Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி
சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி
தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்திலும் நடிக்கிறார்.
சாய் பல்லவி
வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில் பாபர் மசூதி இடிப்பு, ஏக்தா யாத்திரை எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய பிரச்னைகளும் இடம் பெற்றுள்ளதாம். இந்த செய்திகள் வெளியானதை அடுத்து விரத பர்வம் 1992 படம் பரபரப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு
ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளுமே முடிந்துவிட்டன. சிம்புவின் தேதிகளுக்காக காத்திருந்தது படக்குழு. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார். மேலும், இன்று ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதம் இருந்து கோயிலுக்கு செல்லவும் முடிவு செய்துள்ளார்.
சிம்பு
1992-ஆம் ஆண்டு ‘எங்க வீட்டு வேலன்’ படத்துக்காக ஐயப்பனுக்கு மாலை போட்டார் சிம்பு. அதனை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லவுள்ளார். சிம்புவின் இந்த மாற்றம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்
விஜய் கொடுத்த நம்பிக்கையால் மீண்டேன் – அருண்விஜய்
நடிகர் அருண் விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லாத போதும், தனது விடாமுயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்.
விஜய், அருண் விஜய்
அவரது வீட்டில் இருந்து வெளியில் வந்து காரை நிறுத்தி ஒரு நிமிடம் யோசித்தேன். அவர் கொடுத்த நம்பிக்கையால் நான் வீட்டுக்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். விஜய் கொடுத்த அறிவுரைதான் தற்போது என்னை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது” என்று அருண் விஜய் கூறியுள்ளார்.
பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்
பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்
பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது.
நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். என தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை- பொலிசார் குவிப்பு
விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு….. விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை
ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மண்டி’ விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி சீதாலட்சுமி, துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ், காளிபாண்டியன், மண்டலத் தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், செந்தில் முருகன், எம்.பி. ரமேஷ், கோயம்பேடு ஜி.டி.ராஜசேகர், சீனிபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்
அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
முற்றுகை போராட்டத்தின் போது கொளத்தூர் ரவி கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும்.
மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர்களுக்கு பதிலடி கொடுத்த சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட சமீரா தனது இரண்டாவது மகனுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக புகைப்படம் வெளியிட்டார். கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான ‘முல்லையாநாகிரிக்கு’ டிரெக்கிங் சென்ற புகைப்படம் தான் அது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் சமீரா இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டார். விமர்சனங்களும் பாராட்டுகளும் ஒருசேர குவிந்தது.
சமீரா ரெட்டியின் பதிவு
இந்நிலையில் சமீரா தனது பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “என்னுடைய கடந்த காலத்தில் இருந்து ஒரு குண்டை தூக்கிப்போடுகிறேன். மீம் மேக்கர்ஸ் உங்களுக்காகத் தான். நகைச்சுவை ஒரு புறம் இருக்கட்டும். கடந்த காலங்களில் நான் மிகவும் சிரமப்பட்டேன். அப்போது எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தன. இரண்டு குழந்தைகள் கொண்ட என்னை நேசிக்கும் எனது கணவர் இருந்தும், இப்போதும் கூட என் உடலைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்ற கவலை மற்றும் போராட்டத்தின் பல தருணங்கள் எனக்கு உள்ளன” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். உடல் பருமன் குறித்து விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக சமீரா, பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா
சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா
தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர்.
அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஸ்ரியா. மேலும் நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சில படங்களில் மட்டும் நஸ்ரியா நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.
இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.நஸ்ரியா புகை பிடிக்கும் போஸ்டர்
சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா
தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இவரது அபார நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை கட்டி போட்டவர் ,நஸ்ரியா நடித்து வெளியான பல திரைப்படங்கள் வெற்றி நடை போட்டன
தற்போது தமது குடும்ப வாழ்வில் சிக்கி சர்ச்சையில் மாட்டி கொண்ட நடிகை நஸ்ரியாவின் இந்த புகைப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
தமிழ் திரையுலகில் நடிகை நஸ்ரியாவுக்கு என்று தனி இடமுண்டு ,காதல் கன்னியாக வளம் வரும் நஸ்ரியாவின் ஒவ்வொரு அசைவையும் உற்று பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இவர் ஒரு சிறந்த கீரோணி தாங்க
இவரது கண் பலரை கட்டி போடும் அவரது பேச்சு சுண்டி இழுக்கும் ,இவரது நடனம் ஆசைவுகள் மீளவும் பார்க்க தூண்டும்
அப்படி பட்ட நடிகையான நஸ்ரியாவின் இந்த புகைப்படம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொஞ்சம் ஓவர் தான் என்கிறது சில குழுக்கள்
லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்
லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்
சென்னை நட்சத்திர விடுதியில் நடிகை மீரா மிதுனின் நிரூபர்களிடம் பேசியதாவது:-
40 நாட்கள் நான் இங்கு இல்லை அதனால் இந்த செய்தியாளர் சந்திப்பு , என்னை குறித்த பல்வேறு தகவல்கள் வலைதளங்களில் உலா வருகின்றன , காவல் துறை
நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நான் வேறு மாநிலத்திற்கு சென்று இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது, இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதை விட பெரிய இடத்திற்கு சென்றால் கிடைக்கும் என்றால் செல்வேன்.
ஆனால் அப்படி சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம், எனக்கு இதனால் அசிங்கமட்டுமல்ல மிரட்டல்களும் வருகின்றன, என் மேல் இரண்டு முதல் தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டது இரண்டுமே பொய்யானவை, என்னிடம் எந்த விசாரணையும் செய்யால் பதிவு செய்தார்கள், லஞ்சம் வாங்கி கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.
