Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவை
நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவை
பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து
சேவைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் குறித்த நாட்களில்
சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து
அதிகார சபையிடமுள்ள 600 பஸ்களும் இந்த சேவையில் ஈடுபடவுள்ளன.
இதற்காக தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாகவும்
அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொதுப் போக்குவரத்து சேவையில் ஏற்படும்
நெரிசல்களை குறைப்பதற்காக இவ்வாறான விசேட போக்குவரத்து சேவை
நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக
கே. மதிவாணன் அறிவித்துள்ளார். தற்போதைய நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன்
செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர்
நேற்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக உண்மையாக உழைத்த தாம் சமகால
நிர்வாகத்தில் தொடர்ந்தும் மனசாட்சியுடன் செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டுக்காக கௌரவமிக்க பணியை ஆற்றக்கூடிய தினம்
உதயமானால் அந்த நாளில் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள
தயாராகவுள்ளதாகவும் கே.மதிவாணன் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
தேர்தல் சட்டங்களை மீறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்
நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தல் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தராதரம் பார்க்கமால் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகளை அனைத்து பொலிஸ்
அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளதுடன் அதற்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இம்முறை தேர்தலிற்காக சொந்த ஊரிற்கு செல்லுபவர்களுக்கு நாளை (31) முதல் விஷேட போக்குவரத்து
திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது- முழங்கிய அரசியல்வாதி
ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் வாங்க முடியாது- முழங்கிய அரசியல்வாதி
தமிழர்களின் தனித்துவத்தை இல்லாதொழிப்பதற்காகவும் எம் இன மக்களை அழிப்பதற்காகவும் எமது மக்களிடமே ஜனநாயக
உரிமையை பெற்று கொள்ள துடிக்கின்றார்கள். பண பலம் பொய் வாய்குறுதிகளை வழங்குகின்றார்கள். எனவே மக்கள் இம்முறை எமது இருப்பை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி பாராளுமன்ற வேட்பாளருமான சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் வங்காலை பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை அழிப்பதற்கு எங்களுடைய இன அடையாளங்களை அழிப்பதற்கு நாங்கள் யாரை ஜனாதிபதியாக வரக்கூடாது என்று
நினைத்தோமோ இன்றைக்கு ஆட்சி பீடம் ஏறிக்கொண்டு எங்களை அழித்தவர்கள் எங்களிடம் அதிகாரம் கேட்கின்றார்கள்.
ஜனநாயக ரீதியாக உரிமை கேட்கிறார்கள். ஒவ்வொருவரும் சொந்த நலனுக்காக எங்கள் மக்களை விற்கின்றார்கள். ஒரு சிலரை விலைக்கு வாங்களாம். ஆனால் எங்கள் இனத்தை விலைக்கு வாங்க முடியாது.
ரிஷாட் பதியுதீன் தற்போது ஒரு பலமான ஆள் இல்லை. ஆனாலும் கடந்த தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகள் கனிசமாக
அவருக்கு விழுந்தது. மூன்று மாவட்டங்களிலும் ஒவ்வொறு தமிழரை வேட்பாளராக நிறுத்தி அவர்களுடைய வாக்குகளால் ரிஷாட் பாராளுமன்ற உறுப்பினராக வருவார்.
இப்போது அதே வித்தையை சிறிலங்கா பொது ஜன பெரமுன பின்பற்றுகின்றது. மூன்று மாவட்டங்களிலும் தமிழ் வேட்பாளர்களை
நிறுத்தி கட்சிக்கு வாக்கை பெற்றுக்கொள்வதற்கு கடந்த தேர்தலில் ரிசாட் பதியுதீனுக்கு கட்சி சார்பாக ஒரு போனஸ் ஆசனம் கிடைத்தது.
ஏன் ரிஷாட் பதியுதீன் அந்த போனஸ் ஆசனத்தை தமிழர்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் வந்தவ ஒரு தமிழருக்கு கொடுக்கவில்லை.
