Posted in மருத்துவம்

தொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி?

தொப்புளில் அழுக்கு சேரவிடாமல் பராமரிப்பது எப்படி?

குளிப்பதில் அக்கறை செலுத்தும் பலரும் தொப்புளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று அறிந்து கொள்ளலாம்.


பலரும் குளிப்பதில் அக்கறை செலுத்துவோர் அந்நேரத்தில் தொப்புளையும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை

மறந்துவிடுகிறார்கள். ஒரு சிலர்தான் அதற்கென நேரம் ஒதுக்கி அதை சுத்தம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..?

தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தேங்குமாம். எனவே இனிமேலாவது தொப்புளுக்கும் அக்கறை செலுத்துங்கள். எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

தொப்புளில் நேரடியாக விரல்களை வைத்து சுத்தம் செய்ய முடியாது. இயர் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யலாம். இயர் பட்ஸை

தேங்காய் எண்ணெயில் தொட்டு பின் தொப்புளுக்குள் விட்டு தேய்த்து எடுத்தால் அழுக்கு வந்துவிடும்.

தேய்க்கும்போது வேகமாகவும், முறையற்றும் செய்யாமல் பொறுமையாக மென்மையாக தேய்த்து எடுங்கள். அதன்

ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் என ஏதாவதொன்றை

ஒரு துளி தொப்புளில் விட்டு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். இதனால் வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.

தூக்கம் வரவில்லை என்றாலும் படுக்கும் முன் தொப்புளில் லாவண்டர் எண்ணெய், சந்தன எண்ணெய் என ஏதாவதொரு

வாசனை எண்ணெயை ஒரு துளி ஊற்றி மசாஜ் செய்தால் நன்கு தூக்கம் வரும்.

எக்காரணம் கொண்டும் பூ குத்தும் பின், சேப்டி பின்னால் தொப்புளை சுத்தம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அது

ஆபத்தில் முடியலாம். மேலும் தொப்புளில் தண்ணீர் அல்லது சீல் வந்தால் கை வைத்தியம் பார்க்காமல் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.

      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?

      கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?

      சில வீட்டில் கணவன்மார்கள் எதற்குக் கோபப்படுவார்கள், எப்போது கோபப்படுவார்கள் என்பதே மனைவியால்

      புரிந்துகொள்ள முடியாது. அவர்களை புரிந்துகொள்ள இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க…

      எதற்கெடுத்தாலும் கோபப்படும் கணவருடன் குடும்பம் நடத்துவது எப்படி?குடும்ப சண்டை
      கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது.

      சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.

      இது மிகவும் முக்கியமான ட்ரிக்ஸ். துணை கோபப்படுகிறார் எனில் நீங்களும் உடனே கோபப்படாமல் அமைதியாக பொறுமைக் காப்பது சிறந்தது. உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்

      வைத்தாலும் அந்த நேரத்தில் அமைதியாக விட்டுவிட்டு பின் அதைப்பற்றி பேசுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு

      கேட்டுவிடுவதில் தப்பில்லை. அது அவரின் உட்சபட்ச கோபத்தையும் சாந்தமாக்கிவிடும்.

      உங்களின் சில செயல்கள் கூட அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். எனவே உங்கள் ஒழுக்க நெறிகள், நடவடிக்கைகள், செயல்களை கவனித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்வதால்

      பிரச்னைகளை தவிர்க்கலாம். விட்டுக்கொடுத்து போவதும் சில நேரங்களில் கோபத்தை தவிர்க்க உதவும். குடும்பம் சிதறாமல் தடுக்க உதவும்.

      தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக

      மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

      சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம்

      வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

      நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார்.

      அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.

      நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா

      இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.

      என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.

      சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.வெளியே எங்கும் செல்ல

      விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.

      சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள்

      உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

      கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள்,

      கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.

      காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான்

      உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க…!

          Posted in மருத்துவம்

          குழந்தை இல்லையா ..? இப்படி செய்தால் பிள்ளை பிறக்கும்

          குழந்தை இல்லையா ..? இப்படி செய்தால் பிள்ளை பிறக்கும்

          கடந்த காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.

          வெற்றி பெற்று வரும் குழந்தையின்மை சிகிச்சை முறை
          குழந்தையின்மை பிரச்சனை


          தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூக பிரச்சினையாக பார்க்கப்படுவது உண்மை. கடந்த

          காலங்களில் குழந்தையின்மை ஒரு குறையாக பார்க்கப்பட்ட காலம் மாறி அறிவியல் வளர்ச்சியால், குழந்தையின்மை சிகிச்சை முறையில் வெற்றி சதவீதம் அதிகரித்துள்ளது.

