Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
மக்கள் அமைச்சர்களை கொட்டனால் அடிக்கும் நிலை உருவாகும் – விமல் வீரவன்சா
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சி கடும் போக்கின் உச்சமாக காணப்படுகிறது
,நாளாந்தம் விலைவாசி எகிறிக்கொண்டே போகிறது ,மக்கள் பொறுமை இழந்து செல்கின்றனர் ,
இது ஆளும் கோட்டாவுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தாக்குதல்களை
தொடுக்கும் நிலை ஏற்படும் என விமல் வீரவன்சா எச்சரித்ததுள்ளார்
உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்
உயிர் குடிக்கும் டிப்பர் – மிதக்கும் உடல்கள்
கேப்பாபிலவு – புதுக்குடியிருப்பு வீதியில், இன்று (01) மாலை 5.30 மணியவில் இடம்பெற்ற விபத்தில்
இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வற்றாப்பளை பகுதியில் இருந்து கேப்பாபிலவு பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த
மூவர், எதிர்திசையில் வந்த டிப்பருடன் மோதியதையடுத்தே விபத்து சம்பவித்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் சாரதி முள்ளியவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்தில், பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து (வயது 48), அதே
இடத்தைச் சேர்ந்த சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன்
படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடயில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
டிப்பர் வகானத்தினை அந்த இடத்தில் விட்டு எடுத்துசெல்லமுடியாதவாறு மக்கள் ஒன்று
கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டு பொலிஸாருக்கும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 17 பேர் மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி கடந்த
தினம் 17 பேர் பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 499 பேர் பாதிக்க பட்டுள்ளதாகக் சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது
வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு
வீடுகளுக்கு வரவுள்ள வைத்தியர்கள் – கிளி மருத்துவமனை அறிவிப்பு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை இன்று முதல் வீட்டுத் தரிசிப்பும், பராமரிப்பும் வைத்திய
சேவையினை பொது மக்களின் வீடுகளுக்கு வருகை தந்து வழங்கவுள்ளனர் என மாவட்ட
வைத்தியாசலையின் பணிப்பாளர் மருத்துவர். எஸ். சுகந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய குழுவினர் இன்று முதல் நாட்பட்ட
நோயாளர்கள் மற்றும் வீட்டில் படுகை நோயாளர்களாக உள்ளவர்களின் மருத்துவ தேவையினை அவரவர் வீடுகள் தேடி வந்து பூர்த்தி செய்யவுள்ளனர்.
எனவே இச் சேவையினை பெற்றுக்கொள்ள விரும்பும் பொது மக்கள் 021 2283037 எனும்
தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சேவையின் முதற்கட்டமாக பொன்னகர், மலையாளபுரம், பாரதிபுரம்,
விவேகானந்தநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, அம்பாள்குளம்,
ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கணகாம்பிகைகுளம், அம்பாள்புரம், திருவையாறு, திருவையாறு
மேற்கு இரத்தினபுரம், கிளிநொச்சிநகர், மருதநகர்,பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் வடக்கு
திருநகர் தெற்கு,ஜெயந்திநகர், பெரியபரந்தன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படவுள்ளதும் எனவும் அறிவித்துள்ளனர்.
ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்
ரயில் கார் மோதல் ஒருவர் மரணம் – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த
ரயிலுடன் கார் ஒன்று மோதி சிதறியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார்
கார் பலத்த சேதமடைந்துள்ளது
ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட பொழுதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது
நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்
நீரில் அடித்து செல்ல பட்ட யாழ்ப்பாணத்து பெண்கள்
ஹங்வெல்ல – அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த இவர்கள் நேற்று உறவினர்களுடன் குமாரி எல்ல நீர்வீழ்ச்சிக்கு நீராட சென்றுள்ளனர்.
நேற்று மாலை பெய்த கடும் மழையினால் திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீராடிக்கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர். ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் சென்றுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிசார் மற்றும் களுவக்கல்ல இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடியுள்ளனர்.
இதன்போது, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று நம்பப்படுகின்றது.
மேலும், காணாமல் போயுள்ள இருவரையு தேடும் பணி தொடர்கின்றது.
