Posted in மருத்துவம்

வாய் நாற்றத்தை போக்குவது எப்படி?

வாய் நாற்றத்தை போக்குவது எப்படி?

தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும்

வாய் நாற்றம்’ என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

வாய் நாற்றத்தை போக்குவது எப்படி?
வாய் நாற்றம்
தற்போது பயன்பாட்டில் உள்ள மேற்கத்திய உணவு முறைகளாலும் அவசரகதி வாழ்க்கை முறையாலும் ‘வாய்

நாற்றம்’ என்பது பலரையும் வாட்டும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பல், ஈறுகளில் ஏற்படும்

கோளாறுகளே வாய் நாற்றத்துக்கு முதன்மை காரணங்கள். மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல்,

நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்கள் அடுத்த காரணங்கள்.

சரியாக பல் துலக்காமல் இருப்பது, உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாய் நாற்றத்தை

ஏற்படுத்துகின்றன. உணவைச் சாப்பிட்டதும் வாயை நன்றாக சுத்தம் செய்ய தவறினால், உணவுத் துகள்கள்

பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும். அப்போது, வாயில் இயற்கையாகவே வசித்துக்கொண்டிருக்கிற

லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், இந்த உணவுப் பொருட்களுடன் வினை புரியும்.

இதனால், உணவு துகள்கள் அழுகும். அப்போது ஒரு விதமான வேதிப்பொருள் உருவாகும். இது கெட்ட

வாயுவை வெளியேற்றும். இதுதான் வாய் நாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். பற்களில் கறை படிவது, பல்

ஈறுகளில் வீக்கம், அழற்சி, புண் அல்லது ரத்த ஒழுக்கு உண்டாவது, சொத்தை பல்லில் சீழ் பிடிப்பது, அடிபட்ட

பற்கள் ரத்த ஓட்டம் இழப்பது, வாய் உலர்வது, நாக்கில் வெள்ளை படிவது ஆகியவை வாய் நாற்றத்தை

வரவேற்கும் காரணிகள். வாய்ப்புண், வாய் புற்றுநோய், ‘சிபிலிஸ்‘ எனும் பால்வினை நோய், வின்சென்ட் நோய்,

எய்ட்ஸ் போன்றவையும் வாய் நாற்றத்துக்கு அழைப்பிதழ் அனுப்பும்.

மேலும், மூக்கில் சதை வளர்வது, சைனஸ் அழற்சி, தொண்டை புண், தொண்டை சதைகளில் சீழ்,

நுரையீரல்களில் சீழ், நுரையீரல் காசநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படலாம்.

இவை தவிர, உணவுக் குழாய் அழற்சி, இரைப்பை புண், இரைப்பை புற்றுநோய், உணவு அஜீரணம், கல்லீரல்

செயலிழப்பு, சிறுநீரக கோளாறுகள் ஆகிய நோய்களின் போதும் வாய் நாற்றம் உண்டாவது உண்டு. வாய் நாற்றம்

உள்ளவர்கள் முதலில் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களை சுத்தம் செய்து கொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள்

இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர்

உதவியுடன் சைனஸ் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இவற்றால் மற்ற காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு

முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். வாய் நாற்றத்தை தடுக்க விரும்புவோர், வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதில்

அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு

ஒருமுறை பற்களை துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளை (பிர‌‌ஷ்) பயன்படுத்தினால் பல்

ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளை பயன்படுத்துவது நல்லது.

சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். வாயைச் சுத்தப்படுத்தும்

ஒவ்வொரு முறையும் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக, நாக்கின்

பின்புறத்தை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். அங்குதான் 80 சதவீதம் பாக்டீரியாக்கள்

காணப்படுகின்றன. பெரும்பாலோருக்கு வாய் நாற்றம் அங்குதான் ஆரம்பிக்கும்.

வாய் நாற்றத்தை
வாய் நாற்றத்தை

வாய் நாற்றம் பெரும் இன்னல்களை பலருக்கு கொடுக்கிறது ,இந்த வாய் நாற்றம் உள்ளவர்கள் வாயை மறைத்து கொண்டு பேசுவதும் ,பிறர் அருகில் நின்று பேசிட தயக்கம் கடடுவதையும் காணமுடிகிறது .

இந்த வாய் நாற்றம் புலம் பெயர் நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகம் உள்ளது .இலங்கையில் உள்ள மக்கள் பலருக்கு இவை குறைவே என்று கூறலாம் .

ஆனால் வெளிநாடுகளில் உள்ள மக்கள் இந்த வாய் நாற்றம் காரணமாக பெரிதும் பாதிக்க படுகின்றனர் .

    Posted in மருத்துவம்

    சர்க்கரை நோயை விரட்ட இதை சாப்பிடுங்க

    சர்க்கரை நோயை விரட்ட இதை சாப்பிடுங்க

    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.

    இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
    முருங்கை டீ


    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.

    ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    தேவையான பொருட்கள்

    முருங்கைக்கீரை பொடி – ஒரு தேக்கரண்டி ,
    கிரீன் டீ பொடி – ஒரு தேக்கரண்டி ,


    புதினா இலைகள் – 4,
    எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி,
    வெல்லம் – 1 தேக்கரண்டி.

    முருங்கை டீ

    செய்முறை

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி, கிரீன் டீ பொடி, புதினா இலை, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    பின்னர் இந்த டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

    சூப்பரான முருங்கை டீ ரெடி.

    குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்

    சர்க்கரை நோயை விரட்ட
    சர்க்கரை நோயை விரட்ட
      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

      சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

      ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

      ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்
      ஆப்பிள்


      ஆப்பிள், எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பழமாக இருக்கிறது. அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பது

      முக்கியமானது. ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

      குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்ட உடன் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடுவதுதான் நல்லது.

      ஆப்பிள், தயிர் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கபம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட உடன் புளிப்பு சார்ந்த எந்த

      உணவையும் சாப்பிட வேண்டாம். அவை வாயு தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

      ஆப்பிள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகவும் கூடாது. உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்து போகச்செய்து

      பூஞ்சை உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். அது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். பொதுவாகவே சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகக்கூடாது.

      அது வாயு தொந்தரவு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலையும் ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட

      பிறகு முள்ளங்கி சேர்த்த உணவை சாப்பிடுவதும் நல்லதல்ல. அது சரும அலர்ஜியை உருவாக்கும்.

        Posted in மருத்துவம் முக்கிய செய்திகள்

        கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்,

        கொரோனாவை சரி செய்ய இதை தினம் குடியுங்கள்

        கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய இதை குடித்தாலே போதும் என மருத்துவர் தெரிவித்ததாக தகவல் ஒன்று சமூக

        வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

        கொரோனாவை சரி செய்ய இதை குடித்தால் போதுமா?

        கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவ நிபுணர்கள் 24×7 பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமூக

        வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய நகைச்சுவை தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

        அந்த வகையில், தற்சமயம் வைரலாகும் பதிவுகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவர் சில ஆய்வு

        அறிக்கைகளில் பார்த்து விட்டு கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்வதற்கான தீர்வை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

        மேலும் கொரோனை வைரஸ் கிருமியை கொல்லும் பண்புகள் இரசாயண கலவைகள் தேநீரில் அதிகம் நிறைந்து இருப்பதாக

        மருத்துவர் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.