          குமரி மாவட்டத்தில் கருங்கல் அன்னை டெஸ்ட் டியூப் பேபி மையம், குழந்தையின்மை சிகிச்சையில் முத்திரை பதித்து வருகிறது என மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரும்,

          ஜெர்மனியில் சிறப்பு பயிற்சி பெற்றவருமான டாக்டர் சுதா கூறினார். மேலும், அவர் கூறுகையில் ஆய்வுகூட சோதனை முறை கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியே பெண் உயிரின்

          கருமுட்டையானது, விந்துடன் இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும். இது செயற்கை முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.

          இவ்வாறு கருமுட்டையுடன் விந்தை இணைத்து செயற்கையாக உருவாக்கப்படும் கருவை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்க முறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து, அப்பெண் ஒரு

          குழந்தையை பெற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக குழந்தை பெற்று கொள்வதில் ஆர்வம் இருந்தும்,

          இயற்கையாக சில சிக்கல்களை கொண்டிருக்கும் தம்பதிக்கு இம்முறையினால் குழந்தை பெற்று கொள்ள உதவலாம்.

          இம்முறையால் பிறக்கும் குழந்தையை பொதுவான பேச்சு வழக்கில் ‘சோதனைக்குழாய் குழந்தை‘ என அழைப்பார்கள். உயிரி தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விளைவால் இந்த

          கருத்தரிப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் 5 சதவீதம் என

          கனடாவில் உள்ள அமைப்பு ஒன்று அண்மையில் கணக்கிட்டுள்ளது. பிரான்சில் நடந்த கருத்துக்கணிப்பின் படி இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டலை முயன்று பார்த்த பின்னர் 40 விழுக்காடு

          தம்பதிகள் இந்த பரிசோதனை முறையின் போதும், மேலும், 26 விழுக்காடு தம்பதிகள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையை பெறுகின்றனர்.

          எமது மருத்துவமனையில் நவீன சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சிகிச்சைக்கு வரும் அதிகபடியான பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மீதம் உள்ளவர்களுக்கு

          ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ. சிகிச்சை அளித்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. இந்த வகையில் எமது மருத்துவமனையில்

          ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். மேலும், பிற கருத்தரித்தல் மையங்களை விட குறைந்த கட்டணத்தில் அன்னை கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

              Posted in மருத்துவம்

              40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ..?

              40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா ..?

              தாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.

              40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?…
              40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்


              தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

              வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள்

              ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

              செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ்

              லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதிலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி

              அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும்

              ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

              தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான். ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்

              பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95%

              குறைவாக உள்ளதாம் மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

              மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு 1. இரத்த சோகை (

              தலஸ்மியா) 2. கர்பபை புற்று 4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் ) 5.மூச்சடைப்பு 6. கை கால் மூட்டு வழி 7. வெள்ளை படுதல் 8. உடல் சோர்வு 9.கண்பார்வை குறைதல் 10. உடல் பருமன் ஆகியவை

              அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்

              காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

              உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும்.

                  Posted in மருத்துவம்

                  மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா?

                  மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரை உடல்நலத்தை பாதிக்குமா?

                  பெண்கள் மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்துவது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால்

                  பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

                  மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு பிரச்னையை, சில நேரத்தில் செயற்கையாக தள்ளிப் போட நேரிடுகிறது. திருமண விழாக்கள்,

                  கோயில் திருவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவ்வாறு செய்கின்றனர். அதற்காக மாத்திரைகளை

                  பயன்படுத்துகின்றனர். இது தவறான செயல் என்றும், அவ்வாறு செய்வதால் பெண்களின் உடல் நிலை பாதிக்கப்படும் என

                  டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பீரியட்ஸ் மாதந் தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்தானது.

                  இப்போது மாதவிடாயை தள்ளிப் போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறாமல் மாத்திரைகளின் பெயரை சொல்லி, மெடிக்கல் ஸ்டோரில் பெற்று

                  பயன்படுத்துகின்றனர். இது உடலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். டாக்டரின் அறிவுரை இல்லாமல் அது போன்ற மாத்திரைகளை கட்டாயம் சாப்பிடக்கூடாது.

                  மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள் முதலில் கர்ப்பபையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

                  யூட்ரசின் நிலை, அதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் தாக்கி இருக்கலாம்.

                  அது குறித்து தெரியாமல் மாத்திரை சாப்பிட்டால் அந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடும்.

                  வயிற்று புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்புள்ளது.

                  அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளி போடும்போது, அதன் மாதந்திர சுழற்சியும் மாறுபடுகிறது. ஒரு முறை தள்ளிப் போனால் அடுத்த முறை சரியாகி விடும் என நினைக்க கூடாது.

                  அவ்வாறு மாத விலக்கு முறை தள்ளிப் போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.

                  அப்போது ரத்தப் போக்கு அதிகரிக்கும். உடலில் உஷ்ணமும் அதிகமாகும். பொதுவாக வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு

                  உள்ளிட்ட வைக்கும் மாத்திரைகளை சேர்த்தே தயாரிக்கும் வழக்கம் உள்ளது. அதனால் இஷ்டப்படி மாத்திரைகளை பயன்படுத்துவது

                  உடலை பாதிக்கும். பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை விளைவிக்க கூடியது இல்லை

                  என்றாலும் சிறு பாதிப்பு கூட ஏற்படாத அளவுக்கு பெண்கள் உடலை பாதுகாப்பது அவசியம் என்கின்றனர் பெண் மருத்துவர்கள்.

                      Posted in மருத்துவம்

                      முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை

                      முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

                      முதல் குழந்தை, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


                      முதல் குழந்தைக்கு, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


                      முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன்

                      இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை

                      பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

                      முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும, ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

                      1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும்,
                      2. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும்
                      3. வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி
                      4. இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.
                      5. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால
                      6. இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த
                      7. பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.
                      8. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கு சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு
                      9. உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான
                      10. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக்
                      11. குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
                      12. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன
                      13. பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
                      14. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த

                      1. பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.
                      2. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37
                      3. வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;
                      4. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக – உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம்
                      5. கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
                          Posted in மருத்துவம்

                          பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                          பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                          குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள்

                          வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.


                          குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

                          அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

                          பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                          இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

                          குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர்.

                          அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

                          பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

                          குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே

                          சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்

                              Posted in மருத்துவம்

                              இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

                              இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

                              வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது

                              பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

                              இதய நோய் அபாயத்தை குறைக்கும் வாழைப்பழ தேநீர்
                              வாழைப்பழ தேநீர்
                              வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்

                              நிறைந்திருக்கின்றன. அதனை தேநீராக தயாரித்தும் பருகலாம். வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள்

                              நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.

                              வாழைப்பழ தேநீர் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைப்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய்

                              அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

                              வாழைப்பழ தேநீரில் சர்க்கரை குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் சாப்பிடலாம். வாழைப்பழத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது சர்க்கரையின் வீரியம்

                              குறைந்துவிடும். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியமும், பொட்டாசியமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். மேலும்

                              வாழைப்பழத்தில் எல்-டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான

                              செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உருவாக்கும். அதுபோல் டொபமைன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது.

                              இது செரோடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கும் என்பதும்

                              கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீர் தவறாமல் குடித்துவருவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்.

                              வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைவதற்கும் உதவும். பசியையும் கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

                              வாழைப்பழ தேநீரில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியமானது ரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கங்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். வாழைப்பழத்தின் தோலில்

                              ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள்

                              உள்ளன. அவை சருமம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

                              வாழைப்பழ தேநீர் தயார் செய்வது எளிதானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக

                              நறுக்கி போடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு

                              லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.

                              Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

                              கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?

                              கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?

                              கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

                              கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?



                              கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம்

                              இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.

                              வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில்

                              அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

                              கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும்

                              என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.

                              நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல்

                              மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

                              நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

                              நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே

                              நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.

                              பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.

                              கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று

                              பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

                                  Posted in மருத்துவம்

                                  மாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க

                                  மாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க

                                  இந்த பயிற்சியில் இடுப்பை அகட்டி உட்காருவதால் பெண்களின் இடுப்புக்கு நல்ல வலுகிடைக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி, வயிற்று வலியிலிருந்து விடுபடலாம்.

                                  பெண்களின் மாதவிடாய் வலியை குணமாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி
                                  கெட்டில்பெல்ஸ் பயிற்சி


                                  சாதாரணமாக நாம் விளையாடும் பந்தைப் போலவே கைப்பிடியுடன் இருக்கும் Kettlebell பயிற்சியில் பிடிமானம்

                                  கிடைப்பதால் உடற்பயிற்சி செய்வது சௌகரியமாக இருக்கும். மேலும் கார்டியோ பயிற்சிகள், வலிமைப் பயிற்சிகள் மற்றும்

                                  நெகிழ்வுப் பயிற்சிகள் செய்வதற்கு கெட்டில்பெல்ஸ் மிகச்சிறந்தவை.

                                  பொதுவாக, பெண்கள் 8 முதல் 16 கிலோ வரையிலும், ஆண்கள் 16 முதல் 32 கிலோ வரையிலும் எடையுள்ள கெட்டில்பெல்களை தூக்கி

                                  செய்யலாம். இருந்தாலும் இந்த எடை அளவுகள் அவரவரின் தனிப்பட்ட உடல் தகுதிக்கேற்றவாறு மாறுபடும். ஆரம்பகட்ட

                                  பயிற்சியில் இருப்பவர்கள் பயிற்சியாளரின் உதவியோடு மெதுவாக ஆரம்பிக்க வேண்டும்.

