இறந்த உணவுகளால் உயிர் அபாயம்

Spread the love

இறந்த -அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம்

கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம்

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கோழியிறைச்சித் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள்

குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பவை எவை?

தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு அவை பதப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த உணவு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த கலோரி உணவு என்பது ‘பதப்படுத்தப்படாத அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள்’ ஆகும். அவற்றில், பழங்கள், காய்கறிகள், பால், இறைச்சி,

இறந்த உணவுகளால் உயிர் அபாயம்

அவரை வகை காய்கறிகள், விதைகள், அரிசி போன்ற உணவு தானியங்கள், முட்டைகள் அடங்குகின்றன.

‘பதப்படுத்திய உணவுகள்’ என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க அல்லது அதிக சுவை தருவதற்காக மாற்றம் செய்யப்பட்டவை. பொதுவாக இதற்காக உப்பு, எண்ணெய்,

சர்க்கரை அல்லது நொதித்தல் முறையைப் பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் பிரிவில் அடங்குபவை பாலாடைக் கட்டி, இறைச்சி, வீட்டில் தயாரித்த ரொட்டி,

டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், புகை மூலம் பதப்படுத்திய மீன் போன்றவை.

அடுத்து வருவது, ‘அதிகம் பதப்படுத்திய உணவுகள்’. இவை தொழிற்சாலைகளில் அதிக பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவை. இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள்

என அவற்றின் பாக்கெட் மீது பெரிய பட்டியல் இருக்கும். கூடுதலாக சேர்க்கப்பட்ட பதப்படுத்தல் பொருட்கள், இனிப்பூட்டிகள் அல்லது நிறமேற்றிகள் என அதில் இருக்கும்.

ஐந்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கலந்திருந்தால், அது அனேகமாக அதிகம் பதப்படுத்திய உணவுப் பொருளாகக்

கருதப்படும் என்று ஸ்பெயின் நவர்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைரா பெஸ்ரஸ்பெயின்ஸ்ட்ரோலோ கூறுகிறார்.

இதற்கான உதாரணங்களாக, பதப்படுத்திய இறைச்சி வகைகள், காலை உணவு தானியங்கள் அல்லது தானியக் கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து

மிகுந்த குளிர்பானங்கள், கோழியிறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட

ரொட்டி, பீஸ் பீட்சா போன்ற ‘சாப்பிடுவதற்குத் தயாராக’ உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள் ஆகியவற்றைக் கூறலாம்.

நவர்ரா பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த முதலாவது ஆய்வில், 19 ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம்

கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக் காலத்தில் 355 பேர் இறந்துவிட்டனர்.

அதிகம் பதப்படுத்திய உணவு சாப்பிடாதவர்களில் 10 பேர் இறந்தால், அதை அதிகம் சாப்பிடுபவர்களில் (தினமும் நான்கு மடங்குக்கு மேல்) 16 பேர் இறந்துள்ளனர்.

பாரீஸ் பல்கலைக்கழகம் நடத்திய இரண்டாவது ஆய்வில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 159 பேர் ஐந்து ஆண்டுகளாக

கவனிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவோருக்கு இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதிகம் பதப்படுத்திய உணவுகளைச் சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 277 பேருக்கு இதயம் தொடர்பான நோய்கள்

இறந்த உணவுகளால் வந்தன. அதைக் குறைவாக சாப்பிடுவோரில் ஒரு லட்சம் பேரில் 242 பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது.

குறைவாகப் பதப்படுத்திய உணவுகளைவிட, அதிகம் பதப்படுத்திய உணவு அதிகம் சாப்பிடுவதால், ‘அடுத்து வரும் ஒவ்வொரு பத்தாண்டிலும் இதயம் தொடர்பான

நோய்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்’ என்று கூறும் பாரீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் மதில்டே டவ்வியர், ‘இதற்கான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார்.

பதப்படுத்திய உணவுகள் நம் உயிரைப் பதம் பார்த்துவிடும் என்பது நிஜம்!

Leave a Reply