நானும் பணம் கொடுத்தால் அதையும் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்வார்கள் போல, இதற்கு காரணமானவர்கள். ஆய்வாளர்கள் சிலர் மற்றும் விஜய் டிவி, நிகழ்ச்சி
முடியும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு இப்போது எனக்கு முறையாக பதில் அளிக்கவில்லை, எனக்கு வரவேண்டியது முழுமையாக வரவில்லை. சேரன்
விவகாரத்தில் நான்இந்த நிகழ்ச்சியை குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் அப்படி அளித்து நிகழ்ச்சியை நிறுத்தினால் தான் எனக்கு
கிடைக்கவேண்டியது கிடைக்கும் என நினைக்கிறேன், நிகழ்ச்சியை முறையாக நடத்திய போதும் எனக்கு கொடுக்கப்பட்ட வேண்டியவை கொடுக்கப்படவில்லை.
விஜய் டிவி தலைமையில் இருப்பவர் என்னிடம் கெஞ்சினார் அதற்காக தான் குறைவான தொகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னிடம் முறையாக
குறிப்பிட்ட காலத்தில் தருகிறேன் என கூறலாம் எதையும் கூறவில்லை. எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.
லஞ்சம் வாங்கி என் மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள் – மீரா மிதுன்
அட்வான்ஸ் கூட வாங்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் மொத்தம் 35 நாட்கள் இருந்தேன் இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்
யாரிடமும் உறவாடவில்லை பழகவும் இல்லை என் எண்ணம் யாரிடமும் இல்லை, சரவணன் நல்ல நபர் அவரிடம் மட்டும் பேசியுள்ளேன். எனக்கு ஒரு கால் செய்து கால
அவகாசம் கூறியிருந்தால் கூட போதும், உயிருக்கு பயந்து நான் மும்பையில் இருந்தேன் மும்பை, கேரளா , கர்நாடக போலீசார் சிறப்பாக பணியாற்றுகின்றனர் பாதுகாப்பாக உள்ளது. மும்பையில் குடியேறிவிட்டேன்.
எனக்கு தெரிந்து தமிழில் சரியாக காட்டினார்களா எனக்கு தெரிவில்லை நான் பார்க்கவில்லை, ஆனால் சிலர் என்னை புரிந்து கொண்டார்கள். நான் அரசியலுக்கு
வரவுள்ளேன், என்னை போல பிரபலங்களுக்கு இந்நிலை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை ஏற்படும்?
அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இருந்த வரை சிறப்பாக இருந்தது. இப்போது ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது பெண்கள் அமைச்சர் பதவிக்கு வரவேண்டும், கமலை
சந்தித்து கோரிக்கை வைத்தீர்களா? என்ற கேள்விக்கு கமலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை புரோடக்ஷன் குழுவில் தான் பேசினேன், கமல் குறித்து பேசியதால் தான் பணம் கொடுக்கவில்லை என்று கூறமுடியாது.
எதிராக செயல்பட்ட அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள், இதன் பின்னரும் எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் விஜய்டிவி சேனல் முழுவதும்
பிரச்சனையை சந்திக்க நேரிடும். நான் வாங்கிய பட்டங்கள் பொய்யானவை என்றால் என்னால் பயிற்சி பெற்று பட்டம் பெற்றவர்களிடமும் திரும்ப பெறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்
அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்
வினோத் இயக்கும் தல 60 படத்திற்கு பின் அஜித்தை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்
அஜித்https://www.youtube.com/user/ethiricom1
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின் வினோத் இயக்கத்திலேயே இரண்டாவது முறையாக அஜித் தொடர்ந்து நடிக்கிறார். அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டு
அன்றே படத்திற்கு வலிமை என்று பெயரிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு குழு
அறிவித்துவிட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
அஜித்
இந்த நேரத்தில் அஜித்தை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ், கார்த்திக் நரேன், புஷ்கர்-காயத்ரி, சிறுத்தை சிவா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருப்பதாக
தெரிகிறது. இதில் யாருடன் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இணைய இருக்கிறார் என்பது வலிமை படம் முடியும் சமயத்தில் தான் தெரியும்.
தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு
தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு
தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:- “தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு
கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது.
தமிழ் நாட்டில்தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன.
ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள்.
விஜய் சேதுபதி, சத்யராஜ்,
தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க எதிர்ப்பு
சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க
வைக்கின்றனர். பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை.
சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர்.
தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர்.
அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்
. தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.”
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
சத்யராஜே பேச்சு ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளதை தமிழர் தேசம் நன்கு புரியும் பட்டதை யாருக்கும் படமில்லாமல் கூறும் ஒரே நடிகர் சத்யராஜ் தான்
தமிழன் என்ற திமிரோடு பேச கூடியவர் ஆனால் அப்பப்போ சர்ச்சையில் சிக்கி கொல்பவர் சத்யராஜ்
சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்
சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்
சிறப்பு விருது மத்திய அரசுக்கு நன்றி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந்
தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க மத்திய
அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு “தாதா சாகேப் பால்கே விருது” வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கோவா சர்வதேச
திரைப்பட விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் 50-வது
ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
சிறப்பு விருது….. மத்திய அரசுக்கு நன்றி- ரஜினிகாந்த் டுவிட்
இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த்
செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’
என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கும் மத்திய
அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டோம். அவரும் அந்த விருதை வாங்க சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்
மத்திய அரசினால் சிறப்பு விருது பெற்று கொண்ட றிவிப்பிற்கு மத்திய அரசுக்கு நன்றி- தெரிவித்து ரஜினிகாந்த் டுவிட்
மோடி அரசினால் வழங்க படும் பெருமித அறிவிப்பாக இதனை ரஜனிகாந்த் பார்க்கின்றார்







