகைத்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது – அமைச்சர் ஜோன்ஸ்டன்
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் குருநாகல் பதிவாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வின் பின்னர் சீன உரக் கப்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இங்கு பேச வேண்டியது பண விவகாரம் , குறித்து அல்ல இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்தே கவனிக்க வேண்டியுள்ளது எனவே அதை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்தது. நாடுகளுடன் பணியாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை யாராவது தவறு செய்தால், அந்த தவறை கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கு முன் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படப் போகும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடன்பாடு ஏற்பட்ட பிறகு தவறு , நடந்திருந்தால் பணத்தை செலுத்த வேண்டும்.
6.5 மில்லியன் டொலர் களுக்காக நாட்டுடன் கோபப்படுவதா அல்லது அமைதியான முறையில் தீர்ப்பது என்பதுதான் முதலில் பார்க்க வேண்டிய விஷயம்.
மக்களை மனதில் வைத்துத்தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்க வேண்டும்.சில தவறுகள் உள்ளன. வரலாற்றில் இது முதல் சம்பவம் இதுவல்ல . தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.
சேதனப் பசளை ஊடான விவசாயம் குறித்து பரீட்சார்த்தமாக புதிய முயற்சி செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்.இதனால் அரசு திடீரென சேதனப் பசளை கொண்டு வந்து மாதிரிகளை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது நமக்கு ஒத்து வரவில்லை. இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான செயற்பாடு காரணமாக நாம் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்க முடியாது. அதனால் லாப நஷ்டத்தை ஏற்க வேண்டியுள்ளது. நாடுகளை கோபித்துக்கொண்டு பயணம் செய்ய முடியாது
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் முறையாக முகக்கவசம் அணியாத 1,831 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 778 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், மேல் மாகாணத்தில் நேற்று(19) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 3,021 மோட்டார் சைக்கிள்கள், 2,645 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7,810 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
தகுதியற்ற நியமனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் “வேந்தர்” பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தற்போதைய அரசாங்கம் நியமித்தமைக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு
பல்கலைக்கழகத்தின் பிரதான மாணவர் ஒன்றியம் என்பன தமது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
அரசியல் ரீதியான திருப்திப்படுத்தலுக்கே குறித்த நியமனம் தேரருக்கு வழங்கப்பட்டதாக பலர் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இங்கு பட்டம் பெற வந்த மாணவர்கள் முருத்தெட்டுவ ஆனந்த தேரரிடம் இருந்து
தமது பட்டத்தை பெறாமல் அரங்கில் தமது எதிர்ப்பை பதிவு செய்து சென்றனர்.
குறித்த எதிர்ப்பை பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் கொழும்பு பல்கலைகழக சட்டபீடத்தை
சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு பலர் உயர் நீதிமன்றத்தில்
சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்தவர்கள் என்பதும் சிறப்பான தகவல்.
முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) குறித்த நிகழ்வைப் புறக்கணித்துள்ளன.
தற்போதைய இனவாத அரசாங்கத்திற்கு எதிராக தமது பலமான எதிர்ப்பை துணிந்து செயலில் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எம்பி சிறிதரன் இவ்விதம் பதிவிட்டுள்ளார்
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
காணாமல் போன 13 வயது சிறுமி – பற்றைக்குள் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின்புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி கடந்த 15 ஆம் முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு
பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று (15) மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில், 13 அகவையுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில்
தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூங்கிலாறு வடக்கு 200 வீட்டுத்திட்ட தனியார் பற்றைக்காணி ஒன்றில் இருந்தே குறித்த சடலம் இன்று இனங்காணப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்துக்கும் இவரின் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 400 மீற்றர் வரையிலேயே
காணப்படுகிறது சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
நீதிபதி வீட்டில் புகுந்து தாலி கொடியை திருடி சென்ற திருடர்கள்
இலங்கை மட்டு அக்கரைப்பற்று பகுதியில் உள்ள நீதிபதி ஒருவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்
அவரது மனைவியின் 11 பவுன் தாலிக் கொடியை திருடி சென்றுள்ளனர்
திருடர்களை மடக்கி பிடிக்க நீதிபதி முயன்ற பொழுது அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்
மேற்படி குற்ற செயல் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை
கொள்ளையடித்து செல்ல பட்டது
மேற்படி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் கைது செயய் பட்டதுடன்
இவர்களிடம் இருந்து திருட பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்க பட்டுள்ளன
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது
இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்
தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன
கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்







