Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழில் சிதறிய தீயணைப்பு வண்டி – ஒருவர் பலி
யாழில் சிதறிய தீயணைப்பு வண்டி – ஒருவர் பலி
யாழ்ப்பாணத்ம் பருத்துறை மாமலக்காடு பகுதியில் பற்றி பிடித்த தீயினை அணைக்க விரைந்து சென்ற தீயணைப்பு வண்டி ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதால் ,அந்த வாகனத்தை
ஓட்டி சென்ற சாரதி பலியாகியுளளார் .மேலும் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்
மக்களை காப்பாற்ற விரைந்த வண்டி ,இவ்விதம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

அமெரிக்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு – கடும் கண்டனம் – பயத்தில் டிரம்ப்
அமெரிக்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசு – கடும் கண்டனம் – பயத்தில் டிரம்ப்
சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்றங்களுக்கு நீதி கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான
காவல்துறை மிருகத்தனத்தையும் ஊறிப்போன இனவெறியையும் எதிர்த்து நாள்தோறும் தெருவிலிறங்கிப் போராடும் கிளர்ச்சியாளர்களுக்குத் தோழமை தெரிவித்துள்ளது.
வெள்ளைக் காவல்துறை அதிகாரி ஒருவரால் ஆபிரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் பிளோய்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கிளர்ச்சிகள் நடந்து
வருகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்கா எனப்படும் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களாகிய ஈழத்தமிழர்கள் மனிதத் தன்மையற்ற அமைப்புசார் இனவெறிக் கொடுமையின் வலியை நன்கறிவார்கள். ஏனெனில் 1948இல்
இப்போது சிறிலங்கா எனப்படும் சிலோன் தீவு பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற நாள் முதல் சிங்கள பௌத்தப்பேரினவாதிகளின் கைகளிலும் பேரினவாத
நிறுவனங்களின் கைகளிலும் அவர்கள் இந்த இனவெறிக் கொடுமையைப் பட்டறிந்தவர்கள்.
ஆண்டாண்டு காலமாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும்போதும் அடக்கியொடுக்கப் பட்டவர்களாகவே இருப்பது எப்படி இருக்கும் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கறிவார்கள்.
‘போதும் நிறுத்து!’ என்ற முழக்கத்தோடு தெருவிலிறங்கிப் போராட எவ்வளவு துணிவும் உறுதியும் வேண்டும் என்பதையும் ஈழத் தமிழர்கள் அறிவார்கள். அறுபதுகளிலிருந்து சிறிலங்காவில் இன
பாகுபாட்டுக் கெதிராகப் போராடிய தமிழ் மாணவர்கள் மீது காவல்துறை ஏவிய மிருகத்தனத்தையொட்டித் துணிந்து தெருவிலிறங்கியவர்கள் ஈழத்தமிழர்கள். அந்த நேரத்தில்தான்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு சி, கதிரவேற்பிள்ளை அவர்கள் இலங்கையின் இனவெறியைத் தென் ஆபிரிக்காவில் கண்ட அப்பார்த்தேயிட்
இனவெறியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததோடு ‘சிறிலங்காவில் இனவெறி தோலில் ஒட்டியிருப்பதன்று, அது ஆன்மாவில் ஆழ ஊன்றியிருப்பது’ எனச் சொன்னார்.
அந்நாட்டின் இனவெறிப் பாகுபாடு கல்வித்துறை உட்பட வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பரந்து ஊறிக் காணப்படும் ஒன்று. தரப்படுத்தல் என்ற பெயரிலும் ‘சிங்களம் மட்டும்’ என்ற
சட்டத்தினூடாக வேலை வாய்ப்பு வழங்கலிலும், நிலப் பறிப்பு மூலம் குடியேற்றம் செய்வதிலும் பல வடிவங்களில் இது வெளிப்படுத்தப் படுகிறது. சிறீலங்காவின் இன்றைய ஆட்சி கடந்த வாரத்தின்
போதும் கூட புதைபொருள் ஆய்வு, பாரம்பரியம் பேணல் என்ற பெயர்களில் எல்லாம் புதிய செழுமையான தோற்றம் கொண்ட நிலப்பறிப்பு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது.
