Posted in Uncategorized

உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

.

உக்கிரேனில் தரை இறங்கிய ரசிய இராணுவம்

ரசியா இராணுவத்தினர் வான்வழியூடாக கிழக்கு உக்கிரேன் ,கார்கிவில் தரை இறங்கியது.


இந்த வான்வழி தரையிறக்கம் ,வெற்றிகரமாக அமைந்த நிலையில் ,குறித்த படையினர் , அந்த பகுதிகளை இலக்கு வைத்து, அகோர தாக்குதலை நடத்தினர்.

இதில்;மருத்துவமனை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக .உக்கிரேன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேனில் தரை இறங்கிய ரசியா இராணுவத்தினருக்கு ,ஆதரவாக ,வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்னம் உள்ளது .

தற்போது குண்டுகளினால் ,உக்கிரேன் அதிர்ந்த வண்னம் உள்ளது .

    Posted in Uncategorized உலக செய்திகள்

    இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

    இராணுவத்தை உடனே விலக்க வேண்டும் ஐநா ரசியாவுக்கு எச்சரிக்கை

    உடனடியாக போர் நிறுத்தம் மேற் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.சபை சிறப்பு அவசர கூட்டத்தில் பங்கேற்ற நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

    ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்
    அன்டோனியா குட்டரெஸ்
    ஜெனீவா:

    உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.

    இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

    சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும், உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு தாம் உறுதி யளித்துள்ளதாகவும் ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் ஒட்டு மொத்த கருத்ததாக
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்…உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- ரஷிய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை

    Posted in Uncategorized

    உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா

    உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்பிய ஐரோப்பா


    பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்
    போர் விமானம்
    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.

    இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன.

    உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

    பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

      Posted in Uncategorized

      உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

      உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்-ரசியா உத்தரவு

      ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை ரஷியா அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்- புதின் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்
      வால்டிமிர் ஜெலன்ஸ்கி – புதின்
      கீவ்:

      நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

      குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

      இந்தநிலையில் உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

      ரஷியாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

      வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.

      இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் வால்டிமிர் ஜெலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

      உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்

      உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷியா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.

      ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      ரஷியாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் ஜெலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

      ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷியாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷியா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தார்.

      மேலும் கீவ் நகருக்குள் நாசவேலையில் ஈடுபடும் குழுக்கள் நுழைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

        Posted in Uncategorized

        மனைவியை குத்திக் கொன்ற கணவன்

        மனைவியை குத்திக் கொன்ற கணவன்

        தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

        நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

        உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

        குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

        34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

          Posted in Uncategorized

          ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்

          ரசியா தாக்குதலில் 70 உக்கிரேன் படைகள் மரணம்

          உக்கிரேன் மீது இராணுவ தாக்குதலை மேற்கொண்டு வரும் ரசிய படைகள் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளனர்

          இதில் உக்கிரேன் படை பிரிவு ஒன்றின் மீது ரசிய படைகள் தாக்குதலை நடத்தின

          இந்த பீரங்கி தகத்தலில் சிக்கி 70 உக்கிரேன் படைகள் பலியாகினர்

          தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்னம் உள்ளன

            Posted in Uncategorized

            உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

            உக்கிரேனுக்கு அமெரிக்கா வழங்கிய வான்மறிப்பு ஏவுகணை

            உக்கிரேன் மீது ரசியா போர் தொடுத்து வரும் நிலையில் அவசர அவசரமாக விசேட விமானம் ஒன்றின் மூலம் வான் மறிப்பு வுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளது

            உக்கிரேனுக்கு உதவுவது போல இந்த ஏவுகணை வழங்க பட்டாலும் ரசியாவின்

            ஏவுகணை வீச்சின் தாக்குதல் அமெரிக்காவின் இந்த ஏவுகணையால் தடுத்து அழிக்க

            முடியுமா என்பதை சோதனை செய்திடும் களமாக உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி என்ற போர்வையில் சோதனை செய்வதை இவை எடுத்து காட்டுகிறது

            அப்படி என்றால் அமெரிக்கா ரசியா தம் மீதும் தாக்குதல் தொடுக்கலாம் என்பதை இப்போதே கணித்து கொள்கிறது என்பது பொருளாகிறது

