மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும்,

பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது
வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு பொலிசார் கைது செய்ய முயன்றதுடன், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
Posted in இலங்கை செய்திகள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க தெரணவிடம் இன்று தெரிவித்தார்.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.

அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்)

“வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவரை இரண்டு பொலிஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொலிஸ் காரில் ஏற்றினார்கள்.

அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம். “

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ்,

“எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவத்தில் இறந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார்..

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.”

அகதி தமிழனின் வாலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதி தமிழனின் வலி சுமந்த பாடல் உருகி பாடிய செல்லப்பா வீடியோ

அகதியாய் போன ஒவ்வொருத் தமிழர்களின் வலியில் உருவானப் பாடல் (தோணிப் புடிச்சு). இப்பாடலினுடைய கால அளவு பெரிதுதான் ஆனால் அதைவிட பெரிது, இப்பாடல் கொடுக்கும் தாக்கம்.

தோணிப் புடிச்சு சென்ற ஈழ தமிழரின் அகதி வாழ்வும் ,ஒப்பாரி சத்தங்களும் ,தாயகம் விட்டு பிரிந்த சொந்தங்களின் ஏக்கமும் ,கவலை கண்ணீராக ஓடும் ,தோணிப் புடிச்சு செல்லப்பா பாடல் கேட்டல் அழுகை வரும் பாடல் .

இந்த தோணிப் புடிச்சு என்ற பாடலை கேட்டு பலமுறை நானே அழுது விட்டேன் ,அவ்விதம் பெரும் தாக்கத்தை எனக்குள் தோணிப் புடிச்சு பாடல் ஏற்படுத்தியது ,அது போலவே உங்களுக்கும் அமையும் .

தேனிசை செல்லப்பா தோணிப் புடிச்சு பாடலை உருகி உருகி ,பாடியுள்ளார் உணர்வு ,அற்புதம் இசை ,காணொளி கலவை சிறப்பு ,பங்காற்றிய யாவருக்கும் எதிரி இணையத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் .

வலிகள் நிறைந்த வரிகளும், உணர்வு நிறைந்த குரலும், இரண்டையும் தாங்கிப் பிடிக்கும் இசையும் தோணிப் புடிச்சு இப்பாடலின் தாக்கத்தை நன்றாகவே எடுத்துச் சொல்லும்.

எனவே வலிகள் நிறைந்த வரிகளை உணர, முழுமையாகக் இப்பாடலைக் கேளுங்கள், பகிருங்கள்.

நன்றி.

பாடியவர் :
“பாசறைப்பாணர்”
தேனிசை செல்லப்பா

இசை : இளங்கோ செல்லப்பா

வரிகள் : “கவிஞர்” கவிஅன்பன்

காணொளி ஆக்கம் : பாவேந்தன் கலையகம்

https://www.youtube.com/watch?v=oSWdyWHbXdc
இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி
Posted in இலங்கை செய்திகள்

இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி

இத மட்டும் பண்ணிட்டா சீமான் தான் தலைவர் அடித்து சொன்ன பாண்டே பேட்டி

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை அழைத்து கேட்டறிந்துகொண்டதன் பின்னர் விலையை மேலும் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். “இது ஒரு குழுவாகப் பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. விலைச் சூத்திரத்தில் செலவுகளைக் காட்டுவதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. VAT சேர்க்காவிட்டால் ஒரு லீற்றர் எரிபொருளை 50 – 55 ரூபாய் வரை குறைக்கலாம்.”

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வௌியாகியுள்ளன.

சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நான்கு குழந்தைகளும் ஏழு வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் என ஒட்டாவா பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என மேயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வருமாறு:

தாய் – தர்ஷனி பண்டாரநாயக்க – 35 வயது
இனுக விக்கிரமசிங்க – 07 வயது
அஸ்வினி விக்கிரமசிங்க – 04 வயது
றின்யானா விக்கிரமசிங்க – 02 வயது
கெலீ விக்கிரமசிங்க – 02 மாதங்கள்

காமினி அமரகோன் என்ற 40 வயதுடைய நபரே கொல்லப்பட்ட மற்றைய நபராவார்.