மேற்கூறிய அதே ஆன்ம நோய் அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்காவில் இனவெறி அந்நாடு அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கியது போலவே சிறிலங்காவிலும்
உள்ளது. 2017ஆம் ஆண்டு மனிதவுரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் போற்றிக் காத்தல் பற்றிய அப்போதைய சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்கா போய்வந்த பிறகு
‘சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ‘தமிழ் மக்களுக்கு எதிராக அளவுகடந்து’ பயன்படுத்தப்படுகிறது. சிறிலங்காவில்
தமிழர்கள் ‘அரசின் திறமான சித்திரவதைப் பொறியின் தாக்குவிசையைத் தாங்கியுள்ளனர்’ எனக் கூறினார்.
பாகுபாட்டிலிருந்து விடுபடும் உரிமை ஓர் அடிப்படை உரிமை. அனைத்து வகை இனப்பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான பன்னாட்டு ஒப்பந்தம் 1965ஆம் ஆண்டு ஐநா பொதுப் பேரவையால்
இயற்றப்பட்டது. அது கூறுவதாவது: உலகளாவிய மனிதவுரிமைப் பிரகடனம் பறைசாற்றுவது என்னவென்றால், மாந்தப் பிறவிகள் அனைவரும் பிறப்பால் உரிமையும் நிகர்மையும் உடையவர்கள்,
அதில் பொறிக்கப்பட்டுள்ள உரிமைகள், விடுமைகள் அனைத்துக்கும் உரித்துடையவர்கள். எவ்வித வேறுபாடும் இல்லாமல், குறிப்பாக இனம், நிறம், அல்லது பிறந்த நாடு
தொடர்பான எவ்வித வேறுபாடும் இல்லாமல் உரித்துடையவர்கள். அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் விரைந்து
ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடைபடிகளும் எடுக்கத் தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்தை ஐநா உறுப்பு நாடுகள் இயற்றி 50 ஆண்டுக்கு மேலாயிற்று. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல
நாடுகளில் இனவெறி ஆழ வேரூன்றிப் பரவலாகத் தலைவிரித்தாடுகிறது. அமெரிக்காவில் இனவெறி என்பது சட்டச் செயலாக்கத்தில் மட்டுமல்லாமல், பொது நல்வாழ்வு, பொது வீட்டு
வசதி போன்ற சமூகப் பணியிலும், பெருங்குழுமத் தொழில்வணிகக் களத்திலும், பிறவகையிலும் கூட வெளிப்படுகிறது. கொவிட்-19
நோய்க்கு இரையாகியுள்ள கறுப்பின மக்களின் தகவுமீறிய பெருந்தொகை இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
சிறிலங்காவும் அமெரிக்காவும் எதில் வேறுபடுகின்றன என்றால், அமைதியான போராட்டக்காரர்கள் வெற்றிகரமாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்திய வரலாற்றைக்கொண்ட ஒருசில நாடுகளில்
அமெரிக்காவும் ஒன்று என்பதிலாகும். நாடு உருவாக்கப் பட்டதிலிருந்தே இது தொடங்கி விட்டது. பாஸ்டன் தேநீர்
விருந்துதான் அமெரிக்கப் புரட்சிக்கு உந்துதல் ஆயிற்று. பிற்பாடு 1960களில் குடியியல் உரிமைகள் இயக்கத்திலிருந்துதான் 1964ஆம் ஆண்டின் குடியியல் உரிமைகள் சட்டம் பிறந்தது. 1960களில்
ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகள் இயக்கம்தான் ஓரினப்பாலியல் சமுதாயத்தினர் காவல்துறையால் மிருகத்தனமாக
நடத்தப்படுவதில் மாற்றங்கள் ஏற்படச்செய்தார்கள், அத்துடன் அண்மையில் அது திருமண நிகர்மையைக் கொண்டுசேர்த்தது.
ஜார்ஜ் பிளோய்டு கொலையானது அமெரிக்காவில் இனவுறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறிப்பதாகும். கைப்பேசிகளில் படம்பிடிக்கப்பட்ட அந்த மனிதத்தன்மையற்ற செயல்
உலகெங்கிலும் கிளர்ச்சிகளைப் பற்ற வைத்தது. இளைஞர்கள் 1960களில் முன்னுக்கு நின்றது போலவே, இப்போதும் டிக்டாக்,
ஸ்னப்ஷாட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் இடுகைகளிட்டு இந்த கிளர்ச்சிகளின் முன்னணிப்படையாகத் திகழ்கின்றனர்.
அமெரிக்காவில் இரண்டாம் தலைமுறை ஈழத்தமிழர்கள் பலரும்கூட இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வரக் கண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமிதம் கொள்கிறது.
நடப்புக் கிளர்ச்சிகளும் அதேபோன்ற சமூக மாற்றம் நோக்கிய நடைபடிகளுக்கு வழிகோலக் கூடும் என்பதற்கான அறிகுறிகள்
தென்படுகின்றன. சில இடங்களில் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் மண்டியிட்ட நிகழ்வு இப்படி
நம்பிக்கையூட்டும் படியான ஓர் அறிகுறியாகும், துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நேற்றைய துன்பகரமான அட்லாண்டா பொலிஸ் மற்றொரு நிராயுதபாணியான கறுப்பின
மனிதனை சுட்டுக் கொன்றது இந்த நம்பிக்கையைத் குறைப்பதோடு மேலும்; பணி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. எனவே, காங்கிரஸ் உறுப்பினர்கள்,
பொலிஸ் கமிஷனர்கள் மற்றும் அனைவருமே பொலிஸ் நடத்தை சீர்திருத்தங்களை; செய்வதற்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும். மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது மட்டுமே
மக்களின் உயிரை மதித்து பாதுகாப்பதைக் காட்டுகிறது. ஆனால், இனவெறி என்பது அமெரிக்கச் சமுதாயத்தில் உள்ளோடியிருக்கிற ஒன்றாய் இருப்பதால் சட்டச் சீர்திருத்தத்தின் ஊடாக மட்டும்
மெய்யான நீடித்த மாற்றம் மெய்ப்படச் செய்து விட முடியாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட விரும்புகிறது.
தனிமனிதர்களின் மனநிலையிலும் பரவலான மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு மனிதரும் தன்னுணர்வில்லாத காழ்ப்பெண்ணங்களை வெளிப்படுத்தத் தேவையான தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
அழைக்கிறது. ஒவ்வொருவரும் வீட்டுப் படி தாண்டாமலே இதைச் செய்து கொள்ள முடியும். எப்போதோ நடந்திருக்க வேண்டிய பண்பாட்டு மாறுதலை இப்போதாவது செயற்படுத்த
ஒவ்வொருவரும் முயற்சி செய்வது இன்றைய அடிப்படைத் தேவையாகும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா
கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா
குவைட்டில் இருந்து வந்து கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்
ஒருவருக்கு மீண்டும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று அனுராதபுரம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார்.
குறித்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோமாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர்
கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் நேற்று
முன்தினம் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடு கடலில் மூழ்கிய படகு -உயிருடன் ஒருவர் மீட்பு
நடு கடலில் மூழ்கிய படகு -உயிருடன் ஒருவர் மீட்பு
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
காணாமல் போன மூன்று மீனவர் குறித்து எந்த வித தகவலும் கிடைக்காததால் தென் கடலோர மீனவக் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை (13) ராமேஸ்வரம் மீன்பிடி
துறைமுகத்தில் இருந்து 622 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர், மலர், ஆனந்த், ஜேசு ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
வழக்காமாக மீனவர்கள் ஞாயிற்றுகிழமை (14) காலை மீன் பிடித்து விட்டு கரை திரும்பி இருக்க வேண்டும்.
ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக கரை திரும்பாததால் விசைப்படகின் உரிமையாளர் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்
படகு மீனவர்களுடன் மாயமானது குறித்து தகவல் தெரிவித்ததுடன் படகையும் மீனவர்கள் நால்வரையும் மீட்டு தரும்படி மனு அளித்தனர்.
இதனையடுத்து நேற்று (15) காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு படகுகளில் பத்து பேர் மாயமான மீனவர்களை தேடி கடலுக்குள் சென்றனர்.
ஆனால், மாயமான மீனவர் மற்றும் விசைப்படகுகள் குறித்த தகவல் ஏதும் கிடைக்காதால் மீனவர்னகளின் உறவினா்கள் மீனவர்களை
தேடும் பணியினை துரிதபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (16) காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்
பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த போது நடுக்கடலில் மூன்று நாட்களுக்கு முன் மாயமான விசைப்படகு மூழ்கியதில்
உயிருக்கு போராடிய நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை மீட்டு சிகிச்சைக்காக மணல் மேல்குடி அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இவருடன் மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படைக்கு
சொந்தமான கப்பல் மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்க
ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை
ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை
கொவிட் 19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட
வாகனங்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கம் பதில் பொலிஸ் மா அதிபர் திரு. சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது
இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது
இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது
தமது நாட்டுக்குத திரும்பமுடியாது இலங்கையில் தங்கியிருந்த 156 இந்தியப்பிரஜைகள் நேற்று நாடுதிருப்பினார்கள்.