              Posted in Uncategorized

              4300 ரசிய இராணுவம் மரணம் -53 விமானங்கள் அழிப்பு

              4300 ரசிய இராணுவம் மரணம் -53 விமானங்கள் அழிப்பு

              உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் போரில் இரு தரப்பிற்கும் இடையில் பலத்த இழப்பு

              ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை கீவ் நகரை கைப்பற்றும் நகர்வில் ரசியா படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன


              ஆனால் இதுவரை ரசியாவிடம் வீழ்ச்சியடையவில்லை

              தமது தாக்குதல்களில் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக
              உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

              உக்கிரேனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவிலும் போர் வெடித்துள்ளது ,இந்த

              தாக்குதல்கள் உச்சம் அடைந்துள்ள நிலையில் ரசியாவுடன் பேசிட தம் தயார் என உக்கிரேன் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கதாகும்

                Posted in Uncategorized

                வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில் வடகொரியா தற்பொழுது


                620 km சென்று தாக்கும் கூறும் தூர ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை செய்த்துள்ளது

                தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவை தயாரிக்க பட்டு சோதனை செய்ய படுவதாக வடகொரியா தெரிவித்து வருவதும் ,இந்த சோதனையால்


                பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் நிலவி வருவதாக பகைமை நாடுகள் கூக்குரல் இட்டு வருகின்றன

                  Posted in Uncategorized

                  உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவ சிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

                  உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவசிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

                  உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் இராணுவ தாக்குதலில் சில பலநூறு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்

                  ரசியா படைகளிற்கு எதிராக மக்களும் போராடிய வண்ணம் உள்ளனர் ,இவ்வாறான

                  நிலையில் ரஷியா படைகள் பயணித்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அதில்

                  உள்ள சிப்பாய்களை மக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                  இதில் அழுத்தி காணொளி பார்க்க

                    Posted in Uncategorized

                    உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு

                    உலகின் மிக பெரிய சரக்கு விமானம் ரசியாவினால் உக்கிரேனில் அழிப்பு

                    உக்கிரேன் விமான நிறுவனத்தினால் தயாரிக்க பட்ட உலகின் மிக பெரும் சரக்கு விமானம் ஒன்று


                    ரசியாவின் தாக்குதலில் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    கீவ் நகர் அருகில் உள்ள விமான நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த பட்ட பொழுதே

                    இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                    தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                    இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட

                    தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை

                    தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்

                    தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்

                    போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

                      ஐநா மனித உரிமை கூட்ட தொடர் ஆரம்பம்

                      ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் இன்று ஆரம்பிக்க பட்டுள்ளது

                      இந்த கூட்ட தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் கடுமையானதாக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                      இந்த கூட்ட தொடரில் வளமை போல இலங்கை தப்பிக்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in Uncategorized

                        அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

                        அடி காயங்களுடன் இறந்த நிலையில் புலி மீட்பு

                        இலங்கை Norton Bridge. தேயிலை தோட்ட பகுதியில் அடிகாயங்களுடன் பாதிக்க பட்டு இறந்த நிலையில் புலியின் சடலம் ஒன்று மீட்க பட்டுளள்து


                        குறித்த புலியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                        Posted in Uncategorized

                        காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

                        காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு -1,084 பேர் கைது

                        இலங்கை காவல்துறையினர் மேல் மாகாணத்தில் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது
                        1,084 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவர்களில் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்து 556 பேரும் குற்ற செயல்களில் ஈடுபட்ட 352 பேரும் உள்ளடங்குவர் என தெரிவிக்க பட்டுள்ளது

                        Posted in Uncategorized

                        உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

                        உக்கிரேன் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரசியா இராணுவம்

                        ரசிய இராணுவம் மூன்று வழியூடாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளது ,ஏவுகணைகள்

                        பீரங்கி குண்டுகளினால் அந்த நகரம் அதிர்ந்த வண்ணம் உள்ளது ,ரசிய இராணுவத்தின் குண்டுகள் பாராளுமன்ற வளாகத்தை அண்மித்து வீழ்ந்து வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

                        மக்கள் இன்றி அந்த பகுதிகள் வெறித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