        இதே தகவல்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், இதன்

        உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த இணையத்தில் இதுபற்றிய தேடல் நடைபெற்றது.

        அதில் தேநீர் குடித்தால் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்துவிட முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல் எதுவும்

        கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்ய தேநீர் குடித்தால் போதும் என வைரலாகும்

        தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

        போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம்

        காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும்

        நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.

        கொரோனாவை சரி செய்ய
        கொரோனாவை சரி செய்ய
        Posted in மருத்துவம்

        கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

        கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

        நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும்

        நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

        மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும்

        உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை

        கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

        இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள்

        கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது

        என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும்

        வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.

        கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்

        மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான

        கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

        காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

        சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு

        மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.

        சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு

        இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4

        நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

        இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42

        பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.

        இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-

        கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்

        converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும்

        கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத்

        தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய

        அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

        முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு

        நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

        இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே

        நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

        ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு

        நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு

        கவனிக்கத்தக்கது. அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு

        நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா

        என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

        Posted in மருத்துவம்

        உடல் சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க

        உடல் சூட்டை தணிக்க இதை சாப்பிடுங்க

        சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல்

        சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும்.

        உடல் சூட்டை தணிக்கும் சுரைக்காய்
        சுரைக்காய்
        கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு

        மருந்தாகும். சுரைக்காய் குக்குபைஸ் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். ‘இனிப்புச் சுரை’ அல்லது காட்டுச் சுரை’ என்றும் பிரித்துப்

        பார்ப்பது வழக்கம். சுரைக் காயை ஆசியா கண்டத்தில் உள்ள மக்கள் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அறிந்து

        அதைப்பயன்படுத்தி வருவதாக வரலாறு கூறுகிறது. சுரையை கறிச்சுரை என்றும் குறிப்பதுண்டு.

        பொதுவாக கசப்பில்லாத சுரையே கறியாக சமைப்பதற்குப் பயன்படும். சுரைக் கொடியை மழைக்காலங்களில் வீட்டுத்

        தோட்டத்திலும் கொல்லைப் பகுதியிலும் பயிராக வளர்ப்பது வழக்கம். கிராமப்புறக் கூரைகளின் மேல் இதைப் படரவிட்டு

        வளர்ப்பதை நாம் இன்றும் பார்க்கலாம். சுரைக்காய் ஒரு குடத்தைப் போல உருண்டை வடிவுடையதாகும். பருமனாகவும்,

        பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். உட்பகுதியில் மிக்க சதைப்பற்றோடு விதைகள்

        வெண்மையாகவும் காணப்படும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.

        இது சீதளத்தை உண்டாக்க வல்லது. சுரைக்கொடியின் கீரையைக் கூட சமைத்து (கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு. நன்கு

        முற்றிய சுரைக் காயை ஒரு துளையிட்டு உள்ளிருக்கும் சதைப் பகுதியை நீக்கிவிட்டு ‘சுரைக்குடுக்கை’ என்ற பேரில் ஒரு பாத்திரம்

        போல் திட, திரவ பண்டங்களை வைப்பதற்காக இன்றும் பயன் படுத்துகின்றனர்.

        சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:-

        இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறுநீரைப்

        பெருக்கக்கூடிய சிறந்த உணவுப் பொருள். உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. பூசணிக்காயை அல்வா என்னும்

        இனிப்புப் பண்டம் செய்வது போல சுரைக்காயையும் துருவி இனிப்பான அல்வா செய்யப் பயன்படுத்தலாம்.

        வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி மேற்பற்றாகப் பயன்படுத்துவர். சுரைக்கொடியின்

        இலை சுடுநீர் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு. சுரை இலையினால் நீர்க்கோர்வை, உடல் வீக்கம், முத்தோஷம்

        (வாத, பித்த, சிலேத்தும் குற்றங்கள்) போகும். சுரையின் இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச்சிக்கல் உடையவர்கள்

        இதை கீரையாகக் கடைந்து சாப்பிடலாம். இது சீரணத்தையும் துரிதப்படுத்தவல்லது. சுரைக்கு பைத்தியத்தைத் தணிவிக்கும் தன்மையும் உண்டு.

        சுரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள்:-

        புதிதாக எடுக்கப்பட்ட 100 கிராம் சுரைக்காயில் கீழ் வரும் சத்துக்கள் அடங்கியுள்ளதாக அமெரிக்கத் தாவரவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


        எரிசக்தி (எனர்ஜி)-14 கலோரி, மாவுச்சத்து-3.39 கிராம், புரதச்சத்து–0.62கிராம், கொழுப்புச் சத்து- 0.02கிராம், நார்ச்சத்து- 0.05கிராம்,

        வைட்டமின்களான ‘போலிக் அமிலம்’ 6 மைக்ரோ கிராம், ‘நியாசின்’ 0.320மி.கிராம், பேண்டோதெனிக் அமிலம் 0.152மி.கிராம்,

        பைரிடாக்ஸின் 0.040மி.கிராம், ரிபோப்ளேவின் 0.0220மி.கிராம் தயாமின் 0.029மி.கி., வைட்டமின் ஏ-16 ஐசி., வைட்டமின் ‘சி’ 10.1மி.கி.

        மற்றும் நீர்ச்சத்துக்களான சோடியம்-2மி.கி. பொட்டாசியம்-150மி.கி., தாது உப்புக்களான சுண்ணாம்புச் சத்து- 26மி.கி., தாமிரம்

        (காப்பர்)-0.034மி.கி., இரும்புச்சத்து- -0.020மி.கி., மெக்னீசியம்-11மி.கி., மேங்கனீசு–0.089மி.கி., பாஸ்பரஸ்-13மி.கி., செலினியம்-0.2மி.கி., துத்தநாகம் (ஸிங்க்)-0.70மி.கி.

        உள்ளடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கி உள்ளதால் சுரைக்காய் ஓர்

        அருமையான மருந்தாக விளங்குகிறது.

        சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:-

        இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம்

        முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில்

        உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக்

        குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

        சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய்

        பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை

        ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்

        பழுத்த சுரைக்காயை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ரசத்தையும் சேர்த்து அருந்தினால் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

        சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும்

        வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு

        நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

        கோடை காலத்திலும் நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு

        சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது. சுரைக்காய்

        தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தை பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகிறது. சுரைக்காய்ச்சாறு வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பி’, சோடியம், இரும்பு, பொட்டாசியம்

        ஆகிய சத்துக்களையும் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக்கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகிறது.

        ஒரு கப் சுரைக்காய் சாற்றில் 18மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் உட்சுரப்பிகள் (ஹார்மோன்கள்) ஒழுங்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகிறது.

        உடல் பருமன் கொண்டவர்கள் சுரைக்காய்ச்சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.

        பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் செறிந்த சுரைக்காய்சாறு ஒரு ஊட்டச் சத்துமிகுந்த உணவு மட்டுமின்றி

        பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்யவும் உதவுகிறது. சுரைக்காய் தன்னுள்

        கரையக்கூடிய மற்றும் கரையா நார்ச்சத்துக்களை அபரிமிதமாகப் பெற்றுள்ளது. இது உணவாகும்போது சீரண உறுப்புகளுக்குப் பலம்

        தந்து அவற்றைச் செம்மைப்படுத்தி மலச்சிக்கலை மறையச் செய்கிறது.

        மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் ஆகுதல், வயிற்றில் காற்று செரிந்து வயிற்றை

        அடைத்ததுபோல் தோன்றுதல் ஆகிய பிரச்சனைகள் சுரையை உண்பதால் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாதபோது

        ஆசனவாய்ப்புற்று வருவதும் அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது.
        சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் தர்ப்பூசணி சாறு

        போல் கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. உடலிலிருந்து வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்து குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது.

        சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்கவல்லது. சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க

        உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது. சுரைக்காய் லேசான உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன தவிர்க்கப்படுகின்றன.

        அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்றபோது ஒரு கப் சுரைக்காய் சாறு உடனடித் தீர்வாக

        உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை சமன்படுத்துகிறது. சுரைக்காய் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம்.

        சுரைக்காய் சாறு தயாரிக்கும் முறை:-

        சுமார் 300 கிராம் எடையுள்ள ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளவும். முற்றாத பழுக்காததாக இருப்பது நல்லது.

        மேற்புறத்தை நீர்விட்டு சுத்திகரித்துக் கொள்ளவும். பிறகு மேற்தோலை சீவி நீக்கிவிட்டு சதைப்பற்றை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக்கி, அதனுடன் 6 புதினா இலைகளைச் சேர்த்து

        மிக்ஸியில் இட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனோடு சிறிது சீரகப் பொடியையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக

        தேவைக்கு ஏற்ற உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குளிர்விக்கும் பொருட்டு ஐஸ்கட்டிகள் சிலவற்றையும் சேர்த்து எடுத்துக் கொள்ள லாம். சுரைக்காய் சாறு இப்போது பருகத் தக்கதாக இருக்கும்.

        சுரைக்காய் மருந்தாகும் விதம்:- சுரைக்காய்ச்சாறு பசுமையாக எடுத்து அன் றாடம் குடித்து வருவதால் உடல் எடை குறைவதோடு

        மார்பு தொடர்பான நோய்கள் பலவும் மறைந்துவிடும். சுரை இலையைச் சாறாக்கிக் குடிப்பதாலோ அல்லது சுடுநீரிட்டு

        சர்க்கரை சேர்த்துக்குடிப்பதாலோ வாந்தியை உண்டாக்குவதற்கும், மஞ்சள் காமாலை நோயைப் போக்குவதற்கும், ஈரல் வீக்கத்தை வற்ற வைப்பதற்கும் பயன் தருவதாக அமையும்.

        சுரை இலையை மைய அரைத்து தலையில் நன்றாகத் தேய்த்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு குளித்துவிடுவதால் தலை

        வழுக்கை தவிர்க்கப்படுவதோடு தலை முடியும் வளரும். தலை வலியும் தணியும். சுரை விதைகளைக் காய வைத்துப் பொடித்து

        வைத்துக்கொண்டு 5 கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்ந்தோ அல்லது நீரிலிட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்தோ குடிப்பதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறிபோகும்.

        சுரைக்காய்ச் சாறு ‘அல்சர்’ என்னும் வயிற்றுப் புண்ணை ஆறச் செய்வதோடு அமிலச் சுரப்பை அடக்கிவைத்து செரிமானத்தைத்

        தூண்டிவிடும். சுரைக்காயை நசுக்கிப் பசையாக்கி மேற்ப் பற்றாகப் போடுவதனால் தீக்கொப்புளங்கள், நீர்க்கோத்து நோகச் செய்யும் கொப்புளங்கள் வந்த வடு தெரியாமல் விலகிவிடும்.

        கோடைக்கால வெப்பத்தால் உண்டான தலைவலிக்கு சுரைக்காயை அரைத்து நெற்றிப் பத்தாகப் போட்டு வைக்க குணமாகும்.

        சுரைக்கீரையோடு பூண்டு சேர்த்து ஒரு மண்டலம் சமைத்து சாப்பிட்டு வர நீரேற்றம் கரைந்து போகும்.

        சுரைக்காய் விலை மலிவானது உன்னத மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. உஷ்ணத்தைத் தணிப்பது. உடல் எடையைக்

        குறைப்பது, சிறுநீரகம், இரைப்பை, இதயம் இவற்றுக்கு பலம் சேர்ப்பது கொப்புளங்களை குணப் படுத்துவது, தலைவலியைத்

        தணிப்பது, புத்துணர்வைத் தருவது எனத் தெரிந்து கொண்டோம். சீரான உடல்வாகு உள்ளவர்கள் தவிர அனைவருக்கும் இது உகந்தது என உணர்ந்து பயன்படுத்தி உய்வோம்.

        சுரைக் காய்ச்
        சுரைக் காய்ச்
        Posted in மருத்துவம்

        கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்

        கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்

        கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின்

        காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல், அழகாக இருக்கும்.

        கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்


        கழுத்தின் பின்புறத்தில் இருக்கும் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்


        பெரும்பாலான பெண்கள் தங்கள் முகம், கால் கை என பார்த்து பார்த்து அழகுப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கழுத்தை

        மறந்துவிடுவார்கள். இன்னும் சிலர் கழுத்திற்கு சோப்பு கூட போட மாட்டார்கள்.

        இப்படி கவனிப்பாரின்றி இருக்கும்போது, கழுத்து கருமையடைந்து அதன் பின் அதனைப் போக்க சகல வித்தையும் கையாள

        வேண்டியது இருக்கும். ஆகவே வந்தபின் காப்பதை விட எப்போதுமே கழுத்தை பராமரித்தால், அது கருமையடையாமல்,

        அழகாக இருக்கும்.

        உங்கள் கழுத்து கருமையடைய நிறைய காரணங்கள் உள்ளது. சரியான பராமரிப்பு இல்லாதிருத்தல், கர்ப்ப காலத்தில்,

        ஹார்மோன் மாற்றங்களால், சூரிய கதிர்களால், தோலழற்சி, அலர்ஜி, தோல் கடினமாதல். ஆகியவற்றால் தோல் கருமையாகும்.

        தோல் உங்களின் பழைய நிறத்திற்கு கொண்டு வர வீட்டிலேயே முயற்சிக்கலாம்.

        தேவையானவை:

        ஓட்ஸ் -2 டேபிள் ஸ்பூன்
        தயிர் அல்லது யோகார்ட் -2 டேபிள் ஸ்பூன்
        எலுமிச்சை சாறு சில சாறு

        ஓட்ஸ் கழுத்திலுள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. கருமையை போக்கி நிறத்தினை கூட்டுகிறது. தயிர் ஒரு இயற்கையான ப்ளீச்

        ஆகும். கருமையையும் சருமத்தில் படியும் அழுக்குகளையும் சீக்கிரம் அகற்றிவிடும். கழுத்தில் தொற்று இருந்தாலும்,

        கருமையாகும். தொற்றினை நீக்குவதில் தயிரின் பங்கு முக்கியமாகும். எலுமிச்சையும் இயற்கையான ப்ளீச் ஆகும். கருமை

        நிறத்தை போக்கி, அழுக்கு, எண்ணெய் பசையை போக்குகிறது.