அவர்களை அழைத்து செல்வதற்கென இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
ஊடக அறிக்கை
இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது விசேட விமானம் இலங்கையிலிருந்து புறப்பட்டது
இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள்
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு
அழைத்துவருவதற்காக இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப் டிருந்தது.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக
வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு
அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை
தெரிவித்தார்..WhatsApp Image 2020 06 15 at 12.33.55 PM 3கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த
இந்திய பிரஜைகள் சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல்
ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை 2020 மே 29 ஆம் திகதி விசேட ஏர் இந்திய விமானம் ஏனைய பல விசேட விமான சேவைகள் மற்றும்
இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1000க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலிஸ் அதிகாரியாக நடித்த வாலிபர் சிக்கினார்
பொலிஸ் அதிகாரியாக நடித்த வாலிபர் சிக்கினார்
பொலிஸ் அதிகாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சித்த இளைஞன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்று (15) பம்பலப்பிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் களப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் சங்கத்திற்கு குறித்த சந்தேகநபர் வருகை தந்துள்ளார்.
பின்னர் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தான் பணியாற்றுவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ள நிலையில், சர்வதேச பொலிஸ்
சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நாரஹேன்பிட பொலிஸாருக்கு அறிவித்த பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் இன்று (16) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் நாரஹேன்பிட
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை-மனோ கணேசன்
மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை-மனோ கணேசன்
மங்கள, அரசியலிருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை. சிவில் சமூகத்தில் பணியாற்ற போகின்றார்.
மங்களவுடன் உரையாடலையடுத்து மனோ கணேசன்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர்
அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம்,
இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு
தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது,
இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது. இது இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்கு
உள்ளாக்கியுள்ளது. அதேவேளை, இந்நாட்டில் சிங்கள சகோதர மக்களுடன் சகோதரத்துடன், அன்னியோன்யமாக ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழவே தமிழ் பேசும் மக்கள் இன்று
விரும்புகிறார்கள். ஆனால், இந்த ஒரே நாட்டுக்குள் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழ விரும்பும் எங்களை
நிராகரிக்கும் போக்கை அரசு சார்பு தீவிரவாதிகள் கடைபிடிக்கின்றார்கள்.
இந்நாட்டில் பெரும்பான்மை மக்களை தவறாக வழிநடத்த முயலும் இவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வி இப்போது
தமிழ் பேசும் மக்கள் மனங்களில் எழுந்து நிற்கின்றது. இன்று இதற்கு விடை தர ஒரு சிங்கள பெளத்தரான மங்கள தன்னை தயார் செய்கிறார் என எனக்கு தெரிகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் மறுக்கப்படும் அரசியல் உரிமைகள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின்
கல்வித்துறை வாய்ப்புகள், தொழில் வர்த்தக துறை வாய்ப்புகள் ஆகிய எல்லாவற்றிலும், எல்லை மீறிய இடையூறுகள் அடுத்து வரும் ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும் சாத்தியங்கள் தெரிகின்றன.
இந்நாட்டில் நடுநிலையாக சிந்திக்கும் சிங்கள பெளத்த சிவில் சமூகத்தை ஒன்றுகூட்டி சிங்கள பெளத்த மக்களுக்கு உண்மைகளை, உலக நடப்புகளை எடுத்து கூறி, ஒரே
இலங்கைக்குள், சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்கும் பணியினை மங்கள செய்வார் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை
வழங்குவோம். இந்நாட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்காக இதை நாம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம்.
பாராளுமன்றத்தில், கட்சி அரசியலுக்குள் இருந்தபடி, இந்த சிவில் சமூக பணியினை தன்னால் செய்ய முடியாது என்றும், வெளியே இருந்தே தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றும்
உணர்ந்த காரணத்தாலேயே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக எனது நீண்ட நாள் நண்பர் மங்கள சமரவீர எனக்கு தெரிவித்தார்.
சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்
சீனா வெடி சத்தத்தில் சுமந்திரன் இறந்துவிடுவார் – அறை விட்ட கருணா அம்மான்
இலங்கையில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை அடுத்து
அரசியல் கட்சிகள் பலத்த போட்டியில் ,அகோர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வேளை முதுகால் மண்கிண்டி ஆட்சியை அமைக்க முயன்ற சுமந்திரன் முதுகெலும்பு முறிந்து குப்புற கிடந்தது விசிலடிக்கிறார்
இவரது சர்ச்சை பேச்சுக்கள் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது
அவ்விதம் நெருக்கடி தொடரும் நிலையில், கூட்டமைப்பை பலத்த தோல்வியை இம்முறை சந்திக்கும் என்பது உளவு தகவல்
சுமந்திரன் புல்லுருவி எனவும் ,சீனா வெடி கொளுத்தி போட்டாலே காட் அட்டாக் வந்து இறந்து விடுவார் என
முன்னாள் புலிகளின் பிரதி தலைவர் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்
இவரது இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்
வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற
வாள்வெட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (14) இரவு 7.30 மணி அளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை
வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில்
நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சஹ்ரான் ஹசீம் குழுவுடன் எமக்கு தொடர்பு இல்லை – கக்கீம்
சஹ்ரான் ஹசீம் குழுவுடன் எமக்கு தொடர்பு இல்லை – கக்கீம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும்
இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி, பிலிமதலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இவ்வாறு தங்களது கட்சியின் மேல் குற்றம் சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு
இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கை கடற்படையை சேர்ந்த 712 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 172 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முப்படைகளின்
கட்டுப்பாட்டில் உள்ள 43 தனிமைப்படுத்தல் முகாம்களில் 4387 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 13,875 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த மேலும் 222 பேர் இன்று (15) பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட
பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் சேவை மூலமான மருந்து விநியோகம் இடை நிறுத்தம்
தபால் சேவை மூலமான மருந்து விநியோகம் இடை நிறுத்தம்
அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படும்
மருந்துவகைகளின் உரிமைமயாளர்களுக்கு தபால் திணைக்கள அலுவலக பணியாளர் மூலம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசு தொற்றுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி செயலணிக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை (கிளினிக்) மருந்து மற்றும் அரச ஒசுசலவின் மூலம்
பெற்றுக்கொள்ளப்படும் மருந்து வகைகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி தபால் திணைக்களக்தினால்
பொறுப்பேற்கப்பட்டிருந்ததுடன்இ இந்த பணியை எமது பணியாளர் சபையினால் செயல்திறனுடனும் நம்பிக்கையுடனும்
நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக அர்ப்பணித்த தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர் சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுவரையில் அரசாங்கத்தினால் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பின்னணியில் தபால்
திணைக்களம் வழமை நிலைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தபால் திணைக்களத்தின் வழமையான கடமைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகளுக்காக
முக்கியத்தவம் வழங்க வேண்டும் என்பதினால் தொடர்ந்தும் அரசாங்க வைத்தியசாலைகளில் கிளினிக் மருந்து மற்றும் அரச
ஒசுசல மூலம் பெற்றுக்கொள்ளப்படுமு; மருந்து வகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு தபால் திணைக்கள பணியாளர் சபையினருக்கு சிரமம்
என்பதினால் இந்த நடவடிக்கையை சுகாதார பிரிவின் உடன்பாட்டிற்கு அமைய 2020.06.15 திகதி முதல் நிறுத்தப்படுவதை அறிவிக்கின்றோம்.
மேலும் இந்த மருந்து வகைகளை விநியோகிக்கும் பணியை எதிர்காலத்திலும் மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோரான பொது மக்களினால் கோரிக்கை
முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இ இந்த பணிகளை நிறைவேற்றுவதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை
வகுத்து எதிர்காலத்தில் அது தொடர்பாக அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறிவிக்கின்றோம்.
மேற் குறிப்பிட்ட ஊடக அறிக்கையை அனைத்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுளமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா
சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா
சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவிவருவதாக ரோம் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக வெளியீடு
சிறப்பு மன்னிப்பின் கீழ் இத்தாலியிலுள்ள இலங்கையர்களின் வீசா நிலையை முறைப்படுத்துவதற்கு இலங்கைத் தூதரகங்கள் உதவி
இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 2020 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை அமுல்படுத்தப்படும் ‘சனடோரியா 2020’ சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ், வீசா நிலையை முறைப்படுத்துவதற்காக தூதரக
உதவிகளை எதிர்பார்க்கும் 10,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமது கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதனை விரைவுபடுத்துவதற்குத் தேவையான கொன்சியூலர் சேவைகளை
இலங்கைச் சமூக உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலமாக ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மிலானிலுள்ள உதவித் தூதரகம் ஆகியன வசதிகளை ஏற்பாடு செய்துள்ளன.