                        குறித்த பகுதி வீழ்ச்சியடைந்தால் உக்கிரேன் ரசியாவின் பூரண கட்டுப்பாட்டுக்கள் வீழ்ந்து விடும் என்பது தாக்குதல் நகர்வின் மூலமாக உள்ளது

                        அந்த நட்டு அதிபர் தப்பி ஓடும் நிலை ,அல்லது சிறை பிடிக்க படும் நிலை ஏற்பட போகிறது
                        இன்று அல்லது நாளை குறித்த பகுதி வீழ்ந்து விடும் என்பது உளவு நிறுவனங்களின் குறிப்பாக உள்ளது

                          Posted in Uncategorized

                          ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

                          ரசிய மீது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளும் வங்கி முடக்க தடை

                          உக்கிரேன் மீது ரசியா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் ஐரோப்பா மற்றும் உலக

                          நாடுகள் இணைந்து அதன் பண பரிவர்த்தகத்தை முடக்கும் நடவடிக்கையா மேற்கொண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளன

                          இதனால் ரசியாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்த பட்டுள்ளதாக லண்டன் ,அமெரிக்கா உள்ளிட்ட கூட்டு நாடுகள் இணைந்து கருது தெரிவித்துள்ளன

                          இந்த தடைகளை அடுத்து வெஸ்டன் நாடுகளுக்கு ரசியா எச்சரிக்கை விடுத்துள்ளது

                          ,இந்த செயல் பாடானது ரசியாவை வலிந்து போருக்கு இழுக்கும் செயல் பாடுகளின் மூலோபாயம் என கணிக்கலாம்

                          அப்டி என்றால் ஐரோப்பா மீது ரசியா போரை தொடுக்கும் நிலை ஏற்பட போகிறது அதற்கான ஆரம்பம் இதுவாக நோக்கலாம்

                          அதற்கு உக்கிரேனில் ரசிய தனது இராணுவ நடவடிக்கை மூலம் சொல்ல போகும் செய்தியை அடுத்தே ஐரோப்பா கதி கலங்கும் என அடித்து கூறலாம்

                          உக்கிரேன் வீழும் வரை காத்திருக்க வேண்டியது நமது பொறுப்பாகும்

                            Posted in Uncategorized

                            லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

                            லண்டனில் Uber Eats and Just Eat சாரதிகள் பணிபுறக்கணிப்பு போராட்டம்

                            லண்டனில் மிக பெரும் நிறுவனங்களாக உள்ள Uber Eats and Just Eat சாரதிகளுக்கு

                            குறைந்த ஊதியம் வழங்குவதாகவும் அதனை அதிகரிக்க கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது

                            ஊபர் நிறுவனம் குறைந்த வருமானத்தை வழங்குவதாக கூறி நீதிமன்றில் வழக்கு

                            தொடர பட்டது ,அதன் பின்னர் சாரதிகளுக்கு ஊதியம் அதிகரிக்க படுவதாக தெரிவிக்க பட்ட நிலையில் அவை தொடர்ந்து குறைக்க பட்டு வருவதாக சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்

                            இதுவே அவர்களுக்கு பெரும் நெருக்கடியை இப்பொழுது தருவித்துள்ளது

                            இந்த போராட்டமானது Sainsbury’s car park in Park Farm Road, Folkestone பகுதியில் இடம்பெற்றுள்ளது

                              Posted in Uncategorized

                              லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

                              லண்டனில் நிர்வாணமாக மிதிவண்டி ஒட்டிய வெள்ளையர்கள்

                              லண்டன் Folkestone பகுதியில் நிர்வாணமாக வெள்ளையர்கள் மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டனர்

                              உலக நிர்வாண ஊர்வலமாக இது தெரிவிக்க பட்டுள்ளது ,


                              இப்படியும் வினோதமான முறையில் இவர்கள் போராட்டம் நடாத்தியுள்ளமை வியக்க வைக்கிறது

                              Posted in Uncategorized

                              சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

                              சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்

                              ஏமன் நாட்டு கவுதிய படைகளின் உளவு விமானம் ஒன்று சவுதிக்கு அண்மையில் பறந்து

                              கொண்டிருந்த பொழுது அந்த விமானத்தை சவுதிய இராணுவத்தினர் சுட்டு

                              வீழ்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                              கவுதிய படைகளிற்கும் சவுதிக்கு இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது