Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்
சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்
சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்வி எம்பிரஸ்” மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திங்கள்கிழமை முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் ₹ 17.21 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச கப்பல் சுற்றுலா முனையம் திறப்பு விழா நடைபெற்றது. 2,880 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வசதி 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும்.
2022 ஆம் ஆண்டு நடைபெறும் இன்க்ரெடிபிள் இந்தியா இன்டர்நேஷனல் க்ரூஸ் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கப்பல் சேவைக்காக சென்னை துறைமுகம் மற்றும் நீர்வழிகள் ஓய்வு சுற்றுலாவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பின்னணியில் இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை- இலங்கை இடையே முதல் பயணக் கப்பல் சேவை ஆரம்பம்
“நமது கடலோரப் பகுதியைச் சுற்றியுள்ள நமது வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துடன், இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் சாத்தியம் அபரிமிதமானது.
சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே முதல் கப்பல் சேவையை நாங்கள் தொடங்கியுள்ளதால், இது கப்பல் சுற்றுலாத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. நாடு,” என்று சோனோவால் மேற்கோள் காட்டினார்.
மலிவு மற்றும் உலகத் தரம் வாய்ந்த கப்பல் சேவைகளுக்கான அணுகல் உண்மையாகி வருவதால், மக்கள் ஆடம்பரமான வசதிகள், பொழுதுபோக்கு மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளை அனுபவித்து மகிழலாம், என்றார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவையானது இலங்கையின் அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய மூன்று
துறைமுகங்களுக்குச் செல்லும். மூன்று புதிய சர்வதேச கப்பல் முனையங்கள் 2024 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சோனோவால் கூறினார்.
எதிர்காலத்தில் அதிகமான மக்கள் கப்பல் சுற்றுலாவை அனுபவிக்க வாய்ப்புள்ளதால், கப்பல் சுற்றுலா மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் வளர்ச்சியை ஆதரிக்கவும் செயல்படுத்தவும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது, என்றார்.
“மூன்று புதிய சர்வதேச பயண முனையங்கள் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2023 இல் 208 ஆக இருந்த உல்லாசக் கப்பல்களின் அளவு 2030 இல் 500 ஆகவும், 2047 இல் 1,100 ஆகவும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார். கூறினார்.
இதைத் தொடர்ந்து, கப்பல் சேவையைப் பெறும் பயணிகளின் எண்ணிக்கையும் 2030-ல் 9.50 லட்சத்தில் இருந்து 2047-ல் 45 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அந்தமான், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு சுற்றுவட்டங்களில் புதிய கப்பல் சுற்றுலா முனையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் முழுவதும் படகு சுற்றுகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.
நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் கப்பல் சேவைகளுக்கான தேவையை அதிகரிக்க, குஜராத்தில் புனித யாத்திரை
சுற்றுப்பயணங்கள், கலாச்சார மற்றும் இயற்கை சுற்றுலாக்கள் மற்றும் ஆயுர்வேத ஆரோக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலா ஆகியவற்றை வெளியிடவும் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது, என்றார்.
மருந்துகளின் விலை 16% குறைப்பு
மருந்துகளின் விலை 16% குறைப்பு
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து, மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்ற பல நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தமது தனிப்பட்ட விபரங்களை வெளிநபர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பொது மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது தனிப்பட்ட தகவல்களை அறியாதவர்களுக்கு வழங்க வேண்டாம்.
குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், சாரதி அனுமதி பத்திர இலக்கம், அவற்றின் பிரதிகளுடன், வங்கி கணக்கு விபரங்களையும் வழங்க வேண்டாம்.
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
விசேடமாக வங்கி கணக்கு தொடர்பில் குறுந்தகவல் ஊடாக பெறப்படும் OPT இலக்கத்தை எந்தவொரு காரணத்திற்காகவும் யாருக்கும் வழங்க வேண்டாம்.
பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள் வரலாம், அவற்றால் ஏமாற வேண்டாம் என பொலிஸார் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வாறான மோசடியாளர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.
எனவே இது போன்ற நபர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
உங்களுக்கு அடையாளம் தெரியாதவர்களிடம் சிக்கி சொத்துக்களை இழக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டினுள் 27 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த துப்பாக்கி பிரயோக சம்பங்கள் ஊடாக 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் மிதக்கும் களுத்துறை
வெள்ளத்தில் மிதக்கும் களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றியுள்ள மாணவர்கள் மற்றும் கடமைகளில் ஈடுபட்டுள்ள பணிக்குழாமினருக்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பரீட்சை நிலைகளுக்கு செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளத்தில் மிதக்கும் களுத்துறை
அந்த நிலையங்களுக்கான வினாத்தாள்கள், மாற்று வீதிகள் ஊடாக கொண்டு செல்ல அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிக்கல்களை சீர் செய்வதற்காக கடற்படையுடன் இணைந்து படகு சேவை மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமைகளால் பரீட்சைக்கு தோற்ற இடையூறுகள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இலங்கையில் MGR பிறந்த வீடு
இலங்கையில் MGR பிறந்த வீடு
தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத ´புரட்சி தலைவராக´ விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரன் இலங்கையிலேயே பிறந்தார்.
இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலபிட்டி என்ற பிரதேசத்திலேயே, 1917 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி எம்.ஜி.ஆர் பிறந்தார்.
நாவலபிட்டி நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமமே கல்லாறு (இன்று கல்லோய என சிங்கள பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது).
தேயிலை தொழிலைச் செய்யும் மக்களுக்காக ஆங்கிலேயர்களால் கல்லாறு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயின் அறை ஒன்றிலேயே அவர் பிறந்துள்ளார்.
குழந்தைப்பருவத்தை எம்.ஜி.ஆர் நாவலபிட்டி பகுதியில் செலவிட்டதுடன், அதன் பின்னரான காலத்தில் கண்டி நகரில் வாழ்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பதற்கு அவர் பிறந்ததாகக் கூறப்படும் வீடே தற்போது சாட்சியாக விளங்குகின்றது.
இலங்கையில் MGR பிறந்த வீடு
தமது முன்னோர்களின் தகவலை அடிப்படையாக் கொண்டே, எம்.ஜி.ஆர் இந்தப் பகுதியில் வாழ்ந்ததை அந்தப் பிரதேச மக்கள் உறுதி செய்கின்றனர்.
தனது தந்தையின் இறப்பு, அதைத் தொடர்ந்து, தனது சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரின் இறப்புக்கள், எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழகம் செல்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
எம்.ஜி.ஆர் பிறந்ததாகக் கூறப்படும் வீட்டைத் தேடி, பிபிசி தமிழ் நாவலபிட்டி பகுதியை நோக்கிப் பயணித்தது.
நாவலபிட்டி பகுதியில் இருந்து தலவாகலை செல்லும் பிரதான வீதியில் சுமார் 5 கிமீ தூரம் வரை பயணித்தபோது, ஓர் இந்து ஆலயம் மற்றும் பாலம் ஒன்றுடன் அமைந்துள்ள கல்லாறு பகுதியை நாம் சென்றடைந்தோம்.
பிரதான வீதியிலேயே சுமார் 200 வருடங்கள் பழைமையான லயின் அறைகள் அமைக்கப்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
அந்த லயின் அறைகளில் இறுதியாக உள்ள வீடே, எம்.ஜி.ஆர் பிறந்த வீடாக நம்பப்படுகின்றது. வீட்டிற்கு அருகில் மிகவும் பழைமையான பலா மரமொன்றும், வீட்டின் பின்புறம் நீரோடை ஒன்றும் காணப்படுகின்றது.
வீட்டின் முன்புறம் திருத்த அமைக்கப்பட்டிருந்தாலும், வீட்டின் பின்புறம் அந்த வீடுகளின் பழைமையைக் கூறும் வகையில் உள்ளன.
வீட்டின் பின்புறத்தில் ஓடும் நீரோடையில், மழைக் காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அந்த வீட்டின் பின்புறம் முழுமையாகத் தாழிறங்கியுள்ளதைக் காண முடிந்தது. மிகவும் சிதைவடைந்து காணப்படும் இந்த வீட்டில் தற்போது முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.
தமிழக அரசியலில் இன்றளவும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் எம்.ஜி.ஆர் பிறந்த வீடு மற்றும் அவர் பிறந்த ஊர் இன்றும் எந்தவித அபிவிருத்திகளும் இன்றிக் காணப்படுகின்றன.
எம்ஜிஆர் சிறு வயதில் வணங்கிய ஆலயம் புனரமைக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
அதேபோன்று, எம்ஜிஆர் விளையாடியதாகக் கூறப்படும் மைதானத்தில், இன்று சிறுவர் இல்லம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவர் இல்ல வளாகத்தில் அந்தப் பிரதேசத்திலுள்ள சிறுவர்களுக்கு மேலதிக நேர வகுப்புகள் எடுக்கப்படுவதுடன், விளையாடுவதற்காகவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, எம்ஜிஆர் பிறந்ததாகக் கூறப்படும் கல்லாறு பகுதியிலுள்ள சில வீடுகளில் எம்ஜிஆரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
எம்ஜிஆர் தொடர்பில் அந்த ஊரில் பிறந்த ரட்ணசபாபதி, பிபிசி தமிழிடம் பேசினார்.