காணாமல் போனவர்கள்
எக்மன் தேவதாஸ் மிதுஷா வயது 14
132 மடம் கொன்வன்ட் வீதி யாழ்ப்பாணம்
வேவனி ஜேசுதாஸ் 29 வயது இலக்கம் 30/3 கெரவலபிட்டிய – வத்தளை
திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி
திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி
புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை
பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான
காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான
விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்
இராணுவத் தளபதி வடக்கிற்கு விஜயம்
புத்தாண்டு விடியலை முன்னிட்டு புதுவருடகால பாராட்டுக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், தங்கள் குடும்பங்களிலுருந்து அன்புக்குரியவர்களிடமிருந்து விலகி, வடக்கில் தமது கடமைகளில்
ஈடுபட்டுள்ள முப்படையினர் மீதான தனது அக்கறையை எடுத்துக்காட்டுவதற்காவும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின்
தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று முன்தினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அனைத்து முப்படை வீரர்களின் நினைவாக முதலில் அஞ்சலி செலுத்தினார்.
குணமடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் காயமடைந்த போர்வீரர்கள் நலமுடன் இருக்க பிராத்தனை செய்தார். மேலும் முப்படையினர்களினால் மீட்புபணிகளில் ஆற்றப்படும் சிறந்த
பணிகளை இராணுவத் தளபதி பாராட்டியதுடன் அதேபோன்று எதிர்வரும் காலங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.
‘2021 ஆம் ஆண்டு முழுவதும் கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, நீங்கள் மற்றும் எங்கள் சகோதர சேவைகள், சொந்த உயிருக்கு ஆபத்துகள் இருந்தபோதிலும், தேசத்தின் சிறந்த
நலனுக்காக எவ்வாறு செயல்பட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ‘முடியாதென்று எதுவும் கிடையாது’. என்ற உறுதிமொழியுடன் தொற்றுநோயின் மோசமான நிலையைக்
கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த முடிவுகளைக் கொண்டுவருவதற்கு இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்குவதற்கு கடற்படை பெரிதும் பங்களித்துள்ளது.
ஜனாதிபதி மற்றொரு சவாலான சேதனை பசளை உற்பத்தியை ஆரம்பித்து அதற்காக தொழில்முறை வீரர்களாகிய எமக்கு இப்பணியை ஒப்படைத்துள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் பசுமை வேளாண்மை நடவடிக்கை மையத்தின் தலைவராக ஜனாதிபதி என்னை நியமித்துள்ளார்,
மேலும் இந்த புதிய சவாலான பொறுப்பில் உங்கள் பங்கேற்பு நாட்டை பசுமையாக மாற்றும் அதே வேளையில் விரும்பிய இலக்குகளை அடைய உதவும், ‘என்று அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் ஏனைய சமூகவிரோத செயற்பாடுகளை எமது மண்ணில் இருந்து ஒழிப்பதற்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவு அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வசதியற்ற பாடசாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு
மைதானங்கள், பொது மைதானங்கள், பொது இடங்கள், குளங்கள், மேம் பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது போன்ற அபிவிருத்தி சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதும்
சமாந்தர முக்கியத்துவமானது. அந்த தேசிய பணிகளுக்கான உங்கள் அர்ப்பணிப்பின் அளவு வரும் ஆண்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்
26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது
26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள கோட்டாபய முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து
மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 89 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூ.26 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த முழு நடவடிக்கையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விஸ்வமடு தெற்கு,
உடையார்கட்டு, உடையார்கட்டு தெற்கு மற்றும் மூங்கிலாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது
இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் பால்மா விலை திடீரென அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்
அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா
பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ
பளை பொலிஸ் அதிகாரிக்கு கொரனோ
கிளிநொச்சி பளை பகுதி காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கொரனோ நோயானது
தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டுளளார்
இவர் சென்று வந்த இடங்களுக்கும் இவர் குறித்த நோயினை பரப்பி இருப்பார் என மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்
புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது
புலிகள் படங்களை வைத்திருந்தவர் கைது
மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் ஒருவர் புலிகள் படங்களை இணையத்தில் பதிவேற்றினார் என்ற
குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு காது கைது செய்ய பட்டவர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் ,அப்பாவி தமிழர்கள்
பயங்கரவாதிகளுக்கு உதவினார் மற்றும் அவர்களை மீள் உருவாக்கினார்கள் என்ற குற்ற சாட்டில்
சிங்கள படைகள் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு
சமஷ்டியே உரிய தீர்வு – விக்கி ஐயா இடித்துரைப்பு
தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு, சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென, பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்க் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு எனவும், அவர் கூறினார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக, நேற்று முன்தினம் (28), அவர் அனுப்பி வைத்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், தங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் தமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13ஆவது திருத்த சட்டத்தை இதனால்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன எனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம் எனத் தெரிவித்துள்ள அவர், அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம் எனவும் இன்று எமது நிலை மிகவும் வருத்தத்துக்கு உரியதாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள.கால்.
“தீர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை.
“தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்தர தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும்.
“அதனால்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும், நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது.
“ஆகவே, ஏற்கெனவே இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி, சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்” எனவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்
பிச்சை எடுக்கும் கோட்டா அரசு – போட்டு தாக்கும் முக்கிய நபர்
அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை
மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ
மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள்
நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துகொண்டே கூறுகிறார். ஆனால்
உண்மையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.
நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம்போல வெளிநாடுகளுக்கு சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை எனவும் அவர் கூறினார்.
டுபாய் பறக்கும் மகிந்தா
டுபாய் பறக்கும் மகிந்தா
எதிர்வரும் இரண்டாம் திகதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா டுபாய் செல்லவுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் இருநாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவார்
எனதெரிவிக்க படுகிறது ,கொள்ளையடித்த பணத்தில் பல முதலீடுகள் டுபாயில் மகிந்த
வைத்திருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை
கிளிநொச்சியில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைய உழவர் சந்தையை ஆரம்பிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டாவளை மற்றும் பரந்தன் கமநல சேவைகள் திணைக்களங்களை இரண்டாகப் பிரித்து வினைத்திறனான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, இரணைமடு கமக்காரர் அமைப்பின் சம்மேளனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது காணிப் பதிவுகளை ஒழுங்குபடுத்தி பூரணப்படுத்தல், காணி அபிவிருத்தி சபைகளை வினைத்திறனாக இயங்க வைத்தல், கால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை, நீர் வழங்கல் செயற்பாடு உட்பட பல்வேறு விடயங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.
அமைச்சர் சம்மந்தப்பட் அதிகாரிகள் அனைவரையும் அழைத்து ஒவ்வொரு விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
விவசாயிகள் தமது உற்பத்திகளை நியாயமான முறையில் விற்பனை செய்து உயர்ந்தபட்சமான நன்மைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், உழவர் சந்தை ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியில் உழவர் சந்தையை தற்காலிகமாக ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதியை சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொடுத்தார்.
நெத்தலியாறு தொடக்கம் ஆனையிறவு வரையான சுமார் 16 கிலோ மீற்றர் நீளமான கண்டாவளை உவர் நீரேரிக்கு அணை கட்டப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது
பாலியல் குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது
கைது செய்யப்பட்ட கந்தர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர்
கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணிகளுக்கான உறுதி வழங்க நடவடிக்கை
காணிகளுக்கான உறுதி வழங்க நடவடிக்கை
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ‘காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு’ என்ற வேலைத்திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் கம்பஹா, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில், பல வருடங்கள் பணம் செலுத்தியும்
இதுவரையிலும் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு நேற்றும் (27) இன்றும் (28) காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி மாவட்டத்தில் 300 பேருக்கும், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 500 பேருக்கும்
காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வீட்டு வாசலுக்கே காணி
உறுதிப்பத்திரம்’ திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 3000க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல வருடங்களாக பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பதிரங்கள்
கிடைக்கப்பெறாதவர்களுக்கு, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்குடன், இந்த வேலைத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டு (2021) ஐயாயிரம் உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டம் , நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, தற்போது 20 மாவட்டங்களில்
உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் 5,000 காணி உறுதிப்பத்திரங்கs; வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு
வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு
இலங்கையில் நாள் தோறும் பரவலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது
,இதனால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்
கடந்த தினம் கட்டன் பகுதியில் வீடொன்றில் மேற்படி சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது ,தேநீர்
வைப்பதற்கு அடுப்பை எரிய வைக்க முற்பட்ட பொழுது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது
இது கோட்டா அரசினால் திட்டமிடப்பட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்ய பட்ட ஒன்றாக கூற படுகிறது
நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 11 லட்சம் தடுப்பூசிகள்
நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட 11 லட்சம் தடுப்பூசிகள்
இலங்கைக்கு மேலும் 11 லட்சத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் இன்று வந்தடைந்துள்ளன
மேற்படி ஊசிகள் விரைவில் பகிர்ந்து மாவட்ட ரீதியாக மக்களுக்கு செலுத்த படும் என ஆளும்
அரசு தெரிவித்துள்ளது
மேலும் பரவி வரும் நோயினை கட்டு படுத்த முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ள படும் என
தெரிவிக்க பட்டுளள்து