மூன்று தடவைகள் மாறி மாறி முஸ்லீம் இனத்தவர்களுக்கே கொடுத்தார். புத்தளத்தை சேர்ந்தவருக்கு கொடுத்தார். அம்பாறையை சேர்ந்தவர்களுக்கு கொடுத்தார். ஏன் வன்னியில் கேட்ட வேட்பாளர்களுக்கு கொடுக்கவில்லை. ஏன் என்றால் அந்த ஆசனத்தை தமிழர்களுக்கு கொடுத்தால் முஸ்லீம்கள் ரிஷாட் பதியுதீனுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
கடந்த முறை ரிஷாட் பதியுதீனின் கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட எந்த தமிழனுக்கு முஸ்லீம்கள் வாக்களிக்கவில்லை. இன்று
பொதுஜன பெரமுனவில் கேட்கும் எந்த தமிழர்களுக்கும் முஸ்லீம்கள் வாக்களிக்க போவதில்லை. எந்த சிங்கள மக்களும் போட மாட்டார்கள். இது தான் உண்மை.
எங்களுடைய வாக்குகளை சிதறடித்து விட்டு எங்கள் தனித்துவத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஏன் என்று சொன்னால் இன்று ஐ.நா மனித உரிமை பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை செயலிலக்க செய்ய வேண்டும். அதை செயலிலக்க செய்ய வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் தனித்துவமாக இருக்க கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்க கூடாது இதுதான் காரணம். இதற்காக பொய் வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள். எமது மக்களை தேர்தல் காலங்களில் ஏமாற்றுகின்றார்கள். ஏமாற்றி அதற்கான பலன்களையும் பெற்று இருக்கின்றார்கள்.
ஆனாலும் 2020 தேர்தலில் எங்கள் மக்கள் வீட்டு சின்னத்திற்கு முழுமையாக வாக்களிக்க வேண்டும். வாக்களித்தால் மட்டும் தான் எங்கள் தனித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளாம். எங்களுக்கு இம்முறை மிகப்பெரிய ஆபத்து இருக்கின்றது.
தமிழர்களின் தனித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக எம் இன மக்களை அழிப்பதற்காக எமது மக்களிடமே ஜனநாயக உரிமையை பெற்று கொள்ள துடிக்கின்றார்கள்.
பணபலம் பொய்வாய்குறுதிகளை வழங்குகின்றார்கள். எனவே மக்கள் இம்முறை எமது இருப்பை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும்
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தமாகும். எனவே, அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத – பொருத்தமான உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் நிமல் பியதிஸ்ஸ முதலிடம் பிடிப்பார். மாவட்டத்தையும் கைப்பற்றுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தலவாக்கலையில் நேற்று (29) மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டு கூட்டணியே வெற்றிபெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நுவரெலியாவில் காலநிலை மாறலாம். ஆனால், மொட்டை வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற மக்களின் மனநிலை மாறாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாடுமீது பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவுசெய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர் ஜனாதிபதியானதால்தான் கொரோனாவைகூட எமது நாட்டில் கட்டுக்குள்கொண்டுவரமுடிந்தது. பழைய ஜோடி இருந்திருந்தால் (ரணில் – மைத்திரிபால) இந்நேரம் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, எமக்கு கிடைத்துள்ள சிறந்த தலைவரின் கரங்களை பலப்படுத்தவேண்டும். அவருக்கு தேவையான விதத்தில் அரசாங்கமொன்றை உருவாக்கவேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமாகும். இந்த நாட்டை கட்டியெழுப்பும் தசப்பதமாகும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும். எனவே, காலாவதியான அரசியல்வாதிகளை பாராளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக்கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
மறந்திடாதீங்க தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்கள் -அரசியல்வாதி கொள்ளையடிக்க ஓட்டை போடுங்க
மறந்திடாதீங்க தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்கள் -அரசியல்வாதி கொள்ளையடிக்க ஓட்டை போடுங்க
2020 பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில்
அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.