                                  Single Arm Kettlebell swing

                                  ஒரு கையால் செய்யும் பயிற்சி இது. இப்போது கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் அகட்டியவாறு, முதுகை நிமிர்த்தி

                                  நேராக நிற்க வேண்டும். இடுப்பை பின்புறமாக கொண்டு சென்று ஒரு கையால் கெட்டில்பெல்லை தூக்கி இரண்டு கால்களுக்கும்

                                  நடுவில் பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இப்போது கெட்டில்பெல்லை முன்பக்கமாக எடுத்துவந்து கையை உயர்த்தி

                                  தலைக்குமேல் எடுத்துச் செல்லவும். இப்பயிற்சியை 12 முதல் 15 முறை செய்யலாம்.

                                  பலன்கள்

                                  இரண்டு கைகளாலும் செய்யும் ஸ்விங் பயிற்சியின் அனைத்து நன்மைகளும் இந்த ஒரு கையால் செய்யும் பயிற்சியிலும்

                                  கிடைக்கிறது. கூடுதலாக கையை தலைக்குமேல் உயர்த்தி செய்வதால் கைளின் பந்துகிண்ண மூட்டு உறுதிபெறுகிறது.

                                  Kettlebell Goblet Squat

                                  முதலில் நேராக முதுகை நிமிர்த்தி, கால்களை அகட்டி நின்று கொண்டு இருகைகளாலும் கெட்டில்பெல்லை மார்புக்கு அருகே

                                  பிடித்து நிற்கவும். முழங்கை எலும்பு உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். முழங்கால்களை மடக்கி, கால்கள் இரண்டும்

                                  பக்கவாட்டில் அகட்டியவாறு தரையில் ஸ்குவாட் நிலையில் உட்கார வேண்டும். இடுப்பை கீழ்நோக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

                                  கெட்டில்பெல்லை மார்புக்கு அருகில் பிடித்தவாறு வைக்கவும். இப்போது மெதுவாக எழுந்து பழைய நிலையில் நிற்க வேண்டும். இதே போல 15 முதல் 20 வரை திரும்ப செய்ய வேண்டும்.

                                  பலன்கள்

                                  கால் எலும்பு தசைகள் நல்ல வலுவடைகின்றன. முட்டியை மடக்கி உட்கார்ந்து எழுவதால் முழங்கால் முட்டிகளுக்கு அசையுந்தன்மை

                                  அதிகரிக்கிறது. இதனால் முழங்கால் மூட்டுவலி, இடுப்பு வலிக்கு நிவாரணம் கிடைக்கிறது. இடுப்பை அகட்டி உட்காருவதால்

                                  பெண்களின் இடுப்புக்கு நல்ல வலுகிடைக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி, வயிற்றுவலியிலிருந்து விடுபடலாம். இடுப்பு பக்கவாட்டு தசைகள் விரிவடைகின்றன..

                                      Posted in மருத்துவம்

                                      ஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்

                                      ஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்

                                      வாழைப்பழம்
                                      வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில்

                                      உள்ளது. அதிகளவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.

                                      மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கியுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

                                      இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும்.

                                      அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில்

                                      அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.

                                      துளசி
                                      துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால்,

                                      புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது.

                                      இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.

                                      குளிர்ச்சியான பால்
                                      பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக்

                                      கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது.

                                      ஜீரண பிரச்சினைகளுக்கான கை வைத்தியங்கள்

                                      எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த

                                      பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.

                                      சோம்பு
                                      இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு.

                                      மலச்சிக்கலைக் நீக்கி, செரிமானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும்

                                      வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.

                                      இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது.

                                      ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும்

                                      ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

                                      சீரகம்
                                      சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடைபெற வைத்து, அதனால்

                                      ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும்.

                                      அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.

                                      அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.

                                      கராம்பு
                                      இது ஒரு இயற்கையான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக்கத்தை துரித்தப்படுத்துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.

                                      இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது.

                                      ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.

                                      ஏலக்காய்
                                      சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில்

                                      கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.

                                      இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை

                                      தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.

                                      குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

                                      புதினா
                                      புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக

                                      பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

                                      இது வயிற்றில் அமிலத்தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது.

                                      அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.

                                      இஞ்சி
                                      இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும்

                                      தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக்கிறது.

                                      உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.

                                      வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை

                                      குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.

                                      நெல்லிக்காய்
                                      இதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக்

                                      குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது.

                                      ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.

                                      எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக,

                                      நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.

                                          Posted in மருத்துவம்

                                          இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

                                          வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

                                          எவ்வாறு ஏற்படுகிறது
                                          மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு

                                          செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு

                                          ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த

                                          கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

                                          மூட நம்பிக்கை
                                          எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் வலிப்பு ஏற்படலாம். ஆயிரம் பேரில் 3 அல்லது 5 என்ற அளவில் இந்த பாதிப்பிற்கு

                                          ஆளாகியுள்ளனர் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. வலிப்பு நோய் என்பது சமூகத்தில் ஒரு புறக்கணிக்கப்படும் நோயாக

                                          கருதப்படுகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு இன்றளவும் மக்களிடையே இல்லை என்பதே உண்மை நிலை. இன்றைய

                                          சமூகத்தில் தற்போதும் வலிப்பு நோய்க்கு கைகளில் சாவி, கத்தி, சங்கிலி போன்றவைகள் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது முற்றிலும் தவறான மூட நம்பிக்கை.

                                          தெரிந்து கொள்ள வேண்டியவை
                                          வலிப்பு ஏற்படும் போது அதற்கான முதலுதவி செய்து உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்ட

                                          நபரை 3 அல்லது 4 நிமிடம் ஒரு நிலையாக படுக்கவைத்து அவரின் உடைகளை தளர்த்தி விடவேண்டும், காற்றோட்டத்தை

                                          விடவேண்டும், வலிப்பின் போது நாக்கை கடித்துக்கொள்வார்கள் அதனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக

                                          இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோர் தொடர்ந்து 3 அல்லது நான்கு ஆண்டுகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                          இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றது. நூற்றில் 3 பேர் அலட்சியத்தின் காரணமாகவே இறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

                                          எப்போதும் ஒரு துணை அவசியம். வலிப்பு வருபவர்களை வேலைக்கு அமர்த்தவோ, பள்ளிகளில் சேர்க்கவோ, திருமணம்

                                          போன்ற பல்வேறு சூழலில் ஒதுக்கப்படுகின்றனர். வலிப்பு நோய் வந்த 70 சதவீதம் பேர், மாத்திரை, ஊசிகள் மூலம்

                                          குணமடைகிறார்கள். 30 சதவீத பேருக்கு அறுவை சிகிச்சை முறை அவசியப்படுகிறது.

                                          Posted in மருத்துவம்

                                          உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்

                                          உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்

                                          உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்
                                          இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. நோய் உண்டாக்கும்

                                          பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், பாலியல் உறுப்புகள் , விந்து மற்றும் பெண்ணுறுப்பு திரவங்கள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

                                          உடலுறவால் தொற்றும் சில நோய்கள்

                                          சிபிலிஸ் – Syphilis,
                                          ஹெர்பிஸ் – Herpes,
                                          கொனோரியா – Gonorrhea


                                          நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் – Non Gonococcal Urethritis
                                          சான்கிராயிட் – Chancroid
                                          டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் – Trichomonas Vaginalis


                                          வார்ட்ஸ்( ஹெச்.பி.வி) – Warts – Human Papilloma Virus -HPV
                                          லிம்போகிரானுலோமா வெனீரம் – Lymphogranuloma venereum
                                          பாலியல் நோய் அறிகுறிகள்

                                          பாலுறுப்புகளில் புண்கள்,
                                          பாலுறுப்பு பகுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி,


                                          சிவப்பு நிற தழும்புகள்,
                                          விதை வீக்கம்,
                                          பெண்களுக்கு அடி வயிறு வலி,


                                          சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி,
                                          பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்
                                          பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு,


                                          ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு,
                                          பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்,


                                          பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்,
                                          அதிக பயணம் செய்வோர்,


                                          நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள்.
                                          பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு

                                          உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு,
                                          தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்,
                                          ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்,


                                          சோதனை செய்யப்படாத இரத்த ஏற்றம்,
                                          மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை


                                          பாலியல் நோய்களின் விளைவுகள்
                                          பலோபியன் குழாய் சேதத்திற்கு பாலியல் நோய்கள் மிகமுக்கிய காரணமாகும்.

                                          பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது.


                                          HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்.


                                          HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம்
                                          கொனோரியா அறிகுறிகள்
                                          பெண்: அறிகுறிகள் இல்லை,

                                          யோனி வெளியேற்றம்

                                          சிறுநீர் கழிக்கும் போது வலி

                                          ஆண்: வெளியேற்றம் மற்றும் வலி

                                          ஹெர்பிஸ் அறிகுறிகள்
                                          பெண்: வலிமிக்க புண்கள், பெண்ணுறுப்பு, யோனிமடல், குதம், தொடை பகுதிகளில்

                                          ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம், 70% பேர் நோய்

                                          அறிகுறி அற்றவர்கள், நோய் ஏற்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டாம் முறை

                                          சிறிய, குறைவான புண்கள் வரும். கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்.

                                          நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் கிளாமீடியா – அறிகுறிகள்
                                          பெண்: அறிகுறிகள் இல்லை, பெண்ணுறுப்பு யோனி திரவ வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி,

                                          ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை ஆணுறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் வலி.

                                          சிபிலிஸ் – அறிகுறிகள்
                                          பெண்: வலியற்ற புண்: யோனி, கருப்பை கழுத்து, வாய், மூக்கு, குதம் பகுதிகளில்.

                                          ஆண்: ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள், குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை

                                          சிபிலிஸ்க்கு முன்னேறும், ஆரம்ப புண்கள் சில நாட்களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி, ஈரல்

                                          வீக்கம், மூட்டு வலி ஏற்படும், இந்த அறிகுறிகள் பல நாட்கள் அல்லது மாதங்கள் காணப்படும்.

                                          சான்கிராயிட் – அறிகுறிகள்
                                          பெண்: வலி மிக்க, வடிவமற்ற புண்கள், பெண்ணுறுப்பு, யோனி

                                          அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை

                                          ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்

                                          ஓமியோபதி சிகிச்சை
                                          நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல

                                          பலனளிக்கும். பாதுகாப்பான பக்கவிளைகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் நோய் அறிகுறிகள் விரைவில் குறைய வைக்கும்.

                                              Posted in மருத்துவம்

                                              பிறப்புறுப்பு புண் ஒத்தவகை நோய்கள்

                                              பிறப்புறுப்பு புண் ஒத்தவகை நோய்கள்

                                              பிறப்புறுப்பில் புண் அல்லது இரணம்
                                              வாய், உதடுகள் மற்றும் ஆசனவாயிலும் புண்கள் தோன்றலாம்


                                              புண்கள் ஒற்றையாகவும் பலவாகவும் இருக்கலாம், வலியோடும் வலி இல்லாமலும் இருக்கலாம்
                                              ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமுமோ நெறிகட்டலாம்


                                              பரவும் முறை
                                              பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் பிறப்பு வாய் ஆண் குறி

                                              ஆசனவாய் மலக்குடல் வாய் மற்றும் உதட்டில் உள்ள புண்களோடு தொடர்பு ஏற்படும்போது பரவுகின்றன.

                                              இவை சிபிலிஸ் என்ற கிரந்தி, டோனோவானோசிஸ் அல்லது கிரானுலோமா இங்குனேல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.


                                              புண்கள் ஆறிவிட்டது போல் தோன்றினாலும் புண்கள் இல்லாவிட்டாலும் கூட இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு

                                              தொற்றும் வாய்ப்பு உள்ளது.
                                              தடுப்பு முறை
                                              உடலுறவுத் துணைவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்

                                              வாய்ப்புகளை குறைப்பது. துணைவர்கள் புண்கள் முழுமையாக ஆறும் வரையில் எந்த வகையிலும் புண்களோடு தொடர்பு ஏற்படாதவகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

                                              பொதுவான அறிகுறிகள்
                                              புண்கள் முழுமையாக குணமாகும் வரை உடலுறவை தவிர்ப்பதும், அல்லது ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்வதும் நோய்

                                              தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மிக எளிய முறைகளாகும்.

                                              சிகிச்சை
                                              இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) பென்சாத்தின் பென்சிலின் ஊசி மருந்தை ஒரே முறையும்

                                              அசித்ரோமைசின் மாத்திரை ஒரே முறையும் மருத்துவரின் கண்காணிப்பில் கொடுக்க வேண்டும்.


                                              மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்று கண்காணிக்கவும்
                                              மருந்து செலுத்தப்பட்டதால் ஏதேனும் சிரமத்தை உணர்ந்தால்

                                              நோயாளி உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்
                                              சிகிச்சை முடிந்து ஏழு நாட்கள் கழித்து நோயாளி தொடர்

                                              கண்காணிப்புக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும்.
                                              மருந்து

                                              4 பென்சாத்தின் பென்சிலின் 2.4 மில்லியன் யுனிட் ஊசி மருந்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து சோதனை ஊசி போட்டு ஒவ்வாமை

                                              ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபின் இரண்டு புட்டங்களிலும் ஒவ்வொன்றாக போட வேண்டும். அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும்.


                                              4 நோயாளிக்கு பென்சிலின் ஒவ்வாமை இருந்தால் மருந்துப்பை எண் 4ல் உள்ள டாக்சிசைக்ளின் 100 மிகி மாத்திரையை இரண்டு

                                              வேளை வீதம் 15 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும் கொடுக்க வேண்டும்.
                                              விளைவுகள்

                                              இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக

                                              சிகிச்சை எடுத்தாலோ சிறிது காலம் கழித்து ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.


                                              சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிபிலிஸ் நோய் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை பாதித்து மரணத்துக்கு காரணமாகிவிடும்.


                                              சிபிலிஸ் நோய் கருவுற்ற பெண்களிடமிருந்து குழந்தைக்கு பரவி குழந்தை இறந்து பிறக்கவும் குறையுடன் பிறக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது. கருவுற்ற தாய்க்கு பரிசோதனை செய்து

                                              சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை செய்வதால் இதை தடுக்க முடியும்.
                                              மிக முக்கியமாக பிற பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க

                                              மண்டல நோய் தொற்றுக்கள் போல் இன உறுப்பில் புண் உள்ள நபருக்கு 5 முதல் 10 மடங்கு எச்ஐவி தொற்று ஏற்படும் ஆபத்து

                                              உள்ளது.
                                              துணைவரை பரிந்துரை செய்தல்

                                              நோயாளி கடந்த மூன்று மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்ஃகளுக்கு தனக்கு பால்வினை நோய்

                                              உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.
                                              எச்சரிக்கை

                                              ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் அல்லது அவரது பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.


                                              கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது துணைவர்கள் தங்கள் மருத்துவரிடம் அவர்களின் கர்ப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

                                              அப்போதுதான் மருத்துவர் குழந்தைக்கு தொற்று பரவாமல் காப்பாற்ற முடியும்.

                                                  Posted in மருத்துவம்

                                                  பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா

                                                  பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா

                                                  பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான்.

                                                  பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?


                                                  பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?
                                                  பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். உள்ளாடைகள் அணியும் இடத்தில்

                                                  கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும்

                                                  இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுகளை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.

                                                  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அதை
                                                  • சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.
                                                  • ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும்.
                                                  • அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள
                                                  • இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
                                                  • 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி
                                                  • பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.
                                                  • முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
                                                  • வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.
                                                  • பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.
                                                  • கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து
                                                  • கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
                                                      Posted in மருத்துவம்

                                                      பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்

                                                      பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள்

                                                      ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய

                                                      விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.பெண்கள் அந்த விஷயங்களை யாரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?

                                                      பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை

                                                      விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

                                                      பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து

                                                      அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர்.


                                                      இது பற்றிய ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல்

                                                      குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும் போது அதிகமான அந்தரங்கம் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் பேசுகின்றனர்.

                                                      35 சதவீதம் பெண்கள் இந்த மாதிரி பரிமாறி கொள்வதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ஆனால், 15 சதவீத பெண்கள்

                                                      தங்கள் கணவருடன் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது அந்தரங்கம் தொடர்பான விசியங்களை பகிர்ந்து கொள்கின்றனர்

                                                      . அந்த வகையில் பார்த்தால், பெண்கள் அதிகமாக ஆண்களை பற்றியே பேசுகின்றனர். அதில் 64 சதவீதம் பேர் தங்களது கணவர்களை பற்றியே பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

                                                      மேலும், அதில் சிலபேர் மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். 

                                                          Posted in மருத்துவம்

                                                          சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

                                                          சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

                                                          நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து

                                                          எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.

                                                          சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
                                                          சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்


                                                          மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.


                                                          சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.

                                                          சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள்

                                                          இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.

                                                          பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது

                                                          வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை

                                                          வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன்

                                                          வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு

                                                          கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.

                                                          தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை

                                                          பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப்

                                                          பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

                                                          சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்

                                                          • அடிக்கடி காய்ச்சல் வரும்.
                                                          • கை, கால் வீக்கம் ஏற்படும்.
                                                          • பசியின்மை, வயிறு உப்புசம்
                                                          • இருமல், சளி, மூச்சுத்திணறல்
                                                          • தோல் வியாதி
                                                          • வயிற்றுப் போக்கு
                                                          • மன சோர்வு
                                                          • பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
                                                          • தசைப் பிடிப்பு
                                                          • இரத்த சோகை

                                                          மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

                                                          சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்

                                                          • அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
                                                          • சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை,
                                                          • பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
                                                          • உயர்ந்த இரத்த அழுத்தம்
                                                          • மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
                                                          • அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்

                                                          நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து

                                                          எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்..

                                                              Posted in மருத்துவம்

                                                              குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

                                                              குழந்தையை நன்றாக சாப்பிட வைக்க அருமையான வழி

                                                              குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.


                                                              குழந்தைகளுக்கு உணவு சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து

                                                              குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு

                                                              நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

                                                              சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை

                                                              அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

                                                              • பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.
                                                              • குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு
                                                              • உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.
                                                              • மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும்
                                                              • போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவாற்கள் எனவே குழந்தை சாப்பிடும் அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக
                                                              • சிறந்த முறையாகும்.
                                                              • குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.
                                                              • குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து
                                                              • உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.
                                                              • குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுக்க
                                                              • வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
                                                              • குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
                                                              • தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மேர், மில்க் சேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.
                                                              • காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சாண்ட்விச்சுகலாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.
                                                              • காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.
                                                              • தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

                                                              நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை

                                                              பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம்

                                                              சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.

                                                                  Posted in மருத்துவம்

                                                                  மலச்சிக்கலை குணமாக்க இதை சாப்பிடுங்க

                                                                  மலச்சிக்கலை குணமாக்க இதை சாப்பிடுங்க

                                                                  நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய

                                                                  வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

                                                                  மலச்சிக்கலை குணமாக்கும் லெட்டூஸ் பொரியல்
                                                                  லெட்டூஸ் பொரியல்


                                                                  லெட்டூஸ் கீரையில் ஈரப்பதம் அதிகம் உள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் சி தயாமின்,

                                                                  ரிபோஃப்ளோவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ ‘கே’ போன்றவையும்

                                                                  அடங்கியுள்ளன. இதில் கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. நீண்ட நாள்களாக உள்ள

                                                                  மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு,

                                                                  இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.

                                                                  தேவையான பொருட்கள் :

                                                                  லெட்டூஸ் இலை – 10
                                                                  பெரிய வெங்காயம் – 2
                                                                  தக்காளி – ஒன்று (பொடியாக


                                                                  வேகவைத்த கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், (குழைய கூடாது)
                                                                  இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
                                                                  கடுகு – கால் டீஸ்பூன்,
                                                                  தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,


                                                                  காய்ந்த மிளகாய் – 2,
                                                                  எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்,
                                                                  மஞ்சள்தூள் – சிறிதளவு,
                                                                  ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
                                                                  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

                                                                  லெட்டூஸ்

                                                                  செய்முறை:

                                                                  லெட்டூஸ் இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                                                                  தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

                                                                  வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்துநன்றாக வதக்கவும்.

                                                                  வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

                                                                  அடுத்து அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

                                                                  அடுத்து அதனுடன் வேகவைத்த பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், வேர்க்கடலை சேர்த்துக் கிளறவும்.

                                                                  பிறகு லெட்டூஸ் இலைகள் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

                                                                  நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும்.

                                                                  மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும்.

                                                                      Posted in மருத்துவம்

                                                                      தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்

                                                                      தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்

                                                                      தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான அழகு பிரச்சினைகளில்

                                                                      ஒன்றாகும். கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகளை பார்க்கலாம்.

                                                                      தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்
                                                                      தொடைப்பகுதி கருமையை போக்கும் இயற்கை வைத்தியம்


                                                                      அந்தரங்க பகுதிக்கு அருகில் இருக்கும் தொடைப்பகுதி கருப்பாக இருப்பது பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொள்ளும் மிகவும்

                                                                      பொதுவான அழகு பிரச்சினைகளில் ஒன்றாகும். தோல் உராய்வு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முதல் உடல் பருமன் வரை உள்

                                                                      தொடைப்பகுதி கருப்பாக காட்சியளிப்பதற்கு பல காரணிகள் உள்ளன.

                                                                      இருக்காமான உள்ளாடைகளால் அந்த பகுதியில் எரிச்சலையும் சேர்த்து பெறுகிறார்கள். மார்டன் ஆடைகளை அணியும்

                                                                      நபர்களுக்கு இது மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். நீங்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு சில தீர்வுகளைத் தேடுகிறீர்களானால்,

                                                                      கருப்பாக இருக்கும் அந்த பகுதியை ஒளிரச் செய்ய உதவும் அழகு குறிப்புகள் பட்டியலை நாங்கள் இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

                                                                      உங்கள் அந்தரங்க உள் தொடைகளை ஒளிரச் செய்ய நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் இங்கே

                                                                      காணலாம். நிறமியைக் கையாள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று எலுமிச்சைசாறு ஆகும். ஏனெனில் இதில் வைட்டமின் சி

                                                                      நிரம்பியுள்ளது. இது சேதமடைந்த தோல் செல்களை சரிசெய்ய உதவுகிறது.

                                                                      தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றை கலந்து 10-15 நிமிடங்கள் இந்த கலவையை உங்கள் உள் தொடைகளில் தடவவும். தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதன் மூலம், உள் தொடை

                                                                      கருமையாக மாறுகிறது. நீங்கள் சமையல் சோடா மற்றும் தண்ணீரின் கலவையை முயற்சி செய்யலாம். இது சருமத்தில்

                                                                      உள்ள கருமையை வெளியேற்ற உதவும். இதை தொடையில் தடவி 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும்.

                                                                      இருப்பினும், பேக்கிங் சோடா சில தோல் வகைகளில் கடுமையானதாக இருப்பதால் எச்சரிக்கையாக இதை கையாள

                                                                      வேண்டும்.கற்றாழை ஜெல் உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யலாம். கற்றாழை உங்களுக்கு அதிக சரும பாதுகாப்பை

                                                                      அளிக்கிறது. கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அதை ஊற விடவும். ஜெல் அலோயினுடன் ஏற்றப்படுகிறது. இது

                                                                      சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. அதிகபட்ச நன்மைகளுக்கு, கற்றாழையை தவறாமல் பயன்படுத்தவும்.

                                                                      உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் வெட்டிய ஒரு சிறு உருளைக்கிழங்கு துண்டை

                                                                      பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யவும். நீங்கள் அதை 10 நிமிடங்கள் தேய்க்கலாம். உருளைக்கிழங்கில் கேடகோலேஸ்

                                                                      உள்ளது. இது தோல் அமைப்பில் இருக்கும் கருமையை வெளியேற்ற உதவுகிறது.