இந்த சம்பவத்தில் பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதுடன் அவரது பெயர் தனுஷ்க விக்ரமசிங்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த சந்தேகநபர் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் 760,000 ரூபாய் பணம், இரண்டு ATM அட்டைகள் உள்ளிட்டவை சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தங்கம் போன்ற வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) மாலை லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கெப் வாகனத்தில் குறித்த தங்க வாள் கடத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது..

வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுடான கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்

நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.

இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பொலிஸ் அதிகாரி சிக்கினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா என்ற நந்துன் சிந்தக தப்பிச் செல்லும் முயற்சிக்கு உதவியமை தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி தரவுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​ஹரக் கட்டா தப்பிச் செல்லும் முயற்சிக்கு கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பாதுகாப்பு தலைக்கவசம் என்பன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு வருவதில் சுத்தா என்ற நபர் ஈடுபட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பான விசாரணையில், அவர் வசிக்கும் இடத்தைவிட்டு வௌியேறியுள்ளமை தெரியவந்தது.

சுத்தா என்ற நபர் தொடர்பில் மேலும் தொலைபேசி மூலம் ஆராயப்பட்டதுடன், அவர், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்டுடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்லும் முயற்சிக்கு வெளிநாட்டில் இருந்து வழிநடத்திய மிதிகம ருவான் என்ற ஜெயசேகர விதானகே ருவன் சாமரவுடன் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (06) பிற்பகல் மிதிகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் அஹங்கம திக்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

ஜனாதிபதியை இன்று சந்திக்கும் IMF பிரதிநிதிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மீளாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளின் பெயர் பட்டியல் விரைவில்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் ஓரளவு அதிகரிப்பு காணப்படுவதாகவும் உதய குமார அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த 1,618 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், இது 2023 ஆம் ஆண்டில் 1,639 காணப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் 1,232 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் அவ்வாறான சம்பவங்கள் 1,497 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2022 ஆண்டில் 13 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதுடன், 2023 ஆண்டில் அது 22 ஆக பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தைக் குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

நிதியமைச்சின் புதிய தீர்மானம்

நிதியமைச்சின் புதிய தீர்மானம்

மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.

இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை செலுத்தப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

தையிட்டி விகாரை காணிக்கு மீண்டும் கிளம்பிய எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது.

சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

தையிட்டி விகாரை தொடர்பில் அண்மையில் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ஷ , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள்,
சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக் கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார்.

அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப் பட்டது? தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது.

இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது.

அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும்? அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது.

மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது? மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது.

இவர்கள் யார் அதனை அளப்பதற்கு? – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார்.

அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத்
வீரசேகர கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது.

இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டத்தை ஒத்திவைத்தது.

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை

அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லம் தொடர்பில் நடவடிக்கை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் விடுத்த பணிப்புரைக்கு அமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வல்வை முதியோர் இல்லம் எவ்வித வசதிகளும் இன்றியும் இதுவரை பதிவு செய்யாமலும் இயங்கியமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வல்வை முதியோர் இல்லம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் ‘அபயம்’ 24 மணித்தியால குறைகேள் வலையமைப்பிற்கு முறைப்பாடு கிடைத்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கள விஜய அறிக்கை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த வடக்கு மாகாண ஆளுநர் குறித்த முதியோர் இல்லம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா, ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதிக்கு சென்றவர்களால் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நிறுவனத்தின் டொலர் வருமானம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய வருமான அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அதிகரிப்பு

கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கையின் மூலம் ஈட்டிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதுவே அந்நியச் செலாவணி வருமானம் கணிசமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களுக்கு அமைவாக மேற்கொள்ளும் செலவினங்களின் அடிப்படையில் எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்