இலங்கையில் MGR பிறந்த வீடு
´´எம்ஜிஆர் இங்கு பிறந்தார் என்பது பெரிய விடயம். இந்த மண்ணிற்குப் பெருமை. அவர் இங்கிருந்து கண்டிக்கு போய், கண்டியிலிருந்து இந்தியாவிற்கு போன பிறகு, அந்த நாட்டிற்குப் போனதால்தான் பெரிய புகழைப் பெற்றார்.
இங்கிருந்திருந்தால் கூட அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. எம்ஜிஆர் பிறந்ததைப் பற்றி சொல்லப் போனால், அவரின் நிறைய படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
அவருடைய அனுபவங்கள், அவர் இருந்த காலகட்டத்தில் என்னென்ன செய்தார் என்பதை பாடல்கள், படங்கள் மூலமாக அறிந்திருக்கின்றோம். அவர் ஒரு சகாப்தம் என்று சொல்லலாம். அவர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது,” என அவர் கூறுகின்றார்.
எம்ஜிஆர் வாழ்ந்த வீடு, அன்று எப்படி இருந்ததோ, அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றது என ரட்ணசபாபதி கவலை தெரிவித்தார்.
´´அவர் வாழ்ந்த இந்த வீடு, அன்றைக்கு எப்படி இருந்ததோ, அந்தப் பழைமையைப் பராமரிக்கக்கூடிய அளவில் யாரும் இல்லை. இந்த லயின்கள் இடிந்து, உடைந்து மிக மோசமாக இருக்கின்றன.
அவர் ஞாபகமாக கட்டிக்கொடுப்பதற்குக்கூட யாரும் இல்லை. அவரின் பெயரை வைத்து இந்த ஊருக்கு எதாவது செய்யுங்கள். அவருக்காக நன்கொடை கொடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
கல்லோயா பிரவை, எம்ஜிஆர் காலணி எனப் பெயரை வைப்பதற்குக்கூட நாங்கள் தயார் நிலையில் இருக்கின்றோம். அவரது உருவச் சிலையை அமைப்பதாகச் சொன்னார்கள். அதோடு சேர்ந்து, மக்களின் வீடுகளைப் பராமரித்து, சரியான நிலையில் செய்துகொடுப்பார்கள் என்றால் பெரிய ஒரு உதவியாக இருக்கும்,” என அவர் கேட்டுக்கொள்கின்றார்.
லயின் அறைகளிலேயே எம்ஜிஆர் வசித்த வீடு மிகவும் மோசமாக இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
´´இந்த வீடுகள் 200 வருடங்கள் பழைமையானவை. வீடுகளின் பின்னால் அடியில் ஊற்றுகள் உள்ளன. காலம் செல்லச் செல்ல மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆரின் வீடு அதைவிட மோசமாக உள்ளது.
அந்த வீட்டிற்கு அருகில் ஆறொன்று வருகின்றது. மழைக் காலத்தில் சரியாக தண்ணீர் வருகின்றது. வெள்ள நீர் வருகின்றமையினால், அந்த வீடுதான் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றது.
நீர் அந்தக் கட்டடங்களில் பாய்வதால், சரிவுகள் ஏற்படுகின்றன. எம்ஜிஆர் இருந்த வீட்டில், அவர் மூலமாக ஏதாவது நடந்தால் மகிழ்ச்சி. அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்,” என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் MGR பிறந்த வீடு
இலங்கையில் எம்ஜிஆர் கண்டி நகரிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், அது உறுதி இல்லை என அந்த வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி நகரிலுள்ள இந்த வீடானது, இலங்கையிலேயே மிகவும் பழைமையான வீடு எனக் கூறப்படுகின்றது. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை நாச்சியப்ப செட்டியார் என்பவரால் கட்டப்பட்ட வீடு என வரலாறு கூறுகின்றது. அவரது பரம்பரையினர் தொடர்ந்து 6 வது பரம்பரையாக இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.
கண்டி நகரில் இரண்டு மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட முதலாவது வீடு இதுவென சில தரப்பினர் கூறி வருகின்றார்கள்.
மிக பிரமாண்டமான சுவர்கள், பர்மா தேக்கில் அமைக்கப்பட்ட தளபாடங்கள் என மிகப் பெறுமதி வாய்ந்த வீடாக இந்த வீடு அமைந்துள்ளது
எட்டுகோடி தங்கத்துடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை
எட்டுகோடி தங்கத்துடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை
எட்டு கோடி ரூபாயிக்கும் அதிக பெறுமதியான தங்கத்தினை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 4.611 கிலோ கிராம் தங்கத்தினை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துள்ளார்.