        மேற்கூறிய பொருட்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து, கலவையாக கழுத்தில் போட்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய

        வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு,வெதுவெதுப்பான நீரினில் கழுவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், கருமையற்ற,

        மிருதுவான கழுத்து திரும்ப உங்களுக்கு கிடைக்கும். அதனுடன் கழுத்திற்கு முறையான பயிற்சி செய்தால், கழுத்தில் எக்ஸ்ட்ரா

        சதை தொங்காமல், அழகாய் வைத்திருக்கலாம்.

        கழுத்தின் பின்புறத்தில்
        கழுத்தின் பின்புறத்தில்
        Posted in மருத்துவம்

        முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

        முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்

        முகத்தில் எண்ணெய் வழிவதை குறைத்து, நாள் முழுக்க பளபளப்பாக தோன்ற இந்த விசயங்களைத்தான் நீங்கள்

        செய்ய வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

        முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்
        முகத்தில் வழியும் எண்ணெய்- தவிர்க்கும் வழிகள்


        எத்தகைய சருமமாக இருந்தாலும் சரி, அதை காலை முதல் மாலை வரை, புத்துணர்ச்சியுடன், பளிச்சென பராமரிக்கும்

        ஆர்வம் உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் முகத்தை அழகாக மாற்றுவது எளிது. எண்ணெய் வழியும்

        பிரச்சனையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள். இவை உங்களுக்கு நிச்சயமாக நல்ல பயன் தரும்:

        உங்களது முகத்தில் ரொம்ப எண்ணெய் வழிந்தால், மை ஒற்றும் காகிதம் பயன்படுத்தி, அதை ஒற்றி

        எடுத்துவிடுங்கள். இந்த மை ஒற்றும் காகிதம் எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. அனைத்து அழகுப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் இது கிடைக்கும்.

        முகத்தை நன்கு சுத்தம் செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் முகத்தில் எண்ணெய் வழிவதால், எந்நேரமும் அதனை

        பேப்பர் வைத்து துடைத்துக் கொண்டே இருக்கனும் என்பது அவசியமில்லை. அதற்குப் பதிலாக, முகத்தை சுத்தம்

        செய்ய உதவும் பொருட்கள் நிறைய மார்க்கெட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை வாங்கி

        பயன்படுத்தலாம். முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், முகத்தின் இறுக்கம் மறைந்து, தளர்வு ஏற்படும். இதுதவிர,

        முகத்தில் உள்ள எண்ணெய்பசை, அழுக்குகள் அகன்றுவிடும். இந்த வைத்திய முறையை மிக மெதுவாகச்

        செய்ய வேண்டும். கடுமையாகச் செய்தால், ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

        முகத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த, இலகுவான, எண்ணெய் பசையற்ற மாஸ்ச்சுரைஸரை தடவுங்கள். இதை மறந்துவிடவேண்டாம்.

        பிரைமர் தடவுவதால், முகத்தின் எண்ணெய்பசை உடனடியாக உறிஞ்சப்படுகிறது. உங்களுக்கு

        மென்மையான, வெல்வெட் போன்ற முகம் கிடைக்க, இது உதவும். லேக்மி ஆலி டே கிரீம், அக்வா ஜெல்லை பிரைமராக பயன்படுத்தி, கன்ன கதுப்புகள், நெற்றி உள்ளிட்ட

        பகுதிகளில் தடவுங்கள். இது நாள் முழுக்க முகம் பளபளப்புடன் இருக்க உதவும். இதுதவிர, முகத்தில் உள்ள

        ஓட்டைகள், பள்ளங்கள், தழும்புகள் போன்றவற்றை, இது மறைத்து, மேக்அப்பை எடுத்துக் காட்ட உதவும்.

        படுக்கை நேரத்திலும், மேக்அப் விசயத்தில் சற்று கவனம் செலுத்துவது நலம் என்றே சொல்வேன். அதாவது, நீங்கள்

        தினமும் கிரீம் பயன்படுத்திவந்தால், லோஷன் வகையான பொருட்களை, படுக்கும் முன்பு, தடவிக் கொள்ளுங்கள்.

        நீங்கள் லோஷன் விரும்பி எனில், ஹைட்ரேட்டிங் சீரம் பயன்படுத்தி பாருங்கள். அதேபோல, லோஷன் தடவும்

        முன்பு, எங்கே தடவுகிறோம் என்பதில் கவனம் தேவை. மறந்தும்கூட மூக்கின் மீது தடவ வேண்டாம். அங்குதான் நிறைய எண்ணெய் சுரப்பிகள் உள்ளன.

        https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
        Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

        கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க

        கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க

        முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை

        ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.

        கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க


        கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க
        நம்கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நம்

        வயதின் முதிர்வு காரணமாகவும் ஏற்படுகின்றன. முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம்

        சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.

        உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். முகத்தை எந்தஅளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும்

        சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும்.

        சோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சோப்பு மற்றும் மூலிகை க்லேன்சரை பயன்படுத்தலாம். இது

        உங்கள் முகத்திற்கு பொலிவை தருவது மட்டுமில்லாமல் ph சமநிலையை மாற்ற செய்கின்றது.

        வீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும்.


        வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம்

        அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.

        அதிக அளவு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம் நம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் அதிக அளவு தண்ணீர்

        குடிப்பதால் மட்டுமே முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும்.

        எஸ்தடிக் அறுவை சிகிச்சை முறை மற்றும் போட்டுலினம் டாக்ஸீன் ஆகிய முறைகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள

        சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்க செய்யலாம். வைட்டமின்- சி உடைய கீரிம்களை நீங்கள்

        பயன்படுத்தலாம். இல்லையென்றால் சீரம் உபயோக்கிக்கலாம்.

        இவை நமக்கு ஆன்டி- ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு பிற ஊதா கதிர்களிலிருந்து நம்மை காக்க செய்கின்றது. இதன்

        காரணமாகத்தான் கொலோஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கின்றது.

        இந்த முறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும்

        கோடுகள் மறைந்து விடும். உங்கள் கழுத்தும் பளபள வென மின்ன செய்யும்

        கழுத்து பகுதியில் சுருக்கங்கள்
        Posted in மருத்துவம்

        தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்

        தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்

        நம்மிடம் உள்ள சில பழக்க வழக்கங்கள் கூட புற்று நோய் வர காரணமாக அமையும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

        தினமும் இந்த விஷயங்களை செய்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்
        புற்றுநோய்


        நம்மிடம் உள்ள சில பழக்க வழக்கங்கள் கூட புற்று நோய் வர காரணமாக அமையும். அவற்றில் சிலது உணவுப்பழக்கமாக கூட இருக்கலாம். சில அழகுப்

        பொருட்களையும் நாம் தொடர்ந்து உபயோகிக்கும் போது நமக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.

