Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீ எனக்கு வேண்டாம் …!

நீ எனக்கு வேண்டாம் …!

கொரனோ காதலா ..? – என்னை
கொன்று போக வா
விருது வாங்கி தாரேன் – என்னை
விடுதலை செய்ய வா

இரண்டாம் அலையாக
இதயம் நுழைய வேண்டாம்
நுரை ஈரல் கருக்க – நீ
நுழைந்து விட வேண்டாம்

அன்று முதல் நாள்
அத்தனை ஆனந்தம்
இன்று உடைந்தது
இதயம் சிதைந்தது

வேரை அறுக்க வா
வேதனை தொடுத்தாய் …?
இதயம் கிழிக்க வா
இத்தனை செய்தாய் …?

மறந்து விடுகிறேன்
மரணம் தந்திடு …
உந்தன் செயல் வெற்றியே
உள்ளம் மகிழ்ந்திடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -05-10-2020

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

மறந்து விட முனையாதே …!

மறந்து விட முனையாதே …!

கால் பந்தாய் அடித்தென்னை
களைத்து போயிருப்பாய்
கோபம் தனிய முன்
கொளுத்தி விடு என்னை ….

வேண்டாம் என்றென்னை
வேலி போட்டிருந்தாய்
ஆயினும் இன்றென்ன
அலை காற்றாய் நுழைந்து விட்டேன்

சிந்தையில நீ இருந்து
சிலுக்கா ஆடையில
முந்தைய நினவுவுகள்
முளை அறுமா கூறு …?

வெட்டி வைத்த ஆற்றுக்குள்
விரைந்து வரும் நீராய்
புகுந்து விட்டாய் நெஞ்சுக்குள்
பூவை மறப்பேனா …?

மறந்து விட என்னை
மறுபடியும் முனையாதே
தொடும் வரை உன்னை
தொடர்வேன் மறவாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -03-10-2020

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீயா இறந்தாய் ..?

நீயா இறந்தாய் ..?

பாடு நிலா -எங்கள்
பாட்டு தலைவன்
பாடையில போறான்
பாலு எங்கள் நண்பன்

உன்னை கொல்ல கொரனோ
உள்ளம் விட்டதாரு ..?
உன்னை இழந்து தவிக்க
உலகில் வைத்ததாரு …?

பாலா இன்று வருவாயா
பாட்டு ஒன்று தருவாயா ..?
காலனே உயிர் தருவாயா
கை தட்டுகிறோம் விடுவாயா …?

சொந்தம் என்று சொல்ல
உள்ளம் நின்றவன்
எம் ஏக்கம் தனித்து
எழுந்து நடக்க வைத்தவன்

வெந்து மனம் நோக
வேக வைத்த ஆண்டவனே
உந்தன் செயல் தகுமா
உண்மையில் நீ இறைவனா …?

கொடிய அணுகுண்டாய்
கொரனோ நுழைந்ததே
உடல் உறுப்பை தின்றே – உன்
உயிர் குடித்ததே

பாடு நிலா உதிர்ந்ததே
பால் நிலவும் இருண்டாதே
வீடு வந்த கீதம்
விடியல் இழந்து போனதே …!

-வன்னி மைந்தன் –
25-09-2020

நீயா இறந்தாய் ..?
நீயா இறந்தாய் ..?
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உயிரே இதயம் மாறாதே

உயிரே இதயம் மாறாதே

உன் முகம் என் விழியில்
ஊர்வலம் போகுதே
உள்ளம் மட்டும் ஏனோ
உனக்காய் ஏங்குதே ….

தவம் என்ன கொண்டாயோ – இதயம்
தந்திட மறுக்கிறாய் …?
வரம் என்ன சொல்லிடு
வாங்கி தந்திட மாட்டேனோ ..?

ஓடும் நதி எல்லாம்
கடலில் தானே கலக்குதே
ஆண்கள் மனம் எல்லாம்
அடி பெண்ணில் தானே மிதக்குதே

வீசும் காற்றிலே
வீதி எங்கும் குப்பையே
கொட்டும் மழையிலே
கொடும் கறைகள் கழுவதே

இயற்கை நிலைகளோ
இது தான் காணாய்
இதயம் தந்திட – நீ
இன்று ஏனோ மறுக்கிறாய் …?

வன்னி மைந்தன்
ஆக்கம் -09-11-2020

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    என்னை கைது செய்

    என்னை கைது செய்

    மரம் கொத்தி போலாகி – உன்
    மனம் கொத்த போறேண்டி
    மாளிகையை கட்டி விட
    மனதை நீ தந்திடடி

    செயல் இழக்க ஏவுகணை
    செலுத்த நீ வேணாண்டி
    செவ்வாயில் இறங்கிடுவோம்
    செவ்விதலே வந்திடடி

    முத்து மணி பல்வரிசை
    முன்னே என்னை இழுக்குதடி
    முழுமதியே உன் உடலில்
    முழுதா மனம் சொக்குதடி

    விற்ற மீன் மாத்திரையாய்
    விவேகம் தந்தவளே
    கந்தக ஆலையிலே
    கன ரகம் செய்யாதே

    இறுதி போர் முற்றுகையாய்
    இதயத்தை வைக்காயோ ..?
    இலங்கை இராணுவமாய்
    இன்று கைது செய்யாயோ ..?

    வன்னி மைந்தன்
    ஆக்கம் -04-08-2020

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நீ வேண்டும் எனக்கு …!

      நீ வேண்டும் எனக்கு …!

      ஆழ குழியெடுத்து
      அடியே நீ புதைத் தாலும்
      வேர் பிடித்து நான் எழுவேன்
      வேண்டும் வரம் பெற்றிடுவேன்

      ஆழ நெஞ்சுக்குள்
      அடியே நான் நினைத்து விட்டேன்
      சாகு முன்னே நான்
      சக்களத்தி கை பிடிப்பேன்

      பிடிக்கலை என்றென்னை
      பின் தொடரா போபவளே
      பிடித்திருக்கு உனை எனக்கு
      பிரியத்தை என் செய்வேன் …?

      தனியே நீ போகையில
      தற்காப்பு தருகிறேன்
      பிரியத்தை கண்டேனும்
      பிள்ளை மனம் மாறாயோ …?

      உன் உரிமம் எனக்கென்று
      உயில் எழுதி தந்து விடு
      பின் தொடரா போகிறேன்
      பிரியமுடன் உனை விட்டு

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -06-08-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இவன் தான் மனிதன்

      இவன் தான் மனிதன்

      சாதியில் இவனொரு சலவை
      மதியில் இவனொரு கலவை
      அன்பால் அணைத்த தந்தை
      அழுதாள் இங்கொரு மங்கை

      நனைந்தன எந்தன் விழிகள்
      நடந்தன எந்தன் நடைகள்
      பறந்தன எந்தன் கவலை
      முளைத்தன புதிய சிறகு

      கற்றது பள்ளியில் குறைவு
      கற்றேன் இங்கே நிறைவு
      விதையை எனக்குள் விதைத்த
      வித்தக மனிதன் என்றேன்

      இரு நாள் இவரை படித்தேன்
      இதயம் மலர்ந்து கனத்தேன்
      ஒரு நாள் உன்னை பார்ப்பேன்
      ஒன்றாய் இருந்து சுவைப்பேன்

      அந்த நாளை வளர்ப்பேன்
      அதற்காய் இன்றே உழைப்பேன்
      அனுபவம் உயர்ந்த கல்வி
      அதனை தந்தது உந்தன் செவ்வி

      -வன்னி மைந்தன் –
      06-08-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      உன் இறப்பு நாளை …!

      உன் இறப்பு நாளை …!

      ஊரெல்லாம் விளம் பரமாய்
      உடல் காட்டி போறவளே
      எவன் வந்து உனை பிடிக்க
      ஏன் இந்த விளம்பரமோ …?

      காந்தியது சத்தியத்தை
      கடை பிடிக்க வந்தாயோ ..?
      கஞ்ச தன ஆடை வெட்டி
      காவேரி நடந்தாயோ ..?

      ஊரெல்லாம் எச்சியில
      உனை கழுவி ஊற்றுதடி
      ஊரடங்கு போட்டு விட
      ஊர் சபை துடிக்குதடி

      அழகு ராணி போட்டியில
      அரங்கேற்றம் செய்தாயோ ..?
      அடியே உன் காலடியை
      ஆடவர்கள் நொதியாதோ …?

      விலை மாது என்றார்கள்
      விவரம் இது வாச்சோ..?
      உயிர் கொல்லி நோய் ஒன்று
      உனை உருக்க காத்திருக்கு ….!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -05-08-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

      என்னை மறந்தவளுக்கு இறுதி மடல் …!

      அகமெல்லாம் கோடையது
      அக்கனியாய் கொதிக்கிறது
      விழியேனோ மார்கழியாய்
      விழுந்தேனோ நனைகிறது

      நெஞ்சேனோ நித்தம் – உன்
      நினைவால் துடிக்கிறது
      கத்தும் கடல் அலை போல
      கரை தேடி அலைகிறது

      பகல் எல்லாம் தேடுகிறேன்
      பாலை வனம் ஆகிறது
      இறுதி போர் முற்றுகையாய்
      இதயம் ஏன் இருக்கிறது …?

      நான் இட்ட முத்தத்தை
      நகல் எடுத்து இன்று வை
      நான் இறந்த பின்னாலே
      நாளும் நீ ருசித்து வை

      ஒன்றாக இருக்கையிலே
      ஓராயிரம் சண்டைகள்
      ஒருமையில வாடையில
      உனை வாட்டும் தனிமைகள்

      காரணங்கள் ஏதுமின்றி
      கல் எறிந்தாய் நெஞ்சமதில்
      விட்டெறிந்து நீ போனாய்
      விழுந்து விட்டேன் நோயதினில்

      பிணம் எடுக்கும் வேளையில
      பிரண்டழுவாய் நீ மட்டும்
      பின்னே வந்த மாதங்களில்
      என்னை மறப்பாய் நீ முற்றும்

      மறத்தல் தான் வாழ்வினிலே
      மனதிற்கு நின்மதி
      மரண ஓட்டம் தான்
      மனிதனின் தலை விதி

      எதை எடுப் பாய் எதை எறிவாய்
      எண்ணிப் பாய் நீ தான்
      என் மனதில் உள்ளவற்றை
      எழுதிவிட்டேன் மன்னிப்பாய் ..!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -03-08-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      உன்னை காப்பாற்று ….!

      உன்னை காப்பாற்று ….!

      கொழும்பு நகர் வீதியிலே
      கொழுத்து பருத்து போறவளே
      பரா ஊர்தி வருகுதடி
      பார்த்து சாலை போயிடடி

      கட்ட காலி நாய்கள் எல்லாம்
      கால் வைத்து நடக்குதடி
      கிழிந்த ஆடை உடல் காட்டி
      கிளிப்புள்ள போகையில

      நாய் வந்து கடிக்காத
      நாராய் தான் உரிக்காத …?
      கற்பை தின்று உடல் வீசும்
      கடை வீதி திறக்காதே

      சுதந்திர நாட்டுக்குள்
      சுட்டு காட்டை விதைக்காதே
      பெண் எல்லாம் அழகி என்ற
      பேரழகை துவைக்காதே

      கறுப்பு தார் வீதியில
      கால் வைத்து போகையில
      வீடு வர வேண்டுமடி
      வேண்டி நீ நடந்திடடி

      வன்னி மைந்தன் (ஜெகன் )
      ஆக்கம் 30-06-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஏ மனமே கவலை விடு …!

      ஏ மனமே கவலை விடு …!

      ஈர் விழியில் நீர் தாங்கி
      இடிந்து போய் நிற்பவளே
      உன் பாதி சுமை தாங்கி
      உதவுகிறேன் வா மகளே

      ஊற்றெடுக்கும் கண்ணீரை
      உள்ளே கொஞ்சம் அடைத்து விடு
      உள்ளத்தில் தென்பை மட்டும்
      உரமாக ஏற்றிவிடு

      ஓடி வரும் தோல்விகளை
      ஓரமா எறிந்து விடு
      ஓட கொஞ்சம் காற்றும் கொண்டால்
      ஓடி விடும் தெரிந்து விடு

      ஏறும் போதே படிகளை
      எண்ணி நீ ஏறி விடு
      எண் கணக்கு சரி என்றால்
      ஏற்றம் வரும் கொஞ்சி விடு

      திட்டங்கள் இரண்டு வைத்து
      தினம் தோறும் நடந்து விடு
      துரத்தி வரும் துயர் எல்லாம்
      துகள்களாகும் புரிந்து விடு

      எவரெஸ்ட்டாய் என்றுமே
      எண்ணி நீ நடந்து விடு
      எவரெஸ்ட்டாய் நீ இருப்பாய்
      ஏ மனமே கவலை விடு

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -30-07-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      எப்படி நம்புவேன் …?

      எப்படி நம்புவேன் …?

      நீ நினைத்த போதெல்லாம்
      நிற்காமல் வந்தவன்
      நீ அழைத்த போதினில்
      நிற்காமல் போபவன்

      ஏன் என்று கேளாது
      ஏராளம் செய்தவன்
      ஏய் நீ கேட்டுமே – இப்போ
      ஏதுமே செய்யாதவன்

      போலி என்று உன்னை
      பொறுப்புடன் கண்டபின்
      நான் தேடி வருவேனா ..?
      நம்பிக்கை நடுவேனா …?

      காயங்கள் ஏராளம்
      கட்டிகளாய் நெஞ்சுக்குள்
      வலிக்கிறது விழி
      வழி எலலாம் கண்ணீர்

      கோபத்தில் அறைந்திருந்தால்
      கோடி மகிழ்ந்திருப்பேன்
      ஏமாற்றி நடக்கையில
      எப்படி நம்புவேன் …?

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -29-07-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      காதலிக்க சம்மதமா ….?

      காதலிக்க சம்மதமா ….?

      பாவாடை தாவணியில்
      பாவை நீ போகையில
      உன்னை விழி தொடருதே
      உடைந்து மனம் வாடுதே

      தோகை மயில் கூந்தலில
      தொங்கும் பூ வாசத்திலே
      மனது மயங்குதே
      மானே உன்னை தேடுதே

      வீசும் காற்றில் கையை வீசி
      விடலை நீ போகையில
      உன்னை விழி தொடராதோ …?
      உயிரே அணைக்க துடிக்காதோ …?

      சின்ன விழி பார்வையில
      சிரித்து நீ போகையில
      தேவைதையை தேடேனோ
      தெரு தெருவா சுற்றேனோ …?

      ஒத்த நொடி உன்னை கண்டு
      உலகை மறந்தேனே
      இந்த உயிர் வாழ்ந்திடவே
      என் உயிரே நீ வேண்டும்

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -25-07-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      ஆழ போறான் தமிழன் …!

      ஆழ போறான் தமிழன் …!

      அண்ணன் வாரார் அண்ணன் வாரார்
      வழியை விடுடா
      ஆகாயத்தில் பறக்க போறார்
      விண்ணை கொடுடா

      ஆட்டிலறி குண்டு
      அசைந்து வரும் நண்டு
      கனத்த நிரை எறும்பு
      காவல் நாட்டின் குறும்பு

      இவன் வந்தா போதும்
      ஈர் விழியும் மலரும்
      காற்று கூட இறக்கை கட்டி
      கை தட்டி ஆடும்

      ஓட்டை போட்டு பாரு
      நாட்டை பின்ன பாரு
      வீடும் வசந்தமாகும்
      வீதி விசிலடிக்கும்

      லஞ்சம் இல்லா கஞ்சன்
      லட்சியத்தின் மன்னன்
      ஆள போறான் நாடு
      வாழ போறான் தமிழன்

      வன்னி மைந்தன்
      ஆக்கம் -18-07-2020

      Posted in சினிமா வன்னி மைந்தன் கவிதைகள்

      தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்

      தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்

      நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர் அவர். காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த

      முத்துக்குமார் சிறு வயதில் தாயை இழந்தவர். எழுத்தின் மீது கொண்ட காதலால் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு

      . பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் என்ற

      திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார்.

      உன் பேர் சொல்ல ஆசை தான், எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை தொடங்கி எந்திரன் 2.0 படத்தில் ரம்யமாய் ஒலித்த

      புல்லினங்காள் என்ற பாடல் வரை 200கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான

      தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

      2014ம் ஆண்டு சைவம் என்ற படத்தின் வந்த “அழகே, அழகே” என்ற பாடலுக்கும் இவர் தேசிய விருது பெற்றார். மஞ்சள் காமாலை

      நோயினால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த முத்துக்குமார் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி

      உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை பின்வருமாறு…


      என் தந்தை.
      என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்,
      அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்.
      என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்,
      அவர் எங்கள் காட்டில் சிங்கம்.


      என் தந்தையின் வரிகள் முத்து,
      அவர்தான் எங்களின் சொத்து.
      என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
      அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்.


      என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா,
      எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா.
      எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா,
      இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா.

      -மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்…

      தந்தைக்கு கவி மாலை
      தந்தைக்கு கவி மாலை
      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு

      கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு

      பர பரப்பு பேச்சு
      விறு விறுப்பா போச்சு
      பார்க்கும் இடமெல்லாம்
      சிறுமி கொலை பேச்சு

      பெற்றவளே கொன்றாளாம்
      பெரும் துயரை தந்தாளாம்
      இத்துயரை தந்திட தான்
      இவ்வுலகில் பிறந்தாளாம்

      பத்து மாதம் சுமந்தவளே
      பாதகத்தை செய்தாளாம்
      கத்தி தனை எடுத்து
      குற்றறையில துடித்தாளாம்

      பெற்றவனை குளிக்க விட்டு
      பெரும் கொலையை செய்தாளாம்
      கத்தி தங்கை அழுகையிலே
      கதறி ஓடி வந்தானாம்

      நித்திரையாய் தங்கையவள்
      நிலை குலைந்து கிடைக்கையில
      கத்தி கத்தி அழுதானம்
      களைத்து அவன் விழுந்தானாம்

      பெற்றவளும் உற்றவளும்
      பெரும் வலியில் துடிக்கையில
      வீடெல்லாம் குருதியில
      வெள்ளமாக ஓடையில

      எப்படித்தான் துடித்திருப்பன்
      என்ன தான் நினைத்திருப்பான் ..?
      அப்பப்பா அவன் வலியை
      யாரிடம் தான் சொல்லிருப்பான் …?

      தனிமையில சில நிமிடம்
      தம்பியவன் நிலையிழந்தான்
      ஓடி வந்த காவல்துறை
      ஒத்தியவன் அணைத்திருப்பான்

      பொத்தி பொத்தி வளர்த்தவளை
      பொன்மகளாய் இரசித்தவளை
      குற்றிட தான் முனைந்ததென்ன -உயிர்
      குடித்திட தான் துடித்ததென்ன …?

      கட்டி அம்மா முத்தமிட்டு
      கதைகள் பல சொல்லி நன்று
      நம்பி நாளும் நின்றவளை
      நரபலி எடுத்ததென்ன …?

      அகவை ஐந்து ஆக முன்னே
      ஆவியை தான் தின்றவளே
      நீ இருந்து என் காண்பாய்
      நினைவுடனே தினம் சாவாய்

      பொல்லாத மான நோயால்
      பொலி விழந்து போனவளே
      இந்த நாளில் கொலையாகி
      இதயம் இல்லா போனாயே

      உன் மனதை மகிழ்வூட்ட
      உன்னாலே முடியலையோ …?
      உன் அருகில் நண்பர்கள்
      உயிராகி கூடலையோ …?

      அழகான உறவுகளை
      அடியேன் யான் கண்ணுற்றேன்
      அவர் காணும் ஓடி வந்து
      ஆறுதல் கூறலையோ …?

      பொல்லாத நினைவுகளை
      பொறுக்கி வந்தது தந்தது யார் …?
      கல்லாகி மனம் போக
      கனி மரத்தை வைத்தது யார் …?

      லண்டன் மா நகரிலே
      லட்சங்கள் அழுகிறது
      நாள் தோறும் சாயகியால்
      நலிந்துடல் மாய்கிறது

      பெற்றவளே கொன்றாளாம்
      பெரும் துயரை தந்தாளாம்
      இத்துயரை தந்தவளை
      இவ்வுலகு இழிந்தாராம்

      வன்னி மைந்த னிவன்
      வலிகளை கொட்டி விட்டேன்
      வாங்கி வந்த செய்திகளை
      வாரியாக்கி வைத்து விட்டேன்

      ஆவி துறந்தவளே
      அஞ்சலிகள் உனக்கம்மா
      ஆறா துயரோடு
      விடை பெற்றேன் நான் அம்மா ….

      02-07-2020

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      கொலையான பூ …!

      கொலையான பூ …!

      சின்ன சிரிப்பழகி
      சிவந்த உடல் அழகி
      ஆளுமை பேரழகை
      அவனியில் இழந்தோமே

      பெற்ற தாயவளே
      பெரும் துயர் தந்திடவே
      கண்ணீர் உடைகிறது
      கத்தி விழி அழுகிறது

      ஒப்பாரி சத்தங்கள்
      ஓயா ஒலிக்கிறது
      வேரை அறுத்த செயல்
      வேதனை கொதிக்கிறது

      தப்பான சிந்தையால்
      தவறாகி போனது
      அப்பாக்கள் உழைப்பெல்லாம்
      அலங்கோலம் ஆனது

      என்ன நினைத்தாளோ ..
      ஏன் இதை செய்தாளோ ..?
      தாங்கி பெற்றவளோ
      தாயே எமன் ஆனாள்

      நெருக்கடி உனை வாட்ட
      நொறுங்கி நீ வாட
      கொங்கை பால் தந்தாள்
      கொலையது செய்தாளோ …?

      வன்னி மைந்தன்( ஜெகன் )
      ஆக்கம் -01-07-2020

      லண்டன் மிச்சம் சிறுமி கொலை - விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
      லண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்
          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

          உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

          விழுந்து விழுந்து எழ வேண்டும்
          விடுதலை அதிலே பெற வேண்டும்
          தோல்வி சுற்றி படராது
          தோல்விக்கு அச்சம் தொடராது

          முடியும் என்று முன்னேறு
          முடிவு எழுதும் வரலாறு
          விழியில் நீரை சுமந்து
          விழுந்து அழுதல் கூடாது

          வலியை கண்டு வாடாதே
          வரும் தடைகள் கண்டு அஞ்சாதே
          ஒரு நாள் வெல்வாய் போராடு
          ஓலம் ஒழியும் நீ ஓடு

          விட்ட தவறை ஆராய்வாய்
          விரைந்து தீர்வு காண்பாய்
          வெற்றி இன்று அழைக்கும்
          வெடி கொளுத்தி பார் மகிழும்

          உலகம் உன்னை மொழியும்
          உயிரே என்று பாடும்
          இறந்தும் நீயே வாழ்வாய்
          இது தான் வேண்டும் காண்பாய்

          வன்னி மைந்தன் (ஜெகன் )
          ஆக்கம் 26-06-2020

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உன்னை நம்பு வெற்றி உனக்கு

          உன்னை நம்பு வெற்றி உனக்கு

          விழுந்து விழுந்து எழ வேண்டும்
          விடுதலை அதிலே பெற வேண்டும்
          தோல்வி சுற்றி படராது
          தோல்விக்கு அச்சம் தொடராது

          முடியும் என்று முன்னேறு
          முடிவு எழுதும் வரலாறு
          விழியில் நீரை சுமந்து
          விழுந்து அழுதல் கூடாது

          வலியை கண்டு வாடாதே
          வரும் தடைகள் கண்டு அஞ்சாதே
          ஒரு நாள் வெல்வாய் போராடு
          ஓலம் ஒழியும் நீ ஓடு

          விட்ட தவறை ஆராய்வாய்
          விரைந்து தீர்வு காண்பாய்
          வெற்றி இன்று அழைக்கும்
          வெடி கொளுத்தி பார் மகிழும்

          உலகம் உன்னை மொழியும்
          உயிரே என்று பாடும்
          இறந்தும் நீயே வாழ்வாய்
          இது தான் வேண்டும் காண்பாய்

          வன்னி மைந்தன் (ஜெகன் )
          ஆக்கம் 26-06-2020

          வன்னி மைந்தன் கவிதைகள்

          நமது பேஸ்புக் கவிதை குழுவில் இணைய பார்க்க இதில் அழுத்துங்க

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              முடிந்தால் வென்று பார் …!

              முடிந்தால் வென்று பார் …!

              தொங்கும் பதாகையில்
              தொல்லை நீங்கிடுமா ..?
              தங்கள் மொழி வாக்கு
              தமிழரில் பலித்திடுமா ..?

              கருணை அம்மானே
              காட்டி கொடுத்தவரே
              வீடுகள் தேடுகின்றீர்
              விவரம் என்னாச்சு ..?

              அறிவில் பூத்தவராம்
              அகிலத்தில் மூத்தவராம்
              தொங்கும் பட்டியலில்
              தொலையா இருப்பவராம் ….

              கறுப்பு கண்ணாடி
              கலராய் முன்னாடி
              இருட்டாய் தெரிகிறதா ..?
              இல்லை ஏதோ புரிகிறதா ..?

              வதை பட்டார் இழப்பீடு
              வாங்கி சென்று விடு
              வெற்றி மகனா …?- எங்கே
              வென்று காட்டி விடு ….!

              வன்னி மைந்தன் (ஜெகன் )
              ஆக்கம் 23-06-2020

              முடிந்தால் வென்று பார்
              முடிந்தால் வென்று பார்