வழமையான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பாரிய அளவிலான
மக்கள் பேரணிகள் இடம்பெறாத போதிலும், பிரதேச மட்டத்தில் சிறு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப்
பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய
தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வீடு செல்வதும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2020 பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது
என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி
அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அனுமதிப் பத்திரம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவுத்
திணைக்களம் விநியோகித்த மத குருமாருக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிப்பது
கட்டாயமானது. பாராளுமன்றத் தேர்தலுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விநியோகித்த தேசிய அடையாள அட்டை
விண்ணப்பத்திற்கான உறுதிப்படுத்தல் பத்திரமும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இதேவேளை பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த
திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் 4 நாட்களுக்கு விடுமுறை
அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் 4 நாட்களுக்கு விடுமுறை
பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச, தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றின் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த தரம் 1 உள்ளிட்ட அனைத்து தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும்
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்றைய தினம் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இது தொடர்பாக மேலும்
தெரிவிக்கையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7ஆம் திகதி வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும். மொத்த மாணவர்களின்
எண்ணிக்கை 200 அல்லது அதற்கு குறைந்த பாடசாலைகளில் மாணவர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கொண்டதாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். அனைத்து
பாடசாலைகளிலும் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமாயின் அனைத்து தரங்களை சேர்ந்த மாணவர்கனிள் கல்வி
நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமாயின் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பாடசாலைக்கு
அழைக்கப்படுவார்கள். தரம் 5 மாணவர்களுக்கு வாரத்தின் முழு நாட்களும் பாடசாலை நடத்தப்படுவதுடன் பாடசாலை கால
எல்லையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு அமைவாக பின்வரும் வகையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.
திங்கள்- தரம் 1 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
செவ்வாய்- தரம் 2 மற்றும் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
புதன்- தரம் 3 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வியாழன்- தரம் 4 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வெள்ளி- தரம் 4 மற்றும் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமான இரண்டாம் நிலை பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுவார்.
திங்கள்- 6,10,11,12 மற்றும் 13
செவ்வாய்- 7,10,11,12 மற்றும் 13
புதன்- 8,10,11,12 மற்றும் 13
வியாழன்- 9,10,11,12 மற்றும் 13
வெள்ளி- 9,10,11,12 மற்றும் 13
தரம் 6,7,8 மற்றும் 9 தரங்களுக்கான காலம் காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1:30 மணி வiயும் தரம் 10,11,12 மற்றும் தரம் 13 வகுப்புக்களுக்கான கால எல்லை 7:30 தொடக்கம் 3:30 வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எனினும் ஏனைய தர
மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கற்றல் நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ள 11, 12, 13ஆம் தர மாணவர்களுக்கே தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் விடுமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழிப்பேன் – போட்டு தாக்கும் ஊழல்வாதி கோட்டா
அரச சேவையில் ஊழல், மோசடிகளை முற்றாக ஒழிப்பேன் – போட்டு தாக்கும் ஊழல்வாதி கோட்டா
ஊழல், மோசடிகளை ஒழித்து வினைத்திறனான அரச சேவையை தாபிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் அரச சேவையில் உள்ளனர்.
எனினும் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து நாளாந்தம் தகவல்கள் வருகின்றன.
இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடியை ஒழித்து மக்களுக்காக அர்ப்பணித்த அரச சேவை ஒன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் களுத்துறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.
அபேட்சகர் மஹிந்த சமரசிங்க பாணந்துறை, கெசல்வத்த பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, ஜனாதிபதி அவர்கள் களுத்துறை மாவட்ட சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
இறக்குமதி வர்த்தக முறைமைக்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளிக்கும் பொருளாதார செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வழி செய்துள்ளது. விவசாயம் மற்றும் உற்பத்திகளில் ஈடுபட்டு அதன்மூலம் அதிகபட்ச
பிரயோசனத்தை பெற்றுக்கொள்ளுமாறு வருகை தந்திருந்த மக்களிடம் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நவீன
தொழிநுட்பத்தின் மூலம் விவசாய பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக விவசாயப் பயிர்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு இலட்சத்து
ஐம்பத்தாறாயிரம் தொழில்களை வழங்குதல் தேர்தலின் பின்னர் இடம்பெறும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என ஜனாதிபதி அவர்கள் மக்களிடம் தெரிவித்தார்.
அபேட்சகர் ஜகத் அங்ககே பாணந்துறை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடி மாவட்டத்தின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.
களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத் தருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பாணந்துறை கொரஸ்துவ விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய வேளையில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் தடைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் கவனம் செலுத்துமாறு இச்சந்திப்பில் கலந்துகொண்ட சில மாணவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
களுத்துறை தாதியர் கல்லூரியை புனர்நிர்மாணம் செய்வது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், பாணந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வது தொடர்பாகவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஜயந்த சமரவீர அவர்களிடம் பொறுப்பளித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபே குணவர்தனவும் இச்சந்திப்புகளில் பங்குபற்றினார்.
சம்பந்தர்,சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் தமிழர்கள் சபதம்
சம்பந்தர்,சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் தமிழர்கள் சபதம்
இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பின் நிகழ்கால செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது
ஐந்து வயதில் இருந்து சிங்கள பகுதியில் வசித்து ,தமிழர்களின் போரியல் வலி தெரியாது வளர்ந்து வந்த சுமந்திரன் கூட்டமைப்பின்
முக்கியஸ்தராக நியமிக்க பட்டதும் ,சிங்கள ஜனாதிபதியின் சட்டத்தரணியாக விளங்கி வருபவருமான சுமந்திரன் தமிழர்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பார் ..?
மக்கள் கண்ணீருடன் வசித்து வரும் வேளையில் அவர்களது பிரச்சனைகளை தீர்த்து வைக்க மறுத்து தமது பைகளை நிரப்பிய
இந்த வியாபாரிகளை தமிழர்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என்பதே தமிழர்களின் இறுக்கமான நிலைப்பாடாக உள்ளது
நொந்து போயுள்ள தமிழர்களின் நெஞ்சில் வேலால் குற்றியது போன்று சம்பந்தர் ,சுமந்திரன் பேச்சுக்கள்
அமைந்தன
இவ்வாறான துரோக செயல்களை புரிந்து தமிழர்களை இழிவு படுத்தும் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் விருப்பாக உள்ளது
தாயகத்தில் உள்ள தமிழர்களே இந்த செயலை உங்கள் வாக்குகளின் மூலம் இந்த இருவரையும் தோற்கடித்து தகுந்த
தண்டனை வழங்குங்கள் ,அப்பொழுது தான் கூட்டமைப்பை நல்வழி படுத்தி நகர்த்த முடியும் ,இவர்கள் மீண்டும் தேசியத்தின் பெயரால்
வெற்றி பெற வைக்க பட்டால் தமிழர்களை காலில் பூச்சிகள் போல போட்டு மிதிப்பார்கள்
இதை கவனத்தில் கொண்டு இம்முறை இவர்கள் இருவரையும் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடித்து புதியவர்களை
,இளையவர்களை இணைக்க தமிழர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே புலம் பெயர் தமிழர்களின் அதிக விருப்பாக உள்ளது
எழுவாய் தமிழா ,வீர செயல் தருவாய் தமிழா ,கயவர்களை வீழ்த்து ,கண்ணியத்தை நாட்டு
லண்டனில் கொரனோ எச்சரிக்கை – மீள பொருட்களை பதுக்கு தமிழர் கடைகள்
லண்டனில் கொரனோ எச்சரிக்கை – மீள பொருட்களை பதுக்கு தமிழர் கடைகள்
பிரிட்டனில் மீள இரண்டாவது அலையாக கொரனோ வைரஸ் உக்கிரமான தாக்குதலை மேற்கொள்ளும் என அபாய எச்சரிக்கை
விடுக்க பட்டது ,தற்போது அது மீள இருவரத்தில் அதிகமாக பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இதனால் பழைய படி பொருட்களின் விலைகள் ஏற்ற நிலையில் காண படுவதுடன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் உள்ளிட்டவை பதுக்க படுகின்றன
தமிழர் கடைகள் மீளவும் தமது கடைகளில் தூள் ,அரிசி ,மாவு போன்ற மிக முக்கிய பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
ஆனால் இம்முறை இந்த தமிழர்கடைகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுமென்பது நமது கணிப்பு
ஏன் எனில் வேகமாக இந்த நோயானது பரவினால் மிக முக்கிய பெரும் கடைகள் மட்டும் திறக்க படும் ,ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த படும்