கோவிட்-19 தொற்றுநோயின் தற்போதைய நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், பல ஆண்டுகளாக தொடரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில், ஒழுங்கற்ற
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இத்தாலியில் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக விண்ணப்பிப்பதற்கும், தொழில் நோக்கங்களுக்காக சட்டப்பூர்வமாக தங்குவதற்கு
அனுமதிகளைப் பெறுவதற்குமான வழிவகைகளை வழங்கும் ‘இத்தாலியை மீளத் தொடங்குதல்’ அபிவிருத்தித் திட்டத்தின்
முக்கியமான கொள்கைக் கூறுகளில் ஒன்றாக இத்தாலி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
சனடோரியாவினூடாக இத்தாலியிலுள்ள இலங்கைச் சமூக உறுப்பினர்கள் தங்கியிருப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பொது மன்னிப்பின் கீழ் இலங்கையர்களுக்கு வசதிகளை மேற்கொள்வதற்கும் சேவைகளை வழங்குவதற்கும், தூதரகத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட 10 வேலை நாட்களுக்குள்
விண்ணப்பதாரர்கள் தமது உண்மையான கடவுச்சீட்டுக்களை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான கொன்சியூலர் சேவைகளை ரோம் மற்றும் மிலானிலுள்ள இலங்கைத் தூதரகங்கள்
தொடங்கியுள்ளன. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தூதரகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதனை உறுதி
செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து, கொன்சியூலர் சேவைகளுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் இணையவழி அடிப்படையிலான சந்திப்பு முறையின் மூலமாக அழைக்கப்படுகின்றார்கள்.
மேலும், சனடோரியாவின் கீழ் தமது வீசா நிலைமையை முறைப்படுத்துவதற்காக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சிசிலி தீவிலுள்ள இலங்கையர்களுக்கான
சிறப்பானதொரு இணையவழி மூலமான நடமாடும் சேவையை ரோம் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பு இணையவழி மூலமான நடமாடும் சேவையின் செயற்பாட்டில் ஆவணங்களை
ஆராய்தல் மற்றும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தல் போன்ற செயற்பாடுகள் வீடியோ மாநாடு மற்றும் மின்னணு அஞ்சல் முறைமை மூலமாக முன்னெடுக்கப்படும். சிறப்பு இணையவழி
நடமாடும் சேவையானது 2020 ஜூன் 14ஆந் திகதி காலை 9.00 மணி முதல் சிசிலி தீவின் கட்டனியாவில் ஆரம்பமாகும்.
பொது மன்னிப்புக் காலத்தில் தமது ஒழுங்குபடுத்தல் செயன்முறைகளை முறையாக மேற்கொள்வதற்காக அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உண்மையான கடவுச்சீட்டுக்கள்
வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக, இந்த சிறப்பு கொன்சியூலர் சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களுக்கான
விண்ணப்பங்களை 2020 ஜூன் 30ஆந் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்வதற்கு தூதரகம் திட்டமிட்டுள்ளது.
கிழித்தெறிய பட்ட சட்ட விரோத பதாதைகள் ,சுவரோட்டிகள்
கிழித்தெறிய பட்ட சட்ட விரோத பதாதைகள் ,சுவரோட்டிகள்
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு அமைவாக சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள் தொடர்பில் பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (14) முதல் நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய
வகையில் இந்த சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளகள்
அகற்றப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்காக பதில் பொலிஸ் மா அதிபரின்
ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த நடவடிக்கையை கண்காணிப்பதற்கு, அனைத்து பிரதி பொலிஸ்மா
அதிபர்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

.
பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்
பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 302 பேர் வெளியேற்றம்
பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை
நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்த 302 பேர் அங்கிருந்து வெளியேறிவுள்ளனர்.

ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்
ஊரடங்கு சட்ட நடைமுறைகளில் மேலும் தளர்வுகள்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்ட
நடைமுறைகளில் மேலும் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று (14) முதல் தினந்தோறும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்
சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வந்தது.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையில்லாமல்
நடத்தில் செல்லல் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும்
வகையில் இவ்வாறு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் தமிழருக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
யாழில் தமிழருக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ‘வீடு நிர்மாணிக்கும் திட்டத்தின்’ ஒரு கட்டமாக யாழ். பாதுகாப்பு படைத் தளபதி
அண்மையில் யாழ். கரனாவையில் உள்ள வறிய குடும்பத்திற்கான வீட்டினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
யாழ். பாதுகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளிற்கு அமைய, தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குறித்த வீட்டின் நிர்மாணப் பணிக்கான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளார்.
இவ் வீட்டின் நிர்மாணப் பணிக்கான ஆளனி, தொழல்நுட்பம் மற்றும் பொறியியல் நிபுணர்களை 551 ஆவது பிரிகேட் படைத்
தளபதியின் மேற்பார்வையின் கீழ் 4 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினர் வழங்கியுள்ளனர்.
55 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி 551 மற்றும் 553 ஆவது பிரிகேட் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்
படையினர் இந்நிர்மாணப் பணியின் ஆரம்ப நிகழ்வில் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி வருட பரீட்சைகள் ஜூன் 22
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி வருட பரீட்சைகள் ஜூன் 22 ஆம் திகதிஅனைத்து
பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியகளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்
பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில் அனைத்து பல்கலைக்கழக பீடங்களின் இறுதியாண்டு
மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸட்; மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி
செய்வதற்கு உப வேந்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருப்தாக கூறினார்.
பல்கலைக்கழக மானிய ஆணைக குழு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகளுடன் நடத்திய
பேச்சுவார்த்தையின் போது பல கட்டங்களின் கீழ் பரீட்சைகளை நடத்துவதற்கும் பரீட்சைக்கான நேர அட்டவணையைத்
தயாரிப்பதற்கும், மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் சுகாதாரப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுவதை உறுதி
செய்வதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் உடன்பாடுகாணப்பட்டதாக கூறினார்.
ஊடகக் கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:
• முதல் நடவடிக்கையாக அனைத்து பீடங்களின் மாணவர்களுக்கான இறுதி வருட மருத்துவ பட்டப் பரீட்சை (குiயெட ஆடீடீளு) 2020.06.15 முதல்; ஆரம்பமாகின்றது.
• 2020 ஜுன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பீடங்களின் இறுதி வருட
பரீட்சை நடவடிக்கை மாத்திரம் ஆரம்பமாவதுடன் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்த பரீட்சைகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
• அந்தந்த பல்கலைக்கழக உபவேந்தர்களினால் அந்தந்த பீடங்களுக்கு அமைவாக இறுதி வருட பரீட்சைக்கு மாணவர்கள் அழைக்கப்படும் தினம் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
ஆசன ஒதுக்கீடு, எழுத்து மூல பரீட்சை நடத்துப்படும் பொழுதும்; செயல்முறை சார்ந்த பரீட்சைகள் நடைபெறும் சந்தர்ப்பத்திலும்
பங்குகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவது சுகாதார விதிகளுக்கு அமைவாகவேயாகும்.
இந்த காலப்பகுதியில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வரும் பொழுது முடிந்தவரையில் தமது வீடுகளில் இருந்து
வரக்கூடிய ஆற்றல் குறித்த மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மீள அறிவிக்கும் வரையில் விடுதி வசதிகளை மேற்கொள்ளும் பொழுது ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற வீதம் ஒதுக்கப்பட வேண்டும்.
மீள அறிவிக்கும் வரையில் அனைத்து மாணவர்களும் இரவு 7 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து (நூல் நிலையம் உள்ளிட்டவை) வெளியேற வேண்டும்.
மீள அறிவிக்கும் வரையில் பல்கலைக்கழகத்திற்குள் அல்லது வெளியில் யாரையாவது அல்லது எந்தவகையிலும் மாணவர்கள் ஒன்றுகூடுவது தடையாகும்.
மீள அறிவிக்கும் வரையில் எந்தவகையிலும் பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
• கல்வி நேர அட்டவணைகளை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்கு அனைத்து உபவேந்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
• பல்கலைக்கழகங்களில் அனைத்து நிர்வாக அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்.
• முதுகலை ஆய்வு மாணவர்களின் கல்வி நடவடிக்கை சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்படும்.
• இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது கொவிட் 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக
வெளியிடப்பட்டுள்ள சுகாதர வழிகாட்டிகளுக்கு அமைவாக அனைத்து தரப்பினராலும் முழுமையான ரீதியில் கடைபிடிப்பதற்கு உட்பட்டதாகும்.
ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி
ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி
பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும்
தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.
இதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இணைத்துக்
கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