இலங்கை சுங்கத்தின் இரத்தின, ஆபரண மதிப்பீட்டு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டுகோடி தங்கத்துடன் சிக்கிய வெளிநாட்டு பிரஜை
35 வயதான குறித்த பிரான்ஸ் பிரஜை இதற்கு முன்னர் பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இந்த முறை 24 மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்க வந்துள்ளதை அவதானத்தில் கொண்டு, அவரது பயணப்பை சோதனையிட்ட போதே இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளுக்கு பின்னர் குறித்த தங்கம் அரசுடமையாக்கப் பட்டதுடன் சந்தேகநபருக்கு 7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையை அவர் செலுத்த முடியாமையை தொடர்ந்து நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்கடி சில்வா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு: 648 காஸ்சிலிண்டருடன் வாகனத்தை கடத்திய மகன்- வவுனியாவில் பரபரப்பு
தாயுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 648 காஸ் சிலிண்டருடன் மகன் வாகனத்தை கடத்திச் சென்ற சம்பவம் வவுனியாவில் இன்று பதிவாகியுள்ளது.
தாய் நெளுக்குளம் பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் விரைந்து சென்று வாகனத்தை மீட்டுள்ளதுடன், அதனை கடத்திச் சென்ற மகனையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
தாயுக்கும், மகனுக்கும் நீண்ட நாளாக இருந்த முரண்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
தமிழ் தேசிய மக்கள் முன்னனியைத் தேடி பொலிசார் யாழில் விசே கைது வேட்டையை ஆரம்பித்துள்ளதுடன், அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ் வடமராட்சி, மருதங்கேணி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பொலிஸ் புலனாய்வு துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும்
பொலிசார் சுட முற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையளில் பொலிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியை தேடி பொலிசார் யாழில் வேட்டை: கஜேந்திரகுமார் எம்.பியும் விரைவில் கைது?
கட்சியின் மகளிர் அணித் தலைவி மற்றும் ஒரு நபர் இன்று மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஜேந்திரகுமார் எம்.பியையும் பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இது குறித்து கஜேந்திரகுமார் எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான படை சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை
விமான படை சிப்பாய் தன்னை தான் சுட்டு தற்கொலை
இலங்கை விமான படை சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் .
இவ்வாறான தற்கொலை புரிந்த இராணுவ சிப்பாய் சடலம் மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சமீப காலங்களாக இலங்கை இராணுவ சிப்பாய்கள் ,இவ்வாறு தற்கொலை புரிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
துப்பாக்கி சூடு ஒருவர் காயம்
இலங்கை மீகொட பகுதியில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் படுக்கையாமடிந்துள்ளார் .
சூட்டில் காயம்ப்ந்த நபர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .இவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் திடிரென துப்பாககி சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரரற்ற காலநிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க பட்ட நிலையில் ,பலர் அங்கிருந்து அகன்று ,பிற பகுதிகளுக்கு சென்றுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
ஒடிசா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது
ஒடிசா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது
ஒடிசாவில் இடம் பெற்ற ரயில் விபத்தில் சிக்கி 300 மக்கள் பலியோகியும் ,
900 பேர் காயமடைந்தனர் .
இதனால் அந்த வழி ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்க பட்டது .
இதனை அடுத்து தற்போது விபத்தில் சிக்கிய, ரயில் யாவும் அகற்ற பட்டு ,தற்போதுசாலைகள் புதிதாக நிர்மாணிக்க பட்டு ,
ரயில் சேவைகள் வளமைய போல ஆரம்பித்து வைக்க பட்டுள்ளன .
இந்திய ரயில் வேயின் ,இந்த துரித பணி ,உலகை வியக்க வைத்துள்ளது .
பாதுகாப்பாக பயணம் ,அமையட்டும் என ,கும்பிட்டு அமைச்சர் வழியனுப்பி வைத்தார் .
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையை மிரட்டும் படு கொலைகள்
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
நாள் தோறும் இலங்கையில் வட கிழக்கு தமிழர்,
பகுதிகள் எங்கும் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
இவ்வாறு மீட்க படும் சடலங்களின் மிக கோரமாக ,
கொலை செய்யப்பட்ட நிலையில் காண படுகிறது ,
காடுகள் ,நீர் நில்கைகளில் அதிக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகிறது .
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது ,யார்
என்பது தொடர்பாக இதுவரை வெளியிடப்படவில்லை ,
ஜெ ஆர் காலத்தில் ஆறுகளில் சடலங்கள் மிதந்து போன்ற ,
செயல்பாடே இப்பொழுதும்
இடம்பெற்று வருவதே மக்களை பீதியில் உறைய வைத்து வருகிறது .
சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
சூரிய சக்தியில் இயங்கும் மீன் பிடி படகு ஒன்று
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறையில் வெள்ளோட்டம் விட பட்டுள்ளது .
உள்ளூர் உற்பத்திகளை கொண்டு தயாரிக்க பட்ட ,
இயந்திர வடிவமைப்பில் இந்த படகு வெள்ளோட்டம் விட பட்டுள்ளது .
13 குதிரை வலு கொண்ட மின்சார வலுவூட்டலை இது வழங்குகிறது என
அதனை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்
கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு
கடலுக்குள் இருந்த்து 33 கிலோ தங்கம் மீட்பு
இலங்கையில் இருந்து இலங்கைக்கு கடல்வழியாக எடுத்து
செல்ல பட்டு வீசப்பட்ட 33 கிலோ தங்கம் ,
காவல்துறையினரை கண்ணுற்ற நிலையில் கடலுக்கு வீச பட்டது .
இதனை அடுத்து கடத்தல் சாட்சிகள் வழங்கிய,
தகவலின் அடிப்படையில் ,கடலுக்குள் இருந்து
அந்த தங்கம் மீட்க பட்டுள்ளது .
இன்றைய இதன் மதிப்பு, பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது .
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த அரசாங்கத்திற்கு சொந்தமான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர்
முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில் இரு குழுக்களாக முரண்பாடு ஏற்பட்டையடுத்து பொலிசாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
இன்று (04.06) காலை முதல் மதியம் வரை இடம்பெற்ற இவ்முரண்பாடு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த பட்டானிச்சூர் புளியங்குளத்தின் நீரேந்து பிரதேசத்தை விடுமுறை நாட்களில் சிலர் கையகப்படுத்தி வேலி அடைத்து வந்திருந்தனர்.
இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட
விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
வவுனியாவில் அரச காணியை அடாவடியாக பிடிக்க முயன்றதால் இரு இனங்களுக்கு இடையில் முரண்பாடு: பொலிசார் அதிரடி
அதில், வவுனியா கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைககள பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.
2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம்
அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்,
அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின்
உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், இன்று (04.06) காலை குறித்த பகுதியில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நீரேந்து பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் சமூகத்தினர்
இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மரக்கன்றுகளையும் நாட்ட முனைந்தனர்.
இதன் போது, வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளனங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்னக முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்ப நிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றனர்.
இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.
குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்
செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.
குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.
இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.
அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
இந்தியா காங்கிரஸ் கட்சி செயல் வீரர் ராகுல் ,
காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது .
இந்திய தூதராலய அதிகாரி விடுத்த வேண்டுகோளைஏற்று ,
இலங்கை வருவதற்கு ராகுல் காந்தி தயாராகி வருகிறார் .
ராஜீவ் காந்தி இலங்கை வந்த பொழுது ,
துப்பாக்கியல் பிடரியில் அடித்தனர் .
ராகுல் காந்தியை இலங்கை வருமாறு அழைப்பு
இப்பொழுது இங்கை வர போகும்,
நாளைய இந்திய பிரதமர் ராகுல் காந்திக்கு
எவவாறு அடிக்க போகிறார்கள் என்பதை ,
இலங்கை திட்டம் போடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
சோனியா ஆட்ச்சியில் தமிழீழ விடுதலை புலிகள்,
முற்றாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் இப்பொழுது
காங்கிரஸ் இலங்கை அழைத்து செல்வது ,
தமிழர்களை நசுக்கும் நோக்கம் கொண்டதாகவே பார்க்க படுகிறது .
யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
யாழ் பல்கலைக் கழகத்தில் மோதல் 31 பேருக்கு தடை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் ,
கடும் மோதல் இடம் பெற்றதை மாணவர்கள் உள்நுழைய தடை விதிக்க பட்டுள்ளது .
மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
அதனை எடுத்து மேற்கொள்ள பட்ட நீதி ,
விசாரணைகளின் பின்னர் ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
யாழ்ப்பாண வளாகம் தற்போது ரவுடிகளின்,
காவல் நிலையமாக மாறியுள்ளதாக ,குற்ற சாட்டு விமர்சனம்
மக்களினால் முன் வைக்க படுகிறது




