அப்படி என்றால் அது மூன்று மாத காலம் நீடிக்கும் என நம்ப படுகிறது
இவ்வாறு பதுக்க படும் பொருட்கள் காலவதியாகவும் நிலை கொண்டதாக அமையலாம் .இதனால் இவர்கள் இம்முறை பெரும் அடியை சந்திக்க நேரிடும்
நிபுணர்கள் இவ்விதமான கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்
மக்களே மருந்துகள் ,கையுறைகள் ,முக காவசங்கள் இப்பொழுதே வாங்கி வைத்து கொள்ளுங்கள்
இந்த நோயானது பரவாது இருக்க மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நடவடிக்கையில் இராணுவம் பயன் படுத்த படும்
வீதிகளில் இராணுவம் தரித்து நிற்கும் ,இவ்வாறான நிலையில் மக்கள் வெளியில் செல்ல முடியாது
நேற்று மீளவும் உயிரிழப்பு பிரிட்டனில் அதிகரித்துள்ளது ,தயவு செய்து தமிழர்களே இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு
பகிர்நது கொள்ளுங்கள் ,அவர்களையும் காப்பற்றி கொள்ளுங்கள் ,முன் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்
உயிர் கொல்லி நோயானது உங்களை துரத்துகிறது
ஒரு லட்சம்
மக்கள் வரை புதிதாக பலியாவார்கள் என கணக்கிட பட்டுள்ளது ,அப்படி
என்றால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் னென்பது புரிந்து கொள்ளுங்கள்
-அப்படி என்றால் இதனை படிக்கும் நீங்களோ ,நானோ உயிருடன் இருப்போமோ என்பது சந்தேகமே
இந்த செய்தி பரவலை அடுத்து மக்கள் மீளவும் பொருட்களை வாங்கி குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
தேர்தல் தோல்வி பயத்தில் அவுஸ்ரேலியா தமிழர்களை அழைத்த சிங்கள சுமந்திரன் – படம் உள்ளே
தேர்தல் தோல்வி பயத்தில் அவுஸ்ரேலியா தமிழர்களை அழைத்த சிங்கள சுமந்திரன் – படம் உள்ளே
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் சட்டவாதியாகவும் ,விளங்கும் சுமந்திரனின் பத்து ஆண்டுகள் நடவடிக்கை பெரும் சர்ச்சையில் சிக்கியது
சிங்களத்தின் பால் குடித்து வளர்ந்து வந்த சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டம் மற்றும் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாக பேசிய படியே பயணித்தார்
அவ்வாறான இவரை வைத்து இம்முறை அரசியல் செய்திட முனைந்த கோட்டா அரசு தோற்று போனது ,அதுவே கூட்டமைப்புக்கு பெரும் இழிவையும் ஏற்படுத்தியது
தற்பொழுது சுமந்திரன் தன்னை வெல்ல வைக்க அவுஸ்ரேலியா தமிழர்கள் அழைத்தார்கள் என வெட்டகம் கெட்டு காலை கதிர்
பத்திரிகையில் தலைப்பு அட்டை படத்தை விளம்பர படுத்தி தமிழர்களிடம் வாக்கு கேட்கிறார்
அவுஸ்ரேலியாவில் வைத்தே இவருக்கு மக்கள் செருப்பால் அடித்தனர் ,அவ்வாறான அவுஸ்ரேலியா தமிழர்கள் இவரை
தேர்தலில் வெல்ல வைக்க அழைத்தாராம் என்ற போர்வையில் இவரது விளம்பரம் இடம்பெற்றுளளது
இது தனது தோல்வி பயத்தை வெளிப்படுத்தும் செயலில் ஒன்றாகவும் ,இவ்வாறான ஒரு விளமபரத்தின் ஊடாக தான் பேசு
பொருளாக மாற்ற படுவேன் என்ற நிலையிலும் இந்த கபடி விளையாட்டை நாரதர் சுமந்திரன் புரிந்துள்ளார்
அது தவிர தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கு என்ற கோசம் எழுத பட்டுள்ளது ,அதாவது தமிழர்கள் அல்ல ,தமிழை பேசும்
அனைவரும் என்பதாகும் ,அதாவது சிங்களவர்கள் உள்ளிட்டவர்கள் என்பதே அதன் பொருள்
சிங்கள பால் குடியின் சித்து விளையாட்டை தமிழர்களே பாருங்கள் ,இந்த கயவனை ,தேச துரோகியை தோற்கடித்து வீட்டுக்கு துரத்துங்கள் மானமுள்ள தமிழர்களே

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையில் ,இராணுவம் பொலிஸ்
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையில் ,இராணுவம் பொலிஸ்
எதிர்வரும் பொதுத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை
பணியில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா என்பது
பற்றி பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்
வெலிகடை சிறைச்சாலைக்குள் வீசுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதியில் ரூ. 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள்!