        புற்று நோய் எப்படி ஏற்படுகிறது என அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். நம் டி,என்,ஏ வில் ஏற்படும் மரபணு மாற்றத்தின் காரணமாகதான் புற்று நோய் ஏற்படுகிறது.

        நம்முடைய செல்களானது கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து முறியவும் செய்யும். அப்படி முறியும் செல்கள்

        கட்டிகளாக வளரும் போது தான் புற்று நோய் நமக்கு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் பரம்பரை நோயாகவும் மாறி விடுகிறது.

        எனவே கீழே உள்ள செயலில் நீங்கள் தொடர்ச்சியாக ஏதேனும் செய்தால் உங்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

        • சிகரெட் குடிப்பது தவறு என்றும் தெரிந்தும், சிலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். இதிலும் சந்தைக்கும் இ சிகரெட் என்ற ஒன்றை புதுசாக
        • அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த இ சிகரெட்டுகளில் புகை மற்றும் தார் போன்ற பொருள்கள் இல்லை
        • என்றாலும், நிகோடின் மற்றும் பிற சுவைகளை அது தருகிறது. எனவே சிகரெட் மற்றும் ஏ-சிகரெட்
        • குடிப்பர்வர்களுக்கு புற்றுநோய் வர கண்டிப்பாக வாய்ப்புள்ளது. எப்பொழுதாவது ஒரு முறை பயன்படுத்தினால் சரி, இதற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு புற்று நோய் வரும் அபாயம் உள்ளது.
        • ஹாம், பன்றி, சலாமி போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்ணும் போது நமக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவை டைப் ஒன்று புற்றுநோயை உருவாக்கி விடும். சிவப்பு இறைச்சி குழுவான மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மற்றும் பன்றி இறைச்சி ஆகிய உணவுகள் புகையூட்டப்பட்டும், பதப்படுத்தி உண்ணும் போதும் டைப் 2 புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
        • சூடான தேநீர் மற்றும் காபி நாம் அருந்துவதால் நம் உணவுக்குழாய் பாதிப்படைகிறது. இதனால் புற்று நோய் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 700 மிலி டீ அல்லது காபி குடிப்பதால், உணவுகுழாய் பாதிக்கப்பட்டு 90% புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது
        • தங்கள் முடியை அழகுபடுத்துவதற்காகவும், தங்கள் தோற்றத்தை வேறுபடுத்தி காண்பிக்கவும் பெரும்பாலான பெண்கள் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள். இவற்றில் சில நிரந்தரமாக தலையில் ஒட்டிக்கொள்ளும். முடியின் ஸ்டைலை மாற்றுவதற்கு ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்துவதால் முடியின் வடிவமைப்பே மாறிவிடுகிறது. இதை அதிகமாக உபயோகிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
        Posted in மருத்துவம்

        பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?

        பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?

        தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.

        பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?


        பிரசவத்துக்கு பிறகு தாய்மார்களின் தொப்பையை குறைப்பது எப்படி?


        பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத்

        தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது.

        இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள்.

        காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும்.

        எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.

        கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது

        கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம்.

        மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

        எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப்

        போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து

        பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.

        தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத

        அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும்.

        பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி,

        வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல… பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக்

        குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.

        காய்கறி, கீரைகள், பழங்களிலிருந்து உங்களுக்கு நார்ச்சத்துகள் கிடைக்கும். ஒரு நாளைக்குத் தேவையான 25 கிராம் நார்ச்சத்து கிடைக்காததால் கொழுப்பு சேர்கிறது.

        எனவே காய்கறிகளும் பழங்களும் பிரதான உணவாக்கிக் கொள்ளுங்கள். தினசரி கீரை அல்லது வாரம் 5 முறை கீரை சாப்பிடுங்கள்.

        பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி

        மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு

        ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை

        மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.

        அருகில் உள்ள யோகா மையத்துக்கு செல்லுங்கள். மூச்சு பயிற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சு

        பயிற்சி செய்யுங்கள். தொப்பை இருக்கவே இருக்காது. மீண்டும் கொழுப்பு உடலிலும் சேராது.

        Posted in மருத்துவம்

        6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

        6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்

        நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

        6 மாதத்திற்கு ஒரு முறை கண்களுக்கு பரிசோதனை அவசியம்
        கண் பரிசோதனை


        நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறு சுறுப்புடன் இருப்பர்.

        எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்ல மாட்டார்கள். ஒவ்வொருவரும் கண்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

        நீரழிவு நோயும் பாதிப்பும்

        சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பின் எந்த பிரச்சினையும் இல்லை. வருமுன் காப்பது சிறந்தது. சர்க்கரை அளவு அன்கண்ட்ரோல் நிலையில் பொதுவாக 5 வருடங்களுக்கு

        மேல் இருப்பின் ரெடினாவில் அசாதாரண நிலை ஏற்படுகிறது. அதாவது சாதாரண ரத்த நாளங்கள் அடைபடுதல் அல்லது புது ரத்த நாளங்கள் உருவாகுதல், ரத்த

        நாளங்கள் உடைபட்டு ரத்த கசிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிக ரத்தகசிவு ஏற்படின் திடீரென்று பார்வை இழப்பு ஏற்படும். இந்த பாதிப்புகள் அனைத்தும்

        கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்து வது கடினம். அதுவும் டயாபடிஸ் கண்ட்ரோலில் எப்பொழுதும் இருந்தால் மட்டுமே. தேவைப்படின் மருத்துவர் லேசர் பயன்படுத்த

        நேரிடும். எனவே டயாபடிஸ் உள்ள ஒவ்வொரு வரும் 6 மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களை

        பரிசோதித்தல் வேண்டும். மேலும் கண்களில் பூச்சி பறப்பது போன்று தென்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்

        கண்புரையும் பார்வையும்

        லென்ஸ் ஆனது ஒரு சில காரணங்களால் ஒளி ஊடு ருவும் தன்மையை இழந்து விடுகிறது. இதைத்தான் நாம் கண்புரை (Cataract) என் கிறோம். கண்புரை இருப்பின் தூரப்பார்வை

        மங்கி அருகில் தெளிவாக தெரிதல், வாகன முகப்பு லைட் ஒளி சிதறி தெரிதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். கண்புரைக்கு அறுவை சிகிச்சை முறையில் IOL

        பொருத்துவதால் (கண்பரசுதல) நல்ல பார்வை கிடைக்கும். நல்ல பார்வை கிடைக்க ரெடினா நன்றாக இருப்பது மிகவும் அவசியம். தற்பொழுது நவீன முறையில் அறுவை சிகிச்சை

        செய்வதால் உடனே வீடு திரும்பும் வசதி, குறைந்த நாட்கள் இடைவெளி யில் அன்றாட வேலைகளை செய்வது, போன்ற சிரமம் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை உள்ளது.

        கண்பிரஷர்

        கண்பிரஷருக்கும், உடம்பு பிரஷருக்கும் (பிளட் பிரஷர்) சம்பந்தம் கிடையாது. நமக்கு தெரியாமலே பார்வை குறைந்து கொண்டே போய் 70% nerve damage ஆனபின்பு தான்

        அறிகுறிகள் தென்பட கூடும். எனவே 40 வயதிற் குட்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கண்களை பாதுகாக்க வேண்

        டும். குடும்பத்தில் யாரேனும் Glaucoma இருந்தால் பிள்ளை களுக்கும் பரிசோதனை செய்தல் அவசியம். மருத்துவ ரின் ஆலோசனைப்படி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர்

        அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம். நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்தால் மட்டும் தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரி

        செய்வதற்கு அல்ல என்பதை Glaucoma உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவ ரின் ஆலோசனைப்படி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

        Posterior capsular Opacity Surgery செய்த பிறகு பழையது போல் பார்வை மங்கலாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று PCO எனும் நிலை.

        அறுவை சிகிச்சைக்கு பின் மங்கலான பார்வை 1 வருடத்திலோ 5 வருடம் கழித்தோ எப்பொழுது வேண்டும் என்றாலும் இந்நிலை ஏற்படலாம். பார்வை மங்கி விட்டது

        என்று வருத்தப்பட தேவையில்லை. PCO இருப்பின் Yag laser உதவியுடன் அதை சரி செய்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம்.

        இவ்வாறு டாக்டர் பென் ஐ கேர் சென்டர் டாக்டர்கள் பென் ரவீந்திரன், டாக்டர்.பிரவின் தாம்சன் தெரிவித்தனர்.

        Posted in மருத்துவம்

        பெண்களுக்கு ‘மசாஜ்

        பெண்களுக்கு ‘மசாஜ்

        கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.


        கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

        முதலில் கட்டை விரல் பகுதியை வட்ட வடிவத்தில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். பிறகு இரு கால்களின்

        கட்டை விரல்களையும் சில நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

        அதைத்தொடர்ந்து பாதத்தில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை மிதமான சூட்டில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது

        நரம்புகளுக்கு இதமளிக்கும். தொடர்ந்து கால் பாதங்களை மசாஜ் செய்து வந்தால் கழுத்துவலி, தலைவலி, ஒற்றைத்தலைவலி, முதுகுவலி போன்ற

        பெண்களுக்கு ‘மசாஜ்

        பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். கழுத்துவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கால் விரல்களை சில நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் வலி குறைய

        தொடங்கும். தலைவலி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகளை சரியாக அழுத்தினால் வலி நீங்கிவிடும்.

        ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் பாதங்களை மசாஜ் செய்து வருவது நல்லது. கால் பாதங்களில் எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். கணுக்கால்

        பெண்களுக்கு ‘மசாஜ்

        பகுதிகளையும் மெதுவாக தடவி விட வேண்டும். இரு கால்களிலும் மாறி, மாறி சிறிதுநேரம் மசாஜ் செய்துவிடலாம். அது உடலில் ஆக்சிஜன் சீராக செல்வதற்கு

        வழிவகுக்கும். ரத்த நாளங்களும் சிறப்பாக செயல்படும். குறிப்பாக பெண்கள் பாதங்களை அவ்வப்போது மசாஜ் செய்து வருவது நல்லது. அது மாதவிடாய் சமயங்களில்

        ஏற்படும் அசவுகரியங்களை தவிர்க்க உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும். இடுப்புவலி, முதுகுவலி பிரச்சினைகளுக்கும் நிவாரணம் தரும்.

        கால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் ஏராளமான உடல்நல நன்மைகளை பெறலாம். தூங்க செல்வதற்கு முன்பு மசாஜ் செய்வது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

        Posted in மருத்துவம்

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்

        இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!

        கண் பார்வை குறைய என்ன காரணம்?
        கண் பார்வை குறைய என்ன காரணம்?
        எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம்

        சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 – மணிநேரமும் பார்ப்பதில்லை.

        சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு

        மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!

        இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
        • குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.
        • இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
        • மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
        • உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.
        • பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
        • அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
        • மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.

        அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல

        நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.

        இதை படித்தவர்கள் இரவில் விழித்து இருந்து கணனிகள்,தொலைக்காட்சிகள், கை பேசிகள் என்பனவற்றை அதிக நேரம் பார்க்காதீங்க .

        கண் பார்வை பறிபோனால் உலகம் இருளானதுக்கு ,சமன் ,

        உடல் உறுப்புகளில் கண்பார்வை என்பது முக்கியம் ,இது இன்றி மனிதனால் வாழமுடியாது ,எனவே மக்களே விழிப்பாக இருங்கள்

        Posted in மருத்துவம்

        முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

        பெண்களுக்கு -முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

        பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும்.

        முறையற்றமாதவிடாய் தோன்றுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

        முறையற்றமாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

        பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28

        நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத்

        தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன்

        முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

        பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.

        ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது

        சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று

        இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

        முறையற்றமாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.

        காரணம் 1: மன அழுத்தம்

        10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில

        குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால்,

        சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு

        ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை

        சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.

        முறையற்ற மாதவிடாய் தோன்ற என்ன காரணம்?

        காரணம் 2 : பிரசவத்திற்கு பின்

        சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை.

        நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.

        காரணம் 3: தைராய்டு பிரச்சனை

        தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.

        காரணம் 4: மெனோபாஸ்

        நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும்.

        அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.

        காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்

        ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும்.

        காரணம் 6: செயலற்று இருப்பது

        உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக்

        கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது.

        Posted in மருத்துவம்

        இறந்த உணவுகளால் உயிர் அபாயம்

        இறந்த -அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம்

        கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம்

        பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

        அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

        கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள்

        குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

        அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவை எவை?

        தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

        குறைந்த கலோரி உணவு என்பது ‘பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்’ ஆகும். அவற்றில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி,

        இறந்த உணவுகளால் உயிர் அபாயம்

        அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள் அடங்குகின்றன.

        ‘பதப்படுத்திய உணவுகள்’ என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக இதற்காக உப்பு, எண்ணெய்,

        சர்க்கரை அல்லது நொதித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி,

        டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன் போன்றவை.

        அடுத்து வருவது, ‘அதிகம் பதப்படுத்திய உணவுகள்’. இவை தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள்

        என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும்.

        ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அனேகமாக அதிகம் பதப்படுத்திய உணவுப் பொருளாகக்

        கருதப்படும் என்று ஸ்பெயின் நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்ரஸ்பெயின்ஸ்ட்ரோலோ கூறுகிறார்.

        இதற்கான உதாரணங்களாக, பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள் அல்லது தானியக் கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து

        மிகுந்த குளிர்பானங்கள், கோழியிறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட

        ரொட்டி, பீஸ் பீட்சா போன்ற ‘சாப்பிடுவதற்குத் தயாராக’ உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.

        நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம்

        கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர்.

        அதிகம் பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்குக்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர்.

        பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய இரண்டாவது ஆய்வில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் ஐந்து ஆண்டுகளாக

        கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

        அப்போது, அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

        அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள்

        இறந்த உணவுகளால் வந்தன. அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.

        குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அதிகம் பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ‘அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் இதயம் தொடர்பான

        நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்’ என்று கூறும் பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர், ‘இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார்.

        பதப்படுத்திய உணவுகள் நம் உயிரைப் பதம் பார்த்துவிடும் என்பது நிஜம்!

        Posted in மருத்துவம்

        அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

        மனிதர்கள் -அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

        சிலர் அடிக்கடிஏதாவது சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்கள். பசியே இராது.

        இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இது ஒரு மனநலம் தொடர்புடைய பாதிப்பாகும்.

        அடிக்கடிஉண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

        சிலருக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கும். அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்பார்கள்.

        பசியே இராது. இருப்பினும் ஏதாவது ஒன்றினை மென்று கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்கள் உணவு அதிகம் உண்பவர்களாக இருப்பார்கள். இது ஒரு மனநலம்

        தொடர்புடைய பாதிப்பு. உண்மையில் இவர்களுக்கு மருத்துவ உதவி மிக அவசியம். இந்த பாதிப்பு உடையவர்கள் மனதில் ஏதோ ஒரு குற்ற உணர்வோடோ (அ) ஒருவித

        வெட்கத்தோடோ இருப்பார்கள். வேலை இழப்பு, விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

        ஒருவருக்கு இப்படி அடிக்கடி உண்ணும் பழக்கம் இருப்பதனை எப்படி அறியலாம்?

        அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

        • மிகவும் அதிகமான உணவினை இரண்டு மணி நேரத்திற்குள் உண்பார்கள்.
        • உண்பதனை கட்டுப்படுத்தவே முடியாது.
        • வயிறு நிரம்பி இருக்கும் போதும் உண்பார்கள்.
        • மிக மிக வேகமாக உண்பார்கள்.
        • தனிமையில் உண்பதனையே விரும்புவார்கள்.

        இந்த அறிகுறிகள் ஆரம்பித்த உடனேயே மருத்துவரை அணுகுவதே மிகவும் நல்லது. மனச்சோர்வினால் அதிகம்

        கட்டுப்பாடில்லாத உண்ணும் பழக்கம் ஏற்படுவதுண்டு. மருத்துவர், பாதிப்பு உடையவர்களுக்கு பரம்பரை காரணம் இருக்கின்றதா என்று ஆய்ந்து அறிவார்.

        • இப்படி அதிகம் உண்ணும் ப-ழக்கம் உடையவர்களின் வாழ்க்கை தரம் அதிகம் தாழ்ந்து தான் இருக்கும்.
        • அவர்கள் வேலை செய்யும் இடத்தில் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது.
        • சமுதாயத்தில் இவர்கள் ஒதுங்கியே இருப்பார்கள்.
        • நோய் பாதிப்புகள் இருக்கும்.
        • எடை அதிகம் இருக்கும்.

        இப்பழக்கத்தினை மாற்ற அவரவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

        • ‘டயட்டில் இருக்கிறேன். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன்’ என்ற பெயரில் சாப்பாட்டில் அதிக கட்டுப்பாட்டில் இருப்பதை நிறுத்தி விடுங்கள்.

        இது உணவின் மீது அதிக ஆசையினை ஏற்படுத்தி விடுகின்றது.

        • முறையான நேரத்தில் சரியான உணவு உண்பதனை கண்டிப்பாய் கடைபிடிக்க வேண்டும்.

        இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராய் இருக்க உதவும். சோர்வு இருக்காது.

        அடிக்கடி உண்ணும் பழக்கம் எந்த நோயின் அறிகுறி

        • உண்ணும்பொழுது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக்கொண்டோ உண்ணாதீர்கள்.

        பசி எடுக்கும் பொழுது தரமான உணவினை அளவோடு முழு கவனத்தோடு உண்ணுங்கள்.

        • தேவையான அளவு நீர் குடியுங்கள்.

        • யோகா பயிற்சி மனக் கட்டுப்பாட்டிற்கு உதவும்.

        • உணவில் நார்சத்து இருக்க வேண்டும்.

        • சமையலறையிலோ, படுக்கை அறையிலோ நொறுக்கு தீனிகளை வைக்காதீர்கள்.

        சமைக்கும் உணவினையும் அந்த நேரத்திற்கு தேவையான அளவே சமையுங்கள்.

        • உடற்பயிற்சியினை கண்டிப்பாய் செய்ய வேண்டும்.

        • காலை உணவினை அவசியம் உட்கொள்ளுங்கள். இல்லையெனில் அன்றைய நாள் முழுவதும் தவறான முறையிலேயே உண்பீர்கள்.

        • 8 மணி நேர தூக்கம் தெளிவாய் இயங்க உதவும்.

        • உங்கள் உணவுகளை நீங்கள் உட்கொள்ளும் பொழுதெல்லாம் எழுதி வையுங்கள். சுய ஆய்வு செய்ய இது பெரிதும் உதவும்.

        • புரத அளவு தேவையான அளவு உணவில் இருக்க வேண்டும்.

        • திட்டமிட்டு உணவினை உட்கொள்ளுங்கள். இப்படி நாம் அனைவருமே செய்யலாம். சிறந்த ஆரோக்கியத்தினை தரும்.

        Posted in மருத்துவம்

        தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க

        தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க

        வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.

        50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?
        50 வயதிலும் தாம்பத்தியம் சிறக்க என்ன செய்யலாம்?


        வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. எனினும், இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை,

        வயதில் முதுமடையும் வழியில் பயணிக்கும் போது எதிர்பார்ப்பது பேராசை. தாம்பத்திய வாழ்க்கையை பூர்த்தி செய்ய மருத்துவத்தை நாடிச் செல்வதும் விபரீதம் தான். அதனால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

        இளமையில் ஏற்பட்ட அனுபவங்கள், முதுமையில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஏமாற்றமே மிஞ்சும்.

        முதுமை அடையும் வயதில், பாலியல் உறவில் வேகம் குறையலால். ஆனால் திறன் குறையாது.

        ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்புச்சோறாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் பாலியல் உறவும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

        தாம்பத்தியம் சிறக்க இதை பண்ணுங்க

        பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது பாலியல் உணர்வை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்றுவிடும்.

        இதனால் கலவியில் ஈடுபடும் போது பெண்களுக்கு எரிச்சலும், வலியும் ஏற்படும்.

        லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம்.

        புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது.

        மேலும், மத்திம வயதில் இணையும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உறவைத் தாண்டி பல வழிகள் இருக்கின்றன.

        இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு, படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், பிடித்த நிறங்களில் படுக்கை விரிப்புகள், இனிமையான இசை கேட்பது போன்றவை நல்லுறவுக்கு வித்திடும்.

        மனம் சார்ந்த எந்த பிரச்னையையும் உருவாக்கிக் கொள்ளாமல், ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது, சரியான உடற்பயிற்சிகள்,

        அவ்வப்போது உறவில் ஈடுபடுவது போன்றவை வயதானாலும் மனதை இளமையாக வைத்திருக்க உதவும்.

        வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும்.

        உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே கலவியை மேற்கொள்ள வேண்டும். காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

        Posted in மருத்துவம்

        மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?

        மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க

        தினமும் நம்மால் மேக்கப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் மேக்கப் போடாமல் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம்.

        மேக்கப்இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா? அப்ப இதை டிரை பண்ணுங்க
        மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?


        தினமும் நம்மால் மேக்கப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் நம் முகம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை குறித்து ஆராய்வோம்.

        அது தொடர்பான சில துணுக்குகளை இங்கு பார்க்கலாம்.

        வெயில் காலங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம். இதை எப்போதும் மறக்க வேண்டாம். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய மறக்க வேண்டாம்.

        முகம் பொலிவின்றி காணப்பட்டால், அப்போது மாயிஸ்டுரைசர் எடுத்து முகத்தில் போட்டுக்கொள்வது அவசியம். பெரிய பெரிய விழாக்களுக்கு செல்லும் போது மேக்-அப் இல்லாமல் இருந்தால், மாயிஸ்டுரைசர் பயன்படுத்துவது நல்லது.

        சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் காலையில் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் இறந்த தோல் சருமங்களை வெளியேற்றிவிடவும்.

        முகத்தை கழுவும் போது டோனரோடு சேர்த்து கழுவினால் சருமத்தின் பி.ஹெச். அளவு மற்றும் சரும அளவு பொலிவுரும்.

        மேக்கப் இல்லாமல் அழகாக தெரிய வேண்டுமா?

        தினமும் தண்ணீர் அதிகமாக குடியுங்கள். இது மிக மிக முக்கியம். தண்ணீர் அதிகமாக குடிப்பதால் சருமம் மிருதுவாகவும், சுருக்கங்கள் இன்றி பொலிவாக இருக்கும்.

        இடைவிடாது இதனை தொடர்ச்சியாக நீங்கள் கடைபிடித்து வந்தால் உங்கள் அழகாக மாற்றம் பெறும் .

        பொறுமையுடன் கூடிய சகிப்பு தன்மை முதன்மையாக தேவை படுகிறது .

        கண்ட கீரிம்களை முகத்தில் தொடராய் பூசுவதாலும் இயற்கையை அழகு கெட்டு விடுகிறது .

        எல்லோருக்கும் எல்லா கிரீம்களும் ஒத்து போகாதவை ,உடல் தோள்களின் சுரப்பிகள் எல்லாவற்றையும் உள்வாங்கி கொள்ள தயக்கம் காட்டும் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்

        Posted in மருத்துவம்

        ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்,

        வாழ்வில் ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்

        உலகில் பெரும்பாலானோர் காரசாரமான உணவுகளை ருசிப்பதை விரும்புகின்றனர். இதன் சுறுசுறுப்பான சுவை பலரையும் கவர்கிறது.

        ஏறக்குறைய எல்லா நாட்டு மக்களும் வேறுபாடின்றி காரத்தை விரும்புகின்றனர்.

        ஒரு நபர் உலக அளவில் ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்குச் சராசரியாக ஏறத்தாழ 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

        சில நாடுகளில் மிளகாய் சாப்பிடும் அளவு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாக உள்ளது.

        துருக்கியில் மக்கள் தினம் 86.5 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்கள். இதுதான் உலகிலேயே அதிகபட்ச அளவு.

        காரமான உணவுகளுக்குப் பிரசித்தி பெற்ற மெக்சிகோவில் இது 50.95 கிராமகளாக உள்ளது.

        ஒரு நபர் ஆண்டுக்கு 5 கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்,

        அதைவிட மிக அதிகமான காரத்தை துருக்கி மக்கள் சாப்பிடுகிறார்கள்.

        ஆக, காரமான உணவுகளை நாம் ஏன் விரும்புகிறோம்?

        காரம் நமக்கு ஏற்படுத்தும் திரில் உணர்வு உள்ளிட்டவை அதற்கான காரணங்களாக இருக்கின்றன.

        மிளகாய்க்கு காரமான தன்மையைத் தரும் கேப்சாய்சின் என்ற பொருள் உருவாக்கப்படுவதன் நடைமுறைகள் இன்னும் விவாதத்துக்கு உரியவையாக உள்ளன.

        காலப்போக்கில் தாவரங்கள் காரத்தை வெளிப்படுத்தக்கூடியவையாக மாறியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

        விலங்குகளும், பூச்சி இனங்களும் தங்களை சாப்பிட்டுவிடாமல் காப்பாற்றிக்கொள்வதற்காக காரமான தன்மையை அவை உருவாக்கிக் கொண்டுள்ளன என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

        மிளகாய்ச் செடிகளுக்கு இது எப்படி சரியானதாக அமைந்தது என்பதை அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

        நமது முன்னோர்களைத் தொடர்ந்து, மிளகாய் சாப்பிடும் ஒரே பாலூட்டி இனமாக மனிதன் மட்டும் தொடர்கிறான்.

        பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புக் குணாதிசயங்கள் காரணமாக, காரமான உணவு வகைகள் மனிதனுக்குப் பிடிக்கத் தொடங்கின என்பது ஒரு விளக்கமாக இருக்கிறது.

        காரமான ருசி கொண்ட உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போவதில்லை என்பது மக்களின் எண்ணமாக உள்ளது.

        காரமாக இருந்தால் அது கெட்டுப்போகவில்லை என்பதன் அறிகுறி என்று கருதப்படுகிறது.

        கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் நிபுணர்கள் ஜெனிபர் பில்லிங், பால் டபிள்யூ ஷெர்மன் ஆகியோர் 1998-ம் ஆண்டில் இந்த விளக்கத்தை முன்வைத்தனர்.

        36 நாடுகளில் மாமிசம் சார்ந்த பாரம்பரியமான ஆயிரக்கணக்கான உணவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

        உணவு கெட்டுப்போகும் வாய்ப்புள்ள, வெப்பமான காலநிலை உள்ள நாடுகளில் காரமான உணவுப்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

        ‘‘வெப்பமான நாடுகளில், மாமிசம் சார்ந்த உணவுகள் அனைத்திலும் குறைந்தது ஒரு காரமான உணவுப்பொருளாவது இருக்கும்.

        பெரும்பாலானவற்றில் காரமான பொருள்கள், குறிப்பாக மசாலாப் பொருள்கள் நிறைய இருக்கும்.

        ஆனால் குளிர் மிகுந்த நாடுகளில் பெரும்பாலான உணவு வகைகளில் இவை குறைவாகவே இருக்கும்’’ என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

        தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் காரமான உணவுப்பொருட்களின் பயன்பாடு அதிகபட்ச அளவுக்கு உள்ளது.

        சுவீடன், பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது குறைந்தபட்ச அளவாக உள்ளது.

        ஒரு நபர் ஆண்டுக்கு காரம் சேர்த்தல், உலர வைத்தல், சமைத்தல், புகையிடுதல், உப்பிடுதல் ஆகிய அனைத்துமே உணவில் ஒட்டுண்ணிகளால் நமக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இருக்கின்றன.

        உணவு ஆராய்ச்சியாளரான கவோரி ஓ’கானர் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்.

        கரும்பு மற்றும் உருளைக்கிழங்குகளைப் போலவே, மிளகாய்களும் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் அறியாத உணவுப்பொருளாக இருந்து வந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

        ஒரு நபர் ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு சென்று, வர்த்தக உறவுகளை ஏற்படுத்திய பிறகுதான், மிளகாய் உலகெங்கும் பரவியது என்கிறார் அவர்.