வெலிகடை சிறைச்சாலைக்குள் வீசுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொதியில் ரூ. 5 இலட்சம் பெறுமதியான பொருட்கள்!
வெலிகடை சிறைச்சாலைக்குள் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய பொதியொன்று வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான
சந்தேகநபர் பொரளை பொலிஸாரால் நேற்று (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து அவ்வாறு வீசுவதற்கு பொதியிடப்பட்டிருந்த பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொதியில் 04 கைப்பேசிகள், புகையிலை தொகையொன்று, 10 கிராம் ஹெரோயின் மற்றும் பொறித்த கருவாடு
பொதியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
சீவலீ படுமகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இது போன்ற செயற்பாடுகளுக்காக 12 பேர் கொண்ட குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ள நிலையில், இதற்கு
முன்னர் சிறைச்சாலை வளாகத்தினுள் 12 தடவைகள் இவ்வாறான பொதிகள் வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
வவுனியாவில் சிறூமியை கற்பழித்தவருக்கு 12 வருடம் சிறை
வவுனியாவில் சிறூமியை கற்பழித்தவருக்கு 12 வருடம் சிறை
6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (27) தீர்ப்பளித்தது.
2016 ஆம் ஆண்டு டிசெம்பர் 26 ஆம் திகதிக்கும் 28 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சிறுமியை அவரது தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல்
வன்புணர்வுக்குட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் மொஹமட் ரவீத் என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா
அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வயதாகும்.
இந்தக் குற்றப்பத்திரிகை மீதான விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி ஜெயந்தன் முன்னிலையானார்.
வழக்கில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட 9 வயது நிரம்பிய சிறுமி தனது சாட்சியத்தில், “அம்மா வைத்தியசாலையில் இருந்தார்.
அப்போது நான் ஓட்டப்போட்டிக்காக பாடசாலைக்குச் சென்றேன். என்னை அயல்வீட்டு மாமா சைக்கிளில் ஏற்றிச் சென்று விடுவதாகத் தெரிவித்தார். அதனால் அவருடன் சென்றேன்.
ஆனால் என்னை பாடசாலையில் இறக்காமல் இறைச்சிக் கடைக்கு பக்கதால் சென்று பற்றைக்குள் வைத்து பாலியல் துன்புறுத்தினார்” என்று தனக்கு நடந்தவற்றை விவரித்தார்.
அத்தோடு தனக்கு நடந்தவற்றை அம்மா வீட்டில் இல்லாதபடியால், அயல் வீட்டில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியையிடம் முதன்முதலில் கூறியதாகவும் சிறுமி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
சிறுமியின் சாட்சியத்தை நிரூபிக்கும் வகையில் அவரது தாயார், அயல் வீட்டு ஆசிரியையின் சாட்சியமும் அமைந்தது. நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி, சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதை உறுதிப்படுத்தினார்.
எதிரி சார்பில் அவரது தந்தை சாட்சியமளித்திருந்தார். அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்தின் குறுக்கு விசாரணையில் எதிரி தடுமாறினார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் நேற்று (28) செவ்வாய்கிழமை வழங்கினார்.
எதிரி மீதான இரண்டு குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுமியைக் கடத்திச் சென்ற குற்றத்துக்கு 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதான இரண்டாவது குற்றத்துக்கு குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இந்த இரண்டு சிறைத் தண்டனைகளையும் குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். வழங்கத் தவறின் 2 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.
யாழில் ‘நல்லிணக்க மையம்’ ஒன்று திறப்பு
யாழில் ‘நல்லிணக்க மையம்’ ஒன்று திறப்பு
அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ´நல்லிணக்க மையம்´ ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நலன் விரும்பிகள் மற்றும் வயோதிபர்களின் ஒத்துழைப்புடன் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி, மேஜர் ஜெனரல் ருவன்
வணிகசூரியவினால் குறித்த நல்லிணக்க மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இங்கு வசிக்கும் இளைஞர்களின் ஆற்றல்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி சிவில் மற்றும் இராணுவ உறவுகளை மேலும்
வலுப்படுத்தும் நோக்குடன் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத நன்கொடையாளர் ஒருவரினால் குறித்த நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதன் பராமரிப்பு பணிகளை யாழ் இராணுவத்தினர் மேற்கொள்வர் என தெரிவிக்கப் படுகின்றது. மேலும் சிவில் சமூகத்தின்
விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த நேரடியாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
இதுவரையில் 5400 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
இதுவரையில் 5400 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
2020.07.26 ஆம் திகதி பி.ப 4:00 மணி முதல் 2020.07.27 ஆம் திகதி பி.ப
4:00 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்
அறிக்கையிடப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில்
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு..

சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு
சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு
இலங்கையில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில மேலும் மகிந்த சகோதர ஆட்சி தேர்தலை நடத்திட முனைப்பு காட்டி வருகின்றனர்
தற்போது மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது எனவும் ,கொரனோ நோயின் தாக்கம் உள்ள நிலையில் மக்கள் வாக்குகளை தாம்
இலகுவா கள்ள வாக்குகளாக பதிவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஆளும் கோட்டா அரசு தீவிரமாக செயல் பட்டு வருகிறது
கொரனோ நோயினால் மக்கள் வாக்கு பதிவு இம்முறை குறைவடையும் ,அதனை பயன் படுத்தி இந்த கள்ள வாக்குகளை போடும் முயற்சிகள் தீவிர படுத்த பட்டு வருகின்றன
தனி பெரும் பான்மையுடன் தனது ஆட்சியை நிலை நிறுத்தும் முகமாக கோட்டபாய ஆட்சி பீடம் துடிக்கிறது ,அவ்விதம் இம்முறை
கிடைப்பதற்குரியய பலம் உள்ளதென்றே நம்ப படுகிறது ,ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த உள்கட்சி மோதல்கள் பெரும் பின்னடைவை யானை காட்சிக்கு வழங்கும் எனவும் நம்ப படுகிறது
அத்துடன் கூட்டமைப்பும் பலத்த இழப்பை சந்திக்கும் என்றே நம்ப படுகிறது ,சுமந்திரனின் தமிழ் தேசிய இழி செயல் இதற்க்கு காரணமாக உள்ளது குறிப்பிட தக்கது
வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்
வாக்காளர் அட்டை விநியோகம் நாளைய தினத்திற்குள் நிறைவடையும்- தேர்தல் ஆணையம்
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை நாளை தினத்திற்குள் முழுமையாக விநியோகிக்க முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணி 95 சதவீதம் வரை நிறைவு பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாளைய தினத்திற்குள் இந்த வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் பிரதேசத்திலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று
தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன குறிப்பிட்டார்
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு
இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ -23 பேர் புதிதாக பாதிப்பு
இன்று காலை வரை புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சேனபுர மத்திய நிலையத்தில் தங்கியிருந்தவர்களாவர். எஞ்சிய ஆறு பேரும்
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி மத்திய நிலையங்களில் இருப்பவர்கள் என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இன்று காலை வரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597 ஆகும். இன்று அதிகாலை கட்டாரிலிருந்து பத்துப் பேர் நாடு
திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 171 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து வீடுகளுக்கு புறப்பட்டுச்
சென்றுள்ளனர். இதுவரை 27 ஆயிரத்து 105 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளனர். தற்போது முப்படைகளின்
38 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மூவாயிரத்து 409 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.
நேற்று ஆயிரத்து 410 பேர் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 53
ஆயிரத்து 65 பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை ஆறு மணி வரை 15 பேர் முழுமையாக குணமடைந்து
வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவார்.
தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு
தேர்தலுக்கான கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு
2020 பொதுத் தேர்தலுக்கான கூட்டங்களை நடத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியின் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , வீட்டிற்கு வீடு செல்வதும் துண்டுப்
பிரசுரங்களை விநியோகிப்பதையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் எதிர்வரும் 4ம் திகதி எந்தப் பிரசார நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. தேர்தல்
தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.






